என் மலர்
நீங்கள் தேடியது "பிளஸ் 2 மாணவி"
- பெற்றோர் போலீசில் புகார் செய்தனர். அதன் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து மாணவியை தேடினார்கள்.
- நாகர்கோவில் கலெக்டர் அலுவலகத்தில் உள்ள குழந்தைகள் பாதுகாப்பு அலுவலகத்தில் விசாரணை நடத்தப்பட்டது.
நாகர்கோவில்:
சென்னை வடபழனியைச் சேர்ந்த 17 வயது பெண் ஒருவர் அந்த பகுதியில் உள்ள பள்ளி ஒன்றில் பிளஸ்-2 படித்து வந்தார்.
அவருக்கும் வாலிபர் ஒருவருக்கும் சமூக வலைதளம் மூலமாக பழக்கம் ஏற்பட்டது. பின்னர் அது காதலாக மாறியது. இருவரும் நேரில் சந்தித்து பேசினார்கள். இந்நிலையில் வீட்டிலிருந்த மாணவி மாயமானார். இதையடுத்து அவரது பெற்றோர் பல்வேறு இடங்களில் தேடினார்கள்.
ஆனால் அவரைப் பற்றி எந்த தகவலும் கிடைக்கவில்லை. இது குறித்து அவரது பெற்றோர் போலீசில் புகார் செய்தனர். அதன் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து மாணவியை தேடினார்கள். அப்போது மாணவி வாலிபருடன் மாயமாகி இருப்பது தெரிய வந்தது.
தொடர்ந்து மாணவியின் செல்போனை போலீசார் ஆய்வு செய்து வந்தனர். ஆனால் கடந்த ஒரு மாதமாக அவர் செல்போனில் யாருடனும் பேசாமல் இருந்து வந்தார். இதனால் அவரை கண்டுபிடிப்பதில் போலீசாருக்கு சிக்கல் ஏற்பட்டது. ஒரு மாதமாக தேடியும் மாணவி பற்றி எந்த தகவலும் கிடைக்கவில்லை.
இந்நிலையில் மாணவி, தனது தோழி ஒருவருக்கு செல்போனில் பேசினார். அவர் தனது தோழியிடம் காதலனை நம்பி வந்ததாகவும் அவர் தனது நகையை விற்று செலவு செய்து விட்டு, தற்பொழுது கொடுமைப்படுத்தி வருவதாகவும் கூறினார். மேலும் பக்கத்து வீட்டு பெண் ஒருவரின் செல்போனை வாங்கி பேசுவதாக கூறியதுடன் தான் குமரி மாவட்டம் நாகர்கோவில் வடசேரி பகுதியில் வாடகை வீட்டில் வசித்து வருவதாகவும் தெரிவித்தார்.
இந்த சம்பவத்தை தனது பெற்றோரிடம் தன்னால் கூற இயலவில்லை. எனவே பெற்றோரிடம் தெரிவித்து தன்னை எப்படியாவது காப்பாற்ற வேண்டும் என்று கண்ணீர் மல்க பேசினார். இதையடுத்து மாணவியை அவரது தோழி சமாதானம் செய்தார். மேலும் மாணவியின் பெற்றோரிடம் நடந்த சம்பவத்ததையும் கூறினார். அவர்கள் இந்த தகவலை போலீஸ் நிலையத்தில் தெரிவித்தனர்.
உடனே சென்னை போலீசார், வடசேரி போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். அதன்பேரில் மாணவியை மீட்க வடசேரி போலீசார் நடவடிக்கை எடுத்தனர். மாணவி கூறிய தகவலின் அடிப்படையில் வடசேரி பகுதியில் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர்.
அப்போது அந்த பகுதியில் உள்ள வாடகை வீட்டில் மாணவி இருந்தது தெரிய வந்தது. அவரை மீட்ட போலீசார், அங்கு இருந்த வாலிபரையும் பிடித்தனர். மீட்கப்பட்ட மாணவியையும் அந்த வாலிபரையும் போலீசார் வடசேரி போலீஸ் நிலையத்திற்கு அழைத்து வந்தனர்.
மாணவி மீட்கப்பட்டது குறித்த தகவல் சென்னை போலீசுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது . அவர்கள் மாணவியின் பெற்றோரை அழைத்துக் கொண்டு இன்று காலை வடசேரி போலீஸ் நிலையத்திற்கு வந்தனர்.
வாலிபரிடம் போலீசார் விசாரணை நடத்திய போது பல திடுக்கிடும் தகவல்கள் வெளியானது. மாணவியுடன் சமூக வலைதளம் மூலமாக பழகி தனது நண்பர் ஒருவரது ஏற்பாட்டில் நாகர்கோவிலுக்கு அழைத்து வந்ததாகவும் நாகர்கோவிலில் வாடகை வீட்டில் இருவரும் குடும்பம் நடத்தி வருவதாகவும் தெரிவித்தார். போலீசார் தொடர்ந்து நடத்திய விசாரணையில் வாலிபர் கஞ்சா பழக்கத்திற்கு அடிமையானவர் என்ற தகவலும் தெரியவந்தது.
மாணவிக்கு 17 வயதே ஆவதால் அவரை கோர்ட்டில் ஆஜர்படுத்த போலீசார் நடவடிக்கை எடுத்து வருகிறார்கள். சம்பந்தப்பட்ட வாலிபரை போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்யவும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
வடசேரி வாடகை வீட்டில் மீட்கப்பட்ட மாணவியை போலீசார் நேற்று இரவு விசாரணைக்கு பிறகு காப்பகத்தில் ஒப்படைத்தனர். இன்று காலை மீண்டும் மாணவி போலீஸ் நிலையத்திற்கு அழைத்து வரப்பட்டார். அப்போது சென்னையில் இருந்து போலீசாரும் மாணவியின் பெற்றோரும் அங்கு வந்தனர். மாணவி அவரது பெற்றோரை பார்த்ததும் கதறி அழுதார். இதையடுத்து அவர்கள் அவரை சமாதானம் செய்தனர். வாலிபரை நம்பி எனது வாழ்க்கையை இழந்து விட்டேன் என்று கூறி கதறி அழுதது பரிதாபமாக இருந்தது.
வடசேரியில் வாடகை வீட்டில் மீட்கப்பட்ட மாணவிக்கு 17 வயதே ஆவதால் அந்த மாணவியரிடம் குமரி மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அதிகாரிகள் இன்று விசாரணை மேற்கொண்டனர். நாகர்கோவில் கலெக்டர் அலுவலகத்தில் உள்ள குழந்தைகள் பாதுகாப்பு அலுவலகத்தில் விசாரணை நடத்தப்பட்டது. மீட்கப்பட்ட மாணவியிடம் நடந்த சம்பவத்தை அவர்கள் கேட்டறிந்தனர். விசாரணையின் போது அவரது பெற்றோர் மற்றும் போலீசார் உடன் இருந்தனர்.
- புகாரின் பேரில் போலீஸ் இன்ஸ்பெக்டர் பொன்னம்மாள் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தார்.
- மகளிர் போலீசார் சிறுவன் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்து அவரை கைது செய்தனர்.
பவானி:
அந்தியூர் பகுதியைச் சேர்ந்த பிளஸ்-2 படிக்கும் மாணவி ஒருவர் அதே பகுதியில் கோழி இறைச்சி கடையில் வேலை பார்க்கும் சிறுவன் ஒருவருடன் பழகி வந்துள்ளார். இந்த விவகாரம் மாணவியின் வீட்டுக்கு தெரிந்து அவரை கண்டித்துள்ளனர்.
இந்நிலையில் கடந்து 2 நாட்களுக்கு முன்பு மாணவி திடீரென மாயமானார். இதனை அடுத்து மாணவியின் பெற்றோர் தங்களது மகளை சிறுவன் கடத்தி சென்றுவிட்டதாக பவானி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். புகாரின் பேரில் போலீஸ் இன்ஸ்பெக்டர் பொன்னம்மாள் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தார். மேலும் மாணவி- மற்றும் சிறுவனை தேடி வந்தனர்.
இந்நிலையில் அந்தியூர் பஸ் நிலையம் அருகே சந்தேகப்படும்படி நின்று கொண்டிருந்த சிறுவன் சிறுமியை போலீசார் பிடித்து விசாரணை மேற்கொண்ட து அது மாயமான பிளஸ்- 2 மாணவி என தெரியவந்தது.
தொடர்ந்து மாணவியிடம் விசாரித்தபோது, கடந்த 2 நாட்களுக்கு முன்பு சிறுவன், மாணவியிடம் திருமணம் செய்து கொள்வதாக ஆசை வார்த்தை கூறி அவரை கடத்தி சென்றுள்ளது தெரிய வந்தது. மேலும் மாணவிக்கு சிறுவன் பாலியல் தொந்தரவு கொடுத்ததும் விசாரணையில் தெரியவந்தது.
இதனை அடுத்து பவானி அனைத்து மகளிர் போலீசார் சிறுவன் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்து அவரை கைது செய்தனர். பின்னர் சிறுவன் நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தப்பட்டு கோவையில் உள்ள சிறுவர் கூர்நோக்கு இல்லத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டார்.
- மாணவியின் பெற்றோர், திருவனந்தபுரம் போலீசில் புகார் செய்தனர்.
- போலீசார் விசாரித்தபோது, இருவரும் லெஸ்பியன் ஜோடியாக மாறியிருப்பது தெரியவந்தது.
திருவனந்தபுரம்:
திருவனந்தபுரம் பகுதியை சேர்ந்த 17 வயது சிறுமி ஒருவர் அந்த பகுதியில் உள்ள பள்ளியில் பிளஸ்-2 படித்து வந்தார்.
பிளஸ்-2 படிப்பதால் அவரது பெற்றோர் மாணவிக்கு டியூசன் ஏற்பாடு செய்தனர். இதற்காக அந்த பகுதியை சேர்ந்த ஆசிரியை ஒருவரை ஏற்பாடு செய்தனர். அந்த ஆசிரியை தினமும் மாணவி வீட்டிற்கு சென்று மாணவிக்கு பாடங்களை சொல்லி கொடுத்து வந்தார்.
கடந்த 2 நாட்களுக்கு முன்பு, மாணவி பள்ளிக்கு சென்றார். அதன்பின்பு அவர் வீடு திரும்பவில்லை. இதனால் அதிர்ச்சி அடைந்த பெற்றோர், மாணவியின் தோழிகளிடம் விசாரித்தனர். அப்போது மாணவியை அவரது டியூசன் ஆசிரியை பள்ளிக்கு வந்து அழைத்து சென்றது தெரியவந்தது.
இதையடுத்து மாணவியின் பெற்றோர், திருவனந்தபுரம் போலீசில் புகார் செய்தனர். போலீசார் வழக்கு பதிவு செய்து மாயமான மாணவியை தேடினர். மேலும் அவரது டியூசன் ஆசிரியையின், செல்போன் எண் மூலம் அவர்கள் தங்கி இருக்கும் இடத்தை ஆய்வு செய்தனர்.
இதில் அவர்கள் எர்ணாகுளம் பகுதியில் இருப்பது தெரியவந்தது. போலீசார், நேற்று அங்கு விரைந்து சென்று அவர்கள் இருவரையும் பிடித்தனர்.பின்னர் அவர்களை திருவனந்தபுரம் போலீஸ் நிலையம் அழைத்து வந்து விசாரித்தனர். மேலும் மாணவியை மருத்துவ பரிசோதனைக்கும் அனுப்பி வைத்தனர்.
மருத்துவ பரிசோதனையில் மாணவி, பாலியல் பலாத்காரத்திற்கு ஆளாகி இருப்பது தெரியவந்தது. இதுபற்றி போலீசார் விசாரித்தபோது, இருவரும் லெஸ்பியன் ஜோடியாக மாறியிருப்பது தெரியவந்தது. ஆசிரியை, டியூசன் எடுக்க மாணவியின் வீட்டுக்கு சென்ற போது அவர்கள் இருவருக்கும் இடையே லெஸ்பியன் உறவு ஏற்பட்டதும் தெரியவந்தது.
இதுபற்றி மாணவி கூறும்போது, ஆசிரியை தன்னை கடத்தி செல்லவில்லை என்றும், தானே விருப்பப்பட்டு அவருடன் சென்றதாகவும் கூறினார்.
மாணவி, ஆசிரியையுடன் விருப்பப்பட்டு சென்றாலும், மாணவி மேஜர் ஆகாததால், அவரை ஆசிரியை கடத்தி சென்றதாக போலீசார் அவர் மீது வழக்கு பதிவு செய்தனர். மேலும் மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்ததால் அவர் மீது போக்சோ வழக்கும் பதிவு செய்யப்பட்டு, ஆசிரியை கைது செய்யப்பட்டார்.
ஏற்கனவே கேரளாவை சேர்ந்த லெஸ்பியன் ஜோடி, கோர்ட்டு உத்தரவுப்படி இப்போது சேர்ந்து வாழ்கிறார்கள். இதுபோல இன்னொரு பெண், தனது லெஸ்பியன் ஜோடியை பெற்றோர் கடத்தி சென்றுவிட்டதாக கோர்ட்டில் மனுதாக்கல் செய்துள்ளார். இப்போது பள்ளி மாணவியை, அவருக்கு டியூசன் எடுத்த ஆசிரியையே கடத்தி சென்றதும், இருவரும் லெஸ்பியனில் ஈடுபட்டதும் கேரளாவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.