என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "பென் டக்கெட்"
- பென் டக்கெட் 114 ரன்னில் ஆட்டம் இழந்தார்.
- பாகிஸ்தான் தரப்பில் சஜித் கான் 4 விக்கெட் வீழ்த்தி உள்ளார்.
முல்தான்:
பாகிஸ்தான் - இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான 2-வது டெஸ்ட் போட்டி முல்தானில் நேற்று தொடங்கி நடந்து வருகிறது. இதில் டாஸ் வென்ற பாகிஸ்தான் முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்தது. இதையடுத்து முதல் இன்னிங்சை தொடங்கிய பாகிஸ்தான் நேற்றைய முதல் நாள் ஆட்ட நேர முடிவில் 90 ஓவர்களில் 5 விக்கெட்டை இழந்து 259 ரன்கள் எடுத்தது.
தொடர்ந்து இன்று 2-வது நாளில் விளையாடிய பாகிஸ்தான் தனது முதல் இன்னிங்சில் 366 ரன்னுக்கு ஆல் அவுட் ஆனது. பாகிஸ்தான் தரப்பில் அதிகபட்சமாக கம்ரான் குலாம் 118 ரன் எடுத்தார். இங்கிலாந்து தரப்பில் அதிகபட்சமாக ஜேக் லீச் 4 விக்கெட் வீழ்த்தினார்.
இதையடுத்து இங்கிலாந்து தனது முதல் இன்னிங்சை தொடங்கியது. இங்கிலாந்தின் தொடக்க ஆட்டக்காரர்களாக ஜேக் க்ராவ்லி மற்றும் பென் டக்கெட் களம் இறங்கினர். இதில் க்ராவ்லி 27 ரன்னில் அவுட் ஆனார். அடுத்து வந்த போப் 29, ரூட் 34 என ஆட்டமிழந்தனர்.
ஒருபுறம் அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்திய பென் டக்கெட் சதம் அடித்த நிலையில் 114 ரன்னில் ஆட்டம் இழந்தார். தொடர்ந்து களம் இறங்கிய ஹாரி புரூக் 9 ரன், பென் ஸ்டோக்ஸ் 1 ரன் எடுத்து ஆட்டம் இழந்தனர்.
Spin-triggered collapse! ?Sajid Khan dishing out rippers in Multan ?#PAKvENG | #TestAtHome pic.twitter.com/spswXSZVcZ
— Pakistan Cricket (@TheRealPCB) October 16, 2024
இறுதியில் 2-ம் நாள் ஆட்ட நேர முடிவில் இங்கிலாந்து தனது 53 ஓவர்களில் 6 விக்கெட்டை இழந்து 239 ரன்கள் எடுத்துள்ளது. ஜேமி ஸ்மித் 12 ரன், பிரைடன் கார்ஸ் 2 ரன் எடுத்து களத்தில் உள்ளனர். பாகிஸ்தான் தரப்பில் சஜித் கான் 4 விக்கெட் வீழ்த்தி உள்ளார். இங்கிலாந்து அணி இன்னும் 127 ரன்கள் பின்னிலையில் உள்ளது.
- 20.4 ஓவரின்போது மழை குறுக்கீடு செய்தது. அதன்பின் ஆட்டம் நடைபெறவில்லை.
- டக்வொர்த் லீவிஸ் விதிப்படி அப்போது ஆஸ்திரேலியா 49 ரன்கள் முன்னிலை பெற்றிருந்தது.
இங்கிலாந்து- ஆஸ்திரேலியா இடையிலான கடைசி மற்றும் 5-வது ஒருநாள் கிரிக்கெட் போட்டி நேற்றிரவு பிரிஸ்டோலில் நடைபெற்றது. முதலில் விளையாடிய இங்கிலாந்து பென் டக்கெட் (107) சதத்தால் 309 ரன்கள் குவித்தது.
பின்னர் 310 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் ஆஸ்திரேலியா களம் இறங்கியது. தொடக்க வீரர் மேத்யூ ஷார்ட் சிறப்பாக விளையாடி 30 பந்தில் 58 ரன்கள் விளாசினார். டிராவிஸ் ஹெட் 26 பந்தில் 31 ரன்கள் சேர்த்தார்.
கேப்டன ஸ்டீவ் ஸ்மித் 48 பந்தில் 36 ரன்களும், ஜோஷ் இங்லிஸ் 20 பந்தில் 28 ரன்களும் எடுத்திருந்தபோது மழை பெய்தது. அப்போது ஆஸ்திரேலியா 2 விக்கெட் இழப்பிற்கு 165 ரன்கள் எடுத்திருந்தது. தொடர்ந்து மழை பெய்ததன் காரணமாக ஆட்டம் அத்துடன் நிறுத்தப்பட்டு டக்வொர்த் லீவிஸ் விதி கடைபிடிக்கப்பட்டது. இந்த விதியின் அடிப்படையில் ஆஸ்திரேலியா 20.4 ஓவரில் 49 ரன்கள் கூடுதலாக அடித்திருந்தது. இதன்காரணமாக ஆஸ்திரேலியா டக்வொர் லீவிஸ் விதிப்படி 49 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
இந்த வெற்றியின் மூலம் ஆஸ்திரேலியா ஐந்து போட்டிகள் கொண்ட ஒருநாள் கிரிக்கெட் தொடரை 3-2 எனக் கைப்பற்றியது. ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் 20 ஓவர்கள் வீசப்பட்டால் மட்டுமே டக்வொர்த் லீவிஸ் விதி கடைபிடிக்கப்படும். இங்கிலாந்து 4 பந்துகள் அதிகமாக வீசியதால் விதி பயன்படுத்தப்பட்டு இங்கிலாந்து தோல்வயிடைந்தது.
டிராவிஸ் ஹெட் ஆட்ட நாயகன் மற்றும் தொடர் நாயகன் விருதை வென்றார்.
- டாஸ் வென்ற ஆஸ்திரேலியா பவுலிங் தேர்வு செய்தது.
- முதலில் ஆடிய இங்கிலாந்து 309 ரன்களுக்கு ஆல் அவுட்டானது.
பிரிஸ்டோல்:
ஆஸ்திரேலிய அணி இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் செய்து 5 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் விளையாடி வருகிறது. நான்கு போட்டிகளின் முடிவில் இரு அணிகளும் தலா 2 வெற்றிகள் பெற்றுள்ளன.
இந்நிலையில், வெற்றியாளரை நிர்ணயிக்கும் கடைசி மற்றும் 5-வது ஒருநாள் போட்டி பிரிஸ்டோலில் இன்று நடைபெறுகிறது. டாஸ் வென்ற ஆஸ்திரேலியா பவுலிங் தேர்வு செய்தது.
அதன்படி, இங்கிலாந்து அணி முதலில் களமிறங்கியது. தொடக்கம் முதலே அந்த அணி அதிரடியில் இறங்கியது. முதல் விக்கெட்டுக்கு 58 ரன்கள் சேர்த்த நிலையில் பிலிப் சால்ட் 27 பந்தில் 45 ரன் எடுத்து வெளியேறினார். அடுத்து இறங்கிய வில் ஜாக்ஸ் டக் அவுட்டானார்.
3வது விக்கெட்டுக்கு இணைந்த பென் டக்கெட், ஹாரி புரூக் ஜோடி அதிரடியில் மிரட்டியது. ஹாரி புரூக் அரை சதம் கடந்தார். இந்த ஜோடி 132 ரன்கள் சேர்த்த நிலையைல ஹாரி புரூக் 72 ரன்னில் ஆட்டமிழந்தார்.
பொறுப்புடன் ஆடிய பென் டக்கெட் சதமடித்து அசத்தினார். அவர் 107 ரன்னில் வெளியேறினார். அடுத்து வந்த வீரர்கள் விரைவில் வெளியேறினர்.
கடைசி கட்டத்தில் போராடிய அடில் ரஷித் 36 ரன்கள் எடுத்தார்.
இறுதியில், இங்கிலாந்து அணி 309 ரன்களுக்கு ஆல் அவுட்டானது.
ஆஸ்திரேலியா சார்பில் டிராவிஸ் ஹெட் 4 விக்கெட்டும், ஆடம் ஜாம்பா, ஆரோன் ஹார்டி, மேக்ஸ்வெல் ஆகியோர் தலா 2 விக்கெட்டும் வீழ்த்தினர்.
இதையடுத்து, 310 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் ஆஸ்திரேலியா களமிறங்குகிறது.
- இங்கிலாந்து வீரர்கள் டக்கெட், ஹாரி ப்ரூக், லிவிங்ஸ்டன் ஆகியோர் அரைசதம்.
- ஆஸ்திரேலியா 126 ரன்னில் சுருண்டு பரிதாபம்.
இங்கிலாந்து- ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையில் 5 போட்டிகள் கொண்ட ஒருநாள் கிரிக்கெட் தொடர் நடைபெற்று வருகிறது.
ஏற்கனவே முடிவடைந்த 3 போட்டிகளில் முடிவில் ஆஸ்திரேலியா 2-1 என முன்னிலைப் பெற்றிருந்தது. இந்த நிலையில் 4-வது போட்டி நேற்று லார்ட்ஸ் மைதானத்தில் நடைபெற்றது.
மழைக்காரணமாக போட்டி 39 ஓவராக குறைக்கப்பட்டது. முதலில் பேட்டிங் செய்த இங்கிலாந்து, கேப்டன் ஹாரி ப்ரூக் (58 பந்தில் 87 ரன்), டக்கெட் (62 பந்தில் 63 ரன்), லிவிங்ஸ்டன் (27 பந்தில் 62 ரன்) ஆகியோரின் சிறப்பான ஆட்டத்தால் 312 ரன்கள் குவித்தது. ஆஸ்திரேலியா அணியில் ஆடம் ஜம்பா 8 ஓவரில் 66 ரன்கள் விட்டுக்கொடுத்து 2 விக்கெட் வீழ்த்தினார். ஹேசில்வுட், மிட்செல் மார்ஷ், மேக்ஸ்வெல் ஆகியோர் தலா ஒரு விக்கெட் வீழ்த்தினர்.
பின்னர் 313 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இமாலய இலக்குடன் ஆஸ்திரேலியா களம் இறங்கியது. தொடக்க ஜோடி 8.4 ஓவருக்கு 68 ரன்கள் விளாசியது. மிட்செல் மார்ஷ் 34 பந்தில் 28 ரன்களும், டிராவிஸ் ஹெட் 23 பந்தில் 34 ரன்களும் எடுத்து ஆட்டமிழந்தனர்.
அதன்பின் ஆஸ்திரேலியா விக்கெட்டுகள் சீட்டு கட்டுபோல் மளமளவென சரிந்தது. 24.4 ஓவர்கள் மட்டுமே தாக்குப்பிடித்து 126 ரன்னில் ஆஸ்திரேலியா ஆல்-அவுட் ஆனது. இதனால் இங்கிலாந்து 186 ரன் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.
ஆஸ்திரேலியா கடைசி 58 ரன்களுக்குள் 10 விக்கெட்டுகளையும் இழந்தது குறிப்பிடத்தக்கது. இங்கிலாந்து அணி சார்பில் மேத்யூ பாட்ஸ் 4 விக்கெட்டும், பிரைடன் கார்ஸ் 3 விக்கெட்டும், ஆர்ச்சர் 2 விக்கெட்டும் வீழ்த்தினர்.
இந்த வெற்றியின் மூலம் இங்கிலாந்து தொடரை 2-2 என சமநிலை செய்துள்ளது. தொடர் யாருக்கு என்பதை தீர்மானிக்கும் 5-வது மற்றும் கடைசி போட்டி நாளை பிரிஸ்டோலில் நடக்கிறது.
- இரு அணிகளுக்கும் இடையேயான முதல் டெஸ்ட்டில் இங்கிலாந்து வெற்றி பெற்றது.
- இன்று 2-வது டெஸ்ட் போட்டி தொடங்கியது.
நாட்டிங்காம்:
வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் அணி இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்றுள்ளது. இதில் முதலாவது டெஸ்டில் இங்கிலாந்து இன்னிங்ஸ் மற்றும் 114 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று தொடரில் 1-0 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது.
இதனையடுத்து இவ்விரு அணிகள் இடையிலான 2-வது டெஸ்ட் போட்டி நாட்டிங்காமில் இன்று தொடங்கியது. இந்த ஆட்டத்தில் டாஸ் வென்ற வெஸ்ட் இண்டீஸ் அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. அதன்படி இங்கிலாந்து அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக பென் டக்கெட் - ஜாக் கிராலி ஆகியோர் களமிறங்கினர். இதில் கிராலி 3-வது பந்திலேயே ஆட்டமிழந்து ஏமாற்றம் அளித்தார்.
இதனையடுத்து ஜோடி சேர்ந்த பென் டக்கெட் -ஆலி போப் அதிரடியாக ரன்கள் சேர்த்தனர். அதிலும் குறிப்பாக பென் டக்கெட் டி20 கிரிக்கெட்டில் விளையாடுவது போல் அதிரடி காட்டினார். இவரின் அதிரடியால் இங்கிலாந்து அணி 4.2 ஓவர்களில் 50 ரன்கள் அடித்து அசத்தியது.
இதன் மூலம் 147 ஆண்டு கால சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் குறைந்த பந்துகளில் 50 ரன்கள் எட்டிய அணி என்ற மாபெரும் சாதனையை இங்கிலாந்து அணி படைத்துள்ளது.
32 பந்துகளில் அரைசதம் அடித்து அசத்திய பென் டக்கெட் 71 ரன்களில் ஆட்டமிழந்தார்.
- ஜெய்ஸ்வால் அதிரடியாக விளையாடுவதை இங்கிலாந்திடம் இருந்து கற்றுக் கொண்டதாக இங்கிலாந்து வீரர் பென் டக்கெட் தெரிவித்து இருந்தார்.
- இந்த கருத்து இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மா பதிலடி கொடுத்துள்ளார்.
பென்ஸ்டோக்ஸ் தலைமையிலான இங்கிலாந்து கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வருகிறது. 5 போட்டிக் கொண்ட தொடரில் 4 போட்டிகள் முடிவில் இந்தியா 3-1 என்ற கணக்கில் முன்னிலையில் உள்ளது. முதல் போட்டியில் இங்கிலாந்தும், அடுத்து நடந்த 3 போட்டிகளிலும் இந்தியாவும் வெற்றி பெற்றன. இதனை தொடர்ந்து இரு அணிகளுக்கும் இடையேயான 5-வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி நாளை தரம்சாலாவில் நடக்க உள்ளது.
இந்நிலையில் ஜெய்ஸ்வால் அதிரடியாக விளையாடுவதை இங்கிலாந்திடம் இருந்து கற்றுக் கொண்டதாக இங்கிலாந்து அணியின் தொடக்க வீரர் பென் டக்கெட் தெரிவித்து இருந்தார். இந்த கருத்து இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மா பதிலடி கொடுத்துள்ளார்.
இது குறித்து அவர் கூறியதாவது:-
இங்கிலாந்து (2021) கடந்து முறை விளையாடியதை விட இந்த முறை சிறப்பாக விளையாடி உள்ளது. பேஸ்பால் என்றால் என்னவென்று எனக்கு இன்னும் தெரியவில்லை. எங்கள் அணியில் ரிஷப் பண்ட் என்று ஒருவர் இருந்தார். அவர் விளையாடியதை பென் டக்கெட் பார்த்ததில்லை போல.
இவ்வாறு ரோகித் கூறினார்.
- ஆஸ்திரேலியா 500 ரன்களை எடுக்கக்கூடிய நிலையில் இருந்தனர். அதை தடுத்து நிறுத்தினோம்.
- லார்ட்ஸ் மைதானத்தில் சதத்தை நெருங்கி வந்தேன். அதை நிறைவேற்ற முடியாததால் ஏமாற்றம் அடைந்தேன்.
லண்டன்:
ஆஷஸ் தொடரில் 2-வது டெஸ்ட் போட்டி லண்டனில் நடந்து வருகிறது. முதலில் பேட்டிங் செய்த ஆஸ்திரேலியா 416 ரன்கள் குவித்தது. நேற்றைய 2-ம் நாள் ஆட்டநேர முடிவில் இங்கிலாந்து 4 விக்கெட் டுக்கு 278 ரன்கள் எடுத்துள்ளது.
தொடக்க வீரர் பென்டக்கெட் 98 ரன்னில் அவுட் ஆனார். இந்நிலையில் இங்கிலாந்து அணி நல்ல நிலையில் இருப்பதாக பென் டக்கெட் கூறினார்.
இது குறித்து அவர் கூறியதாவது:-
லார்ட்ஸ் மைதானத்தில் சதத்தை நெருங்கி வந்தேன். அதை நிறைவேற்ற முடியாததால் ஏமாற்றம் அடைந்தேன். ஆனால் இது நிச்சயமாக எனது சிறந்த இன்னிங்ஸ் என்று நினைக்கிறேன். அவர்கள் 500 ரன்களை எடுக்கக்கூடிய நிலையில் இருந்தனர். அதை தடுத்து நிறுத்தினோம். நாங்கள் ஒரு சிறந்த நிலையில் இருக்கிறோம் என்று நினைக்கிறேன் என்றார்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்