search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "இரணியல் அருகே"

    • மர்ம நபர்கள் அட்டகாசம்
    • திருமணம் ஆகி 2 குழந்தைகள் உள்ளனர்.

    இரணியல்:

    இரணியல் அருகே காரங்காடு பகுதியை சேர்ந்தவர் ஜாண் சேவியர் ராஜ் (வயது 69). முன்னாள் ராணுவ வீரர். இவருக்கு திருமணம் ஆகி 2 குழந்தைகள் உள்ளனர். இவர் ஆலன்விளை பகுதியில் உள்ள தனது ஒரு ஏக்கர் நிலத்தில் வாழை விவசாயம் செய்து வந்தார். நேற்று முன்தினம் வாழை தோட்டத்தை பார்வையிட சென்றார். அங்கு அவரது தோட்டத்திலும், பக்கத்து தோட்டத்திலும் சுமார் 100-க்கும் மேற்பட்ட வாழை மரங்கள் வெட்டி சாய்க்கப்பட்டு கிடப்பது கண்டு அதிர்ச்சியடைந்தார்.

    இதுகுறித்து ஜாண் சேவியர் ராஜ் இரணியல் போலீசில் புகார் அளித்தார். அதன்பேரில் சப்-இன்ஸ்பெக்டர் முத்துகிருஷ்ணன் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி மர்ம நபர்களை தேடி வருகின்றனர்.

    • தொழிலாளி கைது
    • அடிக்கடி மது அருந்திவிட்டு சுமனையும், சுமனின் தாயாரையும் அவதூறாக பேசி வந்ததாக தெரிகிறது.

    இரணியல்:

    இரணியல் அருகே உள்ள வில்லுக்குறி புதுகாட்டு விளையை சேர்ந்தவர் சுமன் (வயது 40), ஆட்டோ டிரைவர். இவரது வீட்டருகில் வசித்து வருபவர் சிம்சன். இவரது மகன் அபின் (27). இவர் அடிக்கடி மது அருந்திவிட்டு சுமனையும், சுமனின் தாயாரையும் அவதூறாக பேசி வந்ததாக தெரிகிறது. இந்த நிலையில் நேற்று அதிகாலை சவாரிக்கு சென்று விட்டு சுமன் வீட்டுக்கு வந்தார். அப்போது அங்கு வந்த அபின் இரவு எங்கு சென்று வருகிறாய் என கேட்டு சுமனை அவதூறாக பேசியதாக தெரிகிறது. இதை சுமன் தட்டி கேட்டுள்ளார். அப்போது அங்கு வந்த அதே பகுதியை சேர்ந்த பால்மணி, அபின் தந்தை சிம்சன், தாயார் முத்துபாய் ஆகியோர் சேர்ந்து சுமனை தாக்கியதாக கூறப்படுகிறது.

    இதில் அபின், பால்மணி இருவரும் சுமனை கம்பியால் தாக்கியதில் அவருக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. சுமன் சத்தம் போடவே கொலை மிரட்டல் விடுத்து விட்டு 4 பேரும் தப்பிச்சென்று விட்டனர். காயமடைந்த சுமன் ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இந்த சம்பவம் குறித்து சுமன் கொடுத்த புகாரின் பேரில் 4 பேர் மீதும் இரணியல் போலீசார் வழக்குப்பதிவு செய்து அபினை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • கைக்குழந்தை மற்றும் குடும்பத்தினருடன் மண்டைக்காடு பகவதி அம்மன் கோவிலுக்கு சென்றனர்.
    • திங்கள்நகர் பஸ் நிறுத்தம் வந்த அவர்கள் அங்கிருந்து மடவிளாகம் செல்ல இலவச அரசு பஸ்சில் ஏறினர்.

    இரணியல்:

    கண்டன்விளையை அடுத்த மடவிளாகம் பகுதியை சேர்ந்தவர் சுபிதா (வயது 27). இவர் நேற்று காலை தனது கைக்குழந்தை மற்றும் குடும்பத்தினருடன் மண்டைக்காடு பகவதி அம்மன் கோவிலுக்கு சென்றனர். அங்கு வழிபாடுகளை முடித்து விட்டு மாலை வீட்டிற்கு கிளம்பினர். மண்டைக்காட்டில் இருந்து திங்கள்நகர் பஸ் நிறுத்தம் வந்த அவர்கள் அங்கிருந்து மடவிளாகம் செல்ல இலவச அரசு பஸ்சில் ஏறினர். பஸ்சை திக்கணங்கோடு அன்பழகன் ஓட்டினார். பஸ் இரணியல் நீதிமன்றம் அருகில் சென்றபோது சுபிதாவின் குழந்தை கையில் கிடந்த தங்க கைச்செயினை காணாதது கண்டு அதிர்ச்சி அடைந்தார். இதுகுறித்து சுபிதா கண்டக்டரிடம் கூறினார். உடனடியாக பஸ் நெய்யூர் தபால் நிலையம் அருகில் ஓரங்கட்டப்பட்டது.

    இதுகுறித்து அருகில் உள்ள இரணியல் போலீஸ் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர். விரைந்து வந்த போலீசார் பஸ்சை திங்கள்நகர் பஸ் நிறுத்தம் கொண்டு வந்து சோதனை நடத்தினர். பெண் போலீஸ், ஆண் போலீஸ் என தனித்தனியாக சோதனை செய்தனர். இருந்தும் நகை எதுவும் சிக்கவில்லை. பயணிகளிடம் நடத்திய விசாரணையில் இரணியல் நீதிமன்றம் பஸ் நிறுத்தத்தில் 2 பெண்கள் வேகமாக இறங்கி சென்ற தகவல் கிடைத்தது. அந்த பெண்கள் தான் குழந்தையின் கை செயினை நைசாக திருடி சென்றிருக்கலாம் என போலீசார் சந்தேகிக்கின்றனர். இதையடுத்து அப்பகுதியில் உள்ள சி.சி.டி.வி. காமிரா காட்சிகளை போலீசார் கைப்பற்றி ஆய்வு செய்து வருகின்றனர். பஸ்சில் பயணம் செய்த கைகுழந்தையின் பிரேஸ்லெட்டை மர்ம நபர்கள் நைசாக திருடி சென்ற சம்பவத்தால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

    • மற்றொரு விபத்தில் விவசாயி சாவு
    • தனியார் மெடிக்கல் நிறுவனத்தில் மருத்துவ பிரதிநிதியாக வேலை பார்த்து வந்தார்.

    இரணியல்:

    நாகர்கோவில் அருகே உள்ள பறக்கை கீழத் தெருவை சேர்ந்தவர் ஆபத்துகாத்தபிள்ளை (வயது 52). இவர் நாகர்கோவிலில் உள்ள ஒரு தனியார் மெடிக்கல் நிறுவனத்தில் மருத்துவ பிரதிநிதியாக வேலை பார்த்து வந்தார். இவருடன் நாகர்கோவில் என்.ஜி.ஓ. காலனியை சேர்ந்த முருகன் (65) என்பவரும் வேலை பார்த்து வருகிறார். இவர்கள் இருவரும் வேலை விஷயமாக நேற்று தக்கலை பகுதிக்கு வந்து விட்டு இரவு நாகர்கோவில் நோக்கி மொபட்டில் சென்று கொண்டிருந்தனர். மொபட்டை முருகன் ஓட்டினார். ஆபத்து காத்தபிள்ளை பின்னால் அமர்ந்திருந்தார்.

    மொபட் வில்லுக்குறி பாலம் தாண்டி அங்குள்ள பெட்ரோல் பங்க் எதிரே சென்று கொண்டிருந்தது. அந்த நேரத்தில் பின்னால் வேகமாக வந்த அரசு பஸ் மொபட்டை முந்தி செல்ல முயன்றது. அப்போது எதிர்பாராதவிதமாக பஸ்சின் பின்பக்கம் மொபட்டில் உரசியது. இதில் மொபட்டில் சென்ற இருவரும் கீழே விழுந்தனர். பின்னால் அமர்ந்திருந்த ஆபத்து காத்தபிள்ளை ரோட்டில் விழுந்தார். அப்போது பஸ்சின் பின் சக்கரம் அவரது தலையில் ஏறி இறங்கியது. இதில் தலை நசுங்கிய ஆபத்துகாத்த பிள்ளை சம்பவ இடத்தி லேயே பரிதாபமாக இறந்தார்.

    இதுகுறித்து முருகன், இரணியல் போலீசில் புகார் அளித்தார். புகாரின் பேரில் விபத்தை ஏற்படுத்திய அரசு பஸ் டிரைவர் கொல்லங்கோடு ஆறுகோடு பகுதியை சேர்ந்த சிந்து குமார் (52) என்பவர் மீது இரணியல் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்ற னர்.

    இரணியல் அருகே உள்ள மாங்குழி பகுதியை சேர்ந்த வர் வின்சென்ட் (65), விவ சாயி. இவர் நேற்று சொந்த வேலை காரணமாக வெளியே சென்று விட்டு மதியம் மோட்டார் சைக்கிளில் வீட்டிற்கு வந்து கொண்டிருந்தார். திங்கள் நகர் ரவுண்டானா தாண்டி ராதாகிருஷ்ணன் கோவில் ஜங்ஷன் அருகே வரும்போது பின்னால் வேகமாக வந்த மினி பஸ் எதிர்பாராத விதமாக மோதியது. இந்த சம்பவத்தில் தூக்கி வீசப்பட்ட வின்சென்ட் படுகாயமடைந்தார். உடனே அவரை அக்கம் பக்கத்தினர் மீட்டு ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். ஆனால் செல்லும் வழியி லேயே வின்சென்ட் பரிதாப மாக இறந்தார். இதுகுறித்து அவரது சகோதரர் தேவ சகாயம், இரணியல் போலீ சில் புகார் அளித்தார். புகாரின் பேரில் விபத்தை ஏற்படுத்திய மினி பஸ் டிரைவர் கொக்கோடு வலியவிளை வைகுண்ட குமார் (29) மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • பரபரப்பு தகவல்கள்
    • 3பேர் உடலும் அழுகிய நிலையில் இருந்தது.

    கன்னியாகுமரி:

    இரணியல் அருகே வில்லுக்குறி கீழப்பள்ளம் சிவன் கோவில் தெருவை சேர்ந்தவர் பாபு (வயது 46), பெயிண்டர். இவரது சகோதரிகள் ஸ்ரீதேவி (44), உஷா பார்வதி (38).

    இவர்கள் 3 பேருக்கும் திருமணம் ஆகவில்லை. ஒரே வீட்டில் வசித்து வந்தனர். நேற்று மாலை இவர்களது வீட்டிலிருந்து துர்நாற்றம் வீசியது. இதையடுத்து அக்கம்பக்கத்தினர் இரணியல் போலீஸ் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர். இன்ஸ்பெக்டர் கிறிஸ்டி தலைமையிலான போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து விசாரணை நடத்தினார்கள்.

    வீட்டின் கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்தபோது பாபு, ஸ்ரீதேவி இருவரும் தூக்கில் தொங்கிய நிலையில் பிணமாக கிடந்தனர். உஷாபார்வதி தரையில் பிணமாக கிடந்தார். 3பேர் உடலும் அழுகிய நிலையில் இருந்தது. ஒரே குடும்பத்தில் 3 பேர் தற்கொலை செய்து கொண்ட தகவல் அந்த பகுதியில் காட்டுதீபோல் பரவியது.

    இதையடுத்து ஏராளமான பொதுமக்கள் அங்கு திரண்டனர். குளச்சல் டி.எஸ்.பி. தங்கராமன் தலைமையிலான போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து விசாரணை நடத்தினர். அப்போது தற்கொலை செய்து கொண்ட பாபு கடந்த திங்கள்கிழமை தான் வீட்டின் உரிமையாளரிடம் வாடகை பணத்தை கொடுத்து உள்ளார்.

    அதன் பிறகு கடந்த 2 நாட்களாக வீட்டில் எந்த நடமாட்டமும் இல்லாமல் இருந்தது தெரியவந்துள்ளது. எனவே திங்கள்கிழமையே இவர்கள் தற்கொலை செய்து இருக்கலாம் என்று போலீசார் சந்தேகிக்கிறா ர்கள். பிணமாக கிடந்த 3 பேரின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஆசாரிபள்ளம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    ஆசாரிப்பள்ளம் அரசு ஆஸ்பத்திரியில் உடல் பிரேத பரிசோதனை இன்று நடக்கிறது. 3 பேர் தற்கொலைக்கான காரணம் என்ன? என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தினர். விசாரணையில் தற்கொலை செய்து கொண்ட 3 பேருக்கும் திருமணமாகாத நிலையில் உஷா பார்வதி கடந்த சில நாட்களாக உடல் நலம் பாதிக்கப்பட்டு இருந்துள்ளார். இதனால் மனவருத்தத்தில் இருந்துள்ளனர். இதன் காரணமாக தற்கொலை செய்து கொண்டார்களா? இல்லை கடன் பிரச்சினை காரணமா? என்பது குறித்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

    பலியான 3 பேரின் பெற்றோரும் ஏற்கனவே இறந்து விட்ட நிலையில் இவர்களது உடலை ஒப்படைப்பதிலும் சிக்கல் ஏற்பட்டு உள்ளது. உற வினர்கள் யாரும் வாரதால 3 பேரின் உடலை ஒப்படைப்பது குறித்து போலீசார் ஆலோசனை மேற்கொண்டு உள்ளார்.

    ×