search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "அதிபர் இம்மானுவல் மேக்ரான்"

    • இஸ்ரேலுக்கு ஆயுதங்கள் வழங்குவதை பிரான்ஸ் நிறுத்தி உள்ளது.
    • மற்ற நாடுகளும் ஆயுத விநியோகத்தை நிறுத்தவேண்டும் என்றார்.

    டெல் அவிவ்:

    பிரான்ஸ் வெளியுறவுத்துறை மந்திரி ஜீன் நோயல் பாரட் 4 நாள் அரசுமுறை பயணமாக மத்திய கிழக்கு நாடுகளுக்குச் சென்றுள்ளார். நாளை அவர் இஸ்ரேல் சென்று தனது பயணத்தை முடிக்க உள்ளார்.

    இதற்கிடையே, பிரான்ஸ் அதிபர் இம்மானுவேல் மேக்ரான் கூறுகையில், இஸ்ரேல் காசாமீது தொடர் தாக்குதல் நடத்தி வருகிறது. அரசியல் ரீதியாக இதற்கு தீர்வு காண்பதற்காக இஸ்ரேலுக்கு ஆயுதங்கள் வழங்குவதை நிறுத்தி உள்ளோம். போரை நிறுத்த மற்ற நாடுகளும் இதனை முன்னெடுக்க வேண்டும் என தெரிவித்தார்.

    இந்நிலையில், இஸ்ரேல் பிரதமர் நேதன்யாகு பிரான்ஸ் அதிபர் மேக்ரானுக்கு பதில் அளிக்கும் வகையில் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.

    அதில், அதிபர் மேக்ரானும், மற்ற மேற்கத்திய தலைவர்களும் தற்போது இஸ்ரேலுக்கு எதிராக ஆயுதத் தடைக்கு அழைப்பு விடுக்கின்றனர். ஈரான் அதன் பினாமிகள் மீது ஆயுதத் தடையை விதிக்கிறதா? நிச்சயமாக இல்லை.

    பயங்கரவாதத்தின் இந்த அச்சு ஒன்றாக நிற்கிறது. ஆனால் இந்த பயங்கரவாத அச்சை எதிர்க்கும் நாடுகள் இஸ்ரேல்மீது ஆயுதத் தடை விதிக்கவேண்டும். என்ன அவமானம்? அவர்களின் ஆதரவு இருந்தாலும் சரி, அல்லது இல்லாவிட்டாலும் சரி, இஸ்ரேல் வெற்றி பெறும் என உறுதிபட தெரிவித்துள்ளார்.

    • ஜி7 மாநாடு இன்று மற்றும் நாளை என இரு தினங்கள் நடைபெறுகிறது.
    • மாநாட்டில் பங்கேற்க வந்த உலக தலைவர்களை இத்தாலி பிரதமர் வரவேற்றார்.

    ரோம்:

    அமெரிக்கா, ஜப்பான், கனடா, ஜெர்மனி, பிரான்ஸ், இத்தாலி, இங்கிலாந்து நாடுகளை கொண்ட கூட்டமைப்பு ஜி7. ஜி7 கூட்டமைப்பின் உச்சி மாநாட்டை இத்தாலி தலைமையேற்று நடத்துகிறது. இந்த மாநாடு இன்று மற்றும் நாளை என இரு தினங்கள் நடைபெறுகிறது.

    அமெரிக்க அதிபர் ஜோ பைடன், பிரான்ஸ் பிரதமர் இம்மானுவேல் மேக்ரான், ஜப்பான் பிரதமர் புமியோ கிஷிடா, கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ உள்ளிட்டோர் கலந்து கொள்கின்றனர். ஜி7 மாநாட்டில் பங்கேற்க இத்தாலி வந்த உலக தலைவர்களை இத்தாலி பிரதமர் ஜார்ஜியா மெலோனி வரவேற்றார்.

    இதில் பங்கேற்க இந்திய பிரதமர் மோடிக்கு இத்தாலி பிரதமர் ஜார்ஜியா அழைப்பு விடுத்திருந்தார். இதையேற்று நேற்று இத்தாலி புறப்பட்ட இந்திய பிரதமர் மோடி அந்நாட்டின் பிரிண்டிசி விமான நிலையம் சென்றடைந்தார். அங்கு அவருக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.

    இரு நாள் நடைபெறும் ஜி7 உச்சி மாநாட்டை ஒட்டி பிரதமர் நரேந்திர மோடி உலக தலைவர்களைச் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்த உள்ளார் என தகவல் வெளியானது.

    இந்நிலையில், ஜி7 மாநாட்டின் ஒரு பகுதியாக பிரதமர் மோடி பிரான்ஸ் பிரதமர் இம்மானுவலைச் சந்தித்தார். அப்போது இருவரும் கட்டி அணைத்து, கைகுலுக்கிக் கொண்டனர். தொடர்ந்து இருதரப்புக்கு இடையிலான உறவுகள் மேம்படுவது தொடர்பாக ஆலோசனை நடத்தினர்.

    • பிரான்ஸ் அதிபர் இம்மானுவல் மேக்ரான் இன்று ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூர் வந்தடைந்தார்.
    • ஜந்தர் மந்தரில் நடந்த ரோடு ஷோவில் பிரதமர் மோடியுடன் இணைந்து அதிபர் மேக்ரானும் பங்கேற்றார்.

    புதுடெல்லி:

    இந்திய குடியரசு தினவிழாவில் தலைமை சிறப்பு விருந்தினராக பங்கேற்க பிரான்ஸ் அதிபர் இம்மானுவல் மேக்ரான் இன்று ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூர் வந்தடைந்தார்.

    அதிபர் மேக்ரானை வெளியுறவு மந்திரி ஜெய்சங்கர் மற்றும் ராஜஸ்தான் மாநில ஆளுநர், முதல் மந்திரி உள்பட பலர் பூங்கொத்து கொடுத்து வரவேற்றனர்.

    இதையடுத்து, அதிபர் மேக்ரான் ஆம்பர் கோட்டை, ஹவா மகால் மற்றும் ஜந்தர் மந்தர் போன்ற சுற்றுலா தலங்களுக்குச் சென்றார். ஜந்தர் மந்தரில் அதிபர் மேக்ரானை பிரதமர் மோடி ஆரத் தழுவி வரவேற்றார்.

    இந்நிலையில், ஜந்தர் மந்தரில் நடைபெற்ற ரோடு ஷோவில் பிரதமர் மோடியுடன் இணைந்து அதிபர் மேக்ரானும் பங்கேற்றார். சாலை நெடுகிலும் கூட்டமாக திரண்டிருந்த மக்கள் இரு தலைவர்களுக்கும் உற்சாகமாக வரவேற்பு அளித்தனர்.

    • பிரான்ஸ் அதிபர் மேக்ரான் குடியரசு தினவிழாவில் தலைமை சிறப்பு விருந்தினராக பங்கேற்க உள்ளார்.
    • இன்று ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூர் வந்துள்ள அதிபர் மேக்ரான் பல இடங்களை சுற்றிப் பார்க்கிறார்.

    புதுடெல்லி:

    இந்தியாவுக்கு ஆயுதங்கள் வழங்குவதில் 2-வது பெரிய நாடாக பிரான்ஸ் இருந்து வருகிறது. இந்தியாவின் நீண்ட கால, ஐரோப்பியாவின் நெருங்கிய நட்பு நாடாக பிரான்ஸ் இருந்து வருகிறது.

    இதற்கிடையே, பிரான்ஸ் அதிபர் இம்மானுவல் மேக்ரான் இந்திய குடியரசு தினவிழாவில் தலைமை சிறப்பு விருந்தினராக கலந்துகொள்கிறார் என அறிவிக்கப்பட்டது.

    இந்நிலையில், நாளை குடியரசு தினவிழா நடைபெற இருக்கும் நிலையில் அதிபர் இம்மானுவல் மேக்ரான் இன்று பிரான்சில் இருந்து ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூர் வந்தடைந்தார்.

    அதிபர் மேக்ரானை வெளியுறவு மந்திரி ஜெய்சங்கர் மற்றும் ராஜஸ்தான் மாநில ஆளுநர், முதல் மந்திரி உள்பட பலர் பூங்கொத்து கொடுத்து வரவேற்றனர்.

    பிரதமர் மோடியுடன் ரோடு ஷோவில் பங்கேற்கிறார். அதன்பின் இருவரும் சில வரலாற்றுச் சிறப்புமிக்க பாரம்பரிய இடங்களைப் பார்வையிட உள்ளனர்.

    ராஜஸ்தான் மாநிலத்தில் உள்ள அமர் கோட்டையை இம்மானுவல் மேக்ரான் பார்வையிட்டு, அங்கு நடைபெறும் கலாசார நிகழ்வை கண்டு ரசிக்க உள்ளார்.

    ராம்பேக் அரண்மனையில் அதிபர் மேக்ரானுக்கு தனிப்பட்ட இரவு விருந்துக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியானது.

    இந்தியா பல கோடி ரூபாய் மதிப்பிலான பிரான்ஸ் போர் விமானங்கள் மற்றும் நீர்மூழ்கி கப்பல் வாங்குவது தொடர்பான ஒப்பந்தம் குறித்த பேச்சுவார்த்தை இரு நாடுகளுக்கும் இடையில் நடைபெற்று வரும் நிலையில் அதிபர் மேக்ரான் இந்தியா வந்துள்ளது குறிப்பிடத்தக்கது.


    • பிரான்ஸ் தேசிய தின அணிவகுப்பில் பிரதமர் மோடி சிறப்பு விருந்தினராக பங்கேற்றார்.
    • பிரான்ஸ் அதிபர் மேக்ரானுக்கு சந்தனத்திலான கிடார் ஒன்றை பிரதமர் மோடி பரிசளித்தார்.

    பாரிஸ்:

    பிரான்ஸ் அதிபர் இம்மானுவேல் மேக்ரான் அழைப்பின் பேரில் ஜூலை 13, 14-ம் தேதிகளில் 2 நாள் அரசுமுறை பயணமாக பிரதமர் மோடி பிரான்ஸ் தலைநகர் பாரீஸ் சென்றார். பிரதமர் மோடி.

    நேற்று நடைபெற்ற பிரான்ஸ் தேசிய தின அணிவகுப்பில் சிறப்பு விருந்தினராக பங்கேற்றார். இந்த அணிவகுப்பு விழாவில், இந்தியாவின் முப்படை வீரர்களின் அணிவகுப்பு மரியாதை நடைபெற்றது. பிரான்ஸ் படை வீரர்களுடன் சேர்ந்து இந்திய படை வீரர்களும் அணிவகுப்பு நடத்தினர்.

    தொடர்ந்து பிரான்ஸ் அதிபர் இம்மானுவேல் மேக்ரானுடன் பேச்சுவார்த்தை நடத்தினார். அங்கு பிரதமர் மோடிக்கு சிறப்பு விருந்து அளிக்கப்பட்டது.

    மேலும், பிரான்ஸ் நாட்டின் செனட் மற்றும் பார்லிமெண்ட் தலைவர்களை அவர் சந்தித்தார். பிரான்சில் உள்ள இந்தியர்கள் மத்தியிலும் பிரதமர் மோடி உரையாற்றினார்.

    பிரான்ஸ் அதிபர் இம்மானுவல் மேக்ரானுக்கு சந்தனத்திலான கிடார் ஒன்றை பிரதமர் மோடி பரிசாக அளித்தார். அதிபரின் மனைவி, அந்நாட்டு பாராளுமன்ற தலைவர், செனட் தலைவருக்கும் அவர் பரிசளித்தார்.

    இந்நிலையில், பிரான்சில் தனது பயணத்தை முடித்துக் கொண்ட பிரதமர் மோடி ஐக்கிய அரபு அமீரகத்துக்கு புறப்பட்டுச் சென்றார்.

    • இந்திய சமூகத்தினர் சார்பில் நடந்த நிகழ்ச்சியில் பிரதமர் மோடி பங்கேற்று உரையாடினார்.
    • பிரதமர் மோடிக்கு கிராண்ட் கிராஸ் ஆப் தி லீஜியன் ஆப் ஹானர் விருதை பிரான்ஸ் அதிபர் மேக்ரான் வழங்கினார்

    பாரிஸ்:

    பிரான்ஸ் நாட்டின் தேசிய தினம் கோலாகலமாக கொண்டாடப்பட்டது. இதில் இந்திய பிரதமர் மோடி சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார்.

    பாஸ்டில் தின அணிவகுப்பில் பிரதமர் நரேந்திர மோடி மற்ற முக்கிய பிரமுகர்களை சந்தித்தார். தேசிய தின விழாவில் பிரம்மாண்ட அணிவகுப்பு நடைபெற்றது. இதில், பிளைபாஸ்ட் மூலம் பிரான்ஸ் தேசியக் கொடியின் வண்ணங்களில் வானத்தில் பறக்கவிட்டனர். இந்த அணிவகுப்பு விழாவில், இந்தியாவின் முப்படை வீரர்களின் அணிவகுப்பு மரியாதை நடைபெற்றது. பிரான்ஸ் படை வீரர்களுடன் சேர்ந்து இந்திய படை வீரர்களும் அணிவகுப்பு நடத்தினர்.

    இந்நிலையில், பிரான்ஸ் அதிபர் இம்மானுவல் மேக்ரானுக்கு சந்தனத்திலான கிடார் ஒன்றை பிரதமர் மோடி பரிசாக அளித்தார்.

    மேலும் அதிபரின் மனைவிக்கு போச்சம்பள்ளி பட்டும், அந்நாட்டு பாராளுமன்ற தலைவருக்கு காஷ்மீரின் கார்ப்பெட்டும், செனட் தலைவருக்கு சந்தனத்தாலான யானைச் சிற்பத்தையும் பரிசளித்தார்.

    • பிரான்ஸ் சென்றடைந்த பிரதமர் மோடிக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.
    • இந்திய சமூகத்தினர் சார்பில் நடந்த நிகழ்ச்சியில் பிரதமர் மோடி பங்கேற்று உரையாடினார்.

    பாரிஸ்:

    பிரான்ஸ் நாட்டின் தேசிய தினம் இன்று கொண்டாடப்படுகிறது. இதில் இந்திய பிரதமர் மோடி சிறப்பு விருந்தினராக கலந்து கொள்கிறார். இதற்காக பிரதமர் மோடி பிரான்ஸ் சென்றடைந்தார். பிரதமர் எலிசபெத் போர்ன் விமான நிலையம் வந்து பிரதமர் மோடியை வரவேற்றார். இந்த வரவேற்பைத் தொடர்ந்து ஓட்டலுக்கு சென்ற பிரதமர் மோடியை இந்திய வம்சாவளியினர் உற்சாகமாக வரவேற்றனர்.

    தொடர்ந்து, இரவு 11 மணியளவில் இந்திய சமூகத்தினர் சார்பில் நடந்த நிகழ்ச்சியில் பிரதமர் மோடி பங்கேற்று உரையாடினார்.

    இதையடுத்து, பிரதமர் மோடி பிரான்சில் உள்ள எலிசி அரண்மனைக்குச் சென்றார். அங்கு பிரதமர் மோடியை அதிபர் இம்மானுவல் மேக்ரான் உற்சாகமாக வரவேற்றார். அவரது மனைவி பிரிகர் மேக்ரானும் உடனிருந்தார். அரண்மனையில் பிரதமர் மோடிக்கு அதிபர் மேக்ரான் விருந்தளித்து கவுரவித்தார்.

    இந்நிலையில், பிரதமர் நரேந்திர மோடிக்கு பிரான்ஸ் அதிபர் இம்மானுவேல் மேக்ரான், கிராண்ட் கிராஸ் ஆப் தி லீஜியன் ஆப் ஹானர் விருதை வழங்கினார். ராணுவ அல்லது சிவிலியன் கட்டளைகளில் இது மிக உயர்ந்த பிரான்ஸ் அரசின் கவுரவமாகும். இதனைப் பெறும் முதல் இந்திய பிரதமர் என்ற பெருமையை பிரதமர் மோடி பெற்றுள்ளார்.

    • பிரான்ஸ் நாட்டின் தேசிய தினம் இன்று கொண்டாடப்படுகிறது.
    • இதில் பிரதமர் நரேந்திர மோடி சிறப்பு அழைப்பாளராக பங்கேற்கிறார்.

    பாரிஸ்:

    பிரான்ஸ் நாட்டின் தேசிய தினம் கொண்டாட்டத்தில் இந்திய பிரதமர் மோடி சிறப்பு விருந்தினராக கலந்து கொள்கிறார். இதற்காக இரண்டு நாள் பயணமாக டெல்லியில் இருந்து புறப்பட்ட பிரதமர் மோடி பிரான்ஸ் சென்றடைந்தார். அவருக்கு பாரிஸ் விமான நிலையத்தில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.

    பிரதமர் எலிசபெத் போர்ன் விமான நிலையத்திற்கு வந்து மோடியை வரவேற்றார். சிவப்பு கம்பள வரவேற்புடன் ராணுவ வீரர்களின் அணிவகுப்பு மரியாதையும் அளிக்கப்பட்டது. இந்த வரவேற்பைத் தொடர்ந்து ஓட்டலுக்கு சென்ற பிரதமர் மோடியை இந்திய வம்சாவளியினர் உற்சாகமாக வரவேற்றனர்.

    இதற்கிடையே, இரவு 11 மணியளவில் இந்திய சமூகத்தினர் சார்பில் நடைபெறும் நிகழ்ச்சியில் பிரதமர் மோடி பங்கேற்று உரையாடினார்.

    இந்நிலையில், பிரதமர் மோடி பிரான்சில் உள்ள எலிசி அரண்மனைக்குச் சென்றார். அங்கு பிரதமர் மோடியை அதிபர் இம்மானுவல் மேக்ரான் உற்சாகமாக வரவேற்றார். அவரது மனைவி பிரிகர் மேக்ரானும் உடனிருந்தார். இதையடுத்து, அரண்மனையில் பிரதமர் மோடிக்கு அதிபர் மேக்ரான் விருந்தளித்து கவுரவித்தார்.

    ×