search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "பங்குசந்தை"

    • நேற்று முன்தினம் மும்பை பங்குச்சந்தை சென்செக்ஸ் 84266.29 புள்ளிகளுடன் வர்த்தகம் நிறைவடைந்தது.
    • "நிஃப்டி 50" நேற்று முன்தினம் 25,796.90 புள்ளிகளுடன் வர்த்தகம் நிறைவடைந்தது.

    மும்பை பங்குச்சந்தை சென்செக்ஸ் கடந்த வாரம் இதுவரை இல்லாத வகையில் 85 ஆயிரம் புள்ளிகளை கடந்து வர்த்தகம் ஆனது. அதன்பின் வர்த்தகம் சரிவை கண்டது.

    காந்தி ஜெயந்தியை முன்னிட்டு நேற்று பங்குச்சந்தைகள் இயங்கவில்லை. நேற்று முன்தினம் மும்பை பங்குச்சந்தை சென்செக்ஸ் 84266.29 புள்ளிகளுடன் வர்த்தகம் நிறைவடைந்தது.

    இன்று காலை 9.15 மணிக்கு வர்த்தகம் தொடங்கியதும் மும்பை பங்குச்சந்தை சென்செக்ஸ் புள்ளிகள் 1264.2 புள்ளிகள் சரிந்து 83002.09 புள்ளிகளுடன வர்த்தகம் தொடங்கியது. பின்னர் படிப்படியாக ஏறிய வண்ணடம் இல்லை.

    9.30 மணி நிலவரப்படி மும்பை பங்குச் சந்தை சென்செக்ஸ் 83,605 புள்ளிகள் வர்த்தகமானது.

    இந்திய பங்குசந்தை நிஃப்டி 50, நேற்று முன்தினம் 25796.90 புள்ளிகளுடன் வர்த்தகம் நிறைவடைந்தது. இன்று காலை 344.08 புள்ளிகள் குறைந்கு 25452.85 புள்ளிகளுடன் வர்த்தகம் தொடங்கிறது.

    • 293 இடங்களில் வென்று பாஜக கூட்டணி ஆட்சியை பிடித்துள்ளது.
    • தேர்தல் கருத்துக்கணிப்புகள் மூலம் பங்குச் சந்தையில் மிகப்பெரிய முறைகேடு நடந்துள்ளது.

    பாராளுமன்ற தேர்தல் முடிவுகள் வெளியாகியுள்ளன. 293 இடங்களில் வென்று பாஜக கூட்டணி ஆட்சியை பிடித்துள்ளது. இந்தியா கூட்டணி கட்சிகள் 232 இடங்களில் வென்றுள்ளது.

    இந்நிலையில், இன்று டெல்லியில் ராகுல் காந்தி செய்தியாளர்கள் சந்தித்து பேசினார். அப்போது, பேசிய அவர், பேசிய அவர், "தேர்தல் கருத்துக்கணிப்புகள் மூலம் பங்குச் சந்தையில் மிகப்பெரிய முறைகேடு நடந்துள்ளது, இது கிரிமினல் குற்றமாகும்.

    தேர்தல்களின்போது முதன்முறையாக, பிரதமர், உள்துறை அமைச்சர் மற்றும் நிதியமைச்சர் பங்குச் சந்தைகள் குறித்து கருத்து தெரிவித்தனர்.

    பங்குச்சந்தை ஏற்றம் காணப் போகிறது என்று பிரதமர் பல முறை கூறினார்.

    ஜூன் 4ம் தேதி பங்குச்சந்தை உயரும், மக்கள் பங்குகளை வாங்க வேண்டும் என உள்துறை அமைச்சர் வெளிப்படையாகவே தெரிவித்தார்.

    ஊடகங்கள் போலியான கருத்துக்கணிப்புகளை வெளியிடுகின்றன, ஆனால் பாஜகவுக்கு 200-220 இடங்கள் மட்டுமே கிடைக்கும் என அவர்களுக்குத் தெரியும்.

    ஜூன் 3 அன்று பங்குச்சந்தை வரலாறு காணாத ஏற்றத்தைச் சந்தித்தது, ஆனால் அடுத்த நாளே நினைத்துப்பார்க்க முடியாத அளவுக்கு வீழ்ச்சியை சந்தித்தது.

    தேர்தல் முடிவுகள் வெளியான அன்று பங்குச்சந்தையில் முதலீட்டாளர்களுக்கு ₹38 லட்சம் கோடி இழப்பு ஏற்பட்டுள்ளது.

    பங்குச்சந்தையில் முதலீடு செய்த சிறு முதலீட்டாளர்கள் ஏமாற்றப்பட்டுள்ளனர். பங்குச்சந்தையில் லாபம் ஈட்ட தேர்தல் கருத்துக் கணிப்பில் முறைகேடு நடந்துள்ளது. மே 30, 31 தேதிகளில் பல ஆயிரம் கோடிக்கு பங்குகள் வாங்கிக் குவிக்கப்பட்டுள்ளது

    வரலாற்றில் இல்லாத அளவிற்கு பங்குச் சந்தையில் பாஜகவினரால் மிகப்பெரிய ஊழல் அரங்கேறியுள்ளது

    பங்குச் சந்தை முறைகேட்டால் சாமானிய மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.

    பங்குச்சந்தையில் நடத்துள்ள முறைகேடுகள் குறித்து பிரதமர் மோடி, அமித்ஷாவிடம் நாடாளுமன்ற கூட்டுக்குழு விசாரணை நடத்த வேண்டும்.

    விசாரணை நியாயமாக நடைபெற வேண்டும், இதனால் பயனடைந்தவர்கள் யார் என தெரிய வேண்டும்" என்று புள்ளி விவரங்களுடன் ராகுல்காந்தி குற்றம் சாட்டியுள்ளார்.

    • சங்கர், தனது வீட்டை விற்று லட்சக்கணக்கில் பங்கு சந்தையில் முதலீடு செய்துள்ளார்.
    • வேட்டியால் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்ட நிலையில் சங்கர் பிணமாக தொங்கி கொண்டிருந்தார்.

    சங்கரன்கோவில்:

    தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் புதுமனை 3-வது தெருவை சேர்ந்தவர் சங்கர்(வயது 45). இவர் ஜவுளி வியாபாரியான இவர் இந்து முன்னணி நிர்வாகியாகவும் இருந்து வந்தார். இவர் பங்கு சந்தையில் ஆர்வம் காட்டி வந்ததாக கூறப்படுகிறது.

    பங்குசந்தையில் முதலீடு

    கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பாக இவர் தனது வீட்டை விற்று லட்சக்கணக்கில் பங்கு சந்தையில் முதலீடு செய்துள்ளார். இந்நிலையில் பங்கு சந்தையில் சரிவு ஏற்பட்டதால், அவரது பங்கு சரிவு ஏற்பட்டு நஷ்டம் அடைந்ததாகவும், அதனை சரிசெய்ய வேறு இடங்களில் கடன் வாங்கி முதலீடு செய்து அந்த பணத்தையும் அவர் இழந்துவிட்டதாக கூறப்படுகிறது.

    இதனால் மனம் உடைந்து காணப்பட்ட சங்கர், கடந்த 2 நாட்களாக யாரிடமும் பேசாமல் இருந்து வந்த நிலையில், நேற்று மதியம் தனது அறைக்குள் சென்று கதவை பூட்டிக்கொண்டார். இரவு நேரம் வரை அவர் அறை திறக்கப்படவில்லை. இதனால் சந்தேகம் அடைந்த அவரது உறவினர்கள் கதவை தட்டி பார்த்துள்ளனர். ஆனால் கதவை திறக்காததால், ஜன்னல் வழியாக எட்டிப்பார்த்துள்ளனர்.

    அப்போது அவர் வேட்டியால் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்ட நிலையில் பிணமாக தொங்கி கொண்டிருந்தார்.

    இதனை பார்த்த அவரது மனைவி சண்முகப்பிரியா கதறி அழுதார். தகவல் அறிந்து அங்கு வந்த சங்கரன்கோவில் டவுன் போலீசார், சங்கர் உடலை மீட்டு அரசு ஆஸ்பத்திரிக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இதுதொடர்பாக வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • ஆறுமுகம் உறவினருக்கு சொந்தமாக உள்ள பாத்திரக்கடையை நடத்தி வருகிறார்.
    • உளுந்தூர்பேட்டை போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.

    கள்ளக்குறிச்சி:

    உளுந்தூர்பேட்டை பேபி நகரை சேர்ந்தவர் ஆறுமுகம் (வயது 37). உளுந்தூர்பேட்டையில் இவரது உறவினருக்கு சொந்தமாக உள்ள பாத்திரக்கடையை நடத்தி வருகிறார். மேலும், பங்கு சந்தையில் முதலீடு செய்து தொழில் செய்து வந்தார். கடலூர் மாவட்டம் புவனகிரியை பூர்வீகமாக கொண்ட இவருக்கு கடந்த 7 ஆண்டுகளுக்கு முன்னர் திருமணம் ஆனது. இவர்களுக்கு குழந்தை ஏதும் இல்லை.

    பங்குசந்தையில் ஏற்பட்ட வீழ்ச்சியின் காரணமாக ஆறுமுகம் கடுமையான நஷ்டம் அடைந்தார். இதனால் இவருக்கு கடன் பிரச்சனை ஏற்பட்டுள்ளது. மேலும், குழந்தை இல்லாததால் மன உளைச்சலில் இருந்ததாகவும் கூறப்படுகிறது. இந்நிலையில் இன்று அதிகாலை ஆறுமுகம் மனைவி கழிவறைக்கு சென்றார். அங்கு ஆறுமுகம் தூக்கு போட்டு இறந்து தொங்கிய நிலையில் இருந்தார். அவரின் அலறல் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் விரைந்து வந்தனர். உடனடியாக உளுந்தூர்பேட்டை போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.

    தகவலின்பேரில் விரைந்து வந்த உளுந்தூ ர்பேட்டை போலீசார், தூக்கில் தொங்கிய நிலையில் இறந்த ஆறுமுகத்தின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இது தொடர்பாக வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ×