search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "அரையிறுதி"

    • பாகிஸ்தானை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு இலங்கை முன்னேறியது
    • இலங்கை அணியின் கேப்டன் சமாரி அட்டப்பட்டு ஆட்ட நாயகனாக தேர்ந்தெடுக்கப்பட்டார்.

    தம்புல்லா:

    9-வது பெண்கள் ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டி (20 ஓவர்) இலங்கையில் நடந்து வருகிறது. லீக் சுற்று போட்டிகள் முடிந்த நிலையில் இந்தியா, பாகிஸ்தான், இலங்கை, வங்காளதேசம் ஆகிய அணிகள் அரையிறுதிக்கு தகுதி பெற்றன.

    முதல் அரையிறுதியில் வங்காளதேசத்தை வீழ்த்திய இந்திய அணி இறுதிப்போட்டிக்கு முன்னேறி அசத்தியது.

    இந்நிலையில், 2-வது அரையிறுதிப் போட்டியில் இலங்கை, பாகிஸ்தான் அணிகள் மோதின. டாஸ் வென்ற இலங்கை பவுலிங் தேர்வு செய்தது.

    அதன்படி, பாகிஸ்தான் அணி முதலில் களமிறங்கியது. தொடக்க வீராங்கனைகள் நிதானமாக ஆடினர். முதல் விக்கெட்டுக்கு 61 ரன்கள் சேர்த்த நிலையில் குல் பெரோசா 25 ரன்னில் அவுட்டானார். ஓரளவு தாக்குப் பிடித்த முனீபா அலி 37 ரன்னில் ஆட்டமிழந்தார். கேப்டன் நிதா தர் 23 ரன்னில் வெளியேறினார்.

    இறுதியில், பாகிஸ்தான் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் 4 விக்கெட்டுக்கு 140 ரன்கள் எடுத்துள்ளது.

    இதையடுத்து, 141 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இலங்கை அணி களமிறங்கியது. தொடக்க ஆட்டக்காரரான விஸ்மி குணரத்னே டக் அவுட்டாகி வெளியேறினார். மற்றொரு தொடக்க ஆட்டக்காரரான சமாரி அட்டப்பட்டு 63 ரன்கள் விளாசினார். கடைசி ஓவரில் 3 ரன்கள் தேவைப்பட்ட நிலையில் 19.5 ஓவர்கள் முடிவில் 141 ரன்கள் அடித்து இலங்கை அணி த்ரில் வெற்றி பெற்றது.

    பொறுப்புடன் விளையாடி அரைசதம் அடித்த இலங்கை அணியின் கேப்டன் சமாரி அட்டப்பட்டு ஆட்டநாயகனாக தேர்ந்தெடுக்கப்பட்டார்.

    இந்த வெற்றியின் மூலம் மகளிர் ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரில் இறுதிப் போட்டிக்கு இலங்கை அணி முன்னேறியது.

    நாளை நடைபெறும் மகளிர் ஆசிய கோப்பை இறுதிப்போட்டியில் இந்தியா இலங்கை அணிகள் மோதுகின்றன. 

    • டாஸ் வென்ற இலங்கை பந்துவீச்சை தேர்வு செய்தது.
    • முதலில் ஆடிய பாகிஸ்தான் 140 ரன்களை எடுத்தது.

    தம்புல்லா:

    9-வது பெண்கள் ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டி (20 ஓவர்) இலங்கையில் நடந்து வருகிறது. லீக் சுற்று போட்டிகள் முடிந்த நிலையில் இந்தியா, பாகிஸ்தான், இலங்கை, வங்காளதேசம் ஆகிய அணிகள் அரையிறுதிக்கு தகுதி பெற்றன.

    இந்தத் தொடரில் இன்று 2 அரையிறுதி ஆட்டங்கள் நடக்கின்றன. முதல் அரையிறுதியில் வங்காளதேசத்தை வீழ்த்திய இந்திய அணி இறுதிப்போட்டிக்கு முன்னேறி அசத்தியது.

    இந்நிலையில், 2-வது அரையிறுதிப் போட்டியில் இலங்கை, பாகிஸ்தான் அணிகள் மோதின. டாஸ் வென்ற இலங்கை பவுலிங் தேர்வு செய்தது.

    அதன்படி, பாகிஸ்தான் அணி முதலில் களமிறங்கியது. தொடக்க வீராங்கனைகள் நிதானமாக ஆடினர். முதல் விக்கெட்டுக்கு 61 ரன்கள் சேர்த்த நிலையில் குல் பெரோசா 25 ரன்னில் அவுட்டானார். ஓரளவு தாக்குப் பிடித்த முனீபா அலி 37 ரன்னில் ஆட்டமிழந்தார். கேப்டன் நிதா தர் 23 ரன்னில் வெளியேறினார்.

    இறுதியில், பாகிஸ்தான் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் 4 விக்கெட்டுக்கு 140 ரன்கள் எடுத்துள்ளது.

    இதையடுத்து, 141 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இலங்கை அணி களமிறங்குகிறது.

    • முதலில் ஆடிய வங்காளதேசம் 80 ரன்களை எடுத்தது.
    • அடுத்து ஆடிய இந்தியா 81 ரன்களை எடுத்து வென்றது.

    தம்புல்லா:

    9-வது பெண்கள் ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டி (20 ஓவர்) இலங்கையில் நடந்து வருகிறது. லீக் சுற்று போட்டிகள் முடிந்த நிலையில் இந்தியா, பாகிஸ்தான், இலங்கை, வங்காளதேசம் ஆகிய அணிகள் அரையிறுதிக்கு தகுதி பெற்றன.

    இந்தத் தொடரில் இன்று 2 அரையிறுதி ஆட்டங்கள் நடக்கின்றன.

    இந்நிலையில், முதல் அரையிறுதியில் நடப்பு சாம்பியன் இந்தியா மற்றும் வங்காளதேச அணிகள் மோதின. டாஸ் வென்ற வங்காளதேசம் பேட்டிங் தேர்வு செய்தது.

    அதன்படி, முதலில் ஆடிய வங்காளதேச அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் 8 விக்கெட்டுக்கு 80 ரன்கள் மட்டுமே எடுத்தது. கேப்டன் நிகர் சுல்தானா பொறுப்புடன் விளையாடி 32 ரன்னில் ஆட்டமிழந்தார்.

    இந்தியா சார்பில் ரேணுகா சிங் மற்றும் ராதா யாதவ் தலா 3 விக்கெட் வீழ்த்தினர்.

    இதையடுத்து, 81 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற எளிய இலக்குடன் இந்திய அணி களமிறங்கியது. ஷபாலி வர்மா மற்றும் ஸ்மிரிதி மந்தனா பொறுப்புடன் ஆடினர். ஸ்மிரிதி மந்தனா சிறப்பாக ஆடி அரை சதம் கடந்தார்.

    இறுதியில், இந்திய அணி 11 ஓவரில் விக்கெட் இழப்பின்றி 83 ரன்கள் எடுத்து அபார வெற்றி பெற்றது. அத்துடன் இறுதிப்போட்டிக்கும் முன்னேறி அசத்தியது.

    ஸ்மிரிதி மந்தனா 55 ரன்னும், ஷபாலி வர்மா 26 ரன்னும் எடுத்து ஆட்டமிழக்காமல் உள்ளனர்.

    • 120 நிமிடங்கள் நீடித்த ஆட்டத்தில் 2 அணிகளிலும் ஒரு கோல் கூட அடிக்கவில்லை
    • கிறிஸ்டியானோ ரொனால்டோவிற்கு இது கடைசி யூரோ சாம்பியன்ஷிப் தொடர் ஆகும்

    யூரோ சாம்பியன்ஷிப் கால்பந்து போட்டிகள் ஜெர்மனியின் ஹாம்பெர்க் நகரில் வைத்து அனல் தெறிக்க நடந்து வரும் நிலையில் பிரான்ஸ் மற்றும் போர்ச்சுகல் அணிகள் நேற்று நடந்த காலிறுதியில் பலப் பரீட்ச்சை செய்தன. 120 நிமிடங்கள் நீடித்த ஆட்டத்தில் 2 அணிகளிலும் ஒரு கோல் கூட அடிக்காததால் வெற்றியை பெனால்டி மூலம் தீர்மானிக்க முடிவெடுக்கப்பட்டது.

    பெனால்டி ஆட்டத்தில் போர்ச்சுகல் கேப்டன் கிறிஸ்டியானோ ரொனால்டோ, பெர்னார்டோ சிலவா, நினா மெண்டிஸ் ஆகோயோர் தலா ஒரு கோல் அடித்தனர். ஆனால் பிரான்ஸ் 5 பெனால்டி கோல்களை விளாசி 5-3 என்ற பெனால்டி கோல் கணக்கில் போர்ச்சுகலை வீழ்த்தி அரையிறுதிக்கு முன்னேறியுள்ளது. அரையிறுதியில் ஸ்பெயினுடன் பிரான்ஸ் மோத உள்ளது.

    நட்சத்திர வீரர் கிறிஸ்டியானோ ரொனால்டோவிற்கு இது கடைசி யூரோ சாம்பியன்ஷிப் தொடர் என்பதால் போர்ச்சுகல் தொடரில் இருந்து தற்போது வெளியேறியுள்ளது மிகவும் வலி மிகுந்ததாக இருந்தது. மைதானத்தில் உணர்ச்சி வயப்பட்டு காணப்பட்டார். தோல்வியால் அழுத்த பெபேவுக்கு ஆறுதல் கூறினார். முன்னதாக இந்த தொடரோடு யூரோ போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக ரொனால்டோ அறிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

     

    • டேனி ஆல்மோ ஆட்டத்தின் முதல் பாதியில் ஸ்பெயினை முன்னிலைக்கு கொண்டுவந்தார்.
    • மிகெல் மெரினோ தலையால் முட்டி அடித்த அதிரடி கோல் அந்த அணியின் வெற்றிக்கு அச்சாரமானது.

    யூரோ சாம்பியன்ஷிப் கால்பந்து போட்டிகள் நடந்து வரும் நிலையில் ஸ்பெயின் மற்றும் ஜெர்மன் அணிகளுக்கு இடையிலான நேற்றைய காலிறுதி போட்டியில் 2-1 என்ற கோல் கணக்கில் ஜெர்மனியை வீழ்த்தி ஸ்பெயின் அரையிறுதிக்கு முன்னேறியுள்ளது.

    விறுவிறுப்பாக தொடங்கிய போட்டியின் 51 ஆவது நிமிடத்தில் கோல் ஒன்றைஅடித்து ஸ்பெயின் வீரர் டேனி ஆல்மோ ஆட்டத்தின் முதல் பாதியில் ஸ்பெயினை முன்னிலைக்கு கொண்டுவந்தார்.

     

    பின் ஆட்டத்தின் மறு பாதியில் 89 வது நிமிடத்தில் ஜெர்மன் அணி வீரர் ஃபுளோரியன் ரிட்ஸ் அணியின் முதல் கோலை பதிவு செய்தார். 90 நிமிடங்கள் முடிவில் இரண்டு அணிகளும் 1-1 என்ற கோல் கணக்கில் இருந்ததால் ஆட்டம் கூடுதல் நேரம் நீடித்தது.

    இறுதியாக ஆட்டம் முடிய 1 நிமிடம் மட்டுமே இருந்த தருவாயில் ஸ்பெயின் வீரர் மிகெல் மெரினோ தலையால் முட்டி அடித்த அதிரடி கோல் அந்த அணியின் வெற்றிக்கு அச்சாரமானது. இதைதொடர்ந்து அரையிறுதியில் பிரான்ஸ் அணியுடன் ஸ்பெயின் அணி பலப்பரீச்சை செய்ய உள்ளது.

     

    • டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் இறுதிக்கட்டத்தை எட்டியது.
    • மழை பெய்ததால் டாஸ் போடுவதில் தாமதம் ஏற்பட்டது.

    கயானா:

    டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. இன்று நடந்த முதலாவது அரையிறுதி போட்டியில் தென் ஆப்பிரிக்கா அணி ஆப்கானிஸ்தானை வீழ்த்தியது.

    இன்று மாலை நடக்கும் இரண்டாவது அரையிறுதியில் இந்தியா, இங்கிலாந்து அணிகள் மோதுகின்றன. கயானாவில் மழை பெய்ததால் டாஸ் போடுவதில் தாமதம் ஏற்பட்டது.

    இந்நிலையில், மழை நின்றதும் டாஸ் போடப்பட்டது. இதில் டாஸ் வென்ற இங்கிலாந்து பவுலிங் தேர்வு செய்துள்ளது. இதையடுத்து, இந்திய அணி களமிறங்குகிறது.

    • டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது.
    • தற்போது அரையிறுதி போட்டிகள் நடைபெற்று வருகின்றன.

    கயானா:

    டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. இன்று நடந்த முதலாவது அரையிறுதி போட்டியில் தென் ஆப்பிரிக்கா அணி ஆப்கானிஸ்தானை வீழ்த்தியது.

    இந்நிலையில், கயானாவில் இன்று மாலை நடக்கும் இரண்டாவது அரையிறுதிப் போட்டியில் இந்தியா, இங்கிலாந்து அணிகள் சந்திக்க உள்ளன.

    ஆனால் கயானாவில் மழை பெய்து வருவதால் மைதானத்தைச் சுற்றி ஈரப்பதம் காணப்படுகிறது. இதையடுத்து, டாஸ் போடுவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது.

    • எந்த அணியையும் எங்களால் வீழ்த்த முடியும் என்ற நம்பிக்கையும், மன உறுதியும் உள்ளது.
    • எங்களிடம் திறமை உள்ளது என்று தெரியும். ஆனால் சூழல், சவால் மற்றும் அழுத்தத்தை எதிர்கொள்ள வேண்டும்.

    டி20 உலகக்கோப்பை தொடரில் முதல் அரையிறுதி போட்டியில் தென் ஆப்பிரிக்கா- ஆப்கானிஸ்தான் அணிகள் மோதின. இதில் தென் ஆப்பிரிக்கா அணி 9 விக்கெட் வித்தியாசத்தில் ஆப்கானிஸ்தானை வீழ்த்தியது. இதன்மூலம் டி20 உலகக் கோப்பை வரலாற்றில் இறுதி போட்டிக்கு முதல் முறையாக சென்றுள்ளது.

    இந்நிலையில் எந்த அணியையும் எங்களால் வீழ்த்த முடியும் என்ற நம்பிக்கையும், மன உறுதியும் உள்ளது என ஆப்கானிஸ்தான் அணியின் கேப்டன் ரஷித் கான் தெரிவித்துள்ளார்.

    இது குறித்து அவர் கூறியதாவது:-

    நிச்சயம் ஒரு அணியாக சோகமான முடிவு தான். நாங்கள் இன்னும் சிறப்பாக விளையாடியிருக்க வேண்டும். ஆனால் சூழல் எங்களை நன்றாக விளையாட அனுமதிக்கவில்லை. ஆனால் டி20 கிரிக்கெட்டில் எல்லாவிதமான சூழல் மற்றும் பிட்சிற்கும் தயாராக இருக்க வேண்டும். தென்னாப்பிரிக்கா அணி சிறப்பாக பவுலிங் செய்தனர். இந்த டி20 உலகக்கோப்பையில் எங்களின் வேகப்பந்துவீச்சு மிகச்சிறப்பாக அமைந்தது.

    ஏனென்றால் டி20 கிரிக்கெட்டில் வெல்ல வேண்டுமென்றால், நல்ல தொடக்கம் வேண்டும். முஜீப் உர் ரஹ்மான் காயம் ஏமாற்றத்தை அளித்தாலும், பவர் பிளே ஓவர்களில் வேகப்பந்துவீச்சாளர்களுடன் இணைந்து முகமது நபி மிகச்சிறப்பாக பவுலிங் செய்தார். அதனால் தான் ஸ்பின்னர்களின் பணி எளிதாக இருந்தது. நிச்சயம் இந்த டி20 உலகக்கோப்பையை நாங்கள் மகிழ்ச்சியாக விளையாடினோம் என்பதில் எந்த மாற்று கருத்தும் இல்லை. இந்த அரையிறுதி சுற்றில் தோல்வியடைந்ததை ஏற்றுக் கொள்ள வேண்டும்.

    இது எங்களுக்கு நல்ல தொடக்கமாக நினைக்கிறேன். எந்த அணியையும் எங்களால் வீழ்த்த முடியும் என்ற நம்பிக்கையும், மன உறுதியும் உள்ளது. நாங்கள் இதுவரை செய்ததை தொடர்ந்து செய்ய வேண்டும். இந்த டி20 உலகக்கோப்பையை ஒரு நம்பிக்கையாக எடுத்து கொள்கிறோம். எங்களிடம் திறமை உள்ளது என்று தெரியும். ஆனால் சூழல், சவால் மற்றும் அழுத்தத்தை எதிர்கொள்ள வேண்டும். மிடில் ஆர்டரில் இன்னும் சிறப்பாக செயல்பட வேண்டும். அடுத்தடுத்து பேட்டிங்கில் முன்னேற்றம் கண்டு நிச்சயம் கம்பேக் கொடுப்போம் என்று தெரிவித்துள்ளார்.

    • டி20 உலகக் கோப்பை தொடரில் லீக் சுற்று மற்றும் சூப்பர் 8 சுற்றுகள் முடிந்துள்ளன.
    • முதல் மற்றும் இரண்டாவது அரையிறுதிப் போட்டி நாளை நடைபெறுகின்றன.

    டிரினிடாட்:

    டி20 உலகக் கோப்பை தொடரில் லீக் சுற்று மற்றும் சூப்பர் 8 சுற்றுகள் முடிந்து அரையிறுதிப் போட்டிகள் நாளை தொடங்குகின்றன.

    முதல் அரையிறுதியில் ஆப்கானிஸ்தான், தென் ஆப்பிரிக்கா அணிகளும், இரண்டாவது அரையிறுதியில் இந்தியா, இங்கிலாந்து அணிகளும் மோதுகின்றன.

    தென் ஆப்பிரிக்கா மற்றும் ஆப்கானிஸ்தான் அணிகள் அரையிறுதியில் வென்று முதல் முறையாக இறுதிப்போட்டிக்கு தகுதி பெற உள்ளதால் ஆட்டத்தில் பரபரப்புக்கு பஞ்சம் இருக்காது.

    இந்நிலையில், தென் ஆப்பிரிக்கா அணியின் பயிற்சியாளர் ராப் வால்டர் கூறியதாவது:

    கடந்த காலங்களில் மிக முக்கியமான போட்டிகளில் நெருங்கி வந்து தோற்றுள்ளோம். தற்போதைய அணி அப்படி தோற்கவில்லை. இந்த அணி வித்தியாசமான அணி.

    நாங்கள் இந்தத் தொடரில் எல்லைகளை தாண்டி இருக்கிறோம். நாங்கள் சரிசெய்த விஷயங்கள் குறித்து யோசிக்கிறோம். இது ஒரு உலகக் கோப்பையின் அரையிறுதி. அதை நாங்கள் பாராட்டுகிறோம், அதற்காக நாங்கள் காத்திருக்கிறோம்.

    அதிர்ஷ்டத்தால் கிரிக்கெட் விளையாட்டில் வெற்றி பெற முடியும் என்று நான் நினைக்கவில்லை. சில விஷயங்கள் உங்கள் வழியில் செல்லக்கூடும் என்று நான் நினைக்கிறேன். திறமை எப்போதும் அதிர்ஷ்டத்தை வெல்லும், அது நிச்சயம்.

    நவீன கிரிக்கெட்டில் அணிகளைப் படிப்பது கடினம் அல்ல. ஏராளமான தொழில்நுட்பம் அதன் வசம் உள்ளது. அவர்களின் பல வீரர்கள் உலகெங்கிலும் உள்ள பல லீக் போட்டிகளில் விளையாடுகிறார்கள்.

    டி20 உலகக் கோப்பை அரையிறுதிப் போட்டிக்கு ஆப்கானிஸ்தான் வந்துள்ளது கிரிக்கெட் விளையாட்டிற்கு அற்புதமானது. அவர்கள் விளையாடும் விதம் மற்றும் அவர்கள் அதை ஆதரிக்கும் விதம் எனக்கு மிகவும் பிடிக்கும் என தெரிவித்துள்ளார்.

    • முதல் அரையிறுதி ஆட்டத்தில் தென் ஆப்பிரிக்கா - ஆப்கானிஸ்தான் அணிகள் மோதவுள்ளன.
    • இரண்டாவது அரையிறுதி ஆட்டத்தில் இந்தியா - இங்கிலாந்து அணிகள் மோதவுள்ளன.

    டி20 உலகக் கோப்பை தொடர் முக்கிய கட்டத்தை எட்டியுள்ளது, இந்தியா, ஆப்கானிஸ்தான், இங்கிலாந்து, தென் ஆப்பிரிக்கா ஆகிய 4 அணிகள் அரையிறுதிக்கு தகுதி பெற்றுள்ளன.

    ஜூன் 27 ஆம் தேதி நடைபெறும் முதல் அரையிறுதி ஆட்டத்தில் தென் ஆப்பிரிக்கா - ஆப்கானிஸ்தான் அணிகள் மோதவுள்ளன.

    அதே நாளில் நடைபெறும் இரண்டாவது அரையிறுதி ஆட்டத்தில் இந்தியா - இங்கிலாந்து அணிகள் மோதவுள்ளன.

    இந்தியா - இங்கிலாந்து போட்டி நடைபெறும் கயானா மைதானத்தில் போட்டி நடைபெறும் நாளன்று மழை பெய்ய 88% வாய்ப்புள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது.

    ஒருவேளை இந்தியா, இங்கிலாந்து அணிகள் மோதவுள்ள 2வது அரையிறுதி போட்டியில், மழை குறுக்கிட்டு ஆட்டம் முழுவதுமாக தடைப்பட்டு ரத்தானால் புள்ளிப் பட்டியலில் முதலாவதாக இருக்கும் இந்திய அணி இறுதிப் போட்டிக்குத் தகுதி பெறும் நிலை ஏற்பட்டுள்ளது. இப்போட்டிக்கு ரிசர்வ் டே இல்லாததால் இந்த விதி கடைப்பிடிக்கப்படுகிறது. 

    • ஒரு காலிறுதி ஆட்டத்தில் அமெரிக்காவின் கோகோ காப், துனிசியாவின் ஒன்ஸ் ஜபீர் உடன் மோதினார்.
    • மற்றொரு காலிறுதி ஆட்டத்தில் போலந்தின் இகா ஸ்வியாடெக், செக் குடியரசின் மார்கெட்டா வாண்ட்ரோசோவா உடன் மோதினார்.

    பாரீஸ்:

    பிரெஞ்சு ஓபன் டென்னிஸ் தொடர் பிரான்ஸ் தலைநகர் பாரீசில் நடைபெற்று வருகிறது. இந்த தொடரில் பெண்கள் ஒற்றையர் பிரிவின் காலிறுதி ஆட்டங்கள் இன்று நடைபெற்றன.

    இதில் ஒரு காலிறுதி ஆட்டத்தில் அமெரிக்காவின் கோகோ காப், துனிசியாவின் ஒன்ஸ் ஜபீர் உடன் மோதினார். இந்த ஆட்டத்தின் முதல் செட்டை 4-6 என்ற புள்ளிக்கணக்கில் இழந்த கோகோ காப் ஆட்டத்தின் அடுத்த இரு செட்களை 6-2, 6-3 என்ற செட் கணக்கில் கைப்பற்றினார்.இதன் மூலம் கோகோ காப் 4-6, 6-2, 6-3 என்ற புள்ளிக்கணக்கில் துனிசியாவின் ஒன்ஸ் ஜபீரை வீழ்த்தி அரையிறுதிக்கு முன்னேறினார்.

    மற்றொரு காலிறுதி ஆட்டத்தில் போலந்தின் இகா ஸ்வியாடெக், செக் குடியரசின் மார்கெட்டா வாண்ட்ரோசோவா உடன் மோதினார்.

    இந்த ஆட்டத்தில் ஆரம்பம் முதலே அபாரமாக செயல்பட்ட இகா ஸ்வியாடெக் 6-0, 6-2 என்ற நேர் செட் கணக்கில் மார்கெட்டா வாண்ட்ரோசோவாவை வீழ்த்தி அரையிறுதிக்கு முன்னேறினார். நாளை மறுநாள் நடைபெறும் ஒரு அரையிறுதி ஆட்டத்தில் இகா ஸ்வியாடெக் - கோகோ காப் மோத உள்ளனர்.

    • பரபரப்பாக நடைபெற்று வரும் அரையிறுதி போட்டியை காண ஏராளமான பிரபலங்கள் குவிந்துள்ளனர்.
    • நடிகர் ரஜினிகாந்த் தனது குடும்பத்தினருடன் அரையிறுதி போட்டியை கண்டுகளித்து வருகிறார்.

    உலகக்கோப்பை 2023 கிரிக்கெட் தொடரின் இந்தியா- நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான அரையிறுதி ஆட்டம் மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெற்று வருகிறது.

    டாஸ் வென்ற இந்திய அணி பேட்டிங்கை தேர்வு செய்ததை அடுத்து 50 ஓவர் முடிவில் 397 ரன்களை குவித்தது.

    தொடர்ந்து 398 ரன்கள் வெற்றி இலக்குடன் நியூசிலாந்து அணி விளையாடி வருகிறது.

    பரபரப்பாக நடைபெற்று வரும் அரையிறுதி போட்டியை காண ஏராளமான பிரபலங்கள் மும்பை வான்கடே மைதானத்தில் குவிந்துள்ளனர்.

    அதன்படி, நடிகர் ரஜினிகாந்த் தனது குடும்பத்தினருடன் அரையிறுதி போட்டியை கண்டுகளித்து வருகிறார்.

    ரஜினியுடன் அவரது மனைவி லதா ரஜினிகாந்த் மற்றும் குடும்பத்தினர் உள்ளனர். மேலும், ரஜினி ஷிகர் தவானுடன் போட்டியை காணும் புகைப்படம் வரைலாகி வருகிறது.

    ×