என் மலர்
நீங்கள் தேடியது "தோட்டா"
- 2 பைக்குகளில் வந்த மர்மநபர்கள் ஜீப்பை துரத்தி சென்று துப்பாக்கிச்சூடு நடத்தினர்.
- ஒரு தோட்டா ஓட்டுநர் சந்தோஷ் சிங்கின் வயிற்றில் துளைத்து கடுமையாக ரத்தம் கொட்டியுள்ளது.
பீகாரின் போஜ்பூர் மாவட்டத்தில் ஜீப் ஓட்டுநர் ஒருவர், தனது வயிற்றில் புல்லட் காயம் ஏற்பட்ட போதிலும், பல கிமீ வாகனத்தை இயக்கி பயணிகளை பாதுகாப்பாக இறக்கி விட்ட நெகிழ்ச்சி சம்பவம் நடந்துள்ளது .
ஜீப் ஓட்டுநர் சந்தோஷ் சிங், 14 பயணிகளுடன் "திலகம்" விழாவிற்கு சென்று திரும்பிக் கொண்டிருந்தார். அப்போது 2 பைக்குகளில் வந்த மர்மநபர்கள் ஜீப்பை துரத்தி சென்று துப்பாக்கிச்சூடு நடத்தினர். அப்போது ஒரு தோட்டா சந்தோஷ் சிங்கின் வயிற்றில் துளைத்து கடுமையாக ரத்தம் கொட்டியுள்ளது.
அப்போது பயணிகளின் பாதுகாப்பை உறுதிப்படுத்தவும் மரமா நபர்களிடம் இருந்து தப்பிக்கவும் பல தாங்க முடியாத வழியிலும் பல கிமீ ஜீப்பை ஓட்டி சென்று பயணிகளின் உயிரை அவர் காப்பாற்றியுள்ளார்.
இதனையடுத்து இது தொடர்பாக பயணிகள் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். உடனடியாக சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் சந்தோஷ் சிங்கை அருகில் உள்ள மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.
மருத்துவமனையில் அறுவை சிகிச்சைக்குப் பிறகு சிங்கின் வயிற்றில் இருந்து தோட்டா அகற்றப்பட்டது. இதனால் அவர் உயிருக்கு ஆபத்தில்லை என்று மருத்துவர்கள் தெரிவித்தனர்.
இந்த விவகாரம் தொடர்பாக வழக்கு பதிவு செய்துள்ள போலீசார் குற்றவாளிகளை தீவிரமாக தேடி வருகின்றனர்.
- சோமங்கலம் மற்றும் சுற்று வட்டாரத்தில் அடிக்கடி ரவுடிகளிடையே மோதல் ஏற்பட்டு வருகிறது.
- மோதலின் தொடர்ச்சியாக ரவுடி கும்பல் பழிவாங்கும் நோக்கத்தில் துப்பாக்கியுடன் வந்து இருக்கலாம் என்று தெரிகிறது
ஸ்ரீபெரும்புதூர்:
தாம்பரம் அடுத்த சோமங்கலம் பகுதியில் உக்கடை உள்ளது. நேற்று மாலை மோட்டார் சைக்கிளில் 2 வாலிபர்கள் டீ குடிக்க வந்தனர். அவர்கள் வந்த சிறிது நேரத்தில் காரில் மர்ம கும்பல் வந்தனர். அவர்களை கண்டதும் டீக்கடைக்குள் புகுந்து பின்பக்கம் வழியாக 2 வாலிபர்களும் தப்பி ஓடிவிட்டனர். அவர்களை மர்ம கும்பல் துரத்தியபோது ஒருவர் கால் தடுக்கி கீழே விழுந்தார். பின்னர் அவர் தனது கூட்டாளிகளுடன் அங்கிருந்து காரில் தப்பி சென்றுவிட்டார்.
அவர்கள் சென்ற சிறிது நேரம் கழித்து டீக்கடை உரிமையாளர் பார்த்தபோது அங்கு 3 துப்பாக்கி குண்டுகள் கிடப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். இதுகுறித்து சோமங்கலம் போலீசுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீசார் விரைந்தட வந்து 3 துப்பாக்கி தோட்டாக்கள் மற்றும் தோட்ட நிரப்பும் ஹண்டில் மற்றும் அங்கு நிறுத்தப்பட்டு இருந்த ஒரு மோட்டார் சைக்கிளை கைப்பற்றினர். அந்த மோட்டார் சைக்கிளின் பதிவு எண் போலியானது என்பது விசாரணையில் தெரிந்தது.
இதைத்தொடர்ந்து தப்பி ஓடிய 2 வாலிபர்களும் யார்? அவர்களை பின்தொடர்ந்து காரில் வந்த கும்பல் யார் என்பது குறித்து போலீசார் தீவிரவி சாரணை நடத்தி வருகிறார்கள். இதில் சில தகவல்கள் போலீசாருக்கு கிடைத்து உள்ளதாக கூறப்படுகிறது. சோமங்கலம் மற்றும் சுற்று வட்டாரத்தில் அடிக்கடி ரவுடிகளிடையே மோதல் ஏற்பட்டு வருகிறது. இந்த மோதலின் தொடர்ச்சியாக ரவுடி கும்பல் பழிவாங்கும் நோக்கத்தில் துப்பாக்கியுடன் வந்து இருக்கலாம் என்று தெரிகிறது.
இதையடுத்து அப்பகுதியில் உள்ள கண்காணிப்பு காமிரா காட்சி பதிவுகளை வைத்து போலீசார் மேலும் விசாரணை நடத்தி வருகிறார்கள். கடந்த சில நாட்களுக்கு முன்பு ஸ்ரீபெரும்புதூர் பகுதியை சேர்ந்த பா.ஜ.க. பிரமுகர் பி.பி.ஜி.டி. சங்கரை ரவுடி கும்பல் வெடி குண்டை வீசி ஓட ஓட விரட்டி கத்தியால் வெட்டி கொலை செய்தது குறிப்பிடத்தக்கது. ரவுடி கும்பல் துப்பாக்கியுடன் வலம் வரும் சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. ரவடி கும்பலை கூண்டோடு பிடிக்க போலீசார் விசாரணையை தீவிரப்படுத்தி உள்ளனர்.