என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "பிறப்பு சான்றிதழ்"
- மதுரை மாநகராட்சியின் பிறப்பு, இறப்பு பதிவு அலுவலர் எவ்விதமான தாமதமும் இன்றி 55 குழந்தைகளுக்கான பிறப்பு சான்றிதழை வழங்க வேண்டும்.
- அங்கீகரிக்கப்பட்ட குழந்தைகள் தத்தெடுப்பு மையங்கள் முறையாக ஆவணங்களுடன் விண்ணப்பிக்கும் நிலையில், சான்றிதழை வழங்க வேண்டும்.
மதுரை:
மதுரையில் உள்ள மழலை இல்லம் சார்பில் தொடரப்பட்ட வழக்கு உயர்நீதிமன்ற மதுரை கிளையில் இன்று விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி,
மதுரையில் அங்கீகரிக்கப்பட்ட குழந்தைகள் தத்தெடுப்பு மையத்தில் உள்ள குழந்தைகளுக்கு பிறப்பு சான்றிதழ் வழங்கலாம்.
மதுரை மாநகராட்சியின் பிறப்பு, இறப்பு பதிவு அலுவலர் எவ்விதமான தாமதமும் இன்றி 55 குழந்தைகளுக்கான பிறப்பு சான்றிதழை வழங்க வேண்டும்.
அங்கீகரிக்கப்பட்ட குழந்தைகள் தத்தெடுப்பு மையங்கள் முறையாக ஆவணங்களுடன் விண்ணப்பிக்கும் நிலையில், சான்றிதழை வழங்க வேண்டும்.
சிறார் நீதிச்சட்டம், அவர்களின் பாதுகாப்பையும், உரிமையும் உறுதி செய்வதன் அடிப்படையில் அங்கீகரிக்கப்பட்ட குழந்தைகள் தத்தெடுப்பு மையத்திற்கு சான்றுகளை வழங்கலாம் என்று தெரிவித்துள்ளார்.
- திருமணப்பதிவு உள்ளிட்ட பல்வேறு சேவைகளுக்கு விண்ணப்பிக்க பிறப்புச்சான்றிதழ் ஆவணமாக பயன்படுத்தலாம்.
- இதுவரை பிறப்பு சான்றிதழை பலரும் டிஜிட்டல் முறையில் பெறவில்லை.
நாட்டின் முக்கிய சேவைகள் அனைத்திற்கும் ஒரே ஆவணமாகிறது பிறப்பு சான்றிதழ். அதன்படி, இன்று முதல் இந்த புதிய விதி அமலுக்கு வருகிறது.
ஆதார் அட்டை, கல்வி நிறுவனங்களில் சேர்க்கை, வாக்காளர் பட்டியல் தயாரித்தல், ஓட்டுநர் உரிமம், பாஸ்போர்ட் வழங்குதல் , அரசுப் பணிகளுக்கான நியமனம் ஆகிய சேவைகளுக்கு பிறப்பு சான்றிதழ் பயன்படுத்தப்படும்.
அதன்படி திருமணம்ப்பதிவு உள்ளிட்ட பல்வேறு சேவைகளுக்கு விண்ணப்பிக்க பிறப்புச்சான்றிதழ் ஆவணமாக பயன்படுத்தலாம்.
பிறப்பு மற்றும் இறப்பு பதிவு (திருத்தம்) சட்டம், 2023 மூலம் இந்த சட்டம் அமலுக்கு வருகிறது. சமீபத்தில் இந்த சட்ட திருத்தம் செய்யப்பட்டது. இந்த சட்ட திருத்தத்தில் மேற்கூறிய பணிகளுக்கு பிறப்புச் சான்றிதழை ஒரே ஆவணமாகப் பயன்படுத்த வேண்டும் என்று மாற்றங்கள் செய்யப்பட்டன. அந்த, மசோதா நிறைவேறி வெற்றிபெற்ற நிலையில், தற்போது சட்டம் அமலுக்கு வருகிறது. இதன் மூலம் ஆன்லைன் வழியாக மத்திய அரசின் தளங்களில் இந்த சான்றிதழ்களை டவுன் லோடு செய்ய முடியும். ஆதார் அட்டையை எப்படி ஆவணமாக பயன்படுத்துகிறமோ அதேபோல் இதையும் பயன்படுத்த முடியும். இதுவரை பிறப்பு சான்றிதழை பலரும் டிஜிட்டல் முறையில் பெறவில்லை.
இதன் மூலம் வயது தொடர்பான பல்வேறு சேவைகள், தேர்விற்கு விண்ணப்பம் செய்வது போன்ற சேவைகளுக்கு பிறப்பு சான்றிதழை அடையாள அட்டையாக பயன்படுத்த முடியும்.
- வெளிநாட்டு கல்விக்காக ரூ.7 லட்சத்துக்கு மேல் கடன் பெற்றால் 0.5 சதவீதம் டி.சி.எஸ். கட்டணம்.
- டிமேட் மற்றும் டிரேடிங் கணக்குகளிலும் நாமினி கட்டாயம்.
* 2 ஆயிரம் ரூபாய் நோட்டுகள் செல்லாது.
* நிலம் வாங்கி பத்திரப்பதிவு செய்யும் போது சொத்துக்களின் புகைப்படமும் இடம் பெறுவது கட்டாயம்.
* வெளிநாடு செல்பவர்கள் ரூ.7 லட்சத்துக்கு மேல் கிரெடிட் கார்டு மூலம் வெளிநாட்டில் செலவு செய்தால் 20 சதவீதம் வரி.
* வெளிநாட்டு கல்விக்காக ரூ.7 லட்சத்துக்கு மேல் கடன் பெற்றால் 0.5 சதவீதம் டி.சி.எஸ். கட்டணம்.
* மியூச்சுவல்பண்ட் கணக்குகளில் வாடிக்கையாளர்கள் நாமினியை சேர்க்க வேண்டும். இல்லாவிட்டால் கணக்குகள் முடக்கப்படும்.
* டிமேட் மற்றும் டிரேடிங் கணக்குகளிலும் நாமினி கட்டாயம்.
* பொது வருங்கால வைப்பு நிதி, சுகன்யா சம்ரிதி யோஜனா, தபால் நிலைய வைப்பு தொகை, சிறுசேமிப்பு திட்டங்களுக்கு ஆதார் எண் கட்டாயம்.
* தொழிற்சாலைகள், வணிக நிறுவனங்கள், குடியிருப்பு பகுதிகள், அலுவலக பகுதிகளில் டீசல் ஜெனரேட்டர்கள் இயக்குவதில் மாற்றியமைக்கப்பட்ட அட்டவணையை பின்பற்ற வேண்டும்.
* பழனி முருகன் கோவிலுக்கு செல்போன் கொண்டு செல்ல தடை.
* அரசு வேலைகளுக்கு பிறப்பு சான்றிதழ் அவசியம்.
* மக்கள் தொகை பதிவு, வாக்காளர் பதிவு, ஆதார் எண், ரேசன் கார்டு, டிரைவிங் லைசென்ஸ், சொத்துப்பதிவு, கல்வி நிறுவன சேர்க்கை, திருமண பதிவு ஆகியவற்றிற்கு ஒரே ஆவணமாக பிறப்பு சான்றிதழை பயன்படுத்தலாம்.
* பிறப்பு, இறப்புகளை கட்டாயம் பதிவு செய்ய வேண்டும்.
- பிறப்பு சான்றிதழை ஒரே ஆவணமாக பயன்படுத்தும் நடைமுறை அடுத்த மாதம் அமலுக்கு வருகிறது.
- பிறப்பு சான்றிதழை அடையாள ஆவணமாக பயன்படுத்தலாம் என மத்திய அரசு அறிவித்துள்ளது.
புதுடெல்லி:
பிறப்பு சான்றிதழை ஆவணமாக பயன்படுத்த அனுமதிக்கும் புதிய மசோதா கடந்த பாராளுமன்ற கூட்டத்தொடரில் அறிமுகம் செய்யப்பட்டது. இந்த பிறப்பு மற்றும் இறப்பு (திருத்தம்) சட்டம், 2023 அக்டோபர் 1 முதல் நடைமுறைக்கு வரும் என அதிகாரப்பூர்வ அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.
இந்நிலையில், பிறப்பு சான்றிதழை அடுத்த மாதம் முதல் அடையாள ஆவணமாக பயன்படுத்தலாம் என்று மத்திய அரசு அறிவித்துள்ளது.
அதன்படி, வாக்காளர் அடையாள அட்டை பெறவும், ஓட்டுநர் உரிமம் பெறவும் பிறப்புச் சான்றிதழை ஆவணமாக பயன்படுத்தலாம் என மத்திய அரசு தெரிவித்துள்ளது.
மேலும், திருமண பதிவு, கல்வி அமைப்புகளில் சேரவும் பிறப்பு சான்றிதழை அடையாள ஆவணமாக பயன்படுத்தலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த சட்டம் நடைமுறைக்கு வந்த பிறகு ஒரு நபரின் பிறந்த தேதி, பிறந்த இடத்தை நிரூபிக்க ஒரே ஆவணமாக பிறப்பு சான்றிதழை பயன்படுத்தலாம். எனவே, அக்டோபர் 1 முதல் கல்வி நிறுவனத்தில் சேருதல், ஓட்டுநர் உரிமம், வாக்காளர் அடையாள அட்டை, ஆதார் எண், திருமணப் பதிவு மற்றும் அரசுப் பணி நியமனம் உள்ளிட்ட பல்வேறு பணிகளுக்கு பிறப்பு சான்றிதழை ஒரே அடையாள ஆவணமாகப் பயன்படுத்தலாம்.
- நீதிபதி, மனுதாரர்களின் உண்மையான குறையை தீர்க்குமாறு மாநில அரசு வக்கீலிடம் தெரிவித்தார்.
- வழக்கு விசாரணையை வருகிற 27-ந்தேதிக்கு நீதிபதி ஒத்தி வைத்தார்.
திருவனந்தபுரம்:
கேரள மாநிலம் கோழிக்கோடு பகுதியை சேர்ந்தவர்கள் ஜியா பாவல், ஜஹாத். திருநங்கைகளான இவர்கள் பள்ளி படிக்கும் போதிலிருந்தே நண்பர்களாக இருந்து வந்துள்ளனர். இந்தநிலையில் அவர்கள் இருவரும் திருமணம் செய்து கொண்டனர்.
கடந்த 3 ஆண்டுகளாக சேர்ந்து வாழ்ந்து வந்த இந்த திருநங்கை தம்பதிக்கு கடந்த பிப்ரவரி மாதம் குழந்தை பிறந்தது. ஆணாக இருந்துவந்த ஜகாத், தனது வயிற்றில் குழந்தையை சுமந்து பெற்றெடுத்தார். இதனை ஜியா பாவல் அறிவித்தார்.
ஆனால் தங்களுக்கு என்ன குழந்தை பிறந்தது என்பதை தெரிவிக்க அவர் மறுத்துவிட்டார். இந்நிலையில் அவர்களுக்கு பிறந்த குழந்தைக்கு கோழிக்கோடு மாநகராட்சி மூலம் பிறப்பு சான்றிதழ் வழங்கப்பட்டு இருக்கிறது. அதில் குழந்தைக்கு ஜியா பாவலை தந்தை என்றும், ஜஹாத்தை தாய் என்றும் குறிப்பிட்டுள்ளது.
இந்நிலையில் திருநங்கை தம்பதியான ஜியா பாவல் மற்றும் ஜஹாத் ஆகிய இருவரும் கேரள ஐகோர்ட்டில் மனு ஒன்றை தாக்கல் செய்தனர். அதில் தங்களது குழந்தையின் பிறப்பு சான்றிதழில் தாய்-தந்தை என்று இருப்பதற்கு பதிலாக பெற்றோர் என்று குறிப்பிட்டு சான்றிதழ் வழங்க கோழிக்கோடு மாநகராட்சிக்கு உத்தரவிட வேண்டும் என்று கூறியிருந்தனர்.
அந்த வழக்கு ஐகோர்ட்டில் விசாரணைக்கு வந்தது. குழந்தையின் தாய் பல ஆண்டுகளுக்கு முன்பு தன்னை ஆணாக அடையாளப்படுத்தி, தற்போது சமுதாயத்தில் ஆணாக வாழ்ந்து வருவதால் குழந்தையின் பிறப்பு சான்றிதழில் தந்தை மற்றும் தாயின் பெயரை தவிர்க்குமாறு மனுதாரர்கள் கேட்டுக்கொண்டனர்.
மேலும் தங்களை பெற்றோர் என்று மட்டும் குறிப்பிட வேண்டும் என்ற தங்களின் கோரிக்கையை அதிகாரிகள் மறுத்ததாகவும் கோர்ட்டில் தம்பதியினர் தெரிவித்தனர். அதனைக்கேட்ட நீதிபதி, மனுதாரர்களின் உண்மையான குறையை தீர்க்குமாறு மாநில அரசு வக்கீலிடம் தெரிவித்தார்.
ஆனால் மனுவில் சில தொழில் நுட்ட குறை பாடுகளை அரசு வக்கீல் சுட்டிக்காட்டினார். இதையடுத்து அந்த வழக்கு விசாரணையை வருகிற 27-ந்தேதிக்கு நீதிபதி ஒத்தி வைத்தார்.
- பிறக்கும் போது நூர் ஷெகாவத்தின் பாலினம் 'ஆண்' என்று பதிவு செய்யப்பட்டிருந்தது.
- திருநங்கைகளுக்கு வேலை வாய்ப்பு மற்றும் வேலைகளில் இடஒதுக்கீடு வழங்க கோரிக்கை.
ஜெய்ப்பூர் கிரேட்டர் முனிசிபல் கார்ப்பரேஷன் மூலம் முதன்முறையாக திருநங்கைக்கு பிறப்புச் சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
பொருளாதாரம் மற்றும் புள்ளியியல் துறையின் இயக்குநரும், தலைமைப் பதிவாளருமான (பிறப்பு மற்றும் இறப்பு) பன்வர்லால் பைர்வா, ராஜஸ்தானின் முதல் திருநங்கையின் பிறப்புச் சான்றிதழை ஜெய்ப்பூரைச் சேர்ந்த நூர் ஷெகாவத்துக்கு வழங்கினார்.
ஆண் மற்றும் பெண் பிறப்பு பதிவுகளுடன், திருநங்கைகளின் பிறப்பு பதிவுகளும் இனி மாநகராட்சி போர்ட்டலில் கிடைக்கும் என்று பன்வர்லால் பைர்வா கூறினார்.
திருநங்கைகள் தங்கள் பிறப்புச் சான்றிதழுக்கு விண்ணப்பிக்க ஊக்குவிக்கும் வகையில் விழிப்புணர்வுத் திட்டமும் தொடங்கப்படும் என்று பைர்வா கூறினார்.
பிறக்கும் போது நூர் ஷெகாவத்தின் பாலினம் 'ஆண்' என்று பதிவு செய்யப்பட்டிருந்தது.
மாற்றுத்திறனாளிகள், ஆண்கள் மற்றும் பெண்களின் பதிவேடுகளுடன் திருநங்கைகளின் பதிவுகளை அரசு பராமரிக்க இந்த முயற்சி உதவும் என ஆங்கில வழிப் பள்ளியில் 12-ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்று, திருநங்கைகளுக்கான தன்னார்வ தொண்டு நிறுவனத்தை நடத்தி வரும் நூர் ஷெகாவத் கூறினார்.
நூர் ஷெகாவத் இப்போது திருநங்கைகளுக்கு வேலை வாய்ப்பு மற்றும் வேலைகளில் இடஒதுக்கீடு வழங்க அதிகாரிகளை வலியுறுத்த திட்டமிட்டுள்ளார்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்