search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ஆரம்ப பள்ளி"

    • விஜய்வசந்த் எம்.பி. அடிக்கல் நாட்டினார்
    • காங்கிரஸ் நிர்வாகிகள் சார்பில் புதிதாக வகுப்பறைகள் கட்டி தரும்படி கோரிக்கை வைத்தனர்.

    நாகர்கோவில் :

    குமாரபுரம் அரசு ஆரம்ப பள்ளியில் மாணவர்கள் சேர்க்கை அதிகமாக இருப்ப தால் போதுமான வகுப்ப றைகள் இல்லாத நிலை உள்ளது. இது தொடர்பாக பள்ளி மேலாண்மை குழுவினர், ஊர் பொது மக்கள் மற்றும் காங்கிரஸ் நிர்வாகிகள் சார்பில் புதிதாக வகுப்பறைகள் கட்டி தரும்படி விஜய்வசந்த் எம்.பி.யிடம் கோரிக்கை வைத்தனர்.

    இதனைத்தொடர்ந்து பள்ளியை ஆய்வு செய்த அவர், கூடுதல் வகுப்பறை கட்டிடம் கட்ட பாராளுமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து ரூ.12.10 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்தார்.

    தொடர்ந்து வட்டார தலைவர் பிரேம் குமார் தலைமையில் கால்டு வின் முன்னிலையில் விஜய் வசந்த் எம்.பி. புதிய வகுப்பறைகள் கட்டுவதற்கு பூமி செய்து அடிக்கல் நாட்டி னார்.

    நிகழ்ச்சியில் திருவட்டார் வட்டார தலைவர் ஜெபா, குமாரபுரம் பேரூராட்சி தலைவர் ஜாண் கிறிஸ்டோ பர் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

    • வாடிப்பட்டி பேரூராட்சியில் 9 ஆரம்ப பள்ளிகளில் முதலமைச்சரின் காலை உணவு திட்டம் தொடங்கப்பட்டது.
    • தலைமை ஆசிரியர் லதா வரவேற்றார்.

    வாடிப்பட்டி

    மதுரை மாவட்டம் வாடிப்பட்டி பேரூராட்சிக்கு உட்பட்ட 9 ஊராட்சி ஒன்றிய தொடக்க, ஆரம்ப பள்ளிகளில் முதலமைச்சரின் காலை உணவு திட்டம் தொடக்கவிழா வாடிப்பட்டி ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் நடந்தது. இந்த நிகழ்ச்சிக்கு பேரூராட்சி தலைவர் பால்பாண்டியன் தலைமை தாங்கி தொடங்கி வைத்தார். செயல் அலுவலர் ஜெயலட்சுமி, துணைத்தலைவர் கார்த்திக் ஆகியோர் முன்னிலை வகித்தனர். தலைமை ஆசிரியர் லதா வரவேற்றார். இதில் கவுன்சிலர் ஜெயகாந்தன், இளநிலை உதவியாளர்கள் முத்துப்பாண்டி, சுந்தர்ராஜன், வார்டு செயலா ளர்கள் ராம் மோகன், திரவியம், பன்னீர்செல்வம், மருதுபாண்டி, வினோத் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

    முடிவில் சுகாதார பணி மேற்பார்வையாளர் முத்தழகு நன்றி கூறினார். அதேபோல் தாதம்பட்டி ஊராட்சி ஒன்றிய ஆரம்ப பள்ளியில் நடந்த நிகழ்ச்சிக்கு கவுன்சிலர் பூமிநாதன் தலைமை தாங்கி தொடங்கி வைத்தார். இதில் தலைமை ஆசிரியர் கிறிஸ்டி, ஆசிரியர்கள் மகேஸ்வரி, கலைச்பொன் கவிதா, சுய உதவிக்குழுவினர் விஜயலட்சுமி, லட்சுமி, கவிதா உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    • நெடிமோழியனூரில் 500-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர்.
    • அரசு ஆரம்ப பள்ளி தொடங்கப்படும் என்று கிராம மக்கள் எதிர்பார்த்திருந்தனர். ஆனால், அதற்கான அறிவிப்புகள் ஏதும் வரவில்லை.

    விழுப்புரம்: 

    விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் வட்டம் நெடி மோழியனூரில் 500-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர். இங்குள்ள மாணவர்கள் இங்கிருந்து சுமார் 4 கிலோமீட்டர் தூரம் உள்ள நீலதொட்டி அரசு பள்ளிக்குச் சென்று பயின்று வருகின்றனர். இதனால் மாணவர்களுக்கு மன உளைச்சல் ஏற்படுவதுடன், கல்வி கற்பதில் பல்வேறு சிரமங்கள் ஏற்பட்டு வருகிறது. எனவே, நெடுமொழியனூர் கிராமத்தில் அரசு பள்ளி அமைக்க வேண்டுமென பொதுமக்கள் நீண்ட நாட்களாக கோரிக்கை விடுத்து அதிகாரிகளிடம் மனு கொடுத்தனர்.

    இந்நிலையில் இந்த கல்வியாண்டில் நெடிமோழியனூரில் அரசு ஆரம்ப பள்ளி தொடங்கப்படும் என்று கிராம மக்கள் எதிர்பார்த்திருந்தனர். ஆனால், அதற்கான அறிவிப்புகள் ஏதும் வரவில்லை. இக்கிராம மாணவர்கள் மீண்டும் நீலதொட்டி அரசு பள்ளிக்கு செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டது. இதனால் ஆத்திரமடைந்த பெற்றோர்கள், மாணவர்களை பள்ளிக்கு அனுப்பாமல், நெடிமோழியனூரில் உள்ள குழந்தைகள் மையத்தில் எதிரில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். கல்வித் துறை அதிகாரிகள் வந்து நெடி மோழியனூர் கிராமத்தில் அரசு ஆரம்ப பள்ளி தொடங்க உத்தரவாதம் அளித்தால் மட்டுமே போராட்டம் கைவிடப்படும். அதுவரை மாணவர்களை பள்ளிக்கு அனுப்ப போவதில்லை என்று பொதுமக்கள் கூறினர்.

    தமிழ்நாடு முழுவதும் பல்வேறு அரசு பள்ளிகள் மூடப்படும் நிலையில், தங்கள் கிராமத்தில் அரசு ஆரம்ப பள்ளி தொடங்க வேண்டுமென கிராம மக்கள் போராட்டம் நடத்துவதால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

    ×