என் மலர்
நீங்கள் தேடியது "மத்திய அரசு திட்டங்கள்"
- மீனவர்களுக்கு மத்திய, மாநில அரசுகளின் நலத்திட்ட உதவிகள் மற்றும் கிசான் அட்டைகளை வழங்கினர்.
- மத்திய அரசு நமக்கு எவ்வளவு திட்டங்களை வழங்குகிறது என்பதை எண்ணிப் பார்க்க வேண்டும்.
புதுச்சேரி:
புதுச்சேரி அரசு மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை சார்பில் மத்திய, மாநில அரசின் நலத்திட்ட உதவிகள் மற்றும் மீனவர்களுக்கு கிசான் கடன் அட்டை வழங்கும் விழா கம்பன் கலையரங்கத்தில் நடைபெற்றது.
விழாவுக்கு முதலமைச்சர் ரங்கசாமி தலைமை தாங்கினார். கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன், மத்திய மீன்வளத்துறை இணை மந்திரி எல்.முருகன் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்துகொண்டு மீனவர்களுக்கு மத்திய, மாநில அரசுகளின் நலத்திட்ட உதவிகள் மற்றும் கிசான் அட்டைகளை வழங்கினர்.
மீனவ மக்கள் கேட்ட அத்தனை திட்டங்களையும் அரசு வழங்கி வருகிறது. மத்திய அரசு நமக்கு எவ்வளவு திட்டங்களை வழங்குகிறது என்பதை எண்ணிப் பார்க்க வேண்டும்.
நேரடி வங்கி பரிமாற்றத்தால் அவர்கள் வழங்குகின்ற நிறைய திட்டங்கள் நமக்கு தெரிவதில்லை. திட்டங்கள் விரைவாக மக்களை சென்றடைய வேண்டும் என்பதே நமது எண்ணம். நாங்கள் எதிர்பார்த்த நிதியை விட கூடுதல் நிதி மத்திய அரசிடம் இருந்து கிடைத்து, அதன் மூலம் திட்டங்களை செயல்படுத்தி வருகிறோம்.
காலாப்பட்டு பகுதியில் கடல் அரிப்பினால் பல வீடுகள் பாதிக்கப்பட்டு வருகின்றன. கற்கள் கொட்ட வேண்டும் என்றுகேட்கின்றனர். இதை ஆய்வு செய்யும் பணி ஒரு நிறுவனத்திடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. ஆய்வறிக்கை மூலம் விரைவில் கடல் அரிப்பை தடுக்க நிச்சயம் நடவடிக்கை எடுக்கப்படும்.
புதுச்சேரி, காரைக்காலில் மீன்பிடி துறைமுகம் வேண்டும் என்றும் கேட்டுள்ளனர். மாகியில் மீன்பிடித் துறைமுகப் பணி முடிக்கப்படாமல் உள்ளது. அதனை முடிக்கவும், ஏனாம் பகுதி மீனவ மக்களுக்கு தேவையான உதவிகளை செய்யவும் தேவையான நிதியை மத்திய அரசிடம் கேட்டுள்ளோம்.
கடல் அரிப்பை தடுப்பதற்கான நிதி உள்பட அனைத்து நிதியும் நமக்கு கிடைக்கும்.
இவ்வாறு அவர் பேசினார்.
- மாணவர்கள், பெண் தொழில் முனைவோர்கள் தங்களது தொழில் உக்தி யோசனைகளை வழங்கவேண்டும்.
- போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளுக்கு பாராட்டு தெரிவிக்கப்பட்டது.
நெல்லை:
நெல்லை வண்ணார்பேட்டை எப்.எக்ஸ். பொறியியல் கல்லூரியில் தொழில் முனைவோருக்கான எம்.எஸ்.எம்.இ. இன்குபேஷன் மையம் செயல்பட்டு வருகிறது. இதன் மூலம் தொழில் முனை வோர்களுக்கு ஆலோசனைகள் அளிக்கப்ப டுகின்றன.
புதிய கட்டிட திறப்பு விழா
இந்நிலையில் கல்லூரியில் நடந்த எம்.எஸ்.எம்.இ. மைய புதிய கட்டிட திறப்பு விழா நடைபெற்றது. இதில் ஸ்காட் கல்வி குழும நிறுவனர் கிளிட்டஸ் பாபு அறிவுறுத்தலின் படி கல்லூரி முதல்வர் வேல்முருகன் கலந்து கொண்டார். விழாவில் சென்னை தலைமையக எம்.எஸ்.எம்.இ. இணை இயக்குநர் சுரேஷ்பாபு, உதவி இயக்குநர்கள் (நெல்லை) சிமியோன், ஜெரினாபபி மற்றும் அதிகாரி கள் சிறப்பு விருந்தினர்களாக பங்கேற்ற னர்.
நிகழ்ச்சியில் சுரேஷ்பாபு பேசுகையில், எப்.எக்ஸ். பொறியியல் கல்லூரியில் எம்.எஸ்.எம்.இ. செயல்பாடுகள் நன்றாக உள்ளது. மாணவர்கள், பெண் தொழில் முனைவோர்கள் தங்களது தொழில் உக்தி யோசனைகளை வழங்கவேண்டும் என்றார்.
கல்லூரி பொதுமேலாளர் ஜெயக்குமார் பேசுகையில், மத்திய, மாநில அரசுகள் ஆதரவுடன் இன்குபேஷன் மையத்தில் பல்வேறு வசதிகள் செய்யப்பட உள்ளன. மாணவர்கள் தங்களது திறன்மிக்க யோசனைகளை வழங்க முன்வர வேண்டும் என்றார். தொடர்ந்து மாணவர்களுடன் கலந்துரை யாடல் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் மாணவர்களுக்கு ஆலோசனை கள் வழங்கப்பட்டன.
மேலும் மத்திய அரசு நடத்தும் ஹேக்கத்தான் போட்டிகள், தமிழக அரசின் ஸ்டார்ட்-அப் போட்டிகளில் எப்.எக்ஸ். கல்லூரி சார்பில் பங்கேற்று வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளுக்கு பாராட்டு தெரிவிக்கப்பட்டது.
இதில் பொதுமேலாளர் ஜெயக்குமார், கிருஷ்ணகுமார், கல்லூரி முதல்வர் வேல்முருகன், இயக்குநர் ஜான்கென்னடி, தொழில் முனைவோர்துறை இயக்குநர் லூர்தஸ் பூபாலராயன், எம்.எஸ்.எம்.இ. இன்குபேஷன் மைய தலைவர் லக்ஷ்மி நாராயணன் மற்றும் மதுரை எம்.எஸ்.எம்.இ. உதவி இயக்குநர்கள் உமா சந்திரிகா, ஜெயசெல்வம், தமிழ்நாடு ஸ்டார்ட்-அப் மிஷன் திட்ட தலைவர் ராகுல், பயிற்றுவிப்பாளர்கள் ராஜ், முத்துக்குமார் மற்றும் பேராசிரியர்கள், மாணவர்கள் கலந்து கொண்டனர். முடிவில் பேராசிரியர் பிரியா நன்றி கூறினார்.
- மத்திய அரசு திட்டங்களை மாநில அரசு செயல்படுத்துவதில் குறைபாடு உள்ளதாக கவர்னர் ரவி குற்றம் சாட்டியுள்ளார்.
- இந்த திட்டத்தை சில தலைவர்கள் முழுமையாக புரிந்து கொள்ளவில்லை என்றார்.
ராஜபாளையம்
ராஜபாளையத்தில் விஸ்வகர்மா யோஜனா திட்டத்தின் கீழ் 18 வகை கைவினை கலைஞர்களை சந்திக்கும் நிகழ்ச்சி நடந்தது. கவர்னர் ஆர்.என். ரவி கலந்து கொண்டு கலந்துரை யாடினார். அப்போது அவர் பேசியதாவது:-
விவசாயமும், தொழிலும் இல்லாமல் இந்த நாட்டை முன்னேற்ற பாதைக்கு கொண்டு செல்ல முடியாது. விஸ்வ கர்மா யோஜனா திட்டத்தை பிரதமர் தைரி யமாக அறிமுகப்படுத்தி யுள்ளார். இந்த திட்டத்தை சில தலைவர்கள் முழுமையாக புரிந்து கொள்ளவில்லை. உறுதியான பாரதம் உருவாக விஸ்வ கர்மா கலைஞர்களுக்கு உரிய அங்கீகாரம் கிடைக்க வேண்டும். அதனை பிரதமர் செயல்படுத்தி யுள்ளார். இந்த திட்டத்தின் முழு நோக்கம் கைவினை கலைஞர்களின் வாழ்வா தார மேம்பாடு தான்.
மத்திய அரசு பல நல்ல திட்டங்களை அமல்படுத்தி வருகிறது. தமிழகத்தில் பிற்படுத்தப்ப ட்டோருக்கான வீடு கட்டும் திட்டத்தில் 40 சதவீத நிதி பயன்படுத்தப்படாமல் உள்ளது. மத்திய அரசு திட்டங்களை மாநில அரசு செயல்படுத்துவதில் நிறைய குறைபாடுகள் உள்ளன. மாநிலம் முழுவதும் சுற்றுப்பயணம் செய்து வருகிறேன். ஆனால் மக்களிடம் நினைத்த தொழிலை தொடங்கு வதற்கான விழிப்புணர்வு இல்லை. பொதுமக்களின் குறைகளை மத்திய-மாநில அரசுகளிடம் எடுத்துச் சொல்ல முயற்சிப்பேன்.
இவ்வாறு அவர் பேசினார்.
இதில் புதிய தமிழகம் கட்சி நிறுவனர் டாக்டர் கிருஷ்ணசாமி மற்றும் விஸ்வகர்மா நிர்வாகிகள், தொழிற்சங்க நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
- மத்திய அரசின் திட்டங்கள் தொடர்பாக பல்வேறு வதந்திகள் பரப்பப்பட்டு வருகின்றன.
- இதுபோன்ற தகவல்களை உண்மை கண்டறியும் குழு சரிபார்க்கும்.
புதுடெல்லி:
மத்திய அரசின் திட்டங்கள் தொடர்பாக பல்வேறு வதந்திகள் பரப்பப்பட்டு வருகின்றன.
இந்நிலையில், மத்திய அரசு திட்டங்கள் தொடர்பாக பரப்பப்படும் வதந்திகளைக் கட்டுப்படுத்த உண்மை கண்டறியும் குழு அமைத்து மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.
மத்திய அரசின் திட்டங்கள் குறித்து பரப்பப்படும் தவறான தகவல்களை இந்த குழு சரிபார்க்கும். அந்த தகவல் தவறு என அறிவித்து விட்டால் அந்தப் பதிவை சம்பந்தப்பட்ட சமூக வலைதளங்கள் உடனடியாக நீக்க வேண்டும்.
அப்படி இல்லை எனில் அவற்றின்மீது சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
- மத்திய அரசின் திட்டங்கள் குறித்து பரப்பப்படும் தவறான தகவல்களை இந்த குழு சரிபார்க்கும்
- தகவல் தொழில்நுட்ப திருத்த சட்டம் 2023-க்கு எதிரான வழக்கு மும்பை உயர் நீதிமன்றத்தில் விசாரிக்கப்பட்டு வருகிறது
மத்திய அரசின் திட்டங்கள் தொடர்பாக பரப்பப்படும் வதந்திகளைக் கட்டுப்படுத்த உண்மை கண்டறியும் குழு ஒன்றை அமைத்து மத்திய அரசு உத்தரவிட்டிருந்தது.
மத்திய அரசின் திட்டங்கள் குறித்து பரப்பப்படும் தவறான தகவல்களை இந்த குழு சரிபார்க்கும். அந்த தகவல் தவறு என அறிவித்து விட்டால் அந்தப் பதிவை சம்பந்தப்பட்ட சமூக வலைத்தளங்கள் உடனடியாக நீக்க வேண்டும். அப்படி இல்லை எனில் அவற்றின்மீது சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என மத்திய அரசு தெரிவித்திருந்தது.
இந்நிலையில், மத்திய அரசின் உண்மை சரிபார்ப்புக்குழு (FactCheck Unit) அமைக்கும் அரசாணையை உச்ச நீதிமன்றம் நிறுத்தி வைத்து உத்தரவு பிறப்பித்துள்ளது.
தகவல் தொழில்நுட்ப திருத்தச் சட்டம் 2023-க்கு எதிரான வழக்கு மும்பை உயர் நீதிமன்றத்தில் விசாரிக்கப்பட்டு வருகிறது. இவ்வழக்கில் உயர்நீதிமன்றத்தின் இறுதித்தீர்ப்பு வரும் வரை இந்த தடை அமலில் இருக்கும் என உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது.