search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "அவதூறு கருத்து"

    • பொது அமைதிக்கு குந்தகம் விளைக்கும் அமைப்பினர் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என புகார்.
    • சில உதிரி அமைப்பினர் இவருடன் சேர்ந்து புது புது அவதூறுகளை உருவாக்கும்.

    ஈஷாவுக்கு எதிராக தொடர்ந்து அவதூறு பரப்பி, பொது அமைதிக்கு குந்தகம் விளைவிக்க முயற்சிக்கும் காமராஜ், பியூஷ் மனுஷ் உள்ளிட்டோர் மீது வழக்கு பதிந்து கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோவை எஸ்.பி அலுவலகத்தில் ஈஷா அறக்கட்டளை சார்பில் புகார் மனு அளிக்கப்பட்டது. 

    இது தொடர்பாக ஈஷா நிர்வாகி தினேஷ் ராஜா கூறியதாவது:

    சமூக ஆர்வலர், சுற்றுச்சூழல் ஆர்வலர் என்ற போலி பெயர்களில் திரியும் நபர் பியூஷ். இந்து கலாச்சாரம், ஆன்மீக மரபுகள் மற்றும் அதை சார்ந்து இயங்கும் நபர்கள் மீது அவதூறு பரப்புவது தான் இவருடைய முழு நேர தொழிலாக உள்ளது.

    இவர், ஈஷாவிற்கு எதிராக அவதூறு செய்திகளை நாகரீகமற்ற முறையில் சமூக வலைத்தளங்களில் பரப்புவதை வாடிக்கையாக கொண்டுள்ளார்.

    கோவையில் செயல்படும் சில உதிரி அமைப்பினர் இவருடன் சேர்ந்து புது புது அவதூறுகளை உருவாக்கும் முயற்சிகளை கையில் எடுத்துள்ளனர். இந்த உதிரி அமைப்புகள் சில மாதங்களுக்கு முன்பு ஈஷாவிற்குள் அத்துமீறி உள்ளே நுழைய முயற்சித்ததும், அவர்களை காவல்துறையினரின் ஒத்துழைப்போடு, உள்ளூர் மக்கள் தடுத்து திருப்பி அனுப்பியது இங்கு குறிப்பிடத்தக்கது.

    பியூஷ் மனுஷ் சில தினங்களுக்கு முன்பு வெளியிட்டுள்ள வீடியோவில், லட்சக்கணக்கான மக்கள் பக்தியுடன் வணங்கும் ஆதியோகி மற்றும் லிங்கபைரவி குறித்து மிக கொச்சையாக அவதூறு பரப்பி உள்ளார். எவ்வித அடிப்படை ஆதாரமும் இன்றி அவர் பேசியுள்ள கருத்துக்கள் ஈஷா தன்னார்வலர்கள் மற்றும் பக்தர்களின் மனதை காயப்படுத்தி உள்ளது.

    இதன் அடுத்தக்கட்டமாக, பத்திரிக்கையாளர் சந்திப்பு, துண்டு பிரசுரங்கள் விநியோகம், ஆர்ப்பாட்டம் என பல வழிமுறைகள் மூலமாக மக்களின் மத உணர்வுகளை கொச்சைப்படுத்தி பொது அமைதிக்கு குந்தகம் விளைவிக்க இவர்கள் திட்டமிட்டுள்ளனர்.

    'ஈஷா எதிர்ப்பு கூட்டியக்கம்' என்ற பெயரில் இயங்கும் சமூக நல்லிணக்கத்திற்கு எதிரான இந்த உதிரி அமைப்பினர் மீது காவல்துறை வழக்கு பதிந்து கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.

    • நற்பெயருக்கு களங்கம் விளைவிக்கும் வகையில் இருப்பதால் வழக்கு.
    • ஒரு கோடியே ஆயிரம் ரூபாய் மானநஷ்ட ஈடு வழங்க கோரி, நடிகர் கார்த்திக் குமார் வழக்கு.

    நடிகர் கார்த்திக் குமார் குறித்து அவதூறு கருத்துக்களை தெரிவிக்க பாடகி சுசித்ராவிற்கு இடைக்கால தடை விதித்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

    சுசித்ரா சமீபத்தில் அளித்த பேட்டி, தன் நற்பெயருக்கு களங்கம் விளைவிக்கும் வகையில் இருப்பதால், ஒரு கோடியே ஆயிரம் ரூபாய் மானநஷ்ட ஈடு வழங்க கோரி, நடிகர் கார்த்திக் குமார் வழக்கு தொடர்ந்துள்ளார்.

    பாடகி சுசித்ரா, தன்னை பற்றியும், தன்னுடைய குடும்பத்தினர் பற்றியும் அவதூறான கருத்துக்களை தெரிவிக்க பாடகி சுசித்ராவிற்கு தடை விதிக்க வேண்டும் எனவும் மனுதாரர் குறிப்பிட்டிருந்தார்.

    இந்நிலையில், நடிகர் கார்த்திக் குமார் குறித்து அவதூறு கருத்துக்களை தெரிவிக்க சுசித்ராவிற்கு இடைக்கால தடை விதிக்கப்பட்டுள்ளது.

    • முதல்வர் குறித்து அவதூறு கருத்து தெரிவித்ததாக பா.ஜ.க. பெண் பிரமுகர் ஏற்கனவே கைதுசெய்யப்பட்டார்.
    • கோவை சிறையில் அடைக்கப்பட்டிருந்த உமா கார்கி ஜாமீன் வழங்கக்கோரி கோர்ட்டில் மனுதாக்கல் செய்தார்

    சென்னை:

    கோவை சிங்காநல்லூரைச் சேர்ந்தவர் உமா கார்கி (56). பாரதிய ஜனதா கட்சியைச் சேர்ந்தவர். இவர் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மற்றும் கருணாநிதி, பெரியார் உள்ளிட்ட தலைவர்கள் பற்றி அவதூறு தகவல்களைப் பரப்பியதாக கோவை மாநகர சைபர் கிரைம் போலீசில் தி.மு.க. பிரமுகர் ஹரீஷ் என்பவர் புகார் கொடுத்தார்.

    அதன்பேரில் அவதூறு பரப்புதல், தகவல் தொழில்நுட்பத்தை தவறாக பயன்படுத்துதல் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் சைபர் கிரைம் போலீசார் வழக்குப்பதிவு செய்து உமா கார்கியை கைது செய்தனர். பின்னர் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு அவர் ஜெயிலில் அடைக்கப்பட்டார்.

    கோவை சிறையில் அடைக்கப்பட்டிருந்த உமா கார்கி தனக்கு ஜாமீன் வழங்கக்கோரி கோர்ட்டில் மனுதாக்கல் செய்தார். இந்த மனு வரும் 26-ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

    இந்நிலையில், நடிகர் விஜய் குறித்து அவதூறு கருத்து வெளியிட்டதாக உமா கார்கி மீது விஜய் மக்கள் இயக்கம் சார்பில் சென்னை போலீசில் புகார் அளிக்கப்பட்டது.

    புகாரின் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்த போலீசார் உமா கார்கியை கைது செய்தனர். கோவை சிறையில் அடைக்கப்பட்டிருந்த உமா கார்கி தற்போது சென்னை அழைத்து வரப்பட்டு புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

    • மனுவை விசாரித்த நீதிபதி, கைதான உமா கார்கியை ஒரு நாள் மட்டும் காவலில் வைத்து விசாரிக்க அனுமதி வழங்கினார்.
    • போலீசார் உமாகார்கியை இன்று ஒரு நாள் மட்டும் காவலில் வைத்து விசாரித்து வருகிறார்கள்.

    கோவை:

    கோவை சிங்காநல்லூரைச் சேர்ந்தவர் உமா கார்கி (வயது 56). பாரதிய ஜனதா கட்சியைச் சேர்ந்தவர்.

    இவர் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மற்றும் கருணாநிதி, பெரியார் உள்ளிட்ட தலைவர்கள் பற்றி அவதூறு தகவல்களை பரப்பியதாக கோவை மாநகர சைபர் கிரைம் போலீசில் தி.மு.க. பிரமுகர் ஹரீஷ் என்பவர் புகார் கொடுத்தார்.

    அதன்பேரில் அவதூறு பரப்புதல், தகவல் தொழில்நுட்பத்தை தவறாக பயன்படுத்துதல் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் சைபர் கிரைம் போலீசார் வழக்குப்பதிவு செய்து உமா கார்கியை கைது செய்தனர். பின்னர் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு அவர் ஜெயிலில் அடைக்கப்பட்டார்.

    இந்தநிலையில் உமா கார்கியிடம் சில தகவல்களை பெற வேண்டி இருந்ததால் அவரை 2 நாட்கள் காவலில் எடுத்து விசாரிக்க சைபர் கிரைம் போலீசார் கோவை 4-வது மாஜிஸ்திரேட்டு கோர்ட்டில் நேற்று மனுத்தாக்கல் செய்திருந்தனர்.

    இந்த மனு இன்று விசாரணைக்கு வந்தது. மனுவை விசாரித்த நீதிபதி, கைதான உமா கார்கியை ஒரு நாள் மட்டும் காவலில் வைத்து விசாரிக்க அனுமதி வழங்கினார். அதன்படி போலீசார் உமாகார்கியை இன்று ஒரு நாள் மட்டும் காவலில் வைத்து விசாரித்து வருகிறார்கள்.

    • முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பற்றி உமா கார்கி தொடர்ந்து அவதூறு கருத்துக்களை பரப்பி வருவதாக கோவை சைபர் கிரைம் போலீசில் புகார் கூறப்பட்டது.
    • கோவை வடக்கு மாவட்ட தி.மு.க. தகவல் தொழில்நுட்ப பிரிவு அமைப்பாளர் ஹரீஷ் என்பவர் அந்த புகாரை அளித்துள்ளார்.

    கோவை:

    கோவை சிங்காநல்லூர் பகுதியைச் சேர்ந்தவர் உமா கார்கி (வயது 56).

    இவர் பாரதிய ஜனதா கட்சியின் தீவிர ஆதரவாளர். சமூக வலைதளங்களில் பாரதிய ஜனதா மற்றும் பிரதமர் மோடி தொடர்பான ஆதரவு கருத்துக்களை தொடர்ந்து வெளியிட்டு வந்தார். அதேசமயம் தி.மு.க. மற்றும் எதிர்க்கட்சியினர் பற்றியும் கருத்துக்களை பதிவிட்டார்.

    இந்தநிலையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பற்றி உமா கார்கி தொடர்ந்து அவதூறு கருத்துக்களை பரப்பி வருவதாக கோவை சைபர் கிரைம் போலீசில் புகார் கூறப்பட்டது. கோவை வடக்கு மாவட்ட தி.மு.க. தகவல் தொழில்நுட்ப பிரிவு அமைப்பாளர் ஹரீஷ் என்பவர் அந்த புகாரை அளித்துள்ளார்.

    சிங்காநல்லூரைச் சேர்ந்த உமாகார்கி, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பற்றி பேஸ்புக் மற்றும் டுவிட்டரில் தொடர்ந்து அவதூறு கருத்துக்களை பரப்பி வருகிறார். மேலும் பெரியார், மணியம்மை குறித்தும் அவதூறு தகவல்களை வெளியிட்டு வருகிறார். அவதூறு மீம்ஸ்களையும் வெளியிடுகிறார். இரு மதத்தினரிடையே மோதலை ஏற்படுத்தும் வகையிலும் கருத்துக்களை பரப்பி வருகிறார். எனவே உமா கார்கி மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறி இருந்தார்.

    அதன்பேரில் போலீசார் தகவல் தொழில்நுட்பத்தை தவறாக பயன்படுத்துதல், இரு மதத்தினரிடையே மோதல் ஏற்படுத்த முயற்சி உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து உமா கார்கியை கைது செய்தனர்.

    இதுபற்றி தகவல் அறிந்த கோவை மாநகர் மாவட்ட பாரதிய ஜனதா தலைவர் பாலாஜி உத்தம ராமசாமி மற்றும் பா.ஜ.க.வினர் கோவை கமிஷனர் அலுவலகத்தில் செயல்படும் சைபர்கிரைம் போலீஸ் நிலையத்தில் குவிந்தனர். அவர்கள் உமா கார்கி கைது செய்யப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்தனர்.

    இதுபற்றி மாவட்ட தலைவர் பாலாஜி உத்தம ராமசாமி கூறியதாவது:-

    சைபர் கிரைம் போலீசார் ஒரு பெண் என்றும் பார்க்காமல் மன உளைச்சலை ஏற்படுத்தி உமா கார்கியை கைது செய்துள்ளனர். அவதூறு கருத்துக்களை பரப்பியதாக அவர் கைது செய்யப்பட்டிருக்கிறார். இந்த வழக்கை நாங்கள் சட்டப்படி சந்திப்போம்.

    இங்கு நடப்பதையெல்லாம் மத்திய அரசும், நீதிமன்றமும் பார்த்துக் கொண்டு தான் இருக்கிறது. ஒவ்வொரு வினைக்கும், எதிர்வினை உண்டு. தமிழக அரசு கைது நடவடிக்கையில் தீவிரம் காட்டாமல் மக்களுக்கு பயனுள்ள திட்டங்களை நிறைவேற்றுவதில் அக்கறை காட்ட வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    நேற்று கோவை காளப்பட்டியில் பா.ஜ.க. சமூக வலைதள செயல்வீரர்கள் கூட்டம் நடந்தது. இந்த கூட்டத்தில் சிறந்த சமூக வலைதள செயல்பட்டாளருக்கு விருது உமா கார்கிக்கு வழங்கப்பட்டது. இந்த விருதை பா.ஜ.க. மாநில தலைவர் அண்ணாமலை வழங்கி உமா கார்கியை கவுரவித்தார். விருது பெற்ற மறுநாளிலேயே உமா கார்கி, கைது செய்யப்பட்டு உள்ளது பா.ஜ.க.வினர் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

    • அவதூறுகளால் சட்டம்-ஒழுங்கு பிரச்சினை ஏற்பட வாய்ப்புள்ளது.
    • செல்வபாலன் பாரதிய ஜனதா கட்சியின் தகவல் தொழில்நுட்ப பிரிவில் பணியாற்றி வருகிறார்.

    தூத்துக்குடி:

    தூத்துக்குடி, சுந்தரவேல்புரம் 2-வது தெருவை சேர்ந்தவர் அந்தோணி ராஜ் (வயது30). இவர் தி.மு.க. தகவல் தொழில்நுட்ப அணியின் மாவட்ட துணை அமைப்பாளராக உள்ளார். இவர் சிப்காட் போலீஸ் நிலையத்தில் ஒரு புகார் மனு அளித்தார். அதில் கூறியிருப்பதாவது:-

    எனது முகநூல் பக்கத்தை பார்த்தபோது செல்வ பாலா செல்வா என்பவரது பதிவை பார்த்தேன். அதில் அவர், முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் படத்தை அவதூறாக சித்தரித்தும், அமைச்சர்கள் உதயநிதி ஸ்டாலின், மனோ தங்கராஜ், அமைச்சர் செந்தில் பாலாஜி, பி.டி.ஆர். பழனிவேல் தியாகராஜன் உள்ளிட்டவர்கள் குறித்து அவதூறு புகைப்படம் மற்றும் கருத்துக்களை பதிவிட்டுள்ளார்.

    இந்த அவதூறுகளால் சட்டம்-ஒழுங்கு பிரச்சினை ஏற்பட வாய்ப்புள்ளது. எனவே அவதூறு புகைப்படத்தை பதிவேற்றம் செய்தவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என கூறியிருந்தார்.

    அவரது புகாரின்பேரில் ரூரல் டி.எஸ்.பி. சுரேஷ் உத்தரவின்படி இன்ஸ்பெக்டர் சண்முகம் தலைமையில், சப்-இன்ஸ்பெக்டர் வசந்த்குமார் ஆகியோர் அடங்கிய தனிப்படை போலீசார் தீவிர விசாரணை நடத்தினர்.

    அதில் அவதூறு பதிவிட்டவர் தூத்துக்குடி குலையன்கரிசல் அம்மன் கோவில் தெருவை சேர்ந்த எலக்ட்ரீசியன் செல்வபாலன் (29) என்பதும், இவர் பாரதிய ஜனதா கட்சியின் தகவல் தொழில்நுட்ப பிரிவில் பணியாற்றி வருகிறார் என்பதும் தெரியவந்தது. அவர் மீது 5 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து செல்வபாலனை போலீசார் கைது செய்தனர்.

    • முபாரக் பாஷா என்பவர் செல்வத்தின் அவதூறு கருத்து தொடர்பாக காஞ்சிபுரம் மாவட்ட சைபர் கிரைம் போலீசில் புகார் செய்தார்.
    • போலீசார் வழக்குப்பதிவு செய்து பா.ஜனதா மாவட்ட செயலாளர் செல்வத்தை கைது செய்தனர்.

    காஞ்சிபுரம்:

    பாரதிய ஜனதா கட்சியின் காஞ்சிபுரம் மாவட்ட செயலாளராக இருப்பவர் செல்வம். இவர் தனது சமூகவலைதள பக்கத்தில் சர்ச்சைக்குரிய வகையில் கருத்து பதிவிட்டு இருந்தார். இது வைரலாக பரவி வந்தது.

    இந்த நிலையில் வாலாஜாபாத் பகுதியைச் சேர்ந்த முபாரக் பாஷா என்பவர் செல்வத்தின் அவதூறு கருத்து தொடர்பாக காஞ்சிபுரம் மாவட்ட சைபர் கிரைம் போலீசில் புகார் செய்தார்.

    இது குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து பா.ஜனதா மாவட்ட செயலாளர் செல்வத்தை கைது செய்தனர்.

    ×