search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "வீடியோ வைரல்"

    • செல்பி எடுப்பதற்காக அவரது தோள்களில் கைகளை வைக்க முயன்றார்.
    • டி.கே.சிவகுமார் காங்கிரஸ் தொண்டரை பளார் என அறைந்தார்.

    பெங்களூரு:

    கர்நாடக மாநில துணை முதல்-மந்திரி டி.கே.சிவகுமார் கடந்த சனிக்கிழமை தார்வாட் பாராளுமன்ற தொகுதியில் போட்டியிடும் காங்கிரஸ் வேட்பாளர் வினோதா அசூட்டிக்கு ஆதரவாக பிரசாரத்தில் ஈடுபட்டுக் கொண்டிருந்தார்.

    அப்போது ஹாவேரி சவனூர் நகரில் பிரசார பேரணியில் பங்கேற்பதற்காக காரில் இருந்து இறங்கியபோது அவரை சூழ்ந்து கொண்டு காங்கிரஸ் தொண்டர்கள் வாழ்த்து கோஷங்கள் எழுப்பினர். கூட்ட நெரிசல் அதிகமாக இருந்ததால் டி.கே.சிவகுமாரால் அங்கிருந்து மெதுவாகதான் நகர முடிந்தது.

    அப்போது அந்த பகுதியை சேர்ந்த நகராட்சி உறுப்பினரும், காங்கிரஸ் தொண்டருமான அல்லாவுதீன் மணியார் என்பவர் ஆர்வத்தில் துணை முதல்-மந்திரி டி.கே.சிவகுமாருடன் செல்பி எடுப்பதற்காக அவரது தோள்களில் கைகளை வைக்க முயன்றார். இதனால் டி.கே.சிவகுமார் அந்த காங்கிரஸ் தொண்டரை பளார் என அறைந்தார்.

    இதையடுத்து பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார், அல்லாவுதீன் மணியாரை கூட்டத்தில் இருந்து ஒதுக்கி தள்ளி டி.கே.சிவகுமாரை காரில் ஏற்றி அனுப்பி வைத்தனர். இந்த காட்சி காமிராக்களில் பதிவானது. இது சமூகவலைதளங்களில் வைரலாகி வருகிறது.

    டி.கே.சிவகுமார் காங்கிரஸ் உறுப்பினரை அறைந்த சம்பவம் குறித்து பா.ஜனதா ஐ.டி.விங் தலைவர் அமித் மாளவியா எக்ஸ் சமூக வலைதளத்தில் ஒரு கருத்து பதிவிட்டுள்ளார்.

    அதில் டி.கே.சிவகுமார் ஒருவரை தாக்குவது இது முதல் முறையல்ல. டி.கே.சிவகுமாரின் தோளில் கை வைத்தது காங்கிரஸ் மாநகர உறுப்பினர் செய்த குற்றமா? காங்கிரஸ்காரர்கள் ஏன் காங்கிரசுக்கு வேலை செய்ய விரும்புகிறார்கள் என்று எனக்கு ஆச்சரியமாக இருக்கிறது? அவர்களின் தலைவர்கள் அவர்களை அறைகிறார்கள்.

    அவமானப்படுத்துகிறார்கள். போட்டியிட டிக்கெட் கொடுக்கவில்லை, ஒதுக்கப்படுகிறார்கள். அவர்கள் பக்கத்தில் சுயமரியாதை இல்லையா? என பதிவிட்டுள்ளார்.

    • மரியாதை செய்துவிட்டு தான் செல்ல வேண்டும் என கூறி குணாளை சரமாரியாக தாக்கியதாக கூறப்படுகிறது.
    • வீடியோவாக பதிவு செய்து சமூக வலைதளங்களில் வைரலாக பரப்பி வருகின்றனர்.

    விழுப்புரம்: 

    விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் செஞ்சி ரோடு பகுதியை சேர்ந்தவர் ரமேஷ் (வயது 39),இவர் திண்டிவனம் செஞ்சி ரோட்டில் பேட்டரி கடை நடத்தி வருகிறார்.இவரது கடையில் டி. வி. நகர் பகுதியை சேர்ந்த குணால் பணிபுரிந்து வருகிறார். இவர் கடந்த 17-ந் தேதி இரவு கடையை மூடிவிட்டு தனது மோட்டார் சைக்கிளில் செல்ல முற்பட்டபோது எம்.ஜி. ஆர் நகர் பகுதியைச் சேர்ந்த பார்த்திபன் அவரது கூட்டாளிக ளான சபரீசன், ஜாஸ்மி ன்,அமீர்,மற்றும் 5-க்கும் மேற்ப ட்டோர் திடீரென கடை ஊழியர் குணாளின் வாகனத்தை நிறுத்தி இந்த தெருவில் நீ வேகமாக செல்லக்கூடாது எங்களை பார்த்துவிட்டு மரியாதை செய்துவிட்டு தான் செல்ல வேண்டும் என கூறி குணாளை சரமாரியாக தாக்கியதாக கூறப்படுகிறது. இதை கண்ட கடை உரிமையாளர் பா.ம.க. நிர்வாகி ரமேஷ் மற்றும் அவரது மனைவி பரமேஸ்வரி ஆகியோர் ஏன் எங்கள் கடையில் வேலை செய்யும் நபரை அடிக்கிறீர்கள் என கேட்டதற்கு ரமேஷ் மற்றும் பரமேஸ்வரியையும் சரமாரியாக தாக்கி விட்டு அங்கிருந்த மோட்டார் சைக்கிள்,கடை போர்டு போன்ற பொருட்களை அடித்து சேதப்படுத்திவிட்டு உங்களை கொலை செய்து விடுவோம் என மிரட்டி விட்டு அங்கிருந்து தப்பி சென்று விட்டனர். அருகில் இருந்தவர்கள் அதை வீடியோவாக பதிவு செய்து சமூக வலைதளங்களில் வைரலாக பரப்பி வருகின்றனர். இது சம்பந்தமாக பரமேஸ்வரி கொடுத்த புகாரின் பேரில் பார்த்திபன் மற்றும் அவரது கூட்டாளிகள் மீது வழக்கு பதிவு செய்து சபரிசன் மற்றும் ஜாஸ்மின் ஆகியோரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் தலைமறைவாக உள்ள பார்த்திபன் மற்றும் அவரது கூட்டாளிகளை போலீசார் வலை வீசி தேடி வருகின்றனர்.மேலும் இது சம்பந்தமாக தகவல் அறிந்த மயிலம் பா.ம.க. எம்.எல்.ஏ. சிவக்குமார் பா.ம.க. நிர்வாகி ரமேஷ் மற்றும் பரமேஸ்வரி ஆகியோர்களை சந்தித்து ஆறுதல் கூறினார். அவர் கூறுகையில் முக்கிய குற்றவாளியான பார்த்திபனை உடனடியாக கைது செய்ய வேண்டும். வணிகர்கள் தொடர்ந்து தாக்கப்பட்டு வருவது வேதனையாக உள்ளது. உடனடியாக போலீசார் இவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொண்டார்.

    ×