என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "கன்வார் யாத்திரை"
- வடமாநிலங்களில் புகழ் பெற்றது கன்வார் யாத்திரை.
- 3 பேர் படுகாயங்களுடன் தூக்கி வீசப்பட்டனர்.
வடமாநிலங்களில் புகழ் பெற்ற கன்வார் யாத்திரை நடந்து வருகிறது. நேற்று கன்வார் பக்தர்கள் பீகாரில் சோனாப்பூரில் உள்ள பாபா ஹரிகர்நாத் கோவிலில் ஜலஅபிஷேகம் செய்வதற்காக கார்களில் சென்று கொண்டிருந்தனர்.
வைசாலி மாவட்டத்தில் அந்த யாத்திரை சென்று கொண்டிருந்த போது சுல்தான்பூர் என்ற கிராமத்தில் மின் வயர்கள் அறுந்து விழுந்தன. மின்சார வயர் ஒரு காரின் மீது விழுந்ததில் அந்த காரில் இருந்த 9 பேர் மின்சாரம் தாக்கி பலியானார்கள்.
3 பேர் படுகாயங்களுடன் தூக்கி வீசப்பட்டனர். இதுகுறித்து வைசாலி மாவட்ட போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
- உணவகங்கள் தங்களுடைய உரிமையாளர்கள் பெயரை காண்பிக்க வேண்டும்- உ.பி. போலீசார்.
- பெயரை வெளியிட வேண்டும் என யாரையும் வற்புறுத்த முடியாது- உச்சநீதிமன்றம்.
கன்வார் யாத்திரை செல்லும் வழிகளில் உள்ள உணவகங்கள் தங்களுடைய உரிமையாளர்கள் பெயர், உணவகங்களில் பணிபுரியும் நபர்களின் பெயர்கள் மற்றும் இதர விவரங்களை வெளியிட வேண்டும் (காண்பிக்க வேண்டும்) என உத்தர பிரதேச மாநிலத்தின் முசாபர்நகர் மாவட்ட போலீஸ் அதிகாரி உத்தரவு பிறப்பித்திருந்தார். மேலும், உத்தரகாண்ட், மத்திய பிரதேச மாநிலத்திலும் இதுபோன்ற உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருந்தது.
முசாபர்நகர் போலீசாரின் உத்தரவை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்யப்பட்டிருந்தது. இந்த மனுவை விசாரித்த நீதிமன்றம் கடந்த 22-ந்தேதி பெயர்ப் பலகை வைக்க வேண்டும் என்ற உத்தரவுக்கு இடைக்கால தடை விதித்தது. அத்துடன் உத்தரவை எதிர்த்து போடப்பட்டுள்ள மனு தொடர்பாக விளக்கம் அளிக்க நீதிமன்றம் தெரிவித்திருந்தது.
இந்த நிலையில் இன்று பெயர்ப்பலகை தொடர்பான வழக்கு மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதிகள் ரிஷிகேஷி ராய் மற்றும் எஸ்.வி.என். பாட்டி அடங்கிய பெஞ்ச் "ஜூலை 22-ம் தேதி மீதான உத்தரவின் மீது எந்த விளக்கமும் அளிக்க எந்த காரணமும் இல்லை. என்ன தேவையோ அதை நாங்கள் ஜூலை 22-ம் தேதி உத்தரவில் தெரிவித்துவிட்டோம். பெயரை வெளியிட வேண்டும் என யாரையும் வற்புறுத்த முடியாது" எனத் தெரிவித்தது.
அத்துடன் மத்திய பிரதேசம் மற்றும் உத்தரகாண்ட் மாநிலங்கள், தங்களுடைய உத்தரவுகளுக்கு எதிரான மனுக்களுக்கு பதில் அளிக்க வேண்டும். அதேபோல் மனுதாரர்கள் தங்களுடைய பதிலை அளிக்கலாம் என தெரிவித்த நீதிபதிகள் ஆகஸ்ட் 5-ந்தேதிக்கு விசாரணையை ஒத்திவைத்தனர்.
அரசின் இந்த உத்தரவு அமைதியை உறுதிசெயவும், யாத்திரைக்கு பாதிப்பில்லாத வகையில் சீராக நடத்தவும் பிறப்பிக்கப்பட்ட உத்தரவே ஆகும். தவறுதலாகக் கூட கன்வர் யாத்ரீகர்களின் மத நம்பிக்கை புண்பட்டுவிடக்கூடாது என்பதற்காவதும், முந்தைய காலங்களில் நடந்த சில அசௌகரியங்களை கருத்தில் கொண்டும் இந்த முடிவு எடுக்கப்பட்டது என உத்தர பிரதேச மாநிலம் சார்பில் விளக்கம் அளிக்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.
- உயிருக்கு போராடும் ஒருவரை காப்பாற்றுவதே எனக்கு முக்கியம்.
- எனக்கு அவருடைய சாதி, மதத்தை பற்றி கவலை இல்லை.
புனித மாதமான சவான் (ஷ்ரவான்) மாதம் வரும் திங்கட்கிழமை தொடங்குகிறது. இதனையொட்டி லட்சக்கணக்கான பக்தர்கள் (Kanwariyas) பல்வேறு மாநிலங்களில் இருந்து டெல்லி மாநிலம் வழியாக ஹரித்வார் செல்வார்கள்.
அவர்கள் கங்கையில் புனித நீர் எடுத்து சிவபெருமானுக்கு அபிஷேகம் செய்வார்கள். இதனை கன்வார் யாத்திரை என அழைப்பார்கள். இந்த யாத்திரை ஆகஸ்ட் 2-ந்தேதி முடிவுடையும்.
இந்நிலையில் உத்தரகாண்ட் மாநிலத்தில் ஓடும் கங்கை நதியில் கன்வார் யாத்திரைக்கு சென்ற பக்தர்கள் தவறி விழுந்துள்ளனர். அப்போது உடனடியாக செயல்பட்ட பேரிடர் மீட்புப்படை தலைமை காவலாரான ஆசிப் அலி தனது சக காவலர்களுடன் இணைந்து அவர்களை காப்பாற்றியுள்ளார்.
கங்கை ஆற்றில் தவறி விழுந்த 5 பக்தர்களில் 2 பேர் சிறுவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. கன்வார் யாத்திரை பக்தர்களை ஒரு முஸ்லிம் காவலர் காப்பாற்றிய சம்பவம் அப்பகுதியில் நெகிழ்ச்சியை நடந்துள்ளது.
"உயிருக்கு போராடும் ஒருவரை காப்பாற்றுவதே எனக்கு முக்கியம். எனக்கு அவருடைய சாதி, மதத்தை பற்றி கவலை இல்லை. என்னை பொருத்தவரை அவர் மனிதர். அவர் உயிரை காப்பதே என் மதம். ஒருவரின் உயிரை காப்பாற்றும் போதெல்லாம் எனக்கு ஆன்ம திருப்தி கிடைக்கிறது" என்று ஆசிப் அலி உணர்ச்சிவசப்பட்டு தெரிவித்தார்.
உத்தரப் பிரதேசத்தில் உள்ள கன்வார் யாத்திரை வழித்தடத்தில் உள்ள உணவகங்களின் உணவு விற்பனை செய்பவர்களின் பெயர்கள் மற்றும் பணியாளர்களின் பெயர்களை குறிப்பிட வேண்டும் என்று முசாபர் நகர் காவல்துறை உத்தரவிட்டது.
உத்தரப்பிரதேச அரசின் இந்த நடவடிக்கை முஸ்லிம் கடைக்காரர்களை பாதிக்கும் என்று அம்மாநில எதிர்க்கட்சிகள் கண்டனம் தெரிவித்தன.
இந்நிலையில் கன்வார் யாத்திரை நடைபெறும் பாதைகளில் உள்ள கடைகளின் உரிமையாளர்கள் பெயரை எழுதி வைக்க வேண்டும் என்று உத்தரபிரதேசம் உள்ளிட்ட மாநில அரசுகளின் உத்தரவுகளுக்கு உச்சநீதிமன்றம் இடைக்கால தடை விதித்தது குறிப்பிடத்தக்கது.
- கன்வார் யாத்திரையானது வட இந்தியாவில் சிவ பக்தர்கள் மேற்கொள்ளும் மிக பிரபலமான யாத்திரையாகும்.
- யாத்திரைக்கான ஏற்பாடுகளை செய்வதில் அதிகாரிகள் அலட்சியமாக செயல்பட்டதாக குற்றச்சாட்டு.
உத்தர பிரதேசத்தின் மேற்கு பகுதியில் மின்சாரம் தாக்கியதில் கன்வார் யாத்திரை பக்தர்கள் 5 பேர் பரிதாபமாக இறந்துள்ளனர்.
ஹரித்வாரில் இருந்து புனித கங்கை நீரை எடுத்துகொண்டு புறப்பட்ட பக்தர்கள் நேற்று இரவு மீரட் மாவட்டம் ராலி சவுகான் கிராமத்தில் வந்தபோது அவர்களின் வாகனம் தாழ்வாக சென்ற மின்கம்பியில் உரசியதால் விபத்து ஏற்பட்டுள்ளது. பலத்த மின்தாக்குதலுக்கு ஆளானதும் வாகனம் தாறுமாறாக ஓடி பக்தர்கள் மீதும் மோதியது. ஒருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்த நிலையில், 4 பேர் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு இறந்தனர். மேலும் 5 பேர் பலத்த காயங்களுடன் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இதையடுத்து அப்பகுதி மக்கள் சாலை மறியலல் ஈடுபட்டனர். கன்வார் யாத்திரைக்கான பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்வதில் அதிகாரிகள் அலட்சியமாக செயல்பட்டதாக கூறி அப்பகுதி மக்கள் குற்றம்சாட்டினர்.
கன்வார் யாத்ரா:
கன்வார் யாத்திரையானது வட இந்தியாவில் சிவ பக்தர்கள் மேற்கொள்ளும் மிகப்பெரிய யாத்திரையாகும். உத்தரப் பிரதேசம், பீகார், ராஜஸ்தான், டெல்லி, ஹரியானா, பஞ்சாப், மத்தியப் பிரதேசம், சத்தீஸ்கர் ஒடிசா மற்றும் ஜார்கண்ட் போன்ற மாநிலங்களில் இருந்து ஒவ்வொரு ஆண்டும் பல லட்சம் சிவ பக்தர்கள் இதில் பங்கேற்கிறார்கள். கன்வாரியாக்கள் என்று அழைக்கப்படும் இந்த யாத்ரீகர்கள், காவடி ஏந்தி ஹரித்துவார், கங்கோத்திரி, கோமுகம், கேதார்நாத், வாரணாசி, பிரயாகை போன்ற புனித தலங்களுக்கு கால்நடையாக யாத்திரை மேற்கோண்டு, புனித கங்கை நீரை சேமித்து, அதனை தங்கள் சொந்த ஊரில் உள்ள சிவலிங்கத்திற்கு, அமாவாசை அல்லது மகா சிவராத்திரி அன்று கங்கை நீரால் அபிசேகம் செய்வார்கள்.
- கன்வார் யாத்திரையின் போது ஒரு இளைஞர் தனது தாயை தோளிலும், மற்றொரு தோளில் கங்கை நீரையும் சுமந்து சென்ற வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி உள்ளது.
- கன்வார் யாத்திரையின் போது ஒரு இளைஞர் தனது தாயை தோளிலும், மற்றொரு தோளில் கங்கை நீரையும் சுமந்து சென்ற வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி உள்ளது.
வட மாநிலங்களில் ஆண்டு தோறும் கன்வார் யாத்திரை ஜூலை மாதம் தொடங்கி ஆகஸ்டு இறுதி வரை நடைபெறுவது வழக்கம். இந்த ஆண்டு கன்வார் யாத்திரை கடந்த 4-ந்தேதி தொடங்கி உள்ளது. இந்த யாத்திரையின் போது சிவ பக்தர்கள் ஒன்று கூடி கங்கை நதியில் இருந்து புனித நீரை எடுத்து வந்து சிவலிங்கத்திற்கு சமர்ப்பிப்பதே முக்கிய நிகழ்வாகும்.
இதற்காக சிவ பக்தர்கள் காவி உடை அணிந்து தோள்களில் மூங்கிலால் ஆன கம்புடன் புனித நீரை கூடத்தில் கட்டி தொங்க விட்டு பாதயாத்திரையாக நடந்தே புனித தலங்களுக்கு சென்று சிவ பெருமானுக்கு நீரை அர்ப்பணிப்பார்கள்.
இந்நிலையில் ஹரித்துவாரில் கன்வார் யாத்திரையின் போது ஒரு இளைஞர் தனது தாயை தோளிலும், மற்றொரு தோளில் கங்கை நீரையும் சுமந்து சென்ற வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி உள்ளது. 11 விநாடிகள் கொண்ட இந்த வீடியோ டுவிட்டரில் பகிரப்பட்டதில் இருந்து 42 ஆயிரத்திற்கும் அதிகமான பார்வைகளையும், 1800-க்கும் அதிகமான லைக்குகளையும் குவித்து வருகிறது. வீடியோவை பார்த்த பயனர்கள் அந்த வாலிபரை பாராட்டி கருத்துக்களை பதிவிட்டு வருகிறார்கள்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்