என் மலர்
நீங்கள் தேடியது "நடிகர்கள்"
- மாநகராட்சி, நகராட்சி, ஊராட்சி பகுதிகளில் டிக்கெட் கட்டணத்தை உயர்த்த திட்டமிடப்பட்டுள்ளது.
- திரையரங்குகளை நடத்துவதில் உள்ள சிக்கல்கள் குறித்து ஆலோசனை நடத்தினர்.
தமிழ்நாடு திரையரங்கு உரிமையாளர்கள் சங்கத்தினர் ஆலோசனை கூட்டம் சென்னையில் நடந்தது. இதில் டிக்கெட் கட்ட ணத்தை உயர்த்துவது தொடர்பாக ஆலோசிக்கப்பட்டது. மாநகராட்சி, நகராட்சி, ஊராட்சி பகுதிகளில் டிக்கெட் கட்டணத்தை உயர்த்த திட்டமிடப்பட்டுள்ளது.
திரையரங்குகளை நடத்துவதில் உள்ள சிக்கல்கள் குறித்து ஆலோசனை நடத்தினர். திரையரங்குகளை தொடர்ந்து நடத்த ஏதுவாக விதிகளை தளர்த்த கோரி தீர்மானம் நிறைவேற்றி அரசுக்கு அனுப்ப முடிவு செய்யப்பட்டது.
கூட்டத்தில் முன்னணி நடிகர்கள் ஆண்டுக்கு 2 படங்களில் நடிக்க வேண்டும் என்று திரையரங்கு உரிமையாளர்கள் வலியுறுத்தினார்கள். மேலும் திரையரங்குகளில் படங்கள் வெளியான 8 வாரத்துக்கு பின்னரே ஓ.டி.டி.யில் வெளியிட வேண்டும் என்றும் டிக்கெட் கட்டணத்தில் ஒரே மாதிரியான ஜி.எஸ்.டி. கட்டணமாக இருக்க வேண்டும் என்றும் வலியுறுத்தினர்.
- பொதுமக்கள் எதிர்ப்பையடுத்து அந்த அறிவிப்பு பலகை தற்போது அகற்றப்பட்டுள்ளது.
- விவசாயிகளுக்கு ஜே.சி.பி எந்திரம் பயன்படுத்த தடை விதிக்கப்பட்ட நிலையில் இவர்கள் மட்டும் தடையின்றி பயன்படுத்துவது எப்படி?
கொடைக்கானல்:
கொடைக்கானலில் விவசாயிகள் குறைதீர்கூட்டம் ஆர்.டி.ஓ ராஜா தலைமையில் நடைபெற்றது. உதவி வனபாதுகாவலர் சக்திவேல் முன்னிலை வகித்தார். நகராட்சி மேலாளர் மீனா, தோட்டக்கலை உதவி இயக்குனர், மின்வாரிய உதவி செயற்பொறியாளர், ரேஞ்சர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
கூட்டத்தில் கலந்து கொண்ட விவசாயிகள் தெரிவித்ததாவது, வனவிலங்குகள் சேதப்படுத்தும் பயிர்களுக்கு இழப்பீடு கேட்டு வனத்துறையிடம் மனுக்கள் அளித்தும் அவற்றின் ஆவணங்கள் மாயமாகி விட்டதாக வனத்துறையினர் தெரிவித்து வருகின்றனர்.
மலைப்பகுதியில் விவசாயம் செய்யப்படும் காய்கறி பயிர்களை பன்றிகள் சேதப்படுத்துவதால் விவசாயிகளின் வாழ்வாதாரம் கேள்விக்குறியாகி வருகிறது. கொடைக்கானல் பகுதியில் அரசு நிலங்களை ஆக்கிரமித்து நடிகர்கள் வீடு கட்டி வருகின்றனர். விவசாயிகளுக்கு ஜே.சி.பி எந்திரம் பயன்படுத்த தடை விதிக்கப்பட்ட நிலையில் இவர்கள் மட்டும் தடையின்றி பயன்படுத்துவது எப்படி? அரசு நிலத்தை மறித்து சாலை அமைத்துள்ளனர். அங்கு அறிவிப்பு பலகையும் வைக்கப்பட்டது.
பொதுமக்கள் எதிர்ப்பையடுத்து அந்த அறிவிப்பு பலகை தற்போது அகற்றப்பட்டுள்ளது. இதுபோன்ற விதிமீறல்களில் ஈடுபடும் தனியார் மீது நடவடிக்கை எடுக்கவேண்டும் என்றனர்.
பேத்துப்பாறையை சேர்ந்த ஊர்தலைவர் மகேந்திரன்தெரிவிக்கையில், நடிகர் பிரகாஷ்ராஜ் அரசு அனுமதியை மீறி ஜே.சி.பி வாகனங்களை கொண்டு சாலை அமைத்துள்ளார். நடிகர் பாபிசிம்ஹா அனுமதியின்றி கட்டிடம் கட்டி வருகிறார். விதிகளை மீறி மின்இணைப்பு பெற்றுள்ளார். 24 மணிநேரமும் ஜே.சி.பி வாகனங்களை இயக்கி வேலைசெய்துவரும் நடிகர்கள் மீதும், இதற்கு அனுமதி கொடுத்த அதிகாரிகள் மீதும் நடவடிக்கை எடுக்கவேண்டும் என்றார்.
- மணமக்களுக்கு பசுமை மரக்கன்று கூடை வழங்கி வாழ்த்து தெரிவித்தார்.
- சென்னை சாந்தோம் தேவாலயத்தில் நேற்று காலை திருமணம் நடந்தது.
சென்னை:
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர் வி.டி.எம்.சார்லி - ஏ.அந்தோணியம்மாள் தம்பதியின் இளைய மகன் எம்.அஜய் தங்கசாமிக்கும், எம்.ஜான் கென்னடி - எல்.அனிட்டா அலெக்ஸ் தம்பதியின் மகள் ஜே.பெர்மீசியா டெமிக்கும் சென்னை சாந்தோம் தேவாலயத்தில் நேற்று காலை திருமணம் நடந்தது.
இதில் நடிகர்கள் சிவகுமார், செந்தில், எஸ்.வி.சேகர், அழகு உள்ளிட்டோர் கலந்து கொண்டு மணமக்களை ஆசீர்வதித்து வாழ்த்து தெரிவித்தனர்.
இதையடுத்து திருமண விருந்து நிகழ்ச்சி சாந்தோம் கச்சேரி சாலையில் உள்ள பாஸ்டரல் சென்டர் ஹாலில் நடந்தது. சார்லியின் மூத்த மகன் எம்.ஆதித்யா சார்லி - எஸ்.எழில் அம்ரிதா, பேத்தி ஏ.ரேயா புஷ்பம் சார்லி உள்ளிட்டோர் விருந்தினர்களை வரவேற்றனர்.
அதனைத்தொடர்ந்து எம்.அஜய் தங்கசாமி - ஜே.பெர்மீசியா டெமி திருமண வரவேற்பு நிகழ்ச்சி, மயிலாப்பூரில் உள்ள ஏ.வி.எம்.ராஜேஸ்வரி திருமண மண்டபத்தில் நேற்று மாலை நடந்தது.
இதில் தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கலந்து கொண்டு மணமக்களுக்கு பசுமை மரக்கன்று கூடை வழங்கி வாழ்த்து தெரிவித்தார். அவருடன் வீட்டு வசதி வாரிய தலைவர் பூச்சி முருகன் உள்ளிட்டோரும் வாழ்த்து தெரிவித்தனர்.
தி.மு.க. துணை பொதுச்செயலாளர் கனிமொழி எம்பி, 'தினத்தந்தி' குழும தலைவர் சி.பாலசுப்பிரமணியன் ஆதித்தன், நியூஸ்-7 டி.வி. மேலாண்மை இயக்குனர் வி.சுப்பிரமணியன், நடிகர்கள் கமல்ஹாசன், பிரபு, நாசர், விஜயகுமார், சின்னி ஜெயந்த், நடிகைகள் சச்சு, சுகன்யா, விஜி சந்திரசேகர், இயக்குனர்கள் கே.பாக்யராஜ், பி.வாசு கே.எஸ்.ரவிகுமார், சந்தான பாரதி, ஆர்.சுந்தர்ராஜன், விஜய், தயாரிப்பாளர்கள் எஸ்.தாணு, கே.ராஜன், ஏ.எல்.அழகப்பன், பிரமிடு நடராஜன், இசையமைப்பாளர்கள் இளையராஜா, கங்கை அமரன் உள்பட பலர் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தினார்கள்.
- போதை பொருள் தடுப்பது குறித்த ஆலோசனைக் கூட்டம் நடந்தது.
- அரசு வழிகாட்டுதல் முறைகளை படக்குழுவினர் கடைப்பிடிக்க வேண்டும்.
திருப்பதி:
தெலுங்கானா மாநிலத்தில் போதை பொருள் தடுப்பது குறித்த ஆலோசனைக் கூட்டம் முதல் மந்திரி ரேவந்த் ரெட்டி தலைமையில் நடந்தது.
போதைப் பொருட்கள் பயன்பாடு குறித்து விரைவான விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். இதற்காக சினிமா துறையை அதிகாரிகள் பயன்படுத்திக் கொள்ள வேண்டும்.
தெலுங்கானா மாநிலத்தில் புதிதாக வெளியாகும் சினிமா டிக்கெட் விலையை உயர்த்த வேண்டுமானால் அரசு வழிகாட்டுதல் முறைகளை படக்குழுவினர் கடைப்பிடிக்க வேண்டும்.
குறிப்பாக டிக்கெட் விலை உயர்வை உயர்த்த வேண்டும் என கோரிக்கை வைக்கும் முன்னணி நடிகர்கள் 2 குறும் படங்களில் நடிக்க வேண்டும். அதில் ஒன்று சைபர் குற்றம் மற்றொன்று போதைப் பொருள் எதிர்ப்பு குறித்து இருக்க வேண்டும்.
இந்த 2 குறும்படங்களும் படம் திரையிடப்படுவதற்கு முன்பாக தியேட்டர்களில் ஒளிபரப்ப வேண்டும். இந்த புதிய நிபந்தனைகளை பூர்த்தி செய்தால் மட்டுமே டிக்கெட் விலை உயர்வுக்கு அரசு ஒப்புதல் அளிக்கும்.
இவ்வாறு அவர் பேசினார்.
சினிமா டிக்கெட் விலை உயர்த்த நடிகர்கள் விழிப்புணர்வு படங்களில் நடிக்க வேண்டும் என முதல் மந்திரி உத்தரவிட்டுள்ளது சமூக வலைதளங்களில் வரவேற்று பாராட்டி வருகின்றனர்.
- முன்னணி நடிகர்களுடன் நடித்து வெற்றிப்படங்கள் கொடுத்திருக்கிறார்.
- ஓ.டி.டி.யிலும் நிறைய படங்களுக்கு ரசிகர்கள் வரவேற்பு கிடைக்கிறது.
இந்திய திரையுலகில் தற்போது பெயர் சொல்லும் முன்னனி நடிகைகளில் ஒருவர் தன்னா. நடிகை, மாடல் மற்றும் டேன்ஸர் என பல பாத்திரங்களை தன்னுள் கொண்டு திரைவானில் மின்னும் நட்சத்திரங்களில் ஒருவர் இவர். தமிழ், தெலுங்கு மற்றும் ஹிந்தி என மும்மொழிகளிலும் தனது முத்திரையை பதித்தவர். கதாபாத்தரத்தை முழுமையாக ஏற்று நடிப்பதிலும் , ஒரே படத்தில் பல குணங்களை வெளிக்காட்டி நடிப்பதிலும் கைதேர்ந்தவர்.இவரது திரைபயணம் 2005 ல் தொடங்கி இன்று வரை நில்லாமல் சென்று கொண்டு இருக்கிறது. தென் இந்திய திரையுலகில் அதிக சம்பளம் வாங்கும் நடிகைகளில் பட்டியலில் இடம் பெற்றுள்ள தமன்னா. இதுவரை மூன்று மொழிகளிலும் சுமார் 50 படங்களுக்கு மேல் நடித்துள்ளார்.
விஜய், அஜித், சூர்யா, கார்த்தி, தனுஷ் என முன்னணி நடிகர்களுடன் நடித்து வெற்றிப்படங்கள் கொடுத்திருக்கிறார்.

நடிகை தமன்னா சமீப காலமாக வித்தியாசமான கதையம்சம் உள்ள படங்களில் நடித்து ரசிகர்களை கவர்ந்து வருகிறார். இந்த நிலையில் சினிமா அனுபவங்கள் குறித்து தமன்னா அளித்துள்ள பேட்டியில் கூறியதாவது:- "சிறு வயதிலேயே நடிகையாக வேண்டும் என்ற கனவு எனக்கு இருந்தது. அதை நிறைவேற்றும் விதமாகவே எனது முடிவுகளும் இருந்தன. அதுதான் என்னை இந்த நிலைமைக்கு கொண்டு வந்து நிறுத்தி இருக்கிறது.
சினிமாவில் அடியெடுத்து வைத்ததும் எத்தனையோ சவால்களை எதிர்கொள்ள வேண்டி வந்தது. ஆனாலும் நடிகையாக நீடிக்க வேண்டும் என்பதில் உறுதியாகவே இருந்தேன். அதற்காக 100 சதவீதம் உழைத்தேன். இப்போது சாதித்துவிட்டேன் என்ற மகிழ்ச்சி எனக்கு கிடைத்துள்ளது.

ஒரு காலத்தில் தியேட்டர்களில் மட்டுமே படம் பார்த்தார்கள். இப்போது காலம் மாறி விட்டது. ஓ.டி.டி.யிலும் நிறைய படங்களுக்கு ரசிகர்கள் வரவேற்பு கிடைக்கிறது. அதுமட்டுமன்றி சமூக வலைத்தளங்களில் 15 நொடி ரீல்ஸை கூட ரசித்து பார்த்து பொழுதை கழிக்கிறார்கள்.
ரீல்ஸ் பார்க்கும் ரசிகர்களை கவர்வது நடிகர், நடிகைகளுக்கு பெரிய சவாலாகி இருக்கிறது. அவர்களுக்கு பிடித்த மாதிரி கதைகளில் நடிக்க வேண்டி உள்ளது. ரீல்ஸ்கள் நடிகைகளான எங்களுக்கு பெரிய போட்டியாக மாறி இருக்கிறது. இவ்வாறு அவர் கூறினார்.
உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.
- 36 பேர் கொண்ட குழுவினர் முதல் மந்திரி ரேவந்த் ரெட்டியை இன்று சந்தித்தனர்.
- அல்லுஅர்ஜூன் கைது விவகாரம் குறித்து விவாதித்தாக கூறப்படுகிறது.
திருப்பதி:
ஐதராபாத்தில் புஷ்பா-2 திரைப்படம் வெளியான போது நெரிசலில் சிக்கி பெண் ஒருவர் உயிரிழந்தார். இதுகுறித்து போலீசார் வழக்குப் பதிவு செய்து நடிகர் அல்லு அர்ஜூனை கைது செய்தனர்.
இந்த விவகாரம் குறித்து தெலுங்கானா முதல் மந்திரி ரேவந்த் ரெட்டி சட்ட சபையில் பேசினார். அப்போது பொதுமக்களின் உயிருக்கு ஆபத்து ஏற்படும் பட்சத்தில் அந்த திரைப்படங்களுக்கான சலுகைகள் ரத்து செய்யப்படும். மேலும் பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்படும் என அறிவித்தார்.
இந்த நிலையில் தெலுங்கு பட தயாரிப்பாளர் தில்ராஜ் தலைமையில் 36 பேர் கொண்ட குழுவினர் பஞ்சாரா ஹில்ஸ் காமண்ட் கண்ட்ரோல் மையத்தில் முதல் மந்திரி ரேவந்த் ரெட்டியை இன்று சந்தித்தனர்.

இந்த குழுவில் நடிகர்கள் வெங்கடேஷ், நிதின், வருண் தேஜ், சிவ பாலாஜி, இயக்குனர்கள் திரி விக்ரம், ஹரிஷ் சங்கர், அணில், பாபி, வம்சி, தயாரிப்பாளர்கள், அல்லு அரவிந்த், டக்குபதி சுரேஷ், சுனில், சுப்ரியா, நாகவம்சி உள்ளிட்டோர் இருந்தனர்.
இதில் நடிகர் அல்லுஅர்ஜூன் கைது விவகாரம் குறித்து விவாதித்தாக கூறப்படுகிறது. சினிமா டிக்கெட் விலை உயர்வு, சிறப்பு காட்சிகள், சினிமா பட கலைஞர்கள், தொழில் நுட்ப வல்லுநர்களின் பணி பாதுகாப்பு, சினிமா படப்பிடிப்பு நடத்துவதற்கான சிறப்பு அனுமதி வழங்குதல், சிறிய மற்றும் நடுத்தர பட்ஜெட் திரைப்படங்களுக்கு சலுகைகள் வழங்குதல் உள்ளிட்டவைகள் குறித்து பேச்சுவார்த்தை நடத்தினர்.
உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.
- தெலுங்கு பட தயாரிப்பாளர் தில்ராஜ் தலைமையில் 36 பேர் கொண்ட குழுவினர் முதலமைச்சர் ரேவந்த் ரெட்டியை இன்று சந்தித்தனர்.
- பட்ஜெட் திரைப்படங்களுக்கு சலுகைகள் வழங்குதல் உள்ளிட்டவைகள் குறித்து பேச்சுவார்த்தை நடத்தினர்.
ஐதராபாத்தில் புஷ்பா-2 திரைப்படம் வெளியான போது நெரிசலில் சிக்கி பெண் ஒருவர் உயிரிழந்தார். இதுகுறித்து போலீசார் வழக்குப் பதிவு செய்து நடிகர் அல்லு அர்ஜூனை கைது செய்தனர்.
இந்த விவகாரம் குறித்து தெலுங்கானா முதலமைச்சர் ரேவந்த் ரெட்டி சட்ட சபையில் பேசினார். அப்போது பொதுமக்களின் உயிருக்கு ஆபத்து ஏற்படும் பட்சத்தில் அந்த திரைப்படங்களுக்கான சலுகைகள் ரத்து செய்யப்படும். மேலும் பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்படும் என அறிவித்தார்.
இந்த நிலையில் தெலுங்கு பட தயாரிப்பாளர் தில்ராஜ் தலைமையில் 36 பேர் கொண்ட குழுவினர் பஞ்சாரா ஹில்ஸ் காமண்ட் கண்ட்ரோல் மையத்தில் முதலமைச்சர் ரேவந்த் ரெட்டியை இன்று சந்தித்தனர்.
இந்த குழுவில் நடிகர்கள் வெங்கடேஷ், நிதின், வருண் தேஜ், சிவ பாலாஜி, இயக்குனர்கள் திரி விக்ரம், ஹரிஷ் சங்கர், அணில், பாபி, வம்சி, தயாரிப்பாளர்கள், அல்லு அரவிந்த், டக்குபதி சுரேஷ், சுனில், சுப்ரியா, நாகவம்சி உள்ளிட்டோர் இருந்தனர்.
இதில் நடிகர் அல்லுஅர்ஜூன் கைது விவகாரம் குறித்து விவாதித்தாக கூறப்படுகிறது. சினிமா டிக்கெட் விலை உயர்வு, சிறப்பு காட்சிகள், சினிமா பட கலைஞர்கள், தொழில்நுட்ப வல்லுநர்களின் பணி பாதுகாப்பு, சினிமா படப்பிடிப்பு நடத்துவதற்கான சிறப்பு அனுமதி வழங்குதல், சிறிய மற்றும் நடுத்தர பட்ஜெட் திரைப்படங்களுக்கு சலுகைகள் வழங்குதல் உள்ளிட்டவைகள் குறித்து பேச்சுவார்த்தை நடத்தினர்.
இதைதொடர்ந்து, தெலுங்கு திரைத்துறையினரிடம் பேசிய முதலமைச்சர் ரேவந்த் ரெட்டி, " சட்டம் ஒழுங்கில் எந்த சமரசமும் செய்துகொள்ள முடியாது" என்று தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து மேலும் கூறிய அவர், " எந்தப் படத்திற்கும் சிறப்புக் காட்சி அனுமதி இல்லை. சட்டம் ஒழுங்கில் எந்த சமரசமும் செய்துகொள்ள முடியாது. ரசிகர்களை கட்டுப்படுத்துவது பிரபலங்களின் பொறுப்பு. தெலுங்கு சினிமாவின் வளர்ச்சிக்கு அரசு துணை நிற்கும்" என்றார்.
- நடிகைகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்க சிறப்பு புலனாய்வு குழுவை கேரள அரசு நியமித்தது.
- நடிகர்கள் மீது பாலியல் புகார் கொடுத்துள்ள அந்த நடிகை, தான் நடித்து வந்த சீரியலில் இருந்து விலகி விட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.
திருவனந்தபுரம்:
மலையாள திரையுலகில் நடிகைகள் மற்றும் பெண் கலைஞர்கள் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளான தகவல்களை ஹேமா கமிட்டி அறிக்கை அம்பலப்படுத்தியது. இது மலையாளம் மட்டுமின்றி அனைத்து மொழி திரையுலகினரையும் அதிர்ச்சியடைய செய்தது.
இதையடுத்து நடிகைகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்க சிறப்பு புலனாய்வு குழுவை கேரள அரசு நியமித்தது. அந்த குழு விசாரணை நடத்தி மலையாள திரையுலகை சேர்ந்த பிரபல நடிகர்கள் மற்றும் இயக்குனர்கள் சிலர் மீது வழக்கு பதிந்தது.
இது தொடர்பான வழக்கு விசாரணை நடந்து வரும் நிலையில், மலையாள திரையுலக பாலியல் வழக்குகளை விசாரித்து வரும் சிறப்பு புலனாய்வு குழுவிடம் மலையாள சீரியல் நடிகை ஒருவர் பாலியல் புகார் கொடுத்துள்ளார். படப்பிடிப்பின் போது சீரியல் நடிகர்களான பிஜூ சோபானம், ஸ்ரீகுமார் ஆகிய இருவரும் தன்னை பாலியல் பலாத்காரம் செய்ததாக புகார் கூறியிருக்கிறார்.
அதன்பேரில் சிறப்பு புலனாய்வு குழுவினர் விசாரணை நடத்தினர். அவர்கள் அது குறித்து வழக்குப்பதிந்து நடவடிக்கை எடுக்குமாறு இன்போ பார்க் போலீசாருக்கு அறிவுறுத்தினர். அதன்பேரில் சீரியல் நடிகர்களான பிஜூ சோபானம், ஸ்ரீகுமார் ஆகிய இருவரின் மீது போலீசார் பாலியல் வழக்கு பதிந்தனர்.
நடிகர்கள் மீது பாலியல் புகார் கொடுத்துள்ள அந்த நடிகை, தான் நடித்து வந்த சீரியலில் இருந்து விலகி விட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.