என் மலர்
நீங்கள் தேடியது "விவசாயிகள் எதிர்ப்பு"
- சாகச சுற்றுலா மையம் அமைக்கப்பட்டதால் தங்களது விவசாயம் பாதிக்கப்படுவதாகவும், இதனை தடுக்க வேண்டும் எனவும் விவசாயிகள் தொடர்ந்து வலியுறுத்தி வந்தனர்.
- 50க்கும் மேற்பட்ட விவசாய சங்க பிரதிநிதிகள் கலந்து கொண்டனர். அவர்கள் சாகச சுற்றுலா மையம் அமைக்க தங்கள் எதிர்ப்பை முழுமையாக பதிவு செய்தனர்.
திண்டுக்கல்:
திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் சர்வதேச சுற்றுலா தலமாக விளங்கி வருகிறது. இங்கு மேலும் சுற்றுலா வளர்ச்சி ஏற்படுத்த பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. அதன் ஒரு பகுதியான மன்னவனூரில் சாகச சுற்றுலா மையம் அமைக்கப்பட்டது. இதன் மூலம் அந்தரத்தில் கயிறில் செல்லும் சாகச விளை யாட்டு அமைக்கப்பட்டது.
இது சுற்றுலா பயணிகளிடையே மிகுந்த வரவேற்பை பெற்றது. இதற்காக விவசாய நிலங்கள் கையகப்படுத்தப்பட்டது. இந்நிலையில் சாகச சுற்றுலா மையம் அமைக்கப்பட்டதால் தங்களது விவசாயம் பாதிக்கப்படுவதாகவும், இதனை தடுக்க வேண்டும் எனவும் விவசாயிகள் தொடர்ந்து வலியுறுத்தி வந்தனர்.
வட்டாட்சியர், கோட்டா ட்சியர் தலைமையில் நடந்த பேச்சுவார்த்தையில் எவ்வித உடன்பாடும் எட்ட ப்படவில்லை. இதனைய டுத்து இன்று மாவட்ட கலெக்டர் தலைமை யில் அமைதி பேச்சுவார்த்தை நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டது.
அதன்படி மன்னவனூர், கவுஞ்சி பகுதிகளைச் சேர்ந்த 50க்கும் மேற்பட்ட விவசாய சங்க பிரதிநிதிகள் கலந்து கொண்டனர். அவர்கள் சாகச சுற்றுலா மையம் அமைக்க தங்கள் எதிர்ப்பை முழுமையாக பதிவு செய்தனர்.
இதனால் கூட்டத்தில் எந்தவித முடிவும் எட்ட ப்படாமல் அதிகாரிகள் சென்றனர். இதனால் கூட்டத்தில் பரபரப்பான சூழல் ஏற்பட்டது.
- உபரிநீர் வெளியேறி வீணாக கடலில் கலப்பதை தடுத்து விவசாயத்திற்கு பயன்படும் வகையில் மேட்டூர் அணை உபரிநீர் திட்டம் 2021-ம் ஆண்டு தொடங்கப்பட்டது.
- இந்த திட்டத்திற்கு நிலம் கையகப்படுத்தி கால்வாய் அமைத்தும், ஒரு சில இடங்களில் குழாய் அமைத்தும் நீர் கொண்டு செல்ல நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
மேட்டூர்:
மேட்டூர் அணையில் இருந்து உபரிநீர் வெளியேறி வீணாக கடலில் கலப்பதை தடுத்து விவசாயத்திற்கு பயன்படும் வகையில் மேட்டூர் அணை உபரிநீர் திட்டம் 2021-ம் ஆண்டு தொடங்கப்பட்டது.
இந்த திட்டத்தின் மூலம் மேட்டூர், ஓமலூர், எடப்பாடி உள்ளிட்ட தாலுகாவை சேர்ந்த சுமார் 100 ஏரிகளுக்கு குழாய்கள் மூலம் தண்ணீர் எடுத்துச் சென்று நிரப்புவதற்கு திட்டம் வகுக்கப்பட்டது.
வறண்ட வடிநில ஏரிகளுக்கு தண்ணீர் நிரப்பும் விதமாக திப்பம்பட்டி நீர் தேக்க பகுதியில் பிரதான நீரேற்றம் நிலையம் செயல்பட்டு வருகிறது.
இதேபோல் மேட்டூர் -சரபங்கா காவிரி உபரி நீரேற்று திட்டம் நங்கவள்ளி, ஜலகண்டாபுரம், குப்பம்பட்டி, சூரப்பள்ளி, எடப்பாடி வழியாக செயல்படுத்தப்பட உள்ளது.
இந்த திட்டத்திற்கு நிலம் கையகப்படுத்தி கால்வாய் அமைத்தும், ஒரு சில இடங்களில் குழாய் அமைத்தும் நீர் கொண்டு செல்ல நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இந்த பணிகள் முழுவீச்சில் நடைபெற்று வருகிறது. தற்போது நங்கவள்ளி, மல்லப்பனூர் பகுதியில் பொக்லைன் எந்திரத்தை பயன்படுத்தி ராட்சத குழாய் பதிக்கும் பணிகள் நடைபெற்று வருகிறது.
இதற்கு அடுத்து ஜலகண்டாபுரம், சூரப்பள்ளி, குப்பம்பட்டி பகுதியில் இப்பணிகள் நடைபெற உள்ளது. இதற்கு அப்பகுதி விவசாயிகள் எதிர்ப்பு தெரிவித்து ஜலகண்டாபுரம் பெரிய ஏரி கிணறு பகுதியில் திரண்டனர்.
குடியிருப்பு பகுதியில் கால்வாய் அமைக்காமல் ஊருக்கு ஒதுக்குப்புறமான பகுதிகளில் கால்வாய் அமைத்து பொது மக்களுக்கு பாதிப்பு ஏற்படாமல் செயல்படுத்த வேண்டும் என அப்பகுதி விவசாயிகள் மற்றும் ெபாதுமக்கள் அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.
- நீர்நிலைகளில் சிலைகளை கரைக்கும் வழக்கம் சில ஆண்டுகளாக இருந்து வருகின்றது.
- இதனால் நீர் வழங்களில் தடை ஏற்படுகின்றது.
ஈரோடு:
கீழ்பவானி விவசாயிகள் நலச்சங்கத்தின் சார்பில் கலெக்டர் அலுவலகத்திற்கு அனுப்பி உள்ள மனுவில் கூறியிருப்பதாவது:-
விநாயகர் சதுர்த்தி விழா வருகின்ற 18-ந் தேதி கொண்டாடப்பட உள்ளது.
வழி பாட்டிற்கு பிறகு நீர்நிலைகளில் சிலைகளை கரைக்கும் வழக்கம் சில ஆண்டுகளாக இருந்து வருகின்றது.
பெரும்பாலான சிலைகள் வேதிப் பொருட்களை கொண்டே செய்யப்படுகின்றது.
கடந்த ஆண்டுகளில் விவசாயிகளின் எதிர்ப்பை மீறி கீழ்பவானி பாசன வாய்க்காலில் ஆங்காங்கே சிலைகளை போட்டுவிட்டு சென்று விடுகின்றனர்.
சிலைகளில் சேர்க்கப்படும் ரசாயனம் நீரை மாசுபடுத்தி விடுகின்றது. உடைக்கப்பட்ட சிலைகளின் பாகங்கள் நீரில் அடித்து செல்லப்பட்டு மதகுகளில் அடைத்து விடுகி ன்றது.
இதனால் நீர் வழங்களில் தடை ஏற்படுகின்றது. பாசன கால்வாய்களில் சிலைகளை கரைப்பதை அரசு தடை செய்ய வேண்டும்.
மீறி கரைப் பவர்கள் மீது காவல்துறை மூலம் கடும் நடவடிக்கை எடுக்க மாவட்ட நிர்வாகம் உத்தரவிட வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
- கேரள அரசு மற்றும் சில தன்னார்வலர்கள் அணை பலம் இழந்துவிட்டதாக வதந்தி பரப்பி வருகின்றனர்.மேலும் அணையின் நீர்மட்டத்தை உயர விடாமல் சதி செய்து வருகின்றனர்.
- முல்லை ப்பெரியாற்று கரையோர மக்கள் பாதுகாப்பாக இருக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது. அணையில் இருந்து கூடுதல் தண்ணீர் திறக்க விவசாயிகள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.
கூடலூர்:
முல்லைப்பெரியாறு அணை மூலம் கம்பம் பள்ளத்தாக்கு பகுதியில் 14707 ஏக்கர் விவசாய நிலங்கள் பாசன வசதி பெறுகிறது. இருபோக நெல்சாகுபடி நடைபெற்று வருகிறது.
152 அடி உயரம் கொண்ட முல்லைப்பெரியாறு அணையில் உச்சநீதிமன்ற அறிவுறுத்தலின்படி 142 அடி வரை தண்ணீர் தேக்கப்படுகிறது. ஆனால் கேரள அரசு மற்றும் சில தன்னார்வலர்கள் அணை பலம் இழந்துவிட்டதாக வதந்தி பரப்பி வருகின்றனர்.மேலும் அணையின் நீர்மட்டத்தை உயர விடாமல் சதி செய்து வருகின்றனர்.
கடந்த சில நாட்களாக நீர் பிடிப்பு பகுதியில் பெய்த தொடர் மழை காரணமாக அணையின் நீர்மட்டம் 133.75 அடியாக உயர்ந்தது. நீர் இருப்பு 5575 மி.கன அடியாகும். தற்போது மழை ஓய்ந்த நிலையில் அணையில் இருந்து திறக்கப்படும் தண்ணீரின் அளவு 105 கன அடியில் இருந்து 1000 கன அடியாக அதிகரிக்க ப்பட்டது.
இதனால் வீரபாண்டி வரை உள்ள முல்லை ப்பெரியாற்று கரையோர மக்கள் பாதுகாப்பாக இருக்க அறிவுறுத்தப்ப ட்டுள்ளது. அணையில் இருந்து கூடுதல் தண்ணீர் திறக்க விவசாயிகள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.
இது குறித்து பெரியாறு, வைகை பாசன விவசாயிகள் சங்க ஒருங்கிணைப்பாளர் அன்வர்பாலசிங்கம் கூறு கையில், கம்பம் பள்ள த்தாக்கு பாசனத்திற்கு போதுமான அளவு நீர் இருப்பு உள்ளது. வைகை அணையும் முழு கொள்ளளவை எட்டி உள்ளது. தற்போது தண்ணீர் தேவை இல்லாத நிலையில் முல்லைப்பெரியாறு அணையில் இருந்து 1000 கன அடி நீர் திறக்கப்படுவது தேைவயற்றது. ரூல்கர்வ் விதிப்படி வருகிற 30ந் தேதி வரை 142 அடி வரை தண்ணீர் தேக்கலாம். குறைந்தபட்சம் 136 அடி நீர்மட்டத்தை நிலை நிறுத்தி இருக்க வேண்டும். எனவே நீர் திறப்பை குறைக்க வேண்டும் என்றார்.
அணையில் இருந்து 1000 கனஅடி நீர் திறக்கப்படுவ தால் லோயர்கேம்ப் பெரி யாறு நீர் மின் நிலையத்தில் 3 ஜெனரேட்டர்கள் மூலம் 90 மெகாவாட் மின் உற்பத்தி தொடங்கி உள்ளது. அணைக்கு 1146 கன அடி நீர் வருகிறது.
கூடுதல் தண்ணீர் திறப்பு குறித்து பொதுப்பணித்துறை அதிகாரிகள் கூறுகையில், 71 அடி உயரம் கொண்ட வைகை அணையில் பாசனத்திற்கு கூடுதல் தண்ணீர் திறக்கப்படுவதால் நீர்மட்டம் வேகமாக சரிந்து வருகிறது. எனவே அதனை ஈடுகட்டவே பெரியாறு அணையில் 1000 கனஅடி நீர் திறக்கப்படுகிறது என்ற னர்.
வைகை அணையின் நீர்மட்டம் 67.98 அடியாக உள்ளது. 892 கன அடி நீர் வருகிறது. மதுரை மாநகர குடிநீர் மற்றும் பாசனத்தி ற்காக 2099 கன அடி நீர் திறக்கப்படுகிறது. மஞ்ச ளாறு அணையின் நீர்மட்டம் 55 அடியாக உள்ளது. அணைக்கு வரும் 100 கன அடி நீர் அப்படியே திறக்கப்படுகிறது.
சோத்துப்பாறை அணை யின் நீர்மட்டம் 126.41 அடியாக உள்ளது. 83 கன அடி நீர் வருகிறது. அது முழுவதும் அப்படியே வெளியேற்றப்படுகிறது. மழை எங்கும் இல்லை.
- கேரள தரப்பில் தொடர்ந்து புதிய படகுகள் இயக்கப்பட்டு வருகின்றன.
- கேரள படகுகளின் எண்ணிக்கையை குறைக்க வேண்டும் என தேசிய புலிகள் ஆணையத்திற்கு புகார் அனுப்ப உள்ளோம்.
கூடலூர்:
முல்லை பெரியாறு அணை தமிழக நீர்வளத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ளது. அணை நீரை நம்பி தேனி, திண்டுக்கல், சிவகங்கை, ராமநாதபுரம், மதுரை ஆகிய மாவட்டங்களில் 2 லட்சத்து 47 ஆயிரம் ஏக்கரில் பாசன நிலங்கள் உள்ளன. ஒரு கோடி மக்களுக்கு குடிநீர் ஆதாரமாகவும் உள்ளது.
தமிழக நீர்வளத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ளதால் அணை கண்காணிப்பு பணிக்காக தேக்கடி படகு நிறுத்தப்பகுதியில் இருந்து 14 கி.மீ, தூரமுள்ள அணைக்கு செல்வதற்கு ஜலரத்தினா, கண்ணகி ஆகிய படகுகள் உள்ளன. இப்படகுகள் 40 ஆண்டு பழமையானதால் புதிய படகு வாங்க முடிவு செய்து 11 ஆண்டுகளுக்கு முன் ரூ.1 கோடியில் இரு படகுகள் வாங்கப்பட்டன. அதில் ஒரு படகு தேக்கடி ஏரிக்கு கொண்டு வரப்பட்டது.

தேக்கடியில் அனுமதி கிடைக்காததால் நிறுத்தி வைக்கப்பட்டுள்ள தமிழன்னை படகு.
அதற்கு தமிழ் அன்னை என பெயரிடப்பட்டது. ஆனால் இப்படகை கூடுதல் குதிரை திறன் கொண்டதாக உள்ளது எனக்கூறி இயக்க கேரள வனத்துறை அனுமதி தரவில்லை.
தேக்கடி ஏரியில் பெரியாறு புலிகள் காப்பகத்திற்கு 9 படகுகளும், கேரள சுற்றுலாத் துறைக்கு 6 படகுகளும், கேரள காவல்துறைக்கு 2 படகுகளும், கேரள நீர்ப்பாசன துறைக்கு 1 படகும் இயக்கப்படுகிறது. இதுதவிர விரைவுப்படகும் உள்ளது.
இந்நிலையில் பெரியாறு அணையை கண்காணிக்க நேற்று கேரள நீர்ப்பாசன துறைக்கு புதிய படகை தேக்கடியில் நீர்ப்பாசனத்துறை அமைச்சர் ரோஷி அகஸ்டின் தொடங்கி வைத்தார். தமிழக நீர்வளத்துறைக்கு சொந்தமான படகு 11 ஆண்டுகளாக அனுமதியின்றி தேக்கடி ஏரியில் காத்திருக்கும் நிலையில், கேரள தரப்பில் தொடர்ந்து புதிய படகுகள் இயக்கப்பட்டு வருகின்றன. இதற்கு தமிழக விவசாயிகள் எதிர்ப்பு தெரிவித்தனர்.
தமிழக நீர்வளத்துறையின் படகுகள் ஆண்டு கணக்கில் அனுமதியின்றி நிறுத்தி வைக்கப்பட்ட நிலையில் கேரளாவில் புதிய படகை தமிழக அனுமதி இல்லாமல் இயக்கிக் கொண்டிருக்கிறது. 130 குதிரை திறன் கொண்ட படகிற்கு அனுமதி தராத நிலையில் கேரள போலீசாரின் 150 குதிரை திறன் கொண்ட படகை இயக்குகின்றனர். கேரள படகுகளின் எண்ணிக்கையை குறைக்க வேண்டும் என தேசிய புலிகள் ஆணையத்திற்கு புகார் அனுப்ப உள்ளோம்.
மேலும் கம்பத்தில் இருந்து குமுளியை நோக்கி கண்டன ஊர்வலம் நடத்த முடிவு செய்துள்ளதாக பெரியாறு, வைகை பாசன விவசாயிகள் சங்க ஒருங்கிணைப்பாளர் அன்வர் பாலசிங்கம் தெரிவித்தார்.