search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "அபாய சங்கிலி"

    • ரெயில் மாறி ஏறியதால் சம்பவம்
    • நாகர்கோவில் ரெயில் நிலையத்தில் பரபரப்பு

    நாகர்கோவில் :

    கன்னியாகுமரியில் இருந்து நாகர்கோவில், திருவனந்தபுரம் வழியாக திப்ரூகருக்கு விவேக் எக்ஸ் பிரஸ் ரெயில் இயக்கப்பட்டு வருகிறது. இந்த ரெயில் கன்னியாகுமரியில் இருந்து வாரத்தில் திங்கள், புதன், வியாழன், சனிக்கிழமை களில் இயக்கப்படுகிறது.

    மாலை 5.20 மணிக்கு இந்த ரெயில் புறப்பட்டு 5.45 மணிக்கு நாகர்கோவில் ரெயில் நிலையத்தை வந்தடையும். நேற்று இந்த ரெயில் கன்னியாகுமரியில் இருந்து சிறிது தாமதமாக புறப்பட்டது. நாகர்கோவி லுக்கு மாலை 6.05 மணிக்கு வந்து சேர்ந்தது. நாகர்கோ வில் ரெயில் நிலையத்தின் முதலாவது பிளாட்பாரத்தில் ரெயில் வந்ததால் கன்னியா குமரி எக்ஸ்பிரஸ் ரெயி லுக்காக காத்திருந்த பயணி கள் சிலர் திப்ரூகர் ரெயிலில் ஏறினார்கள்.

    ரெயில் புறப்பட்ட சிறிது நேரத்தில் ரெயிலில் ஏறிய பயணிகளில் ஒருவர் அபாய சங்கிலியை பிடித்து இழுத்து ரெயிலை நிறுத்தினார். இதைத்தொடர்ந்து ரெயி லில் ஏறிய பயணிகள் அந்த ரெயிலில் இருந்து இறங்கி னார்கள். இதைத்தொடர்ந்து ரெயிலில் அபாய சங்கிலியை பிடித்து இழுத்தவர் யார் என்பது குறித்து அதிகாரிகள் விசாரணை மேற்கொண்ட னர். ஆனால் யார் என்று தெரியவில்லை. இதைத்தொ டர்ந்து ரெயில் 10 நிமிடம் தாமதமாக அங்கிருந்து புறப்பட்டு சென்றது. இந்த சம்பவம் தொடர் கதையாக நடந்து வருகிறது. கன்னியா குமரியில் இருந்து சென்னை செல்லும் கன்னியாகுமரி எக்ஸ்பிரஸ் ரெயிலும் மாலை 6 மணிக்கு நாகர்கோ வில் முதலாவது பிளாட்பா ரத்தில் வந்து சேரும். நேற்று திப்ரூகர் ரெயில் தாமதமாக வந்ததால் கன்னியாகுமரி ரெயில் என்று நினைத்து பயணி கள் ரெயில் பெட் டிக்குள் ஏறி உள்ளனர்.

    ரெயில் புறப்பட்ட சிறிது நேரத்தில் தான் திப்ரூகர் ரெயில் என்பதை உணர்ந்த பயணிகள் ரெயிலை விட்டு கீழே இறங்கி உள்ளனர். இதற்கு முறையான அறி விப்பு இல்லாத காரணம் என்று பயணிகள் குற்றம் சாட்டி உள்ளனர். இது குறித்து ரெயில் பயணிகள் கூறுகையில், கன்னியாகுமரி எக்ஸ்பிரஸ் ரெயிலும், திப்ரூகர் எக்ஸ்பிரஸ் ரெயி லும் நாகர்கோவில் ரெயில் நிலையத்திற்கு வரக்கூடிய நேரத்தில் சிறிது வித்திய சம்தான் உள்ளது. 2 ரெயில் களும் முதலாவது பிளாட்பா ரத்திலேயே வந்து செல் கின்றன. இதனால் பயணிகள் சிலர் ரெயிலில் உள்ள அறிவிப்பை கவனிக்கா மல் ஏறி விடுகிறார்கள். இதை சரி செய்வதற்கு மாற்று ஏற்பாடுகள் ஏதாவது செய்ய வேண்டும் என்றனர்.

    • ரெயில் பெட்டியில் புகை வந்ததால் அச்சம்
    • அதிகாரிகள் பயணிகளிடம் விசாரணை

    ஜோலார்பேட்டை:

    கர்நாடகா மாநிலம், பெங்களூரில் இருந்து ஜோலார்பேட்டை ரெயில் நிலையம் வரை தினசரி சொர்ணா பேசஞ்சர் ரெயில் இரு மார்க்கத்திலும் இயக்கப்படுகிறது. அதன்படி வழக்கம்போல் நேற்று மாலை 5.30 மணியளவில் கர்நாடகா மாநிலம், பெங்களூர் ரெயில் நிலையத்தில் இருந்து சொர்ணா பேசஞ்சர் ரெயில் புறப்பட்டது.

    பங்காரப்பேட்டை, குப்பம் மற்றும் பச்சூர் வழியாக ஜோலார்பேட்டை நோக்கி பக்கிரிதக்கா அருகே நேற்று இரவு சுமார் 9.30 மணியளவில் சென்றது. அப்போது ரெயில் எஞ்சின் பின்புறம் உள்ள 3-வது பயணிகள் பெட்டியில் திடிரென புகை வந்தது.

    இதனை பார்த்து அதிசடைந்த பயணிகள் கூச்சலிட்டபடி ரெயிலை நிறுத்த அபாய சங்கலியை பிடித்து இழுத்தனர்.

    அதற்குள் ரெயில் ஜோலார்பேட்டை ரெயில் நிலைய பிளாட்பாரம் உள்ளே நுழைந்ததால் டிரைவர் மீனா ரெயிலை பிளாட்பாரத்தில் நிறுத்திவிட்டு அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தார்.

    அதன் பேரில் அதிகாரிகள் விரைந்து சென்று பயணிகளிடம் விசாரணை நடத்தினர். மேலும் ரெயில் பெட்டிகள், என்ஜின் உள்ளிட்ட இடங்களில் ஆய்வு செய்தனர். புகை ஏதும் வராததால் இன்று 4.30 மணியளவில் மீண்டும் ஜோலார்பேட்டையில் இருந்து பெங்களூர் நோக்கி சொர்ணா பேசஞ்சர் ரெயில் புறப்பட்டு சென்றது. இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

    • ரெயிலின் வசதியை தவறாகப் பயன்படுத்துவது ரெயில்வே விதிகளின்படி குற்றச் செயலாகும்.
    • ரெயில்வே சட்டத்தின் 141-வது பிரிவின் கீழ் நடவடிக்கை எடுக்கப்படும்.

    சென்னை :

    தெலுங்கானா மாநிலம் ஐதராபாத்தில் இருந்து நேற்று முன்தினம் (27-ந்தேதி) சென்னை சென்டிரல் நோக்கி எக்ஸ்பிரஸ் ரெயில் ஒன்று வந்துகொண்டிருந்தது. ரெயில் சூல்லூர்பேட்டை - அக்கம்பேட்டை இடையில் உள்ள கலிங்க ஆற்று பாலத்தில் வந்து கொண்டிருந்த போது அதிகாலை 4 மணியளவில் முன்பதிவில்லா பெட்டியில் இருந்த பயணி ஒருவர் அபாய சங்கிலியை பிடித்து இழுத்தார். உடனடியாக ரெயில் பாலத்தின் நடுவிலேயே நிறுத்தப்பட்டது.

    இதனால், என்ஜினில் இருந்து அந்த குறிப்பட்ட ரெயில் பெட்டிக்கு செல்ல முடியாமல் ரெயில் ஓட்டுனர் தவித்தார். மேலும், முன்பதிவில்லா பெட்டியில் அபாய சங்கிலியை சரி செய்ய ரெயில் பெட்டிக்குள் செல்ல முடியாத நிலை ஏற்பட்டது. இதுகுறித்து, அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. தகவலின் பேரில், ரெயில்வே போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர். ஆனால், பாலத்தின் மேலே செல்ல முடியவில்லை.

    இதனால், அங்கே ஆற்றுப்படுகையில் சீரமைப்பு பணியில் ஈடுபட்டுக்கொண்டிருந்த ஒரு பொக்லைன் எந்திரத்தின் உதவியுடன் ரெயில் பெட்டிக்குள் நுழைந்த ரெயில்வே போலீசார் அபாய சங்கிலியை சரி செய்தனர்.

    இந்த சம்பவத்தால் சிறிது நேரம் தாமதத்திற்கு பின்னர், ரெயில் அங்கிருந்து புறப்பட்டு சென்றது. இந்த நிலையில், ரெயில் பயணிகள் சரியான காரணமில்லாமல் அபாய சங்கிலியை இழுக்க வேண்டாம் என்று தெற்கு ரெயில்வே எச்சரித்துள்ளது

    இதுகுறித்து, தெற்கு ரெயில்வே வெளியிட்ட செய்திக்குறிப்பில், 'அபாய சங்கிலி மற்றும் ரெயிலின் வசதியை தவறாகப் பயன்படுத்துவது ரெயில்வே விதிகளின்படி குற்றச் செயலாகும். அவசரத் தேவை இல்லாமல் ரெயிலில் சங்கிலியை இழுத்தால், ரெயில்வே சட்டத்தின் 141-வது பிரிவின் கீழ் நடவடிக்கை எடுக்கப்படும். இந்த விதியின் கீழ், போதுமான காரணமின்றி ஒரு பயணி அபாய சங்கிலியைப் பயன்படுத்தினால், அவருக்கு ரூ.5 ஆயிரம் அபராதம் அல்லது 3 மாதங்கள் சிறைத்தண்டனை விதிக்கப்படலாம்' என்று கூறப்பட்டுள்ளது.

    ×