என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "கணவன் - மனைவி"

    • அவர் என்னை அல்ல, என் வேலையை மணந்தார்.
    • அவன் தனது தந்தையைப் போல மாறுவதை நான் விரும்பவில்லை

    டெல்லியில் கேந்திரிய வித்யாலயா பள்ளியில் PGT நுண்கலை ஆசிரியராகப் பணியாற்றி வந்தவர் அன்விதா சர்மா (29 வயது). இவர் கடந்த 2019 இல் கௌரவ் கௌசிக் என்வரை மணந்தார். கௌசிக் தனியார் மருத்துவமனை ஒன்றில் டாக்டராக உள்ளார். இவர்களுக்கு நான்கு வயது மகன் உள்ளான்.  

    இந்நிலையில் கடந்த ஞாயிற்றுக்கிழமை (மார்ச் 16) அன்விதா சர்மா, 'சமைத்துவிட்டேன், சாப்பிடுங்கள் கௌரவ்' என கணவருக்கு மெசேஜ் அனுப்பிவிட்டுதனது வீட்டில் தூக்குப் போட்டு தற்கொலை செய்து கொண்டார். தனது தற்கொலைக்கான காரணம் குறித்து தனது பெற்றோருக்கும், சகோதரருக்கும் அன்விதா நீண்ட வாட்சப் குறிப்பு ஒன்றை அனுப்பினார். அதில் தனது கணவன், மாமியார் குறித்து பல்வேறு குற்றச்சாட்டுகளை அடுக்கியுள்ளார்.

    "அவர் என்னை அல்ல, என் வேலையை மணந்தார். நான் என்னால் முடிந்த அனைத்தையும் செய்தேன், ஆனால் அது ஒருபோதும் போதவில்லை. அவர்கள் மாமியார் மீது மட்டுமே கவனம் செலுத்தும் ஒரு மருமகளை விரும்பினர்.

     

    ஆனால் என் பெற்றோரும் சகோதரரும் எனக்கு அவர்களின் அளவுக்கு சமமாக முக்கியமானவர்கள். கடந்த ஐந்து ஆண்டுகளில் என் கணவர் செய்தது போல் யாரும் என்னை இவ்வளவு கேலி செய்திருக்க முடியாது.

    நான் செய்த எல்லாவற்றிலும் அவர் தவறுகளைக் கண்டுபிடித்தார். மாமியாரோ, வேலை செய்யும் பணிப்பெண்ணை மட்டுமே விரும்பினார். மகிழ்ச்சியாக இருப்பதுபோல் நடித்து நடித்து சோர்வாக உணர்கிறேன். அவமானங்களை இனியும் தாங்க முடியாது.

    என் கணவரால் எனது வங்கிக் கணக்குகள், காசோலை புத்தகம் மற்றும் அனைத்தையும் அணுக முடியும். தயவுசெய்து என் குழந்தையை மட்டும் கவனித்துக் கொள்ளுங்கள். இந்த உலகில் நான் என் மகனை மிகவும் நேசிக்கிறேன், நீங்கள் அவரை உங்களுடன் வைத்திருக்க வேண்டும் என்று நான் விரும்புகிறேன். அவன் தனது தந்தையைப் போல மாறுவதை நான் விரும்பவில்லை" என்று அன்விதா தனது பெற்றோருக்கு எழுதியுள்ளார். 

    கோப்புப்படம் 

     

     ஞாயிற்றுக்கிழமை மதியம் 1.30 மணியளவில் கௌஷிக் மற்றும் அவர்களது மகன் வெளியே சென்றிருந்தபோது அன்விஷா தூக்கிட்டு தற்கொலை செய்தார். அன்விதாவின் மெசேஜை பார்த்தவுடன், அவரது குடும்பத்தினர் உடனடியாக அன்விதாவைத் தொடர்பு கொள்ள முயன்றனர்.

    ஆனால் அவர்களின் அழைப்புகளுக்கு பதிலளிக்கப்படவில்லை. அவர்கள் கௌஷிக்கிற்கு தகவல் தெரிவித்தனர். அவர் வீடு திரும்பினார், ஆனால் கதவு உள்ளே இருந்து பூட்டப்பட்டிருப்பதைக் கண்டார். வீட்டிற்குள் நுழைய ஜன்னல் கிரில்லை வெட்டினர் . உள்ளே சென்று பார்த்தபோது அன்விதா தூக்கில் தொங்கிய நிலையில் இருந்தார்.

    இந்நிலையில் மகளின் இறப்பு தொடர்பாக அவி அன்விதாவின் தந்தை போலீசில் புகார் அளித்தார். அந்த புகாரில், திருமணத்திற்குப் பிறகு, அன்விதாவின் கணவர், மாமனார் மற்றும் மாமியார் கூடுதல் வரதட்சணை கேட்டு அவரை உடல் ரீதியாகவும் மன ரீதியாகவும் துன்புறுத்தத் தொடங்கினர்.

    அவளுடைய முழு சம்பளம், காசோலை புத்தகம் மற்றும் ஏடிஎம் கார்டுகளையும் அவர்களே பெற்றுக்கொண்டனர். மார்ச் 16 அன்று, அவர்கள் என் மகளை கடுமையான உடல் மற்றும் மன ரீதியாகவும் துன்புறுத்தினர், இதனால் அவர் தற்கொலைக் குறிப்பு எழுதி, துயரத்தில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார் என்று குறிப்பிட்டிருந்தார்.

    இந்த புகாரை அடுத்து அன்விதாவின் கணவர் கௌஷிக், மாமனார் மற்றும் மாமியாரை வரதட்சணை கொடுமை உள்ளிட்ட பல்வேறு பிரவுகளின்கீழ் வழக்குப்பதிவு செய்து போலீசார் கைது செய்தனர். 

    • சௌமீன் எனப்படும் நூடில்ஸை குஞ்சனுக்காக சந்தீப் வாங்கி வந்துள்ளார்.
    • மனைவி, சந்தீப்பை கன்னத்தில் அரைத்துள்ளார்.

    உத்தரப்பிரதேசத்தில் நூடுல்ஸ் சாப்பிட மறுத்த மனைவியை கணவன் கொலை செய்த சம்பவம் அரங்கேறியுள்ளது.

    உத்தரப் பிரதேச மாநிலம் ஆக்ரா மாவட்டத்தில் கண்டோலியில் உள்ள நந்தலால்பூர் பகுதியில் அழகுசாதனப் பொருட்கள் விற்பனை செய்யும் தொழிலை நடத்தி வந்தவர் சந்தீப். இவரது மனைவி குஞ்சன்.  

    கடந்த பல ஆண்டுகளாக சந்தீப்புக்கும் அவரது மனைவி குஞ்சனுக்கும் இடையே தகராறு இருந்து வந்தது. வேறு ஒருவருடன் தொடர்பு வைத்துள்ளதாக இருவரும் ஒருவரையொருவர் சந்தேகித்தனர். குஞ்சனிடம் இருந்து சந்தீப் விவாகரத்து பெற விரும்பினார். அவர் ஒரு வழக்கறிஞரைக் கூட அணுகியதாகக் கூறப்படுகிறது.

    இந்நிலையில் கடந்த திங்கள்கிழமை மதியம், சௌமீன் எனப்படும் நூடில்ஸை குஞ்சனுக்காக சந்தீப் வாங்கி வந்துள்ளார். ஆனால் குஞ்சன் அதை சாப்பிட மறுத்ததால் இருவருக்கும் இடையே வாக்குவாதம் எழுந்தது. வாக்குவாதத்தில் சந்தீப் மனைவியை தாக்கத்தொடங்கினார்.

    மனைவியும் சந்தீப்பை கன்னத்தில் அரைத்துள்ளார். இதனால் ஆத்திரமடைந்த சந்தீப் மனைவியின் கழுத்தை நெரித்தில் அவர் மயங்கி விழுந்தார்.

    பின் தனது மகன்களை கூப்பிட்டு மனைவியை மருத்துவமனைக்கு அழைத்துச் செல்ல சொன்னார். அவர்கள் சென்றதும் சந்தீப் மனைவியை கொன்றதாக கூறி போலீசில் சரணடைந்தார். குஞ்சன் இறந்துவிட்டதாக மருத்துவர்களும் அறிவித்தனர். சந்தீப்பை கைது செய்து போலீசார் சிறையில் அடைத்தனர். 

    • கணவன் இறந்து 4 மணி நேரத்தில் மனைவி திடீரென்று இறந்தார்.
    • கணவன் இறந்தது மனைவிக்கும் மனைவி இறந்தது கணவனுக்கும் தெரியவில்லை.

    முத்துப்பேட்டை:

    திருவாரூர் மாவட்டம், முத்துப்பேட்டை திமிலத்தெரு பகுதியை சேர்ந்தவர் அப்துல் சலீம்(வயது 60).

    இவரது மனைவி மும்தாஜ்(59).

    இருவரும் எல்லாவற்றையிலும் விட்டுக்கொடுக்காத தம்பதியாக ஒருவருக்கு ஒருவர் ஒற்றுமையாக வாழ்ந்து வந்துள்ளனர்.

    இந்தநிலையில் மும்தாஜ் வயது மூப்பின் காரணமாக நோய்வாய்ப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார்.

    நேற்று முன்தினம் மருத்துவமனையிலிருந்து வீடு திரும்பிய மும்தாஜ்க்கு மருந்து வாங்க அப்துல் சலீம் தனது இரு சக்கர வாகனத்தில் நேற்று மதியம் பட்டுக்கோட்டைக்கு சென்றார்.

    போகும் வழியில் அப்துல் சலீம் மயங்கி விழுந்து படுகாயம் அடைந்தார்.

    உடனே அவரை மீட்டு தஞ்சை தனியார் மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு கொண்டு சென்றனர்.

    அங்கு பரிசோதித்த மருத்துவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.

    இதனையடுத்து அப்துல் சலீமின் உடலை முத்துப்பேட்டைக்கு கொண்டு வந்து அவரது வீட்டில் வைத்திருந்தனர்.

    நோய்வாய்ப்பட்ட மனைவி மும்தாஜ் அருகில் உள்ள அவரது மகள் வீட்டில் இருந்தார்.

    இவருக்கு அதர்ச்சி கொடுக்க கூடாது என்பதற்காக இவரிடம் குடும்பத்தினர் கணவர் இறந்த செய்தியை கூறாமல் இருந்துள்ளனர்.

    இந்தநிலையில் யாரும் எதிர்பார்க்காத வகையில் 4மணிநேரம் கழித்து நேற்றிரவு மனைவி மும்தாஜும் திடீரென்று இறந்தார்.

    ஏற்கனவே கணவர் இறந்த அதர்ச்சியில் இறந்த சம்பவத்தால் குடும்பத்தினர் பெரும் சோகத்தில் ஆழ்ந்து இருந்த நிலையில் மனைவியும் திடீரென்று இறந்ததால் குடும்பத்தினர் அதிர்ச்சியடைந்தனர்.

    இந்தநிலையில் கணவர் இறந்தது மனைவிக்கும் மனைவி இறந்தது கணவருக்கும் தெரியாமல் போன நிலையில், தம்பதி சாவிலும் இணைபி ரியாத இச்சம்பவம் முத்துப்பேட்டையில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

    ×