search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "வாலிபர் வெட்டு"

    • உடனே வீராவை உறவினர்கள் உடனடியாக மீட்டு மத்தூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர்.
    • புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து தலைமறைவாக உள்ள வேலுவை தேடி வருகின்றனர்.

    மத்தூர்:

    கிருஷ்ணகிரி மாவட்டம் மத்தூர் அருகே உள்ள மாட மாடரஅள்ளி, அண்ணா நகர் பகுதியை சேர்ந்த பூங்காவனம் என்பது மகன் வீரா (வயது 33).

    இவர் கர்நாடக மாநிலம் பெங்களூரு பகுதியில் உள்ள செயின்ட் ஜான்சன் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் மருந்தாளுனராக வேலை செய்து வருகின்றார்.

    தீபாவளி பண்டிகைக்காக விடுமுறையில் வீரா சொந்த ஊருக்கு வந்தார்.

    அதே பகுதியைச் சேர்ந்தவர் தொழிலாளி வேலு. இவருடைய மனைவிக்கும், வீராவிற்கும், கள்ள தொடர்பு இருப்பதாக கூறி நேற்று வேலு விடுமுறையில் ஊருக்கு வந்த வீராவிடம் தகராறில் ஈடுபட்டார்.

    இதில் ஆத்திரமடைந்த வேலு தான் மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து வீராவை சரமாரியாக வெட்டி உள்ளார். இதில் வீராவிற்கு கை, விரல்கள், தலை, கண் ஆகிய பகுதிகளில் வெட்டு காயம் ஏற்பட்டு ரத்த வெள்ளத்தில் அதே இடத்தில் மயங்கி கீழே விழுந்தார். அப்போது வீராவின் அலறல் சத்தம் அவரது உறவினர்கள் ஓடிவந்தனர். அதற்குள் வேலு அங்கிருந்து தப்பி ஓடிவிட்டார்.

    உடனே வீராவை உறவினர்கள் உடனடியாக மீட்டு மத்தூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். அங்கிருந்து மேல் சிகிச்சைக்காக கிருஷ்ணகிரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகின்றது.

    இதுகுறித்து வீரா மத்தூர் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து தலைமறைவாக உள்ள வேலுவை தேடி வருகின்றனர். 

    • தகராறில் அப்புனை கத்தியால் தலை மற்றும் கையில் வெட்டி விட்டு நண்பர்கள் தப்பி ஓடி விட்டனர்.
    • பலத்த காயம் அடைந்த அப்புன் மேல் சிகிச்சைக்காக சென்னை ஸ்டான்லி அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு உள்ளார்.

    பொன்னேரி அடுத்த வேண்பாக்கம் பள்ளம் பகுதியை சேர்ந்தவர்அப்புன் (28). இவர் வெள்ளோடை ஏரிக்கரை பகுதியைச் சேர்ந்த நண்பர்களுடன் மது குடித்தார். அப்போது அவர்களுக்கிடையே மோதல் ஏற்பட்டது.

    இந்த தகராறில் அப்புனை கத்தியால் தலை மற்றும் கையில் வெட்டி விட்டு நண்பர்கள் தப்பி ஓடி விட்டனர். இதில் பலத்த காயம் அடைந்த அப்புன் மேல் சிகிச்சைக்காக சென்னை ஸ்டான்லி அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு உள்ளார்.

    • 2 மோட்டார் சைக்கிளில் வந்த மர்ம நபர்கள் தினேஷை முதுகு, கை, கால் உள்ளிட்ட பகுதிகளில் அரிவாளால் வெட்டிவிட்டு அங்கிருந்து தப்பி சென்றனர்.
    • 2 அரிவாள் மற்றும் 2 கத்தி போன்றவற்றை போலீசார் கைப்பற்றினர்.

    மணிமங்கலம்:

    காஞ்சிபுரம் மாவட்டம் படப்பை அடுத்த மணிமங்கலம் அருகே உள்ள வரதராஜபுரம் பகுதியை சேர்ந்தவர் தினேஷ் (வயது 23). இவரது நண்பர்கள் குணா, விக்கி. இந்த நிலையில் தினேஷுக்கும் முடிச்சூர் பகுதியை சேர்ந்த தீபக் (23) என்பவருக்கும் முன் விரோதம் இருந்து வந்தது. இதனிடையே கடந்த மாதம் 28-ந்தேதி அன்று தினேஷ் வரதராஜபுரம் தாம்பரம் செல்லும் சாலையில் நின்று கொண்டிருந்தார். அப்போது 2 மோட்டார் சைக்கிளில் வந்த மர்ம நபர்கள் தினேஷை முதுகு, கை, கால் உள்ளிட்ட பகுதிகளில் அரிவாளால் வெட்டிவிட்டு அங்கிருந்து தப்பி சென்றனர். இதில் படுகாயம் அடைந்த தினேஷை அங்கு இருந்தவர்கள் மீட்டு செங்கல்பட்டு அரசு ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர்.

    இது குறித்த புகாரின் பேரில் மணிமங்கலம் போலீசார் வழக்கு பதிவு செய்து தப்பி ஓடிய நபர்களை தேடிவந்தனர். இந்த நிலையில் வரதராஜபுரம் பி.டி.சி. குடியிருப்பு பகுதி அருகே பதுங்கி இருந்த 4 பேரையும் போலீசார் சுற்றிவளைத்து பிடித்து விசாரணை நடத்தினர். விசாரணையில் அவர்கள் முடிச்சூர் பகுதியை சேர்ந்த தீபக் ( 23), மண்ணிவாக்கம் பகுதியை சேர்ந்த ஹேமச்சந்திரன் என்கிற சந்துரு ( 21), முடிச்சூர் பகுதியை சேர்ந்த சரண்குமார் (21), 18 வயது சிறுவன் என்பது தெரியவந்தது. விசாரணையில் முன்விரோதத்தில் வெட்டியது தெரியவந்தது. போலீசார் அவர்களை கைது செய்தனர். அவர்களிடமிருந்து 2 அரிவாள் மற்றும் 2 கத்தி போன்றவற்றை போலீசார் கைப்பற்றினர்.

    ×