என் மலர்
நீங்கள் தேடியது "Manipur Violence"
- நீதிபதிகளின் இந்த வருகை பாதிக்கப்பட்ட மக்ககளுக்கான சட்ட மற்றும் மனிதாபிமான உதவியின் தற்போதைய தேவையை வலியுறுத்தும்.
- பயணத்தின்போது நீதிபதிகள் 6 பேரும் வன்முறையால் பாதிக்கப்பட்ட மக்கள் தஞ்சமடைந்துள்ள நிவாரண முகாம்களுக்கு செல்வார்கள்.
புதுடெல்லி:
வடகிழக்கு மாநிலமான மணிப்பூர் கிட்டத்தட்ட 2 ஆண்டுகளாக கலவரத்தின் பிடியில் சிக்கியுள்ளது. மெய்தி மற்றும் குகி இன மக்களுக்கு இடையேயான இந்த கலவரத்தில் இதுவரை 250-க்கும் அதிகமானோர் பலியாகி உள்ளனர்.
மேலும் வன்முறை காரணமாக ஆயிரக்கணக்கான மக்கள் வீடுகள், உடைமைகளை விட்டுவிட்டு பல மாதங்களாக நிவாரண முகாம்களில் தஞ்சம் அடைந்துள்ளனர்.
இதனிடையே மணிப்பூர் முதல்-மந்திரியாக இருந்து வந்த பைரேன் சிங் கடந்த மாதம் தனது பதவியை ராஜினாமா செய்ததை தொடர்ந்து, அங்கு ஜனாதிபதி ஆட்சி அமல்படுத்தப்பட்டது.
இந்த நிலையில் பி.ஆர்.கவாய் உள்பட சுப்ரீம் கோர்ட் நீதிபதிகள் 6 பேர் வருகிற 22-ந்தேதி மணிப்பூர் செல்ல இருப்பதாக தேசிய சட்ட சேவைகள் ஆணையம் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக அந்த ஆணையம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:-
மணிப்பூர் ஐகோர்ட்டின் 20-ம் ஆண்டு விழாவையொட்டி சுப்ரீம் கோர்ட் நீதிபதியும், தேசிய சட்ட சேவைகள் ஆணையத்தின் செயல் தலைவருமான பி.ஆர்.கவாய், சுப்ரீம் கோர்ட் நீதிபதிகள் சூர்ய காந்த், விக்ரம் நாத், எம்.எம்.சுந்தரேஷ், கே.வி.விஸ்வநாதன் மற்றும் என்.கோடீஸ்வர் சிங் ஆகியோருடன் வருகிற 22-ந்தேதி மணிப்பூருக்கு செல்கிறார். இந்த பயணத்தின்போது நீதிபதிகள் 6 பேரும் வன்முறையால் பாதிக்கப்பட்ட மக்கள் தஞ்சமடைந்துள்ள நிவாரண முகாம்களுக்கு செல்வார்கள்.
நீதிபதிகளின் இந்த வருகை பாதிக்கப்பட்ட மக்ககளுக்கான சட்ட மற்றும் மனிதாபிமான உதவியின் தற்போதைய தேவையை வலியுறுத்தும். இந்த பயணத்தின்போது இம்பால் கிழக்கு, இம்பால் மேற்கு மற்றும் உக்ருல் மாவட்டங்களில் அமைக்கப்பட்டுள்ள புதிய சட்ட உதவி மையங்களையும், மாநிலம் முழுவதும் உள்ள சட்ட சேவை முகாம்கள் மற்றும் மருத்துவ முகாம்களையும் நீதிபதி கவாய் தொடங்கி வைப்பார்.
தொடரும் வன்முறைகளுக்கு மத்தியில், பாதிக்கப்பட்ட மக்களுக்கு சட்ட உதவி மற்றும் ஆதரவை வழங்குவதில் மணிப்பூர் மாநில சட்ட சேவைகள் ஆணையத்துடன் தேசிய சட்ட சேவைகள் ஆணையம் முக்கிய பங்கு வகிக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.
இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
- மணிப்பூர் மாநிலத்தில் பலாத்காரம், படுகொலைகள் என அனைத்து கொடுமைகளும் அரங்கேறுகின்றன.
- மணிப்பூர் இந்தியாவின் ஒரு அங்கம் இல்லையா?
மாநிலங்களவையில் எம்.பி. வைகோ பேசியதாவது:
மணிப்பூர் நிலவரம் பற்றி இங்கே ஆழமான விவாதம் நடைபெற்று வருகிறது. மணிப்பூர் மாநிலத்தில் பலாத்காரம், படுகொலைகள் என அனைத்து கொடுமைகளும் அரங்கேறுகின்றன.
எங்களுக்கு உள்ள மில்லியன் டாலர் கேள்வியே பிரதமர் மோடிக்கு மணிப்பூர் செல்வதைத் தவிர வேறு என்ன வேலை இருக்கிறது?
நரேந்திர மோடி Not Prime Minister. அவர் Picnic Minister. ஒவ்வொரு நாடாக செல்கிற நரேந்திர மோடியால் மணிப்பூர் மாநிலத்துக்கு ஏன் செல்ல முடியவில்லை? மணிப்பூர் இந்தியாவின் ஒரு அங்கம் இல்லையா என்று வைகோ பேசினார்.
இதை சபை குறிப்பில் இருந்து நீக்குவேன் என்று மாநிலங்களவை துணைத்தலைவர் கூறினார்.
- பழங்குடியின மாணவர் அமைப்பு சார்பில் ஏழு மாவட்டங்களில் பழங்குடியினர் ஒற்றுமை பேரணி நடத்தப்பட்டது.
- பழங்குடியினருக்கும், பழங்குடியினர் அல்லாதோருக்கும் இடையேயான இந்த மோதலால் பதற்றமான சூழல் நிலவுகிறது.
இம்பால்:
மணிப்பூர் மாநிலத்தில் மெய்டீஸ் என்ற பழங்குடி அல்லாத சமுகத்தினர் தங்களுக்கு பட்டியலின பழங்குடியினர் என்ற அந்தஸ்த்து வழங்க வேண்டும் என்று மாநில அரசுக்கு கோரிக்கை விடுத்தனர். மெய்டீஸ் சமுகத்திற்கு பட்டியலின பழங்குடியின சமுகம் என்ற அந்தஸ்து வழங்குவதற்கு எதிர்ப்பு தெரிவித்து பழங்குடியின சமுகத்தினர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
மணிப்பூர் அனைத்து பழங்குடியின மாணவர் அமைப்பு சார்பில் அம்மாநிலத்தின் மலைப்பகுதியில் உள்ள 7 மாவட்டங்களில் நேற்று பழங்குடியினர் ஒற்றுமை பேரணி நடத்தப்பட்டது. இந்த பேரணிக்கு எதிராக மாநிலத்தின் சில பகுதிகளில் எதிர்தரப்பும் பேரணி நடத்தியது. அப்போது, இரு தரப்புக்கும் இடையே கடுமையான மோதல் ஏற்பட்டது. இம்பால், சவுரசந்த்பூர் மற்றும் காங்போக்பி மாவட்டங்களில் கடும் வன்முறை வெடித்தது. வீடுகளுக்கு தீ வைக்கப்பட்டன. இந்த வன்முறையில் சிலருக்கு காயம் ஏற்பட்டுள்ளது.
பழங்குடியினருக்கும், பழங்குடியினர் அல்லாதோருக்கும் இடையேயான இந்த மோதலால் மணிப்பூரில் பதற்றமான சூழ்நிலை நிலவி வருகிறது. வன்முறையை கட்டுப்படுத்த ராணுவம் வரவழைக்கப்பட்டுள்ளது. கலவரத்தை கட்டுப்படுத்த 8 மாவட்டங்களில் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. கலவரம் மேலும் பரவாமல் தடுக்க ராணுவம் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். இன்று வன்முறை நடந்த பகுதிகளில் ராணுவம் மற்றும் அசாம் ரைபிள் படையினர் கொடி அணிவகுப்பு நடத்தினர். போலீசாரும் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
- கலவரம் மேலும் பரவாமல் தடுக்க ராணுவ வீரர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
- வன்முறை தொடர்பான புகைப்படங்களை மேரிகோம் டுவிட்டரில் வெளியிட்டுள்ளார்.
இம்பால்:
மணிப்பூரில் மெய்டீஸ் சமுகத்திற்கு பட்டியலின பழங்குடியின சமுகம் என்ற அந்தஸ்து வழங்குவதற்கு எதிர்ப்பு தெரிவித்து பழங்குடியின சமுகத்தினர் போராட்டத்தில் ஈடுபட்டனர். நேற்று நடந்த ஒற்றுமை பேரணியின்போது வன்முறை வெடித்தது. பேரணிக்கு எதிராக சில பகுதிகளில் எதிர்தரப்பும் பேரணி நடத்தியபோது, இரு தரப்புக்கும் இடையே கடுமையான மோதல் ஏற்பட்டது.
இம்பால், சவுரசந்த்பூர் மற்றும் காங்போக்பி மாவட்டங்களில் கடும் வன்முறை வெடித்தது. பதற்றம் அதிகரித்ததையடுத்து ராணுவம் வரவழைக்கப்பட்டது. கலவரம் மேலும் பரவாமல் தடுக்க ராணுவ வீரர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். கலவரத்தை கட்டுப்படுத்த 8 மாவட்டங்களில் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது.
இந்நிலையில் மணிப்பூர் மாநிலத்தைச் சேர்ந்த பிரபல குத்துச்சண்டை வீராங்கனையும் முன்னாள் எம்.பி.யுமான மேரி கோம், இந்த கலவரம் தொடர்பாக வேதனையுடன் தனது கருத்தை பகிர்ந்துள்ளார். எனது மாநிலம் மணிப்பூர் பற்றி எரிகிறது, பிரதமர் அவர்களே தயவுசெய்து உதவுங்கள் என கேட்டுக்கொண்டுள்ளார். வன்முறை தொடர்பான புகைப்படங்களையும் வெளியிட்டுள்ளார்.
- மணிப்பூரில் பழங்குடியின மாணவர் அமைப்பு சார்பில் பழங்குடியினர் ஒற்றுமை பேரணி நடத்தப்பட்டது.
- அப்போது பழங்குடியினருக்கும், பழங்குடியினர் அல்லாதோருக்கும் இடையே மோதல் ஏற்பட்டது.
இம்பால்:
மணிப்பூர் மாநிலத்தில் மெய்டீஸ் என்ற பழங்குடி அல்லாத சமுகத்தினர் தங்களுக்கு பட்டியலின பழங்குடியினர் என்ற அந்தஸ்த்து வழங்க வேண்டும் என்று மாநில அரசுக்கு கோரிக்கை விடுத்தனர். மெய்டீஸ் சமுகத்திற்கு பட்டியலின பழங்குடியின சமுகம் என்ற அந்தஸ்து வழங்குவதற்கு எதிர்ப்பு தெரிவித்து பழங்குடியின சமுகத்தினர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
மணிப்பூர் அனைத்து பழங்குடியின மாணவர் அமைப்பு சார்பில் அம்மாநிலத்தின் மலைப்பகுதியில் உள்ள 7 மாவட்டங்களில் நேற்று பழங்குடியினர் ஒற்றுமை பேரணி நடத்தப்பட்டது. இந்த பேரணிக்கு எதிராக மாநிலத்தின் சில பகுதிகளில் எதிர்தரப்பும் பேரணி நடத்தியது. அப்போது, இரு தரப்புக்கும் இடையே கடுமையான மோதல் ஏற்பட்டது. இம்பால், சவுரசந்த்பூர் மற்றும் காங்போக்பி மாவட்டங்களில் கடும் வன்முறை வெடித்தது. வீடுகளுக்கு தீ வைக்கப்பட்டன. இந்த வன்முறையில் சிலருக்கு காயம் ஏற்பட்டுள்ளது.
பழங்குடியினருக்கும், பழங்குடியினர் அல்லாதோருக்கும் இடையேயான இந்த மோதலால் மணிப்பூரில் பதற்றமான சூழ்நிலை நிலவி வருகிறது. வன்முறையைக் கட்டுப்படுத்த ராணுவம் வரவழைக்கப்பட்டுள்ளது. கலவரத்தைக் கட்டுப்படுத்த 8 மாவட்டங்களில் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. கலவரம் மேலும் பரவாமல் தடுக்க ராணுவம் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
இன்று வன்முறை நடந்த பகுதிகளில் ராணுவம் மற்றும் அசாம் ரைபிள் படையினர் கொடி அணிவகுப்பு நடத்தினர். போலீசாரும் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்நிலையில், கலவரத்தைக் கட்டுப்படுத்த போராட்டக்காரர்களைக் கண்டதும் சுட மாவட்ட ஆட்சியர், கோட்டாட்சியர் உள்ளிட்டோருக்கு ஆளுநர் அதிரடியாக உத்தரவிட்டுள்ளார்.
- மணிப்பூரில் வன்முறை பாதிக்கப்பட்ட பகுதிகளில் இருந்து சுமார் 13 ஆயிரம் பேர் மீட்கப்பட்டு பாதுகாப்பு மையங்களில் தங்க வைக்கப்பட்டு உள்ளனர்.
- மலைப்பகுதிகளில் இருப்போர் ராணுவ விமானங்கள் மூலம் மீட்கப்பட்டு பாதுகாப்பு மையங்களுக்கு அழைத்து வரப்படுகிறார்கள்.
இம்பால்:
மணிப்பூர் மாநிலத்தில் பழங்குடியினர் மற்றும் மைதேயி சமூகத்தினருக்கும் இடையே பயங்கர கலவரம் மூண்டது. மைதேயி சமூகத்தினர் தங்களையும் பழங்குடியின பட்டியலில் சேர்க்க வேண்டும் என கோரிக்கை விடுத்து வந்தனர். இதனை ஏற்க கூடாது என ஏற்கனவே உள்ள பழங்குடி இன மக்கள் கூறிவந்தனர். இப்பிரச்சினை நீறுபூத்த நெருப்பாக புகைந்து கொண்டிருந்த நிலையில் திடீரென இரு சமூகத்தினருக்கும் இடையே வன்முறை வெடித்தது.
இதில் வாகனங்கள் அடித்து நொறுக்கப்பட்டதோடு வீடுகளுக்கும் தீவைக்கப்பட்டது. தகவல் அறிந்து அங்கு ராணுவத்தினர் விரைந்து சென்று நிலைமையை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுத்தனர்.
3200 மத்திய ரிசர்வ் போலீஸ் படையினர் மற்றும் ராணுவத்தின் விமான படையினர் அங்கு முகாமிட்டு அமைதி திரும்ப ஏற்பாடுகள் செய்து வருகிறார்கள். இதற்கிடையே மணிப்பூர் வன்முறையில் பலியானவர்கள் பற்றிய விபரங்கள் தற்போது வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தி வருகிறது.
இதில் இம்பாலில் உள்ள அரசு குடியிருப்பில் வசித்து வந்த இந்திய வருவாய்துறை அதிகாரி லெட்மின்தாங் ஹாக்கிப்பின் என்பவர் வன்முறையாளர்களால் அடித்து கொல்லப்பட்ட சம்பவம் வெளியாகி உயர் அதிகாரிகளை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
இதுபற்றி ஐ.ஆர்.எஸ். அதிகாரிகள் சமூக வலைதளத்தில் பதிவிட்டுள்ள விபரம் வருமாறு:-
இம்பாலில் உதவி வரித்துறை அதிகாரியாக பணியாற்றி வந்தவர் லெட்மின்தாங் ஹாக்கிப்பின். அங்குள்ள அரசு குடியிருப்பில் வசித்து வந்தார். கலவரத்தின் போது ஒரு கும்பல் அவரது வீட்டுக்குள் புகுந்து அவரை வெளியே இழுத்து வந்துள்ளது.
பின்னர் அவர்கள் அவரை சரமாரியாக அடித்து உதைத்துள்ளனர். இதில் படுகாயம் அடைந்த அதிகாரி லெட்மின்தாங் ஹாக்கிப்பின் பரிதாபமாக இறந்துள்ளார். இவரது இறப்பை எங்களால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை. குரூரமாக நடந்த இந்த சம்பவத்தின் மூலம் அதிகாரி லெட்மின்தாங் ஹாக்கிப்பின் குடும்பத்தினர் பெரும் துயரத்திற்கு ஆளாகி உள்ளனர். அவர்களுக்கு என்ன ஆறுதல் கூறமுடியும் என தெரியவில்லை.
இந்த சம்பவத்திற்கு எங்கள் அமைப்பு சார்பில் கடும் கண்டனத்தை பதிவு செய்கிறோம்.
இவ்வாறு அதில் குறிப்பிட்டு உள்ளனர்.
இதற்கிடையே மணிப்பூர் கலவரத்தில் 54 பேர் வரை கொலை செய்யப்பட்டதாக தகவல் வெளியாகி உள்ளது. வன்முறை கும்பல் தாக்கியதில் அவர்கள் இறந்திருக்கலாம் எனவும் கூறப்படுகிறது. இது தொடர்பாக மாநில அரசும், போலீசாரும் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
மேலும் இம்பால் உள்ளிட்ட முக்கிய நகரங்களில் தீவைக்கப்பட்ட கடைகள், வீடுகள் மற்றும் வணிக நிறுவனங்கள் பற்றிய கணக்கெடுப்பு பணியும் நடந்து வருகிறது.
இதற்கிடையே மணிப்பூரில் வன்முறை பாதிக்கப்பட்ட பகுதிகளில் இருந்து சுமார் 13 ஆயிரம் பேர் மீட்கப்பட்டு பாதுகாப்பு மையங்களில் தங்க வைக்கப்பட்டு உள்ளனர். மலைப்பகுதிகளில் இருப்போர் ராணுவ விமானங்கள் மூலம் மீட்கப்பட்டு பாதுகாப்பு மையங்களுக்கு அழைத்து வரப்படுகிறார்கள். அவர்களுக்கு தேவையான அடிப்படை உதவிகளை மாநில அரசு செய்துள்ளது. தற்போது அங்கு நிலைமை கட்டுக்குள் இருப்பதாக மாநில அரசு தெரிவித்துள்ளது.
மணிப்பூரில் தற்போது வெள்ளப்பாதிப்பு ஏற்பட்டுள்ளதாகவும் இதனால் அங்கு பாதுகாப்பு பணிக்கு சென்ற ராணுவத்தினர் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.
- பொது மக்கள் காய்கறிகள் மற்றும் அத்தியாவசிய பொருட்களை வாங்க வெளியில் வரத்துவங்கினர்.
- நகரின் முக்கிய பகுதிகளில் ராணுவம், மத்திய காவல் படையினர் பாதுகாப்பு பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர்.
மணிப்பூர் வன்முறையில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 54 ஆக அதிகரித்து இருக்கிறது. உயிரிழந்த 54 பேரில், 16 பேரின் உடல்கள் சுராசந்த்பூர் மருத்துவமனையின் பிணவறையிலும், 15 பேரின் உடல்கள் இம்பால் கிழக்கு மாவட்டத்தில் உள்ள ஜகவர்லால் நேரு மருத்துவக் கல்லூரி பிணவறையில் வைக்கப்பட்டுள்ளன.
கடந்த சில நாட்களாக பற்றி எரிந்த மணிப்பூர் இன்று இயல்பு நிலைக்கு திரும்பியது. மணிப்பூரின் இம்பால் மற்றும் இதர பகுதிகளில் உள்ள கடைகள், சந்தைகள் திறக்கப்பட்டு, சாலையில் வாகனங்கள் ஓடத்துவங்கியுள்ளன. நகரின் முக்கிய பகுதிகளில் ராணுவம், மத்திய காவல் படையினர் பாதுகாப்பு பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர்.
பொது மக்கள் இன்று காலை முதலே காய்கறிகள் மற்றும் அத்தியாவசிய பொருட்களை வாங்க வெளியில் வரத்துவங்கினர்.

"கடந்த 12 மணி நேரங்களில் இம்பால் கிழக்கு மற்றும் மேற்கு மாவட்டங்களில் கலவரக்காரர்கள் கட்டிடங்களுக்கு வேண்டுமென்றே தீயிட்டு கொளுத்தினர். எனினும், நிலைமை கட்டுக்குள் கொண்டுவரப்பட்டு விட்டது," என்று பாதுகாப்பு அதிகாரி தெரிவித்துள்ளார்.
வன்முறையில் ஏராளமானோர் உயிரிழந்தனர், மேலும் நூற்றுக்கணக்கானோர் காயமுற்றனர் என்று பல்வேறு தகவல்கள் மூலம் செய்திகள் வெளியாகி வந்த நிலையிலும், போலீசார் இவற்றை உறுதிப்படுத்த மறுப்பதாக கூறப்படுகிறது. கலவரத்தில் சிக்கிய பலர் ரிம்ஸ் மற்றும் ஜவகர்லால் நேரு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
சுமார் 10 ஆயிரம் ராணுவத்தினர் மணிப்பூர் முழுக்க பாதுகாப்பு பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த கலவரம் காரணமாக கடந்த புதன்கிழமையில் இருந்து இயல்பு வாழ்க்கை முழுமையாக பாதிக்கப்பட்டது.
+2
- வன்முறையை கட்டுப்படுத்த எடுத்த நடவடிக்கை தொடர்பாக மத்திய அரசு தரப்பில் அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது.
- கடந்த இரண்டு தினங்களாக அசம்பாவிதம் ஏதும் நடக்கவில்லை என மத்திய அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
புதுடெல்லி:
மணிப்பூரில் உள்ள மெய்தி சமூகத்தினர் பழங்குடியினர் பட்டியலில் சேர்க்கும்படி வலியுறுத்தி வருகின்றனர். இது தொடர்பாக மணிப்பூர் உயர்நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு பெரும் புயலை கிளப்பியிருக்கிறது. மெய்தி சமூகத்தினரை பழங்குடியினர் பட்டியலில் சேர்க்கக்கூடாது என வலியுறுத்தி கடந்த புதன்கிழமை பழங்குடியின அமைப்புகள் ஒற்றுமை பேரணி நடத்தினர். எதிர்தரப்பினரும் பேரணி நடத்தியதால் இரு தரப்பினரிடையே மோதல் வெடித்தது. பின்னர் அது கலவரமாக மாறியதுடன், மற்ற இடங்களுக்கும் பரவியது. இந்த வன்முறையில் 50க்கும் மேற்பட்டோர் பலியாகி உள்ளனர். ராணுவம் வரவழைக்கப்பட்டு, வன்முறை கட்டுக்குள் கொண்டு வரப்பட்டது. எனினும் தொடர்ந்து பதற்றம் நிலவி வருகிறது.
மெய்தி சமூகத்தினருக்கு பழங்குடியினர் அந்தஸ்து வழங்குவது தொடர்பாக மணிப்பூர் உயர்நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவை எதிர்த்து ஆளும் பாஜக எம்எல்ஏ ஒருவர் உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார். அதேபோல் வன்முறை தொடர்பாக விசாரிப்பதற்கு சிறப்பு விசாரணைக்குழு அமைக்கக்கோரி பழங்குடியின அமைப்பு சார்பில் பொதுநல மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இதுபோன்று மணிப்பூர் நிலவரம் தொடர்பாக மேலும் சில மனுக்களும் தாக்கல் செய்யப்பட்டுள்ளன. இந்த மனுக்கள் மீதான விசாரணை இன்று தலைமை நீதிபதி தலைமையிலான அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது.
அப்போது மணிப்பூரில் தற்போதைய நிலவரம் மற்றும் மத்திய அரசு எடுத்த நடவடிக்கை தொடர்பாக மத்திய அரசு தரப்பில் அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது. பாதிக்கப்பட்ட பகுதிகளில் ராணுவம், துணை ராணுவ படைகள் அனுப்பி கொடி அணிவகுப்பு நடத்தப்பட்டுள்ளது, அமைதி குழு கூட்டம் நடத்தப்பட்டு, நிலைமை உன்னிப்பாக கண்காணிக்கப்பட்டு வருகிறது, ஊரடங்கு தளர்த்தப்பட்டு இயல்பு நிலை திரும்பி வருகிறது என மத்திய அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது. கடந்த இரண்டு தினங்களாக அசம்பாவிதம் ஏதும் நடக்கவில்லை எனவும் தெரிவிக்கப்பட்டது.
இதையடுத்து மணிப்பூர் வன்முறை தொடர்பாக நிலை அறிக்கையை தாக்கல் செய்யும்படி மத்திய மாநில அரசுகளுக்கு, நீதிபதிகள் உத்தரவிட்டனர். மேலும், வன்முறையால் பாதிக்கப்பட்ட பாதிக்கப்பட்டவர்களுக்கு பாதுகாப்பை அதிகரிக்கவும், தேவையான நிவாரணம் வழங்கவும் மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என நீதிபதிகள் உத்தரவிட்டதுடன், வழக்கின் அடுத்தகட்ட விசாரணையை மே 17ம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.
- மணிப்பூரில் இதுவரை நடந்த கலவரங்களில் 60 பேர் உயிரிழந்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
- லேசான காயமடைந்தவர்களுக்கு ரூ. 25 ஆயிரமும் நிவாரணம் வழங்கப்படும் என்று அம்மாநில முதல்வர் அறிவித்துள்ளார்.
வடகிழக்கு மாநிலங்களில் ஒன்றான மணிப்பூரில் பா.ஜ.க. ஆட்சி நடக்கிறது. அங்கு, 53 சதவீத மக்கள் தொகையைக் கொண்டுள்ள மெய்டீஸ் இனத்தவர் தங்களுக்கு பழங்குடியின அந்தஸ்து வழங்கவேண்டும் என வலியுறுத்தி வருகின்றனர். இதற்கு எதிராக பழங்குடி மாணவர்கள் அமைப்பினர் போர்க்கொடி தூக்கி வருகின்றனர்.
கடந்த 3ம் தேதியன்று மணிப்பூர் அனைத்து பழங்குடி மாணவர் அமைப்பின் சார்பில், மலைப்பகுதிகளில் உள்ள 7 மாவட்டங்களில் ஒற்றுமை பேரணி நடத்தினர். அப்போது அவர்களுக்கும், மெய்டீஸ் இனத்தவருக்கும் இடையே ஏற்பட்ட மோதல் வன்முறையாக மாறியது.
வீடுகள், வாகனங்கள், கடைகள், வழிபாட்டுத் தலங்கள் தீயிட்டுக் கொளுத்தப்பட்டன. ராணுவமும், துணை ராணுவமும் குவிக்கப்பட்டனர். மொபைல் இணையதள சேவை முடக்கப்பட்டது. மணிப்பூரில் இதுவரை நடந்த கலவரங்களில் 60 பேர் உயிரிழந்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
இந்நிலையில் வன்முறையில் உயிரிழந்த 60 பேரின் குடும்பத்திற்கு ரூ.5 லட்சம் நிவாரணம் அளிக்கப்படும் என்று அம்மாநில முதல்வர் பிரேன் சிங் அறிவித்துள்ளார்.
மேலும் வன்முறையில் படுகாயம் அடைந்தவர்களுக்கு தலா ரூ.2 லட்சமும், லேசான காயமடைந்தவர்களுக்கு ரூ. 25 ஆயிரமும் நிவாரணம் வழங்கப்படும் என்று அம்மாநில முதல்வர் அறிவித்துள்ளார்.
- மெய்டேய் சமூகத்தினரை எஸ்டி பிரிவில் சேர்த்தால் மலைப்பகுதியில் நிலம் வாங்க முடியும்.
- ராணுவம் மற்றும் துணை ராணுவப் படையினர் தொடர்ந்து முகாமிட்டு, ரோந்து பணிகளில் ஈடுபட்டுள்ளனர்.
கவுகாத்தி:
வடகிழக்கு மாநிலங்களில் ஒன்றான மணிப்பூரில் மெய்டேய் இனத்தவர் தங்களுக்கு பழங்குடியின அந்தஸ்து வழங்கவேண்டும் என நீண்டகாலமாக வலியுறுத்தி வருகின்றனர். இதற்கு பழங்குடி அமைப்பினர் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். கடந்த 3ம் தேதியன்று குக்கி பழங்குடியின அமைப்பு சார்பில், மலைப்பகுதிகளில் உள்ள 7 மாவட்டங்களில் ஒற்றுமை பேரணி நடத்தினர். அப்போது அவர்களுக்கும், மெய்டேய் இனத்தவருக்கும் இடையே ஏற்பட்ட மோதல் வன்முறையாக மாறியது. இந்த வன்முறை பல்வேறு இடங்களுக்கும் பரவி 70க்கும் மேற்பட்டோர் பலியாகினர். வன்முறையைத் தொடர்ந்து ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. ராணுவம் குவிக்கப்பட்டு வன்முறை கட்டுக்குள் கொண்டு வரப்பட்டது.
இந்நிலையில், தலைநகர் இம்பாலின் நியூ செக்கான் பகுதியில் மெய்டேய் மற்றும் குக்கி சமூகத்தினரிடையே இன்று மீண்டும் மோதல் ஏற்பட்டது. உள்ளூர் மார்க்கெட்டில் வியாபாரம் செய்ய இடம்பிடிப்பது தொடர்பாக ஏற்பட்ட பிரச்சனையில் இந்த மோதல் உருவானது. மோதல் மற்ற இடங்களுக்கும் பரவும் அபாயம் இருந்ததால், மீண்டும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
மணிப்பூர் மாநில மக்கள்தொகையில் மெய்டேய் சமூகத்தினர் 64 சதவீதம் உள்ளனர். எனினும், மலைப் பகுதிகளில் பழங்குடியினர் அல்லாதவர்கள் நிலம் வாங்க அனுமதிக்கப்படாததால், மாநிலத்தின் 10 சதவீத நிலப்பகுதியிலேயே அவர்கள் வசிக்கின்றனர். அவர்களை எஸ்டி பிரிவில் சேர்த்தால் மலைப்பகுதியில் நிலம் வாங்க முடியும். எனவே, அவர்களின் இந்த கோரிக்கை பழங்குடியினரை ஆத்திரமடைய செய்துள்ளது.
பாஜக அரசாங்கம் தங்களை காடுகளிலிருந்தும் மலைகளில் உள்ள வீடுகளிலிருந்தும் அகற்றுவதை நோக்கமாக கொண்டு திட்டமிட்டு செயல்படுவதாக குக்கி சமூகத்தினர் குற்றம்சாட்டுகின்றனர். போதைப்பொருளுக்கு எதிரான போர் என்று கூறுவதும் தங்களை வெளியேற்றுவதற்கான ஒரு சூழ்ச்சி என்றும் கூறுகின்றனர்.
இரு சமூகங்களிடையே மோதல் உருவானதில் இருந்து ராணுவம் மற்றும் துணை ராணுவப் படையினர் தொடர்ந்து முகாமிட்டு, ரோந்து பணிகளில் ஈடுபட்டுள்ளனர்.
வன்முறையில் ஈடுபட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என உள்துறை மந்திரி அமித் ஷா உறுதியளித்துள்ளார். மேலும் இரு சமூகத்தினரையும் சந்தித்து பேசி உள்ளார்.
- மணிப்பூரில் ஊடுருவிய பயங்கரவாதிகள் 40 பேர் சுட்டுக் கொல்லப்பட்டனர்.
- ஹெலிகாப்டர் உதவியுடன் வான்வழி கண்காணிப்பு பணி நடந்து வருகிறது.
இம்பால்:
மணிப்பூர் முதல் மந்திரி பிரேன் சிங், இம்பால் நகரில் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:
வன்முறை சம்பவங்கள் மற்றும் பொதுமக்கள் மீது தாக்குதல்களை நடத்திய நபர்களுக்கு எதிராக பாதுகாப்பு படையினர் நடத்திய அதிரடி சோதனையில், ஆயுதமேந்திய ஊடுருவல்காரர்கள் 40 பேர் சுட்டுக் கொல்லப்பட்டனர்.
கடந்த 3-ம் தேதி மணிப்பூரில் ஏற்பட்ட வன்முறையை தொடர்ந்து, இந்திய ராணுவம் அதனைக் கட்டுப்படுத்தும் நடவடிக்கையாக தீவிர பணியில் ஈடுபட்டு வருகிறது.
இதில், பாதுகாப்புப் படையினருக்கும், ஆயுதமேந்திய பயங்கரவாதிகளுக்கும் இடையே துப்பாக்கிச் சண்டை நடந்துள்ளது. மக்கள் சமூகத்தினர் இடையே இல்லை. அதனால், மக்கள் அமைதி காக்க வேண்டும். ஒற்றுமையாக இருக்க வேண்டும். இதற்காக ஹெலிகாப்டர் உதவியுடன் வான்வழி கண்காணிப்பு பணியும் நடந்து வருகிறது என தெரிவித்தார்.
- கலவரக்காரர்கள் உடன் நடைபெற்ற மோதலில் சுமார் 40 பயங்கரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டனர்.
- பயங்கரவாதிகள் M-16 மற்றும் AK-47 ரக அசால்ட் ரைஃபிள் மற்றும் ஸ்னைப்பர் துப்பாக்கிகளை பயன்படுத்தினர்.
மணிப்பூரில் ஏற்பட்ட கலவரத்தில் சிக்கி போலீசார் உள்பட ஐந்து பேர் உயிரிழந்தனர். மேலும் 12 பேர் பலத்த காயமுற்றனர். கடந்த மாதம் ஏற்பட்ட கலவரத்தில் 70-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்த நிலையில், தற்போது மணிப்பூரில் மீண்டும் கலவரம் ஏற்பட்டு வருகிறது.
முன்னதாக கலவரக்காரர்கள் உடன் நடைபெற்ற மோதலில் சுமார் 40 பயங்கரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டனர் என மணிப்பூர் மாநில முதலமைச்சர் பைரன் சிங் தெரிவித்தார். இது பற்றி மேலும் பேசிய அவர் கூறியதாவது,
"பயங்கரவாதிகள் M-16 மற்றும் AK-47 ரக அசால்ட் ரைஃபிள் மற்றும் ஸ்னைப்பர் ரக துப்பாக்கிகளை பயன்படுத்தினர். அவர்கள் ஏராளமான கிராமங்களுக்குள் புகுந்து, வீடுகளுக்கு தீ வைத்தனர். ராணுவம் மற்றும் பாதுகாப்பு படையினர் மூலம், அவர்களுக்கு எதிராக மிக கடுமையான நடவடிக்கை எடுக்க துவங்கி விட்டோம். கிட்டத்தட்ட 40 பயங்கரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டஎனர் என்று தகவல்கள் கிடைத்துள்ளன," என்று தெரிவித்தார்.
கலவரம் ஏற்பட்டுள்ள மணிப்பூர் மாநிலத்துக்கு மத்திய உள்துறை மந்திரி அமித் ஷா இன்று பயணம் செய்கிறார். அமைதியை நிலைநாட்ட சமூகங்கள் அமைதி காக்க வேண்டும் என்று அமித் ஷா வலியுறுத்தி உள்ளார். முன்னதாக ராணுவ தளபதி மனோஜ் பாண்டே மணிப்பூருக்கு விரைந்து, அங்குள்ள சட்டம் ஒழுங்கு நிலைமையை ஆய்வு செய்தார்.