என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "பயங்கரவாதிகள் ஊடுருவல்"
- பயங்கரவாதிகள் ஊடுருவல் தொடர்பாக தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
- என்.ஐ.ஏ. அதிகாரிகளுக்கு போலீசார் மற்றும் மத்திய ரிசர்வ் போலீஸ் படையினர் உதவினர்.
ஜம்மு:
ஜம்மு-காஷ்மீருக்குள் பாகிஸ்தான் பயங்கரவாதிகள் ஊடுருவல் தொடர்பாக தேசிய புலனாய்வு முகமை (என்.ஐ.ஏ.) அதிகாரிகள் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
இந்நிலையில் இது தொடர்பாக ஜம்முவில் என்.ஐ.ஏ. அதிகாரிகள் இன்று சோதனை நடத்தினார்கள். ஜம்மு பகுதியில் உள்ள ரியாசி, உதம்பூர், ரம்பவின் கிஷ்த்வார் ஆகிய பகுதிகளில் உள்ள 9 இடங்களில் அதிரடி சோதனை நடத்தப்பட்டது.
இந்த நடவடிக்கையில் என்.ஐ.ஏ. அதிகாரிகளுக்கு போலீசார் மற்றும் மத்திய ரிசர்வ் போலீஸ் படையினர் உதவினர்.
- மணியன்தீவு உள்ளிட்ட மீனவ கிராமங்களில் ‘சாகர் கவாச் ஆப்ரேஷன்’ பாதுகாப்பு ஒத்திகை இன்றும், நாளையும் நடக்கிறது.
- போலீசார் 4 குழுக்களாக பிரிந்து சோதனை மேற்கொண்டு வருகின்றனர்.
வேதாரண்யம்:
கடலோர பகுதிகளில் பயங்கரவாதிகள் ஊடுருவலை தடுக்க கடலோர பாதுகாப்பு குழும போலீசாரால் சாகர் கவாச் பாதுகாப்பு ஒத்திகை பயிற்சி ஆண்டுதோறும் நடத்தப்படுவது வழக்கம். இந்த ஆண்டு 'சாகர் கவாச் ஆப்ரேஷன்' என்ற பெயரில் பாதுகாப்பு ஒத்திகை தமிழகத்தின் கடலோர பகுதிகளில் இன்று தொடங்கியது.
அதன்படி, நாகை மாவட்டம், வேதாரண்யம் கடலோர பகுதிகளான ஆறுகாட்டுத்துறை, வெள்ளப்பள்ளம், புஷ்பவனம், நாலுவேதபதி, கோடியக்கரை, மணியன்தீவு உள்ளிட்ட மீனவ கிராமங்களில் 'சாகர் கவாச் ஆப்ரேஷன்' பாதுகாப்பு ஒத்திகை இன்றும், நாளையும் நடக்கிறது.
முதல் நாளான இன்று ஆறுகாட்டுத்துறை கடற்பகுதியில் வேதாரண்யம் கடலோர பாதுகாப்பு குழும டி.எஸ்.பி. சுந்தர் தலைமையில், சப்-இன்ஸ்பெக்டர் வரலட்சுமி, எஸ். எஸ்.ஐ.சசிகுமார் உள்பட 40-க்கும் மேற்பட்ட போலீசார் 4 குழுக்களாக பிரிந்து சோதனை மேற்கொண்டு வருகின்றனர்.
படகு மூலம் கடலுக்கு சென்று வழியில் தென்படும் மீனவர்களிடம் சந்தேகத்துக்கு இடமான நபர்கள் யாரேனும் தென்பட்டால் உடனடியாக காவல்துறைக்கு தகவல் தெரிவிக்க வேண்டும் என முன்னெச்சரிக்கை விடுத்தனர்.
- சென்னை முதல் குமரி வரை உள்ள 14 கடலோர மாவட்டங்களிலும் ஒத்திகை நடைபெறுவதால் கடலோர பகுதிகள் இன்று பரபரப்பாக காணப்பட்டன.
- கடலோர பாதுகாப்பை உறுதி செய்வதே ஒத்திகையின் நோக்கமாகும்.
சென்னை:
மும்பையில் கடந்த 2008ம் ஆண்டு கடல் வழியாக புகுந்து பயங்கரவாதிகள் கொடூர தாக்குதல் நடத்திய சம்பவத்துக்கு பின்னர் நாடு முழுவதும் பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப்பட்டுள்ளன.
அதன்பிறகு ஒவ்வொரு ஆண்டும் 2 முறை 'சாகர் கவாச் ஒத்திகை' என்ற பெயரில் பாதுகாப்பு ஒத்திகை நடத்தப்பட்டு வருகிறது. இதன்படி இந்த ஆண்டின் முதல் பாதுகாப்பு ஒத்திகை இன்று காலை 6 மணிக்கு தொடங்கியது.
கடலோர பாதுகாப்பு படையினர், கடற்படையினர், மாநில காவல் துறையினர் ஆகியோர் கூட்டாக இணைந்து இந்த பாதுகாப்பு ஒத்திகையை நடத்தி வருகிறார்கள். சென்னை முதல் குமரி வரை உள்ள 14 கடலோர மாவட்டங்களிலும் ஒத்திகை நடைபெறுவதால் கடலோர பகுதிகள் இன்று காலையில் பரபரப்பாக காணப்பட்டன.
பயங்கரவாதிகள் போன்று மாறுவேடத்தில் கடலோர பகுதிகளில் பாதுகாப்பு படையினர் ஊடுருவுவார்கள் அவர்களை மாநில போலீசார் மடக்கி பிடிப்பார்கள். இதுபோன்ற நேரங்களில் பாதுகாப்பு ஒத்திகையில் கோட்டைவிடும் போலீசார் மீது நடவடிக்கை பாயும். கடலோர பாதுகாப்பை உறுதி செய்வதே இந்த ஒத்திகையின் நோக்கமாகும்.
சென்னையில் மெரினா, பட்டினப்பாக்கம் கடலோர பகுதிகளில் போலீசார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டனர். திருவொற்றியூர், எண்ணூர், கிழக்கு கடற்கரை சாலையையொட்டிய கடல் பகுதிகள் போன்றவற்றிலும் பாதுகாப்பு ஒத்திகை நடத்தப்பட்டது.
சென்னை மாநகரையொட்டிய கடல் பகுதிகளில் உதவி கமிஷனர்கள், இன்ஸ்பெக்டர்கள் உள்ளிட்டோர் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். கடலோர காவல்படை கூடுதல் டி.ஜி.பி. சந்தீப் மிட்டல் மேற்பார்வையில் போலீஸ் சூப்பிரண்டு கயல்விழி மற்றும் அதிகாரிகள் ஒத்திகையை நடத்தி வருகிறார்கள். இன்று தொடங்கி இருக்கும் இந்த ஒத்திகை 2 நாட்கள் நடத்தப்படுகிறது.
- ஒத்திகை நாளை மாலை 5 மணி வரை நடைபெறுகிறது.
- கிழக்கு கடற்கரை சாலையில் போலீசாரின் வாகன சோதனை இன்று அதிகாலை தொடங்கி நடைபெற்றது.
மாமல்லபுரம்:
பயங்கரவாதிகளின் ஊடுருவலை தடுக்கும் நடவடிக்கையாக 'சாகர் கவாச்-2023' என்ற பெயரில் பாதுகாப்பு ஒத்திகை இன்று காலை தமிழ்நாடு கடலோர பகுதிகளில் அனைத்து மாவட்டங்களிலும் தொடங்கியது.
இதில் கடலோர பாதுகாப்பு படையினர் மற்றும் தமிழ்நாடு போலீசார் ஈடுபட்டனர். இந்த ஒத்திகை நாளை மாலை 5 மணி வரை நடைபெறுகிறது.
கடல் வழி, சாலை வழியாக மத்திய கடலோர காவல் படை வீரர்கள் பயங்கரவாதிகள் போன்று மாறு வேடத்தில், கையில் டம்மி வெடிகுண்டு, துப்பாக்கி போன்ற ஆயுதங்களுடன் ஊடுருவும் போலீசாரை கண்காணித்து அவர்களை பிடிப்பதே இந்த ஒத்திகை ஆகும்.
பயங்கரவாதிகள் தடுப்பு ஒத்திகையையொட்டி கோவளம், மாமல்லபுரம், பூஞ்சேரி, வெங்கம்பாக்கம், கூவத்தூர் பகுதி கிழக்கு கடற்கரை சாலையில் போலீசாரின் வாகன சோதனை இன்று அதிகாலை தொடங்கி நடைபெற்றது.
தமிழக கடலோர பாதுகாப்பு குழுமத்தின் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் ராஜேந்திரன் தலைமையில் போலீசார் மீனவர்கள் உதவியுடன் கடலுக்குள் சென்று புதிய படகுகளோ, புதிய மர்மநபர்கள் எவரேனும் வருகிறார்களா? என்று கல்பாக்கம், மாமல்லபுரம், கோவளம் கடல் வழி சோதனையிலும் ஈடுபட்டு வருகின்றனர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்