search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "கத்திக்குத்து தாக்குதல்"

    • சீனாவின் ஜியாங்சு மாகாணத்தில் கத்திக்குத்து தாக்குதல் நடைபெற்றது.
    • இந்த தாக்குதலில் 8 பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர்.

    பீஜிங்:

    சீனாவின் ஜியாங்சு மாகாணத்தின் வுக்ஸி நகரில் கல்வி நிறுவனம் ஒன்று செயல்பட்டு வருகிறது.

    இந்நிலையில், அந்தக் கல்வி நிறுவனத்தில் படிக்கும் 21 வயது வாலிபர் கண்ணில் பட்டவர்கள் மீது சரமாரியாக கத்திக்குத்து தாக்குதல் நடத்தினார்.

    இந்த கோர தாக்குதலில் 8 பேர் சம்பவ இடத்திலேயே பலியாகினர் என்றும், மேலும் 17 பேர் படுகாயம் அடைந்துள்ளனர் எனவும் முதல் கட்ட தகவல் வெளியானது.

    தகவலறிந்து அங்கு விரைந்து சென்ற போலீசார் காயமடைந்தவர்களை மீட்டு அருகிலுள்ள மருத்துவமனைகளில் சேர்த்து சிகிச்சை அளித்து வருகின்றனர். தொடர்ந்து அவரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ஏற்கனவே கடந்த 12-ம் தேதி சீனாவின் ஜுஹாய் நகரில் உள்ள விளையாட்டு மையத்தில் உடற்பயிற்சி செய்துகொண்டிருந்த மக்கள் மீது வேகமாக வந்த கார் மோதியதில் 35 பேர் கொல்லப்பட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.

    • காயமடைந்த மாணவியை அருகிலிருந்தவர்கள் மீட்டு சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அனுப்பினர்.
    • கத்தியால் குத்திவிட்டு தப்பியோடிய இளைஞரை போலீசார் மடக்கிப்பிடித்து கைதுசெய்தனர்.

    சென்னை:

    சென்னை நந்தம்பாக்கத்தில் உள்ள கல்லூரி ஒன்றில் முதலாம் ஆண்டு படித்துவரும் மாணவி ஒருவர், கல்லூரி முடிந்து வீடு திரும்பிக் கொண்டிருந்தார்.

    அப்போது, தன்னை காதலிக்க வேண்டும் என்று நவீன் என்ற இளைஞர் அவரை வற்புறுத்தி வந்துள்ளார். ஆனால் மாணவி அதனை ஏற்க மறுத்தார்.

    இந்நிலையில் நவீன் திடீரென தான் மறைத்து வைத்திருந்த கத்தியால் மாணவியின் கழுத்தில் குத்தினார். இதில் படுகாயம் அடைந்த மாணவியை அருகிலிருந்தவர்கள்மீட்டு சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர்.

    கத்தியால் குத்திவிட்டு தப்பியோடிய இளைஞரை போலீசார் மடக்கிப்பிடித்து கைது செய்தனர். இச்சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

    • மகளும், மனைவியும் மாடியில் தூங்க விரும்புவதாகத் தெரிவித்தனர்.
    • அதற்கு அவர் வீட்டின் அறையில்தான் தூங்க வேண்டும் என அனுமதி மறுத்துள்ளார்.

    அகமதாபாத்:

    குஜராத் மாநிலத்தின் சூரத்தில் வசித்து வருபவர் ராமானுஜ சாஹு. இவர் தனது குடும்பத்துடன் வாடகை வீட்டில் வசித்து வந்துள்ளார்.

    இந்நிலையில், கடந்த 18-ம் தேதி இரவு இவரின் மகளும், மனைவியும் மாடியில் தூங்க விரும்புவதாகத் தெரிவித்தனர். அதற்கு அவர், வீட்டின் அறையில்தான் தூங்க வேண்டும் என அனுமதி மறுத்துள்ளார். இதனால் 3 பேருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது. இதில் ஆத்திரமடைந்த ராமானுஜ சாஹு, வீட்டின் சமையலறையிலிருந்த கத்தியை எடுத்துவந்து மகளைக் குத்தியிருக்கிறார்.

    தடுக்க வந்த குடும்பத்தினரையும் கத்தியால் தாக்கியிருக்கிறார். இதில் அனைத்துக் குடும்ப உறுப்பினர்களுக்கும் கத்திக்காயம் ஏற்பட்டிருக்கிறது. மகளையும், மனைவியையும் கடுமையாகத் தாக்கியிருக்கிறார்.

    ஆத்திரத்தில் மகளை மட்டும் ஏறத்தாழ 25 முறை கத்தியால் குத்திக் கொலைசெய்திருக்கிறார். இந்தக் காட்சிகள் அனைத்தும் அங்கிருந்த சிசிடிவி கேமராவில் பதிவாகியிருக்கின்றன.

    இதுதொடர்பாக காவல்துறை வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறது.

    வாக்குவாதம் முற்றியதால் ஆத்திரமடைந்த தந்தை மகளை 25 முறை கத்தியால் குத்திக் கொன்றது அப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

    ×