என் மலர்
நீங்கள் தேடியது "பாட் கம்மின்ஸ்"
- முதலில் ஆடிய ஐதராபாத் 18.4 ஓவரில் 163 ரன்னுக்கு ஆல் அவுட் ஆனது.
- அந்த அணியின் அனிகேத் வர்மா அதிரடியாக ஆடி 74 ரன்கள் எடுத்தார்.
விசாகப்பட்டினம்:
18-வது ஐ.பி.எல். கிரிக்கெட் தொடர் இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடந்து வருகிறது. இன்று நடைபெற்ற முதல் லீக் ஆட்டத்தில் டெல்லி கேப்பிடல்ஸ், சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணிகள் மோதின. டாஸ் வென்ற ஐதராபாத் பேட்டிங் தேர்வு செய்தது.
அதன்படி, முதலில் ஆடிய ஐதராபாத் 18.4 ஓவரில் 163 ரன்னுக்கு ஆல் அவுட் ஆனது. அதிரடியாக ஆடிய அனிகேத் வர்மா 74 ரன்கள் எடுத்தார்.
டெல்லி சார்பில் மிட்செல் ஸ்டார்க் 5 விக்கெட்டும், குல்தீப் யாதவ் 3 விக்கெட்டும் வீழ்த்தினர்.
தொடர்ந்து ஆடிய டெல்லி கேப்பிட்டல்ஸ் 16 ஓவரில் 3 விக்கெட்டுக்கு 166 ரன்கள் எடுத்து 7 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. டு பிளெஸ்சிஸ் 50 ரன்கள் எடுத்தார். ஆட்டநாயகன் விருது மிட்செல் ஸ்டார்க்குக்கு வழங்கப்பட்டது.
இந்நிலையில், போட்டிக்கு பிறகு தோல்வி குறித்து ஐதராபாத் கேப்டன் பாட் கம்மின்ஸ் கூறியதாவது:
நாங்கள் ஆரம்பத்திலேயே விக்கெட்டுகளை இழந்தோம். நாங்கள் மோசமான ஷாட்டுகளை அடிக்கவில்லை. ரன் அவுட்டும் அப்படியே அமைந்தது. இது போன்ற விஷயங்கள் நடப்பது சகஜம்.
அனிகேத் எங்களுக்கு நல்ல ஸ்கோர் கொடுத்தார். அனிகேத் அதிகம் அறியப்படாதவர் என்றாலும் இத்தொடரில் அபாரமாக வந்துள்ளார். அவர் எங்களுக்கு வெற்றி பெற பாதி வாய்ப்பைக் கொடுத்தார்.
மொத்தமாக எங்கள் வீரர்கள் அனைவரும் தங்களால் என்ன முடியும் என்பதில் கொஞ்சத்தை காண்பித்தனர். எனவே நாங்கள் எதையும் அதிகம் மாற்ற வேண்டியதில்லை.
கடந்த போட்டியை போல் இது மோசமான பெரிய தோல்வி என நினைக்கவில்லை. கடந்த இரண்டு ஆட்டங்களில் எல்லாம் நம் வழியில் செல்லவில்லை. மிக விரைவில் நாங்கள் மீண்டும் முன்னேறுவோம் என நம்புகிறேன் என தெரிவித்தார்.
- பெரும்பாலான பகுதிகளில் நாங்கள் கட்டுப்பாட்டில் இருந்தோம்.
- போலண்ட் எனக்கு மிகவும் பிடித்த வீரர் என்றார் பாட் கம்மின்ஸ்.
லண்டன்:
உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் போட்டியில் வெற்றி பெற்ற பிறகு ஆஸ்திரேலியா கேப்டன் பாட் கம்மின்ஸ் கூறியதாவது:
டிராவிஸ் மற்றும் ஸ்மித் பார்ட்னர்ஷிப் பதற்றமான காலைக்குப் பிறகு எங்களுக்கு ஆறுதல் அளித்தது.
இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு ஆஷசுடன் தொடங்கிய இந்த ஆட்டத்தில் ஹெட் மிகச் சிறந்தவராக இருந்தார். அவர் பந்துவீச்சாளர்களுக்கு அழுத்தத்தை மீண்டும் கொடுக்கிறார்.
முதல் நாள் ஆட்டத்தில் நாங்கள் உச்சத்தில் இருப்பது போன்ற உணர்வை விட்டுவிட்டோம். அதை எண்ணும்போது நாங்கள் நன்றாக விளையாடினோம்.
பெரும்பாலான பகுதிகளில் நாங்கள் கட்டுப்பாட்டில் இருந்தோம். போலண்ட் - அவர் எனக்கு மிகவும் பிடித்த வீரர். அவர் எனக்கு மிகவும் பிடித்தவராகத் தொடர்கிறார்.
ஸ்மித், போலண்ட், ஹெட் உள்பட ஒவ்வொருவரும் தங்கள் பங்கை நன்றாகவே செய்திருக்கிறார்கள். அனைவரும் நன்றாக விளையாடினார்கள், சில வருடங்கள் இதை ரசிப்போம், நாங்கள் எங்கள் கவனத்தை (ஆஷஸ் பக்கம்) திருப்புவோம்.
இது எங்களுக்கு பிடித்தமான பார்மட், நாங்கள் டெஸ்ட் கிரிக்கெட் பார்த்து வளர்ந்தவர்கள். வெற்றிபெறும் போது நீங்கள் மிகவும் திருப்தி அடைவீர்கள். நாங்கள் விளையாடுவதை விரும்புகிறோம் என தெரிவித்தார்.
- டான் பிராட்மேனுக்கு அடுத்தபடியாக ஆஸ்திரேலியாவின் தலைசிறந்த கிரிக்கெட் வீரராக ஆஸ்திரேலிய கேப்டன் பாட் கம்மின்ஸ் திகழ்வார்
- சர்வதேச கிரிக்கெட்டில் 1,001 விக்கெட்டுகளை வீழ்த்தி, ஆஸ்திரேலியாவின் டாப் விக்கெட் மேக்கர் என்ற பட்டத்தை பாட் கம்மின்ஸ் பெற்றார்.
டான் பிராட்மேனுக்கு அடுத்தபடியாக ஆஸ்திரேலியாவின் தலைசிறந்த கிரிக்கெட் வீரராக ஆஸ்திரேலிய கேப்டன் பாட் கம்மின்ஸ் திகழ்வார் என இங்கிலாந்து அணியின் முன்னாள் கேப்டன் மைக்கல் வாகன் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் கூறும் போது, கேப்டனுக்கு இப்போது முப்பது வயதுதான் ஆகிறது. இன்னும் அவர் ஐந்து முதல் ஏழு ஆண்டுகள் விளையாட வேண்டும். சில ஆண்டுகளில் ஆஸ்திரேலியாவின் சிறந்த கிரிக்கெட் வீரராக பிராட்மேனுக்குப் பிறகு கம்மின்ஸ் இருப்பார். "டான் பிராட்மேனை விட சிறந்தவராக இருப்பார் என நினைக்கவில்லை, ஆனால் டான் பிராட்மேனுக்கு பிறகு ஆஸ்திரேலியாவின் சிறந்த கிரிக்கெட் வீரராக பேட் கம்மின்ஸ் இருப்பார்" என நம்புவதாக தெரிவித்தார்
ஏனென்றால், சிட்னி கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்ற பாகிஸ்தானுக்கு எதிரான தொடரின் ஆஸ்திரேலியாவின் மூன்றாவது மற்றும் கடைசி டெஸ்டில் தொடர்ச்சியாக மூன்று விக்கெட்டுகளை வீழ்த்திய கம்மின்ஸ் தனது சிறப்பான ஆட்டத்தை தக்கவைத்துக் கொண்டார். கடந்த ஆண்டு, ஆஸ்திரேலியாவை அதன் 6-வது ஐசிசி கிரிக்கெட் உலகக் கோப்பை மற்றும் ஐசிசி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்பிற்கு வழிநடத்தினார். மேலும் ஒவ்வொரு போட்டியிலும் பத்து விக்கெட்டுகள், இரண்டு ஐந்து விக்கெட்டுகளை கைப்பற்றி சிறப்பாக ஆடினார்.
சமீபத்தில் துபாயில் நடந்த ஐபிஎல் விற்பனையில் சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணியுடன் ரூ 20.50 கோடிக்கு பேட் கம்மின்ஸ் ஒப்பந்தம் செய்தார். அதன் பிறகு ஐபிஎல் வரலாற்றில் விலைமதிப்பற்ற வீரராக திகழ்ந்தார். சர்வதேச கிரிக்கெட்டில் 1,001 விக்கெட்டுகளை வீழ்த்தி, ஆஸ்திரேலியாவின் டாப் விக்கெட் மேக்கர் என்ற பட்டத்தை பெற்றார். சர்வதேச கிரிக்கெட்டில் ஆஸ்திரேலியாவுக்காக அதிக விக்கெட்டுகளை வீழ்த்தியவர்களில் கம்மின்ஸ் ஒன்பதாவது இடத்தில் இருப்பதாகவும் அவர் தெரிவித்தார்.
- இலங்கைக்கு எதிரான ஒருநாள் தொடர் வருகிற 12-ந் தேதி தொடங்குகிறது.
- சாம்பியன்ஸ் டிராபி தொடர் வருகிற 19-ந் தேதி தொடங்குகிறது
ஆஸ்திரேலியா அணி இலங்கையில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 2 டெஸ்ட் போட்டி மற்றும் 2 ஒருநாள் தொடரில் விளையாடி வருகிறது. முதலில் நடந்த டெஸ்ட் போட்டியில் ஆஸ்திரேலியா வெற்றி பெற்றது. 2-வது டெஸ்ட் போட்டி இன்று தொடங்கி நடைபெற்று வருகிறது.
இதனையடுத்து ஒருநாள் தொடர் நடைபெற இருக்கிறது. இந்நிலையில் இந்த தொடர் மற்றும் சாம்பியன்ஸ் டிராபி தொடரில் இருந்து ஆஸ்திரேலிய கேப்டன் பேட் கம்மின்ஸ் மற்றும் வேகப்பந்து வீச்சாளர் ஹேசில்வுட் காயம் காரணமாக விலகி உள்ளனர். இவர்களுக்கு மாற்று வீரர்களாக பென் டுவார்ஷுயிஸ், ஜேக் ஃப்ரேசர்-மெக்கர்க், மற்றும் ஸ்பென்சர் ஜான்சன் ஆகியோர் ஒருநாள் அணியில் சேர்க்கப்பட்டுள்ளனர்.
ஐ.சி.சி. சாம்பியன்ஸ் கோப்பை 2025 கிரிக்கெட் தொடர் இன்னும் சில வாரகளில் தொடங்க உள்ள நிலையில் இவர்கள் விலகியது ஆஸ்திரேலிய அணிக்கு பின்னடைவாக பார்க்கப்படுகிறது.
சாம்பியன்ஸ் கோப்பை தொடரில் ஆஸ்திரேலிய அணி தனது முதல் போட்டியில் இங்கிலாந்து அணியை எதிர்கொள்கிறது. இந்தப் போட்டி பிப்ரவரி 22-ம் தேதி லாகூரில் உள்ள கடாஃபி மைானத்தில் நடைபெற இருக்கிறது.
- இந்திய அணி ஏற்கனவே வலுவான அணியாக உள்ளது.
- அனைத்து போட்டிகளையும் ஒரே மைதானத்தில் விளையாடுவது கூடுதல் பலனளிக்கும் என்றார்.
சிட்னி:
சாம்பியன்ஸ் டிராபியில் பாகிஸ்தானுக்கு எதிரான ஆட்டத்தில் இந்திய அணி அபார வெற்றி பெற்று அரையிறுதிக்குள் நுழைந்தது.
இந்நிலையில், இந்திய அணியின் செயல்பாடு குறித்து ஆஸ்திரேலியா கேப்டன் பாட் கம்மின்ஸ் கருத்து தெரிவித்துள்ளார்.
சாம்பியன்ஸ் டிராபி தொடர் நன்றாக சென்று கொண்டிருக்கிறது. ஒரே மைதானத்தில் விளையாடுவது இந்தியாவுக்கு பெரும் நன்மை அளிக்கிறது.
அவர்கள் ஏற்கனவே வலுவான அணியாக உள்ளனர். அனைத்துப் போட்டிகளையும் ஒரே மைதானத்தில் விளையாடுவது அவர்களுக்கு கூடுதலாக பலனளிக்கும்.
எல்லா போட்டிகளையும் அங்கு விளையாடுவதன் மூலம் அவர்கள் வெளிப்படையான பலனைப் பெற்றுள்ளனர் என தெரிவித்துள்ளார்.