என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "மகளிர் உரிமைத்திட்டம்"
- கலைஞர் மகளிர் உரிமை தொகை திட்டம் செப்டம்பர் 15 முதல் செயல்பாட்டுக்கு வர உள்ளது.
- மாவட்ட வாரியாக இதற்கான ஏற்பாடுகள் நடந்து வருகிறது.
குமாரபாளையம்:
குடும்ப தலைவிகளுக்கு மாதம் ஆயிரம் ரூபாய் வழங்கும் கலைஞர் மகளிர் உரிமை தொகை திட்டம் செப்டம்பர் 15 முதல் செயல்பாட்டுக்கு வர உள்ளது. மாவட்ட வாரியாக இதற்கான ஏற்பாடுகள் நடந்து வருகிறது.
இல்லம் தேடி கல்வி பணியில் ஈடுபட்டு வரும் தன்னார்வலர்களை மகளிர் உரிமைத் தொகை திட்டப் பணியில் முழுமையாக ஈடு படுத்த அரசு திட்ட மிட்டுள்ளது. இதற்கான பயிற்சி முகாம் குமாரபாளை யம் தனியார் கல்லூரியில் தாசில்தார் சண்முகவேல் தலைமையில் நடைபெற்றது. இல்லம் தேடி கல்வி தன்னார்வலர்கள் பங்கேற்ற னர். இவர்களுக்கு வட்டார கல்வி அலுவலர்கள் இதற் கான பயிற்சி வழங்கினர். இதில் குமாரபாளையம், பள்ளிபாளையத்தை சேர்ந்த 200க்கும் மேற்பட்ட தன்னார்வலர்கள் பங்கேற்றனர்.
மாதம் ரூ.1000 வழங்கப்படும் கலைஞர் மகளிர் உரிமைத் திட்டம் செய லாக்கம் தொடர்பாக சில நாட்க ளுக்கு முன்பு முதல்வர் தலைமையில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இதனைத் தொடர்ந்து கலை ஞர் மகளிர் உரிமைத்தொகை திட்டத்தின்கீழ் தகுதியான பயனாளிகள் விவரங்களை சேகரிக்கும் பணிகளை மேற்கொள்ள தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
- முதல் கட்டமாக கடந்த 24-ந் தேதி முதல் வருகிற 4-ந் தேதி வரை நடைபெற்று வருகிறது.
- பொதுமக்கள் தங்களது விண்ணப்பங்களை 2 நாட்கள் நடைபெறும் சிறப்பு முகாமில் கலந்து கொண்டு விண்ணப்பங்களை பதிவு செய்ய வேண்டும்.
கோவை,
கோவை மாவட்ட கலெக்டர் கிராந்திகுமார் வெளியிட்டுள்ள செய்திகுறிப்பில் கூறியிருப்பதாவது:-
கோவை மாவட்டத்தில் கலைஞர் மகளிர் உரிமைத் திட்டத்தின் கீழ் விண்ணப்ப விநியோகமானது 2 கட்டங்களாக நடத்திட தீர்மானிக்கப்பட்டது. முதல் கட்டமாக கடந்த 24-ந் தேதி முதல் வருகிற 4-ந் தேதி வரை நடைபெற்று வருகிறது. இதில் பொதுமக்கள் தங்களுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ள முகாம்களில் விண்ணப்பங்களை பெற்று பதிவு செய்து வருகிறார்கள்.
சில குடும்ப அட்டைதாரர்கள் மட்டும் இன்னும் பதிவு செய்யப்படாமல் உள்ளதாக தெரிய வருகிறது. எனவே விண்ணப்பங்கள் பெற்று பதிவு செய்யாத குடும்ப அட்டைதாரர்களுக்கான சிறப்பு முகாமானது ஏற்கனவே ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ள முகாமிலேயே வருகிற 3,4-ந் தேதிகளில் நடைபெற உள்ளது.
எனவே பொதுமக்கள் தங்களது விண்ணப்பங்களை 2 நாட்கள் நடைபெறும் சிறப்பு முகாமில் கலந்து கொண்டு விண்ணப்பங்களை பதிவு செய்ய வேண்டும்.
விண்ணப்பம் இதுவரை பெறாதவர்கள் தங்களுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ள நியாயவிலைக்கடையின் விற்பனையாளரிடம் பெற்று விண்ணப்பத்தினை பூர்த்தி செய்து முகாமில் கலந்து கொண்டு விண்ணப்பத்தினை பதிவு செய்ய வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
- ரேசன் குடும்ப அட்டை வாரியாக ஒவ்வொரு குடும்பத்துக்கும் விண்ணப்பப் படிவம் வழங்கப்பட உள்ளது.
- கணக்கெடுப்பதற்காக ஏற்படுத்தப்பட்டுள்ள செயலியை எவ்வாறு பயன்படுத்துவது என்பது குறித்த செயல்முறை விளக்கம் நடைபெற்றது.
பொன்னேரி:
கலைஞர் மகளிர் உரிமைத் திட்டத்தின் கீழ் குடும்பத் தலைவிகளுக்கு மாதம் ரூ.1000 வழங்கும் திட்டத்தை செயல்படுத்துவற்கான பணிகள் நடந்து வருகின்றன. இந்த திட்டத்தின் கீழ் பயன்பெற யார்-யார் தகுதியான வர்கள் என்ற விதிமுறை களையும் ஏற்கனவே அரசு அறிவித்து உள்ளது. இதைத் தொடர்ந்து ரேசன் குடும்ப அட்டை வாரியாக ஒவ்வொரு குடும்பத்துக்கும் விண்ணப்பப் படிவம் வழங்கப்பட உள்ளது. இந்த பணியை மேற்கொள்ள தன்னார்வலர்கள் தேர்வு செய்யப்பட்டு வருகின்றனர்.
இந்த நிலையில் பொன்னேரியில் உள்ள தனியார் மண்டபத்தில் தேர்வு செய்யப்பட்ட தன்னார்வலர்கள் சுமார் 250 பேருக்கு திருவள்ளூர் மாவட்ட வருவாய் துறை சார்பில் கலைஞர் மகளிர் உரிமை திட்டம் குறித்த பயிற்சி கூட்டம் நடைபெற்றது.
இதனை திருவள்ளூர் மாவட்ட கலெக்டர் ஆல்பி ஜான் வர்கீஸ் தொடங்கி வைத்தார். கலைஞர் மகளிர் உரிமை திட்டத்தில் பயன்பெறுவதற்கான தகுதி உள்ளவர்கள் தகுதி இல்லாதவர்கள் குறித்த விளக்கமும், கணக்கெடுப்பதற்காக ஏற்படுத்தப்பட்டுள்ள செயலியை எவ்வாறு பயன்படுத்துவது என்பது குறித்த செயல்முறை விளக்கம் நடைபெற்றது.
இதில் பொன்னேரி சப்-கலெக்டர் ஐஸ்வர்யா ராமநாதன், தாசில்தார் செல்வகுமார், துணை தாசில்தார் சிவகுமார், இல்லம் தேடி கல்வி மாவட்ட ஒருங்கிணைப்பாளர் ஜெயராஜ் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
- ஒவ்வொரு குடும்பத்துக்கும் வீடு, வீடாக சென்று தன்னார்வலர்கள் மூலமாக விண்ணப்பங்கள் வழங்கப்பட உள்ளது.
- வீடு, வீடாக ஆய்வு செய்து தகவல் உள்ளீடு மற்றும் கள ஆய்வுப்பணிகளை மேற்கொள்ள உள்ளனர்.
திருப்பூர்:
கலைஞர் மகளிர் உரிமை திட்டத்தின் கீழ் குடும்ப தலைவிகளுக்கு மாதம் ரூ.1,000 வழங்கும் திட்டம் வருகிற செப்டம்பர் மாதம் 15-ந் தேதியில் இருந்து தொடங்கப்படுகிறது. இந்த திட்டத்தின் கீழ் யார், யார் தகுதியானவர்கள் என்ற விதிமுறைகளையும் அரசு வெளியிட்டுள்ளது.
ரேஷன் கார்டு வாரியாக ஒவ்வொரு குடும்பத்துக்கும் வீடு, வீடாக சென்று தன்னார்வலர்கள் மூலமாக விண்ணப்பங்கள் வழங்கப்பட உள்ளது. இந்த பணிக்கு இல்லம் தேடி கல்வி தன்னார்வலர்கள்நியமிக்கப்பட உள்ளனர். இதற்காக மாவட்டத்தில் முதன்மை கல்வி அதிகாரி மூலமாக விவரங்கள் பெற்று அவர்களுக்கு பயிற்சி அளிக்கப்பட உள்ளது.
இந்தநிலையில் திருப்பூர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் கலைஞர் மகளிர் உரிமை திட்டம் குறித்து அனைத்து துறை அலுவலர்களுக்கான ஆய்வுக்கூட்டம் நடைபெற்றது. கூட்டத்துக்கு கலெக்டர் கிறிஸ்துராஜ் தலைமை தாங்கினார். மாவட்ட வருவாய் அதிகாரி ஜெய்பீம், திருப்பூர் சப்-கலெக்டர் ஸ்ருதன் ஜெய் நாராயணன், கலெக்டரின் நேர்முக உதவியாளர் (பொது) விஜயராஜ், மாவட்ட வழங்கல் அதிகாரி ரவிச்சந்திரன், மகளிர் திட்ட இயக்குனர் வரலட்சுமி ஆகியோர் பங்கேற்றார்கள்.
அதன்பிறகு இல்லம் தேடி கல்வி திட்டத்தில் உள்ள தன்னார்வலர்களுக்கு மாவட்ட பயிற்றுனர்களுக்கான பயிற்சிக்கூட்டம் கலெக்டர் தலைமையில் நடைபெற்றது. இல்லம் தேடி கல்வி தன்னார்வலர்கள் எந்தெந்த ரேஷன் கடை பகுதியில் வசிக்கிறார்கள் என்ற விவரங்களை பெற உள்ளனர். வீடு, வீடாக ஆய்வு செய்து தகவல் உள்ளீடு மற்றும் கள ஆய்வுப்பணிகளை மேற்கொள்ள உள்ளனர்.முதல்கட்டமாக அவர்களுக்கு பயிற்சி வழங்குவது தொடர்பாக இந்த கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்