search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "நிர்வாண ஊர்வலம்"

    • 2 பழங்குடியின பெண்களை ஒரு கும்பல் நிர்வாணமாக்கி ஊர்வலமாக இழுத்துச் செல்லும் பதற வைக்கும் வீடியோ வெளியானது
    • மணிப்பூர் கலவரம் தொடர்பாக சிபிஐ குற்றப்பத்திரிகை தாக்கல் செய்துள்ளது

    கடந்தாண்டு மணிப்பூரில் வன்முறையில் இரண்டு பழங்குடியின பெண்களை ஒரு கும்பல் நிர்வாணமாக்கி சாலையில் ஊர்வலமாக இழுத்துச் செல்லும் நெஞ்சை பதற வைக்கும் வீடியோ வெளியானது.

    இதனையடுத்து மணிப்பூர் அரசாங்கத்தின் கோரிக்கையைத் தொடர்ந்து தொடங்கப்பட்ட சிபிஐ விசாரணையில், ஆறு நபர்கள் மற்றும் ஒரு சிறார் மீது குற்றச்சாட்டுகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. அவர்கள் மீது கூட்டுப் பலாத்காரம், கொலை, குற்றச் சதி உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டது.

    இந்நிலையில் மணிப்பூர் கலவரம் தொடர்பாக சிபிஐ குற்றப்பத்திரிகை தாக்கல் செய்துள்ளது. அதில்,

    "மணிப்பூரில் வன்முறையின் போது, ஆடைகள் இன்றி இழுத்துச் செல்லப்பட்ட இரு பெண்களும், சாலையில் நின்ற போலீஸ் வாகனத்தில் ஏறி, உதவி கேட்டுள்ளனர். எனினும், வாகனத்தை எடுக்க சாவி இல்லை எனக் கூறியுள்ள போலீசார், கலவரக் கும்பலிடமே இருவரையும் வலுக்கட்டாயமாக விட்டுச் சென்றுள்ளனர் என்ற அதிர்ச்சிகர தகவல் வெளியாகியுள்ளது. 

    • இணையதள முடக்கம் காரணமாக மக்களில் பெரும் பகுதியினர் வன்முறையின் தீவிரத்தைப் பற்றி அறிந்திருக்கவில்லை.
    • குற்றவாளிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அனைத்து தரப்பினரும் வலியுறுத்தினர்.

    மணிப்பூரில் இரு சமூகத்தினருக்கு இடையே கடந்த மே மாதம் 3-ம் தேதி மோதல் ஏற்பட்டது. அதன்பின்னர் வன்முறை வெடித்தது. பல இடங்களில் வன்முறை தாக்குதல்கள் தொடர்வதால், 2 மாதங்களுக்கும் மேலாக மணிப்பூரில் இயல்பு நிலை திரும்பவில்லை. இணையதள சேவை முடக்கப்பட்டது. இதன் காரணமாக நாட்டு மக்களில் பெரும் பகுதியினர் மணிப்பூரில் பரவிய வன்முறையின் தீவிரத்தைப் பற்றி அறிந்திருக்கவில்லை.

    இதற்கிடையே, மணிப்பூரில் ஒரு சமூகத்தைச் சேர்ந்த 2 பழங்குடியின பெண்கள் நிர்வாணமாக்கி ஊர்வலமாக அழைத்து செல்லப்பட்ட வீடியோ சமூக வலைத்தளங்களில் வெளியாகி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இரண்டு மாதங்களுக்கு முன் நடந்த இந்த சம்பவம் இப்போது வெளிச்சத்துக்கு வந்ததையடுத்து, நாடு முழுவதும் கடும் அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ளது. குற்றவாளிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அனைத்து தரப்பினரும் வலியுறுத்தினர். பாராளுமன்றத்திலும் இந்த விவகாரம் எதிரொலித்தது. இந்த சம்பவத்தில் முக்கிய குற்றவாளியை போலீசார் கைது செய்துள்ளனர்.

    இந்நிலையில், இந்த வீடியோவின் தாக்கம் மணிப்பூரின் சுராசந்த்பூரில் இன்று தீவிரமாக வெடித்தது. மக்கள் மிகப்பெரிய அளவில் ஆர்ப்பாட்ட பேரணியை நடத்தினர். வீதி வீதியாக மக்கள் அணிவகுத்துச் சென்று இந்த சம்பவத்தை கண்டித்து முழக்கமிட்டனர். 

    • மணிப்பூரில் நடந்த சம்பவம் மிகவும் வெட்க கேடானது.
    • மணிப்பூரில் இந்தியா என்ற எண்ணம் தாக்கப்படும் போது இந்தியா அமைதியாக இருக்காது.

    மணிப்பூரில் 2 பழங்குடியின பெண்கள் நிர்வாணமாக்கி ஊர்வலமாக அழைத்து செல்லப்பட்ட வீடியோ சமூகவலை தளங்களில் வெளியாகி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ள நிலையில் எதிர் கட்சி தலைவர்கள் இந்த சம்பவம் தொடர்பாக மணிப்பூர் மாநில அரசு, மத்திய அரசுக்கு கண்டனம் தெரிவித்து உள்ளனர்.

    இது தொடர்பாக காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி தனது டுவிட்டர் பதிவில், பிரதமரின் மவுனம் மற்றும் செயலற்ற தன்மை மணிப்பூரை அராஜகத்திற்கு இட்டு சென்றுள்ளது. மணிப்பூரில் இந்தியா என்ற எண்ணம் தாக்கப்படும் போது இந்தியா அமைதியாக இருக்காது.

    நாங்கள் மணிப்பூர் மக்களுடன் நிற்கிறோம். சமாதானம் ஒன்றே முன்னோக்கி செல்லும் வழி என்று குறிப்பிட்டுள்ளார்.

    இதே போல பிரியங்கா காந்தியும் தனது டுவிட்டர் பதிவில், மணிப்பூரில் நடக்கும் வன்முறை சம்பவங்களில் மத்திய அரசும், பிரதமரும் ஏன் கண்மூடி தனமாக அமர்ந்திருக்கிறார்கள்? இது போன்ற படங்களும், வன்முறை சம்பவங்களும் அவர்களை தொந்தரவு செய்யவில்லையா? என குறிப்பிட்டுள்ளார்.

    டெல்லி முதல்-மந்திரி கெஜ்ரிவால் தனது டுவிட்டர் பதிவில், மணிப்பூரில் நடந்த சம்பவம் மிகவும் வெட்க கேடானது. கண்டனத் துக்குரியது. இதுபோன்ற கொடூரமான செயலை இந்திய சமூகத்தில் பொறுத்து கொள்ள முடியாது என்று பதிவிட்டுள்ளார்.

    இதே போல திரிணாமுல் காங்கிரஸ் கட்சியும் இந்த சம்பவத்துக்கு கடும் கண்டனம் தெரிவித்து உள்ளது. 

    • பிரதமர் மோடி கடும் கண்டனம் தெரிவித்ததோடு, குற்றவாளிகள் தப்பிக்க முடியாது என உறுதி
    • மத்திய மாநில அரசுகள் நடவடிக்கை எடுத்து தங்களுக்கு தகவல் தெரிவிக்க வேண்டும்- உச்சநீதிமன்றம்

    சென்ற மே மாதம் மணிப்பூரில் இரு இனத்தவருக்கிடையே மோதல் உருவானது. பிறகு, இதுபெருங்கலவரமாக மாறியது. இதனால் பலர் வீடுகளை விட்டு வெளியேறி அண்டை மாநிலங்களில் புகலிடம் தேடும் நிலைமை உருவானது. வீடுகள், கட்டிடங்கள், பள்ளிகள் தாக்கப்பட்டன, வழிபாட்டு தலங்கள் தீக்கிரையாக்கப்பட்டன.

    அதிகாரபூர்வமாக இதுவரை 142 பேர் பலியானதாகவும், 300 பேர் காயமடைந்துள்ளதாகவும், மற்றும் சுமார் 54 ஆயிரம் பேர் இடம்பெயர்ந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டது.

    இந்நிலையில் இம்மாநில கலவரம் தொடர்பாக மே மாதம் நடைபெற்றதாக சொல்லப்படும் ஒரு சம்பவம் குறித்த வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் பகிரப்பட்டது. அதில் ஒரு அதிர்ச்சி தரும் காட்சி இருந்தது.

    அந்த வீடியோவில் ஆண்கள் நிறைந்த கும்பல் ஒன்றில் இருபெண்கள் ஆடையின்றி அழைத்து செல்லப்படுகிறார்கள். பிறகு அவர்கள் மானபங்கபடுத்தப்படுகிறார்கள்.

    நாட்டையே அதிர்ச்சிக்குள்ளாக்கியிருக்கும் இந்த வீடியோ காட்சிகள் குறித்து உச்சநீதிமன்ற நீதிபதிகள் நரசிம்மா மற்றும் மனோஜ் மிஸ்ரா ஆகியோரை உள்ளடக்கிய உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி சந்திரசூட் தலைமையிலான பெஞ்ச் தங்களது வேதனையை தெரிவித்துள்ளது.

    இதுகுறித்து நீதிபதிகள் தெரிவித்திருப்பதாவது:-

    இது எங்களை மிகவும் மனதளவில் பாதித்திருக்கிறது. இந்த சம்பவம் எந்த விதத்திலும் ஏற்றுக்கொள்ள முடியாதது. மாநில மற்றும் மத்திய அரசாங்கங்கள் உடனடியாக தலையிட்டு அவர்கள் எடுக்க வேண்டிய நடவடிக்கைகளை எடுத்து, அதனை எங்களுக்கு தெரியப்படுத்த வேண்டும்.

    நாங்கள் அரசாங்கங்களுக்கு அவகாசம் அளித்து காத்திருக்கிறோம். ஆனால் எதுவும் நடைபெறவில்லையென்றால் நாங்கள் நடவடிக்கை எடுக்க வேண்டி வரும்.

    இவ்வாறு அந்த பெஞ்ச் கூறியிருக்கிறது.

    • குற்றவாளி யாரையும் தப்பிக்க விடமாட்டோம் என்பதை நாட்டு மக்களுக்கு உறுதி அளிக்கிறேன்
    • சட்டம் அதன் முழு வலிமையுடன் செயல்பட்டு நடவடிக்கை எடுக்கும்

    மணிப்பூரில் இரண்டு பழங்குடியின் பெண்கள் நிர்வாணமாக்கப்பட்டு ஊர்வலமாக ஒரு கும்பலால் இழுத்து செல்லப்படும் வீடியோ நேற்று வெளியானது. இந்த வீடியோ கடும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. இன்று தொடங்கும் பாராளுமன்ற கூட்டத்தொடரில் இது பிரதிபலிக்கும் எனத் தெரிகிறது.

    இந்த நிலையில் பிரதமர் மோடி தனது கடும் கண்டனத்தை தெரிவித்துள்ளார். அவர் இதுகுறித்து கூறுகையில் ''குற்றவாளி யாரையும் தப்பிக்க விடமாட்டோம் என்பதை நாட்டு மக்களுக்கு உறுதி அளிக்கிறேன். சட்டம் அதன் முழு வலிமையுடன் செயல்பட்டு நடவடிக்கை எடுக்கும். மணிப்பூர் மகளுக்கு நடந்த கொடூரம் மன்னிக்க முடியாதது.

    என இதயம் கோபம் மற்றும் வலியால் நிறைந்திருக்கிறது. மணிப்பூர் சம்பவம் எந்தவொரு நாகரீக சமுதாயத்திற்கும் வெட்கக்கேடானது. மாநில சட்டம்-ஒழுங்கு, குறிப்பாக பெண்கள் பாதுகாப்பில் கடுமையான நடவடிக்கை எடுக்கும்படி அந்தந்த மாநில முதல்வர்களை வலியுறுத்துகிறேன்'' என்றார்.

    • இரண்டு பெண்கள் நிர்வாணமாக அழைத்துச் செல்லப்படும் விடியோ வெளியானது
    • இந்த சம்பவத்தில் தொடர்புடையவர்களை அடையாளம் கண்டுள்ள போலீசார் நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர்

    மணிப்பூரில் வன்முறை இன்னும் கட்டுக்குள் வராத நிலையில், திடீரென இரண்டு பழங்குடியின பெண்களை ஒரு கும்பல் நிர்வாணமாக்கி சாலையில் ஊர்வலமாக இழுத்துச் செல்லும் நெஞ்சை பதற வைக்கும் வீடியோ வெளியானது. இந்த சம்பவம் கடந்த மே மாதம் 14-ந்தேதி நடந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

    மே 3-ந்தேதி இம்பாலில் மிகப்பெரிய பேரணி நடைபெற்றது. இந்த பேரணியின்போது மோதல் உண்டாகி, பின்னர் வன்முறையாக வெடித்தது. வன்முறையின் தொடர்ச்சியாக இந்த பதற வைக்கும் சம்பவம் நடைபெற்றிருக்கலாம் என கருதப்படுகிறது.

    இந்த விவகாரம் மிகப்பெரிய சர்ச்சையை எழுப்பியுள்ளது. ஏற்கனவே, பிரதமர் மோடி மணிப்பூர் கலவரம் குறித்து மவுனம் சாதித்து வருவதாக எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டி வருகின்றனர். தற்போது இந்த விவகாரமும் சேர்ந்துள்ளது.

    இச்சம்பத்தில் ஈடுபட்டவர்களை போலீசார் கண்டறிந்து அவர்கள் மீது நடவடிக்கை மேற்கொண்டு வருகிறார்கள்.

    இந்த நிலையில் இதுதொடர்பான வீடியோவை பகிர வேண்டாம் என் டுவிட்டர் மற்றும் சமூக ஊடகங்களுக்கு மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. மேலும், இதுகுறித்து விசாரணை நடைபெற்று வருவதால் இந்திய சட்டத்தை கடைபிடிக்க வேண்டும் என கேட்டுக்கொண்டுள்ளது.

    • இத்தனை பேர் மத்தியில் பெண்களை அவமானப்படுத்தியதும், அதை பலர் வேடிக்கை பார்த்து கொண்டிருப்பதும் வேதனை அளிக்கிறது.
    • நாட்டில் எங்கு என்ன பிரச்சினை நடந்தாலும் பெண்களை குறி வைத்து தாக்குகிறார்கள்.

    சென்னை:

    தேசிய பெண்கள் ஆணைய உறுப்பினர் நடிகை குஷ்பு கூறியதாவது:-

    மணிப்பூரில் வன்முறை போர்வையில் பெண்களை நிர்வாணப்படுத்தி வன்கொடுமை செய்த காட்சிகள் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.

    இத்தனை பேர் மத்தியில் பெண்களை அவமானப்படுத்தியதும், அதை பலர் வேடிக்கை பார்த்து கொண்டிருப்பதும் வேதனை அளிக்கிறது. ஒருவருக்கு கூட அந்த பெண்ணை காப்பாற்ற தோன்றவில்லை.

    இந்த மாதிரி கொடுமைகளை அரசியல் ரீதியாக அணுகுவதைவிட மனிதாபிமானத்துடன் அணுக வேண்டும். ஒரு நல்ல குடிமகனாக இந்த மாதிரி அவலங்கள் நடக்காமல் தடுக்க வழிகாண வேண்டும்.

    இந்த கொடுமையை செய்தவர்களுக்கு மரண தண்டனை வழங்க வேண்டும். நாட்டில் எங்கு என்ன பிரச்சினை நடந்தாலும் பெண்களை குறி வைத்து தாக்குகிறார்கள்.

    பிரச்சினைகளுக்கும் பெண்களை அவமானப்படுத்துவதற்கும் என்ன சம்பந்தம்? நாட்டில் எந்த மூலையில் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் நடந்தாலும் கடுமையான தண்டனைகள் வழங்கப்பட வேண்டும். கருத்து வேறுபாடுகளை களைந்துவிட்டு பெண்கள் பாதுகாப்பு விஷயத்தில் எல்லோரும் ஒன்றுபட்டு குரல் எழுப்ப வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • மணிப்பூரில் வன்முறை வெடித்த மே3-ந்தேதிக்கு அடுத்த நாள் இது நடைபெற்றுள்ளது
    • அரசியல் கட்சி தலைவர்கள் கடும் கண்டனத்தை தெரிவித்துள்ளனர்

    மணிப்பூர் மாநிலத்தில வன்முறை இன்னும் முடிவுக்கு வரவில்லை. இதற்கிடையே இரண்டு பழங்குடியின இளம் பெண்களை ஒரு கும்பல் நிர்வாணமாக்கி நடுரோட்டில் ஊர்வலமாக இழுத்து செல்வது போன்ற வீடியோ வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பழங்குடியின அமைப்பு அந்த பெண்களை வயல்வெளியில் வைத்து கற்பழித்ததாக குற்றம்சாட்டியுள்ளது.

    இந்த நிகழ்வு கடந்த மே மாதம் 4-ந்தேதி கங்போக்பி மாவட்டத்தில் நடைபெற்றுள்ளது. தலைநகர் இம்பாலில் இருந்து 35 கி.மீட்டர் தூரத்தில் இந்த மாவட்டம் உள்ளது.

    மே 3-ந்தேதி நடைபெற்ற பேரணியின்போது வன்முறை வெடித்தது. அதில் இருந்து மணிப்பூர் எரிந்து வருகிறது. 3-ந்தேதி வன்முறை வெடித்த நிலையில் அடுத்த நாள் இந்த கொடூர சம்பவம் நடைபெற்றுள்ளதால், அதுதொடர்பான தாக்குதலாக இருக்கும் என கருதப்படுகிறது.

    இந்த நிலையில் ராகுல் காந்தி, பிரியங்கா, அரவிந்த் கெஜ்ரிவால் உள்ளிட்ட தலைவர்கள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

    இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். குற்றவாளிகளை அடையாளம் கண்டுவிட்டோம். விரைவில் நடவடிக்கை எடுக்கப்படும் என உயர் போலீஸ் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

    இதுகுறித்து தீவிர விசாரணை நடத்தும்படி போலீசாருக்கு முதலமைச்சர் பிரேன் சிங் உத்தரவு பிறப்பித்துள்ளார். மத்திய பெண்கள் மற்றும் குழந்தைகள் வளர்ச்சித்துறை அமைச்சர் ஸ்மிரிதி ராணி தன்னிடம் பேசியதாகவும், விரைந்து நடவடிக்கை எடுக்கப்படும் உறுதி அளிக்கப்பட்டதாகவும் தெரிவித்துள்ளார்.

    ஸ்மிரிதி ராணி தனது டுவிட்டர் பக்கத்தில் ''குற்றவாளிகளை நீதியின் முன் நிறுத்த எந்தவொரு முயற்சியும் கைவிடப்படாது'' எனத் தெரிவித்துள்ளார்.

    ''மணிப்பூரில் இருந்து வரும் பெண்களுக்கு எதிரான பாலியல் வன்கொடுமை படங்கள் நெஞ்சை பதற வைக்கின்றன. பெண்களுக்கு எதிரான இந்த கொடூரமான வன்கொடுமை சம்பவத்திற்கு கண்டனம் தெரிவிக்கும் அளவு குறைவு. சமூகத்தில் வன்முறையின் உச்சக்கட்டத்தை பெண்களும் குழந்தைகளும் சுமக்க வேண்டியுள்ளது'' என தனது ஆதங்கத்தை பிரியங்கா காந்தி வெளிப்படுத்தியுள்ளார்.

    ×