என் மலர்
நீங்கள் தேடியது "கதிர் ஆனந்த்"
- தி.மு.க. பொதுச் செயலாளரான துரைமுருகனின் மகன் கதிர் ஆனந்த்.
- இவர் 2019 பாராளுமன்ற தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்றார்.
சென்னை:
தமிழ்நாடு நீர்வளத்துறை அமைச்சரும், தி.மு.க. பொதுச் செயலாளருமான துரைமுருகனின் மகன் கதிர் ஆனந்த். இவர் 2019 பாராளுமன்ற தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்றார்.
கடந்த 2012-2013ம் நிதியாண்டிற்கான வருமான வரியை தாமதமாக தாக்கல் செய்ததோடு, வருமான வரியையும் கால தாமதமாக கட்டியுள்ளார் எனக்கூறி வேலூர் நீதிமன்றத்தில் வருமான வரித்துறை வழக்கு தொடர்ந்தது.
இதற்கிடையே, வருமான வரித்துறை தொடர்ந்த வழக்கை ரத்து செய்ய வேண்டும் என கதிர் ஆனந்த் எம்.பி சென்னை ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்திருந்தார்.
இந்நிலையில், தி.மு.க. எம்.பி. கதிர் ஆனந்த் மீதான வருமான வரி வழக்கை ரத்துசெய்ய முடியாது என அதிரடியாக தெரிவித்த சென்னை ஐகோர்ட், கதிர் ஆனந்த் மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளது.
- 2019ஆம் ஆண்டு பாராளுமன்ற தேர்தலில் அதிமுக கூட்டணி வேட்பாளர் ஏ.சி.சண்முகத்தை வீழ்த்தி வெற்றி பெற்றிருந்தார் கதிர் ஆனந்த்.
- வந்தே பாரத் ரெயில் காட்பாடியில் நின்று செல்ல வழிவகுத்ததில் அளப்பரிய பங்கு கதிர் ஆனந்துக்கு உள்ளது.
வேலூர்:
தமிழகத்தில் பாராளுமன்ற தேர்தல் களம் சூடு பிடித்துள்ளது. முதற்கட்டமாக ஏப்ரல் 19ம் தேதி வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. திமுக கூட்டணியில் இடம்பெற்றுள்ள கட்சிகளுக்கு தொகுதிப்பங்கீடு முடிந்து ஒப்பந்தங்கள் கையெழுத்தாகியுள்ளது. மொத்தமுள்ள 40 தொகுதிகளில் திமுக 21 தொகுதிகளில் போட்டியிடுகிறது. அதற்கான வேட்பாளர்கள் பட்டியலும் அறிவிக்கப்பட்டு விட்டது.
அதில் முக்கியமானவர் கதிர் ஆனந்த்... அமைச்சர் துரைமுருகன் மகனான இவர் கடந்த 2019ஆம் ஆண்டு பாராளுமன்ற தேர்தலில் அதிமுக கூட்டணி வேட்பாளர் ஏ.சி.சண்முகத்தை வீழ்த்தி வெற்றி பெற்றிருந்தார்.
கதிர் ஆனந்த் கட்சி பணி மற்றும் மக்கள் பணி இரண்டிலும் சிறப்பான வகையில் செயல்பட்டதாலேயே மீண்டும் ஒருமுறை கட்சி தலைமை அவருக்கு வாய்ப்பு வழங்கியுள்ளதாக தெரிகிறது.
அதன்படி அவரின் முக்கிய செயல்பாடு என எடுத்துக் கொண்டால், எம்.பி. தொகுதி நிதியிலிருந்து வேலூர் மாவட்டத்திற்கு சத்துவாச்சாரி சுரங்கப்பாதை கொண்டு வந்தது, வேலூர் விமான நிலையம் மக்கள் பயன்பாட்டிற்கு வருவது தொடர்பாக மக்களவையில் குரல் கொடுத்தது போன்றவை மிக முக்கியமானவையாகும். வந்தே பாரத் ரெயில் காட்பாடியில் நின்று செல்ல வழிவகுத்ததில் அளப்பரிய பங்கு கதிர் ஆனந்துக்கு உள்ளது என கூறினால் அது மிகையாகாது.
வேலூர் பாராளுமன்ற தொகுதியில் உள்ள அடிப்படை பிரச்சனைகளுக்கு நேரில் செல்ல முடியாவிட்டாலும் மக்களுக்கு தேவையான விஷயத்தை அதிகாரிகளுக்கு உத்தரவிட்டு தீர்த்து வைத்திருக்கிறார்.
இதனாலேயே அவரை மீண்டும் வேட்பாளராக கட்சி தலைமை தேர்வு செய்ய வைத்துள்ளது.
- வேலூர் தொகுதியில் வேட்பாளர்கள் தேர்தல் பிரசாரத்தில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.
- மக்கள் மனம் நெகிழ்ந்து, மீண்டும் நீங்கள் தான் வெற்றிபெறுவீர்கள் என கூறுகின்றனர்.
பாராளுமன்ற தேர்தலில் தி.மு.க. சார்பில் வேலூர் தொகுதியில் தற்போதைய எம்.பி.யான கதிர் ஆனந்தே மீண்டும் போட்டியிடுகிறார். அவரை எதிர்த்து அதிமுக சார்பில் பசுபதி, பாஜக கூட்டணியில் அங்கம் வகிக்கும் புதிய நீதிக் கட்சி சார்பில் ஏ.சி.சண்முகம், நாம் தமிழர் கட்சி சார்பில் மகேஷ் ஆனந்த் ஆகியோர் போட்டியிடுகின்றனர்.
இதையடுத்து வேலூர் தொகுதியில் வேட்பாளர்கள் தேர்தல் பிரசாரத்தில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.
இந்நிலையில், குடியாத்தம் பகுதியில் தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்ட கதிர் ஆனந்த், என்ன எல்லாம் பளபளப்பாக வந்து இருக்கீங்க? 1000 ரூபாய் தான் காரணமா? என பேசுவதாக சமூக வலைத்தளத்தில் வீடியோ வெளியாகி வைரலானது.
ஆனால் நடந்தது என்ன என்பது குறித்து வீடியோ ஒன்று வெளியாகி உள்ளது. அதில், என்ன பளபளப்பாக வந்து இருக்கீங்க ? என கதிர் ஆனந்த் கேட்க, அங்கிருந்த மக்கள் 1000 ரூபாய் தான் என சொல்ல... அதற்கு கதிர் 1000 ரூபாய் தான் காரணம் என பதில் பேசுகிறார். மேலும், "தளபதியின் ஆட்சியில் நீங்கள் மகிழ்ச்சியுடன் இருப்பதை பார்க்க மனம் நெகிழ்கிறது" என கதிர் ஆனந்த் கூறினார். இதனால் அங்குள்ள மக்கள் மனம் நெகிழ்ந்து, மீண்டும் நீங்கள் தான் வெற்றிபெறுவீர்கள் என கூறுகின்றனர்.
இதுதொடர்பான வீடியோ காண இங்கே க்ளிக் செய்யவும்...
- கடந்த 2019-ம் ஆண்டு நடந்த பாராளுமன்ற தேர்தலில் ஏ.சி.சண்முகம் கதிர் ஆனந்திடம் தோற்றார்.
- பா.ஜ.க. தேர்தல் பணிகளை இரண்டு ஆண்டுகளாக தொடர்ந்து செய்து வருகிறது.
வேலூர் :
தமிழகத்தில் பாராளுமன்ற தேர்தல் வருகிற வெள்ளிக்கிழமை நடைபெற உள்ளது. இதற்கான தேர்தல் பிரசாரம் இன்று மாலையுடன் நிறைவு பெறுகிறது. இதனால் அரசியல் கட்சி தலைவர்கள் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
வேலூர் தொகுதியில் தி.மு.க. சார்பில் கதிர் ஆனந்த், பா.ஜ.க. சார்பில் ஏ.சி.சண்முகன், அ.தி.மு.க. சார்பில் பசுபதி, நாம் தமிழர் கட்சி சார்பில் மகேஷ் ஆனந்த் களம் காண்கிறார்கள்.
அதிக அளவு முஸ்லிம்கள் வேலூர் தொகுதியில் வசிப்பதால், அவர்கள் வாக்கு வெற்றியை தீர்மானிக்கும் சக்தியாக உள்ளது. திமுகவின் வாக்கு வங்கி இங்கு அதிகம். அதனால் இந்த முறையும் அதனை சரியாக பயன்படுத்தி வெற்றி பெற்றுவிட கதிர் ஆனந்த் முழு வீச்சில் செயல்பட்டு வருகிறார்.
அதே நேரம் பா.ஜ.க. தேர்தல் பணிகளை இரண்டு ஆண்டுகளாக தொடர்ந்து செய்து வருகிறது. வேலூரின் முன்னாள் எம்.பி., ஏ.சி.சண்முகம் பாஜக சார்பில் களம் காண்பதால், திமுக - பாஜக - அதிமுகவுக்கு இடையே போட்டி உள்ளது.
கடந்த 2019-ம் ஆண்டு நடந்த பாராளுமன்ற தேர்தலில் ஏ.சி.சண்முகம் கதிர் ஆனந்திடம் தோற்றார். அதனால் இந்த முறையும் கதிர் ஆனந்த் வெற்றி வாய்ப்பு பிரகாசமாக உள்ளது. வேலூர் தி.மு.க. கோட்டை என்பதால் கதிர் ஆனந்த்தை வீழ்த்துவது எளிதல்ல.
அதிமுகவும் வன்னியரான பசுபதியை வேட்பாளராக நிறுத்தியுள்ளது. ஆனால் கதிர் ஆனந்த் தான் பலமான வேட்பாளராக இருப்பார் என திமுக அவரை தேர்ந்தெடுத்தது. பெரிய அளவில் பரிட்சையம் இல்லாத பசுபதி என்பவரை அதிமுக வேட்பாளராக நிறுத்தியது கட்சியினருக்கே அதிர்ச்சி தான். பாஜகவில் இருந்து மக்கள் நலனுக்காக பிரிந்து விட்டோம் என்பதை மட்டுமே முன்நிறுத்தி அதிமுக நிர்வாகிகள் வாக்கு கேட்டு வருகின்றனர். இது எந்த அளவுக்கு வெற்றி வாய்ப்புக்கு கை கொடுக்கும் என்பது தெரியவில்லை.
- வாக்காளர்களுக்கு வழங்க இருந்த ரூ.10.48 கோடி பணத்தை பறிமுதல் செய்தனர்.
- வழக்கின் விசாரணை வேலூர் ஜெ.எம் 1 கோர்ட்டில் நடந்து வருகிறது.
வேலூர்:
வேலூர் பாராளுமன்ற தேர்தலின்போது தொகுதியில் கடந்த 2019-ம் ஆண்டு நடந்த தேர்தலில் அமைச்சர் துரைமுருகனின் மகன் கதிர் ஆனந்த் தி.மு.க. வேட்பாளராக போட்டியிட்டார்.
அப்போது துரைமுருகன் வீட்டில் வருமான வரித்துறை அதிகாரிகள் நடத்திய சோதனையில் கணக்கில் வராத பணம் ரூ.10 லட்சம் பறிமுதல் செய்யப்பட்டது.
இதன் தொடர்ச்சியாக கதிர்ஆனந்துக்கு நெருக்கமான தி.மு.க பிரமுகர் பூஞ்சோலை சீனிவாசன் மற்றும் அவரது உறவினர் தாமோதரன் வீடுகளிலும் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர்.
சோதனையின் போது தாமோதரன் என்பவருக்கு சொந்தமான சிமெண்ட் குடோனில் இருந்து தி.மு.க வேட்பாளர் கதிர்ஆனந்துக்கு ஆதரவாக வாக்காளர்களுக்கு வழங்க இருந்த ரூ.10.48 கோடி பணத்தை பறிமுதல் செய்தனர்.
மேலும், வாக்குச்சாவடி விவரங்களுடன் கூடிய ஆவணங்களுடன் புத்தம் புதிய 200 ரூபாய் நோட்டு கட்டுகள் பெட்டி பெட்டியாக பறிமுதல் செய்யப்பட்டன.
இது தொடர்பாக காட்பாடி போலீஸ் நிலையத்தில் அப்போதைய தேர்தல் கணக்கு அலுவலர் சிலுப்பன் அளித்த புகாரின் பேரில் தி.மு.க வேட்பாளர் கதிர்ஆனந்த், தி.மு.க பிரமுகர் பூஞ்சோலை சீனிவாசன், அவரது உறவினர் தாமோதரன் ஆகியோர் மீது போலீசார் வழக்குப் பதிவு செய்தனர்.
இந்த வழக்கின் விசாரணை வேலூர் ஜெ.எம் 1 கோர்ட்டில் நடந்து வருகிறது. இந்த நிலையில், வழக்கு விசாரணைக்காக கதிர் ஆனந்த் எம்.பி. இன்று கோர்ட்டில் ஆஜரானார். வழக்கு விசாரணையை அடுத்த மாதம் 24-ந் தேதிக்கு நீதிபதி ஒத்தி வைத்தார்
- அமைச்சர் துரைமுருகனின் மகன் கதிர் ஆனந்த் எம்.பி. வீட்டில் இன்று அமலாக்கத்துறை அதிகாரிகள் அதிரடி சோதனை நடத்தினர்.
- தலைமை செயலக காலனியை சுற்றிலும் போலீசார் அதிக எண்ணிக்கையில் நிறுத்தப்பட்டு தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டனர்.
சென்னை:
வேலூர் காட்பாடியில் அமைச்சர் துரைமுருகனின் மகன் கதிர் ஆனந்த் எம்.பி. வீட்டில் இன்று அமலாக்கத்துறை அதிகாரிகள் அதிரடி சோதனை நடத்தினர்.
இதைத் தொடர்ந்து சென்னை தலைமை செயலகத்தில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டிருந்தது.
இன்று காலையில் தலைமை செயலகத்துக்குள் நுழைந்த கார், மோட்டார் சைக்கிள்கள் உள்பட அனைத்து வாகனங்களும் தீவிர சோதனைக்கு பின்னரே அனுமதிக்கப்பட்டன.
தலைமை செயலகத்தில் பணியாற்றி வரும் அலுவலர்கள் மற்றும் பத்திரிகையாளர்கள் உள்பட அனைவரும் அடையாள அட்டைகளை காண்பித்த பிறகே உள்ளே செல்வதற்கு அனுமதிக்கப்பட்டனர். அமலாக்கத்துறையினர் நடத்தி வரும் சோதனை எதிரொலி கவே இதுபோன்று பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்ததாக போலீசார் தெரிவித்தனர்.
தலைமை செயலக காலனியை சுற்றிலும் போலீசார் அதிக எண்ணிக்கையில் நிறுத்தப்பட்டு தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டனர். சந்தேகத்துக்கிடமான நபர்கள் சுற்றுகிறார்களா? என்பது பற்றியும் போலீசார் கண்காணித்தனர்.
- அமைச்சர் துரைமுருகன் வீடு உள்பட 4 இடங்களில் அமலாக்கத்துறை அதிகாரிகள் நேற்று சோதனை நடத்தினர்.
- தி.மு.க. விவசாய அணி செயலாளர் பூஞ்சோலை சீனிவாசன் வீட்டில் அமலாக்கத்துறை சோதனை நடத்தியது.
வேலூர் மாவட்டம் காட்பாடியில் தி.மு.க. பொதுச்செயலாளரும், நீர்வளத்துறை அமைச்சருமான அமைச்சர் துரைமுருகன் வீடு உள்பட 4 இடங்களில் அமலாக்கத்துறை அதிகாரிகள் நேற்று சோதனை நடத்தினர்.
காட்பாடியை அடுத்த பள்ளிக்குப்பம் பகுதியில் உள்ள வேலூர் மாநகர தி.மு.க. விவசாய அணி செயலாளர் பூஞ்சோலை சீனிவாசன் வீட்டிலும், அவரது உறவினர் வீட்டிலும், கதிர் ஆனந்துக்கு சொந்தமான காட்பாடி கிறிஸ்டியான்பேட்டையில் உள்ள கிங்ஸ்டன் பொறியியல் கல்லூரியிலும் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டனர்.
இந்நிலையில் கிங்ஸ்டன் பொறியியல் கல்லூரியில் அமலாக்கத்துறை அதிகாரிகள் இன்று 2-வது நாளாக சோதனையில் ஈடுபட்டுள்ளனர்.
தி.மு.க. எம்.பி. கதிர் ஆனந்துக்கு சொந்தமான கிங்ஸ்டன் பொறியியல் கல்லூரியில் நேற்று காலை 8 மணி முதல் அமலாக்கத்துறை சோதனை நடைபெற்று வருகிறது.
- கடந்த இரண்டு நாட்களாக சோதனை நடைபெற்றது.
- கல்லூரி சார்ந்த ஆவணங்கள் எடுத்து செல்லப்பட்டதாக தகவல்.
தி.மு.க. எம்.பி. கதிர் ஆனந்துக்கு சொந்தமான பொறியியல் கல்லூரியில் கடந்த இரண்டு நாட்களாக நடைபெற்று வந்த அமலாக்கத்துறை சோதனை நிறைவுபெற்றது. ஜனவரி 3 ஆம் தேதி சோதனை துவங்கிய நிலையில், 44 மணி நேரத்திற்கு பிறகு நிறைவடைந்தது.
எட்டு கார்களில் வந்த 15-க்கும் மேற்பட்ட அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனையை முடித்துக் கொண்டு துணை ராணுவ படையினருடன் நள்ளிரவு 2.40 மணிக்கு புறப்பட்டு சென்றனர். சோதனையை தொடர்ந்து கல்லூரி தொடர்பான ஆவணங்கள், வங்கி பரிவர்த்தனை சார்ந்த ஆவணங்கள் மற்றும் கணினி ஹார்டு டிஸ்க் உள்ளிட்டவற்றை அமலாக்கத்துறை அதிகாரிகள் கைப்பற்றி சென்றுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
- தி.மு.க. எம்.பி. ஜெகத்ரட்சகனும் டெல்லி சென்றுள்ளார்.
- ‘சோதனையில் ஒன்றும் கிடைக்கவில்லை என்று அமலாக்கத்துறை அதிகாரிகள் எழுதி கொடுத்துவிட்டு சென்றுவிட்டனர்'
சென்னை:
தமிழக நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் மற்றும் அவரது மகனும் தி.மு.க. எம்.பி.யுமான கதிர் ஆனந்துக்கு சொந்தமான இடங்களில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர். இதில் கதிர் ஆனந்துக்கு சொந்தமான பொறியியல் கல்லூரியில் கடந்த இரண்டு நாட்களாக நடைபெற்று வந்த அமலாக்கத்துறை சோதனை நிறைவுபெற்றது. ஜனவரி 3 ஆம் தேதி சோதனை துவங்கிய நிலையில், 44 மணி நேரத்திற்கு பிறகு நிறைவடைந்தது.
இந்த நிலையில், அமைச்சர் துரைமுருகன் நேற்று இரவு டெல்லி புறப்பட்டு சென்றுள்ளார். சென்னை விமான நிலையத்தில் இருந்து ஏர் இந்தியா விமான மூலம் டெல்லிக்கு புறப்பட்டு சென்றுள்ளார். அவருடன் தி.மு.க. எம்.பி. ஜெகத்ரட்சகனும் சென்றுள்ளார்.
முன்னதாக, சென்னையில் புத்தக கண்காட்சியில் நடைபெற்ற விழாவில் பங்கேற்பதற்காக வருகை தந்திருந்த தமிழக நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகனிடம், 'வேலூரில் உள்ள அவரது வீடு மற்றும் அவரது மகன் கதிர் ஆனந்த் எம்.பி. வீட்டில் அமலாக்கத்துறை சோதனை நடந்து முடிந்தது பற்றி நிருபர்கள் கேள்வி எழுப்பினார்கள்.
அதற்கு அவர் சிரித்த முகத்துடன், 'சோதனையில் ஒன்றும் கிடைக்கவில்லை என்று அமலாக்கத்துறை அதிகாரிகள் எழுதி கொடுத்துவிட்டு சென்றுவிட்டனர்' என்று பதிலளித்தார்.
- 3 நாட்கள் தொடர்ந்து சோதனை நடந்தது.
- கைப்பற்றப்பட்ட ஆவணங்கள், கம்ப்யூட்டரில் கிடைத்த தகவல்கள் பற்றி ஆய்வு செய்து வருவதாகவும் அதிகாரிகள் தெரிவித்து உள்ளார்கள்.
சென்னை:
அமைச்சர் துரை முருகனின் மகன் கதிர் ஆனந்த். வேலூர் தொகுதி தி.மு.க. எம்.பி.யாக இருக்கிறார். இவருக்கு சொந்தமான என்ஜீனியரிங் கல்லூரியில் கடந்த 2 வாரங்களுக்கு முன்பு அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினார்கள்.
அப்போது அமைச்சர் துரைமுருகன் வீடு, துரைமுருகனுக்கு நெருக்கமான தி.மு.க. பிரமுகர்கள் பூஞ்சோலை சீனிவாசன், அவரது உறவினர் தாமோதரன் ஆகியோரது வீடுகளிலும் சோதனை நடத்தப்பட்டது. 3 நாட்கள் தொடர்ந்து சோதனை நடந்தது.
இந்த சோதனையின் போது டிஜிட்டல் பண பரிவரித்தனை, அலுவலகத்தில் இருந்த ஆவணங்கள், கம்ப்யூட்டரில் இருந்த ஆவணங்கள், கல்லூரியில் பணம் வைக்கப்படும் அறை ஆகியவற்றை அதிகாரிகள் சல்லடை போட்டு அலசினார்கள். இந்த சோதனையின் போது கைப்பற்றப்பட்ட பொருட்கள், ஆவணங்கள் பற்றி இதுவரை அமலாக்கத்துறை தகவல் எதுவும் வெளியிடவில்லை. இந்த நிலையில் இன்று தகவல் வெளியிட்டுள்ளது.
அதில் கதிர்ஆனந்த் எம்.பி.யின் கல்லூரியில் இருந்து ரூ.13.7 கோடி பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
கதிர் ஆனந்த் வீட்டின் லாக்கரை உடைத்ததில் அதில் இருந்து ரூ.75 லட்சம் கைப்பற்றப்பட்டுள்ளது.
கல்லூரியில் இருந்து ஹார்ட் டிஸ்க் சொத்து ஆவணங்களும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. கதிர் ஆனந்தின் சொத்துக்கள் தொடர்பான விபரங்களை திரட்டி வருவதாகவும் கைப்பற்றப்பட்ட ஆவணங்கள், கம்ப்யூட்டரில் கிடைத்த தகவல்கள் பற்றி ஆய்வு செய்து வருவதாகவும் அதிகாரிகள் தெரிவித்து உள்ளார்கள்.
- கதிர் ஆனந்த், பூஞ்சோலை சீனிவாசன் உள்ளிட்டோர் மீது காட்பாடி போலீஸ் நிலையத்தில் வழக்கு ஒன்று பதிவு செய்யப்பட்டது.
- கதிர் ஆனந்துக்கு சொந்தமான என்ஜினீயரிங் கல்லூரி, பூஞ்சோலை சீனிவாசன் மற்றும் அவரது உறவினர்கள் வீடு உள்ளிட்ட இடங்களில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டனர்.
சென்னை:
கடந்த 2019 ஆண்டு நடைபெற்ற பாராளுமன்றத் தேர்தலின்போது அமைச்சர் துரைமுருகனின் மகன் கதிர் ஆனந்த் வேலூர் தொகுதியில் போட்டியிட்டார். அப்போது அவர், வாக்காளர்களுக்குப் பணம் கொடுக்க முயன்றதாக குற்றச்சாட்டு எழுந்தது. அதன்பேரில் துரைமுருகனின் வீடு, கதிர் ஆனந்துக்கு சொந்தமான கல்லூரி போன்ற இடங்களில் வருமான வரித்துறை அதிகாரிகள் அப்போது சோதனை நடத்தினார்கள்.
துரைமுருகனின் நெருங்கிய கட்சி பிரமுகர் பூஞ்சோலை சீனிவாசனின் வீடு மற்றும் அவரது உறவினருக்குச் சொந்தமான சிமெண்ட் குடோன் உள்ளிட்ட 6 இடங்களிலும் சோதனை நடத்தப்பட்டது. இந்த சோதனையில் கணக்கில் வராத ரூ.11 கோடியே 51 லட்சம் பணம் சிக்கியதாக வருமான வரித்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
அதைத்தொடர்ந்து வேலூர் தொகுதிக்கு மட்டும் தேர்தல் ரத்து செய்யப்பட்டது. பின்னர் மீண்டும் நடத்தப்பட்ட தேர்தலில் கதிர் ஆனந்த் வெற்றி பெற்று எம்.பி. ஆனார்.
கதிர் ஆனந்த், பூஞ்சோலை சீனிவாசன் உள்ளிட்டோர் மீது காட்பாடி போலீஸ் நிலையத்தில் வழக்கு ஒன்று பதிவு செய்யப்பட்டது. அதனடிப்படையில் அமலாக்கத்துறையும் வழக்குப்பதிவு செய்தது. இதையொட்டி சமீபத்தில் கதிர் ஆனந்துக்கு சொந்தமான என்ஜினீயரிங் கல்லூரி, பூஞ்சோலை சீனிவாசன் மற்றும் அவரது உறவினர்கள் வீடு உள்ளிட்ட இடங்களில் அமலாக்கத்துறை அதிகாரிகள் 2 நாட்கள் அதிரடி சோதனையில் ஈடுபட்டனர்.
இந்த சோதனையில் சுமார் ரூ.14 கோடி மதிப்புள்ள சொத்து ஆவணங்களும், ரூ.75 லட்சம் ரொக்க பணமும் பறிமுதல் செய்யப்பட்டு உள்ளதாக டெல்லி அமலாக்கத்துறை வட்டாரத்தில் நேற்று தகவல் வெளியானது. இதற்கிடையே கதிர் ஆனந்த் எம்.பி.யை விசாரணைக்கு இன்று ஆஜராக வேண்டும் என்று ஏற்கனவே அமலாக்கத்துறை சம்மன் அனுப்பி இருந்தது.
இந்த நிலையில் சென்னை ஆயிரம் விளக்கு கிரீம்ஸ் ரோட்டில் உள்ள அமலாக்கத்துறை அலுவலகத்தில் கதிர் ஆனந்த் எம்.பி. இன்று நேரில் ஆஜரானார் . காலை 10.30 மணி அளவில் அமலாக்கத்துறை அலுவலகத்துக்குச் சென்ற அவரிடம் அதிகாரிகள் பறிமுதல் செய்யப்பட்ட பணம் மற்றும் சொத்து ஆவணங்கள் தொடர்பாக பல்வேறு கேள்விகளை கேட்டு விசாரணை நடத்தி வருகிறார்கள்.
அமலாக்கத்துறை அதிகாரிகளின் விசாரணைக்கு கதிர் ஆனந்த் எம்.பி. முழு ஒத்துழைப்பு அளித்ததாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
தி.மு.க. எம்.பி. கதிர் ஆனந்த் வீட்டில் நடைபெற்ற சோதனையைத் தொடர்ந்து அவரை நேரில் அழைத்து அமலாக்கத்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தி வருவது அரசியல் களத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.