என் மலர்
நீங்கள் தேடியது "Manipur Riots"
- கலவரத்தால் மக்கள் பெரும் அவதிப்படுகின்றனர்.
- 3 ஆயிரம் முதல் 4 ஆயிரம் வீடுகள் கட்டப்படும்.
இம்பால் :
மணிப்பூரில் ஒரு மாதத்துக்கும் மேலாக நீடிக்கும் கலவரத்தால் ஆயிரக்கணக்கானோர் தங்கள் வீடுகளை விட்டு வெளியேறி நிவாரண முகாம்களில் தஞ்சமடைந்துள்ளனர். இந்த முகாம்களை மாநில முதல்-மந்திரி பைரேன் சிங் நேற்று பார்வையிட்டார்.
பின்னர் அவர் செய்தியாளர்களிடம் கூறுகையில், 'கலவரத்தால் மக்கள் பெரும் அவதிப்படுகின்றனர். நிவாரண முகாம்களில் தங்கியிருப்பவர்களை தங்கள் சொந்த இடங்களில் தங்க வைப்பதற்கு அரசு ஏற்பாடுகளை செய்யும்வரை அவர்களுக்கு ரெடிமேட் வீடுகளை வழங்க உள்ளது. இதற்காக 3 ஆயிரம் முதல் 4 ஆயிரம் வீடுகள் கட்டப்படும். அதற்கான தளவாடங்களுக்கு ஆர்டர் கொடுக்கப்பட்டு உள்ளன' என்றார்.
இந்த தளவாடங்கள் 2 வாரங்களுக்குள் இம்பால் வந்து சேரும் எனக்கூறிய அவர், இந்த வீடுகளை அமைப்பதற்கான இடத்தை அரசு பரிசீலித்து வருவதாகவும் தெரிவித்தார்.
இம்பால் மேற்கு மாவட்டத்தில் துப்பாக்கி சூட்டில் ராணுவ வீரர் ஒருவர் காயமடைந்தது குறித்து பைரேன் சிங் கூறுகையில், 'வன்முறையை நிறுத்துங்கள். இல்லையென்றால் கடும் விளைவுகளை சந்திக்க நேரிடும். மக்களையும் கேட்டுக்கொள்கிறேன், ஆயுதங்களுடன் இருக்கும் மெய்தி இனத்தினரையும் கேட்டுக்கொள்கிறேன், தாக்குதல்களை விட்டுவிட்டு அமைதியின் பாதைக்கு திரும்புங்கள். அப்போதுதான் மாநிலத்தில் இயல்பு நிலையை கொண்டு வர முடியும்' என்றும் கேட்டுக்கொண்டார்.
- சங்பரிவார் கும்பல்கள் மணிப்பூரில் காலடி வைத்ததில் இருந்து மணிப்பூர் பற்றி எரிகிறது.
- பிரதமர் மோடியின் இந்த போக்கை விடுதலை கட்சி சிறுத்தைகள் வன்மையாக கண்டிக்கிறது.
திருச்சி:
திருவாரூர் மாவட்டம் காட்டூரில் இன்று நடைபெற உள்ள கலைஞர் கோட்டத் திறப்பு விழாவில் கலந்துகொள்ள வருகை தந்த விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் எம்.பி. திருச்சி விமான நிலையத்தில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
வருகிற 23-ந்தேதி பீகார் முதல்வர் நிதிஷ்குமார் தலைமையில் பா.ஜ.க. அரசு எதிர்ப்பு கட்சித் தலைவர்களின் கலந்தாய்வுக் கூட்டம் நடைபெற உள்ளது.
இதில் 2024 நாடாளுமன்ற பொது தேர்தல் தொடர்பான வியூகங்களை வகுப்பதற்கும் எதிர்க்கட்சிகள் சிதறி போகாமல் ஒருங்கிணைக்கப்படுவதற்கும் இந்தக் கூட்டத்திற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதில் தமிழக முதல்வர் பங்கேற்க உள்ள நிலையில் அவர் எதிர்க்கட்சிகளை ஒன்றிணைக்க எடுக்கும் முயற்சிகளை தடுக்கும் விதமாக பாஜகவின் மோடி அரசு தொடர்ந்து பல்வேறு சதி திட்டங்களை வகுக்கிறது.
அதன் விளைவாகத்தான் அமலாக்கதுறையை ஏவி விட்டு அமைச்சர் செந்தில் பாலாஜியை 18 மணி நேரம் விசாரணை என்ற பெயரில் மன உளைச்சலுக்கு ஆளாக்கி அவரை கைது செய்துள்ளனர். எனவே இப்படிப்பட்ட எல்லா அடக்கு முறைகளையும் தாண்டி தமிழக முதல்வர் தற்போது இடதுசாரிகள், காங்கிரஸ் உள்ளிட்ட பல்வேறு கட்சியினரை ஒன்றிணைக்கும் நோக்கத்தில் செயல்படுவதற்கு விடுதலை சிறுத்தைகள் கட்சி என்றும் உறுதுணையாக இருக்கும்.
மணிப்பூரில் பா.ஜ.க. உள்ளிட்ட சங்பரிவார் கும்பல்களால் பழங்குடியின மக்களுக்கு இடையே இந்து மற்றும் கிறிஸ்தவர்கள் என்ற பாகுபாட்டை உருவாக்கி அவர்களுக்குள் மோதலை ஏற்படுத்தி இன்று பல்லாயிரக்கணக்கானோர் அகதிகளாக மற்றொரு இடத்திற்கு இடம் பெயரும் நிலை ஏற்பட்டுள்ளது. பலர் கொலை செய்யப்பட்டுள்ளனர்.
இந்த சங்பரிவார் கும்பல்கள் மணிப்பூரில் காலடி வைத்ததில் இருந்து மணிப்பூர் பற்றி எரிகிறது. இவை அனைத்தையும் பிரதமர் மோடி வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்கிறார். பிரதமர் மோடியின் இந்த போக்கை விடுதலை கட்சி சிறுத்தைகள் வன்மையாக கண்டிக்கிறது.
கிருஷ்ணகிரி மாவட்டம் போச்சம்பள்ளி பகுதியை சேர்ந்த நரிக்குறவர் சமூகத்தை சேர்ந்த ஐயப்பன் என்பவரை ஆந்திர மாநில காவல் துறையினர் கைது செய்து அழைத்துச் சென்றபோது எதற்காக கைது செய்கிறீர்கள் என்று கேள்வி எழுப்பினர். இதனால் அவருடைய குடும்பத்தாரையும் சேர்த்து கைது செய்து பல சித்திரவதைகளை தந்து கடந்த ஒரு வார காலமாக பல்வேறு இன்னல்களுக்கு ஆளாக்கியுள்ளனர்.
தமிழக அரசு இதில் தலையிட்டு உடனடியாக பாதிக்கப்பட்ட அந்த குடும்பங்களுக்கான நீதியை வழங்கிட முன்வர வேண்டும். மேலும் இந்த வன்கொடுமையில் ஈடுபட்ட சித்தூர் காவல் நிலைய அதிகாரிகளை கண்டித்து வருகின்ற 26-ந்தேதி ஆந்திர மாநிலம் சித்தூர் விடுதலை சிறுத்தை கட்சிகளின் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற உள்ளது.
எஸ்.வி.சேகர் பிராமணர்களுக்கு என்று ஒரு தனியான கட்சி ஆரம்பிக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. அவருக்கு என்னுடைய வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறேன்.
இவ்வாறு அவர் கூறினார்.
அ.தி.மு.க. கூட்டணியில் உள்ள பா.ஜ.க. விலகினால் விடுதலை சிறுத்தைகள் கட்சி அ.தி.மு.க.வுடன் கூட்டணி வைக்குமா என்று நிருபர்கள் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த திருமாவளவன், முதலில் இதற்கு பா.ஜ.க. விளக்கம் அளித்த பிறகு பார்ப்போம் என்றார்.
- இணையச் சேவைக்கு தடை விதிக்கப்பட்ட நிலையில், கடந்த 10ம் தேதி தடையை நீட்டித்து மாநில அரசு உத்தரவு பிறப்பித்தது.
- மணிப்பூர் கலவரம் மற்றும் அதன் பிறகான வன்முறையில் 100 பேர் வரை உயிரிழந்துள்ளனர்.
மணிப்பூர் மாநிலத்தில் கடந்த மாதம் 3ம் தேதி முதல் இணையச் சேவைக்கு தடை நீடித்து வருகிறது.
மணிப்பூரில் மைதேயி சமூகத்தினர் மற்றும் குகி பழங்குடியினருக்கு இடையே கடந்த மாதம் தொடக்கத்தில் பெரும் கலவரம் ஏற்பட்டது.
இதைத் தொடர்ந்து அங்கு வன்முறை சம்பவங்கள் தொடர்ந்து வருகின்றன. மணிப்பூர் கலவரம் மற்றும் அதன் பிறகான வன்முறையில் 100 பேர் வரை உயிரிழந்துள்ளனர்.
இதனால், இணையச் சேவைக்கு தடை விதிக்கப்பட்டிருந்த நிலையில், கடந்த 10ம் தேதி தடையை நீட்டித்து மாநில அரசு உத்தரவு பிறப்பித்தது.
வெறுப்புணர்வைத் தூண்டக் கூடிய புகைப்படங்கள், வீடியோக்கள், பேச்சுகளை பரப்ப சில சமூக விரோத சக்திகள் சமூக ஊடகங்களை பயன்படுத்த வாய்ப்பு உள்ளது என்பதால் இணையச் சேவை தடை 15-ந்தேதி வரை நீட்டிக்கப்படுவதாக உத்தரவில் குறிப்பிடப்பட்டிருந்தது.
இதற்கிடையே, இம்பாலில் கடந்த வாரம் வெளியுறவுத்துறை இணை அமைச்சர் ராஜ்குமார் ரஞ்சன் சிங்கின் வீடு தீ வைத்து எரிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில், மணிப்பூரில் இணையத்தள சேவைக்கான தடை வரும் 25ம் தேதி வரை நீட்டித்து உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
- மணிப்பூரில், பா.ஜனதா ஆட்சி நடந்து வருகிறது.
- 100-க்கும் மேற்பட்டோர் பலியான பிறகும் கலவரம் நீடித்து வருகிறது.
புதுடெல்லி :
வடகிழக்கு மாநிலமான மணிப்பூரில், பா.ஜனதா ஆட்சி நடந்து வருகிறது. அங்கு பெரும்பான்மையினரான 'மெய்தி' இன மக்களுக்கும், பழங்குடியின மக்களுக்கும் இடையே கடந்த மாதம் கலவரம் வெடித்தது. 100-க்கும் மேற்பட்டோர் பலியான பிறகும் கலவரம் நீடித்து வருகிறது.
பா.ஜனதா தலைவர்களின் வீடு மற்றும் சொத்துகளை குறிவைத்து தாக்குதல் நடந்து வருகிறது. கலவரத்தை கட்டுப்படுத்த தவறியதாக மத்திய, மாநில அரசுகள் மீது காங்கிரஸ் குற்றம்சாட்டி வருகிறது.
இந்நிலையில், பாராளுமன்ற காங்கிரஸ் தலைவர் சோனியாகாந்தி, ஒரு வீடியோ உரையை வெளியிட்டுள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது:-
அனைத்து இனங்கள், மதங்கள் கொண்ட மக்களை அரவணைத்துக் கொள்ளும் திறனுக்கு மணிப்பூர் வரலாறு சாட்சியாக அமைந்துள்ளது.
சகோதரத்துவ உணர்வை வளர்க்க அளப்பரிய நம்பிக்கையை உருவாக்க வேண்டி உள்ளது. ஆனால், வெறுப்பையும், பிரிவினையையும் தூண்டிவிட ஒரே ஒரு தவறான செயல் போதும்.
மணிப்பூரில், ஒருவருக்கொருவர் அமைதியாக இணைந்து வாழ்ந்த சகோதர, சகோதரிகள், ஒருவரை ஒருவர் எதிராக நிற்பதை பார்ப்பது இதயத்தை நொறுக்குவதாக அமைந்துள்ளது.
தாங்கள் வாழ்ந்த வீட்டையும், பல ஆண்டுகளாக சேகரித்து வைத்த பொருட்களையும் அவர்கள் விட்டுச்செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. முன்எப்போதும் கண்டிராத வன்முறை, மக்களின் வாழ்க்கையை சீரழித்துள்ளது. நாட்டின் மனசாட்சியில் ஆழமான காயத்தை ஏற்படுத்தி இருக்கிறது.
எனவே, மணிப்பூர் மக்களை, குறிப்பாக துணிச்சலான சகோதரிகளை கேட்டுக்கொள்கிறேன். இந்த அழகிய மண்ணில் அமைதியையும், நல்லிணக்கத்தையும் கொண்டு வாருங்கள். ஒரு தாயாக, அவர்களது வேதனை எனக்கு புரிகிறது.
இருப்பினும், அமைதி பாதையை தேர்ந்தெடுத்தால்தான், நமது குழந்தைகளின் எதிர்காலத்துக்கும் சிறப்பாக அமையும். இனிவரும் வாரங்களிலும், மாதங்களிலும் நம்பிக்கையை கட்டமைப்பதற்கான நீண்ட பயணத்தை மேற்கொள்வோம்.
மணிப்பூர் மக்கள் மீது எனக்கு ஆழ்ந்த நம்பிக்கை உள்ளது. இந்த சோதனையான காலகட்டத்தை நாம் ஒன்றுசேர்ந்து கடப்போம்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
- மணிப்பூரில் இரு பிரிவுகளைச் சேர்ந்த மக்களிடையே ஏற்பட்ட மோதல் வன்முறையாக மாறியது.
- இந்த வன்முறை சம்பவங்களில் இதுவரை நூற்றுக்கணக்கானோர் உயிரிழந்துள்ளனர்.
புதுடெல்லி:
மணிப்பூரில் கடந்த மாதம் இரு பிரிவுகளைச் சேர்ந்த மக்களிடையே மோதல் ஏற்பட்டதன் காரணமாக மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் வன்முறை வெடித்தது. இந்த வன்முறை சம்பவங்களில் இதுவரை நூற்றுக்கணக்கானோர் உயிரிழந்த நிலையில், கலவரம் ஏற்பட்ட பகுதிகளில் இருந்து ஆயிரக்கணக்கான மக்கள் வெளியேற்றப்பட்டு 349 நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.
கலவரம் தொடர்பான வழக்குகளை சிபிஐ சிறப்பு புலனாய்வு குழு விசாரித்து வருகிறது.
இந்நிலையில், மணிப்பூர் கலவரம் தொடர்பாக தலைநகர் டெல்லியில் உள்ள பழைய பாராளுமன்ற கட்டிடத்தில் அனைத்துக் கட்சிக் கூட்டம் இன்று நடைபெற்று வருகிறது.
இந்தக் கூட்டத்துக்கு மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா தலைமை தாங்கினார். தி.மு.க. எம்.பி. திருச்சி சிவா, அ.தி.மு.க. எம்.பி. தம்பிதுரை உள்ளிட்டோர் பங்கேற்றுள்ளனர்.
இதில் மணிப்பூர் கலவரத்தை கட்டுப்படுத்துவது தொடர்பாக அனைத்து கட்சிகளிடம் கருத்துகள் கேட்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
- மணிப்பூர் வன்முறை தொடர்பாக உள்துறை மந்திரி அமித்ஷா தலைமையில் அனைத்துக்கட்சி கூட்டம் நடந்தது.
- இதில் பா.ஜ.க, காங்கிரஸ், திரிணாமுல் காங்கிரஸ், திமுக, அதிமுக, உள்ளிட்ட பல்வேறு கட்சிகள் பங்கேற்றன.
புதுடெல்லி:
மணிப்பூர் வன்முறை தொடர்பாக உள்துறை மந்திரி அமித்ஷா தலைமையில் டெல்லியில் இன்று அனைத்துக்கட்சி கூட்டம் நடைபெற்றது.
இந்தக் கூட்டத்தில் பா.ஜ.க, காங்கிரஸ், திரிணாமுல் காங்கிரஸ், தி.மு.க, அ.தி.மு.க, ஆம் ஆத்மி, இடதுசாரிகள், சமாஜ்வாதி உள்பட பல்வேறு கட்சிகளின் பிரதிநிதிகள் பங்கேற்றனர்.
இக்கூட்டத்தில் அனைத்துக்கட்சி குழுவினர் மணிப்பூர் செல்ல அனுமதிக்க வேண்டுமென அமித்ஷாவிடம் எதிர்க்கட்சிகள் கோரிக்கை விடுத்தன. ஆனால் இந்த கோரிக்கை தொடர்பாக இதுவரை எந்த முடிவும் உள்துறை தரப்பில் இருந்து வெளியாகவில்லை.
மேலும், மணிப்பூர் முதல் மந்திரி பிரேன் சிங்கை உடனே பதவி நீக்கம் செய்யவேண்டும் என காங்கிரஸ் கோரிக்கை விடுத்தது. மணிப்பூரில் ஜனாதிபதி ஆட்சியை அமல்படுத்த வேண்டும் என சமாஜ்வாதி உள்ளிட்ட கட்சிகள் உள்துறை மந்திரியிடம் கோரிக்கை விடுத்தன.
- ஆயுதங்களுடன் கிளர்ச்சியாளர்களை பிடித்து வைத்திருந்தது ராணுவம்
- கிராம மக்கள் ஒன்றாக திரண்டதால் உயிர்ச்சேதம் நிகழக்கூடாது என்பதால் ராணுவம் வெளியேற்றம்
மணிப்பூர் மாநிலத்தில் மைதேயி பிரிவினர் தங்களை பழங்குடியினர் பட்டியலில் சேர்க்க வேண்டும் என வலியுறுத்தி வருகின்றனர். ஏற்கனவே பழங்குடியினர் பட்டியலில் இருக்கும் குகி இனத்தவர்கள் இதற்கு எதிர்ப்பு தெரிவிக்கின்றனர்.
கடந்த மே மாதம் 3-ந்தேதி 'பழங்குடியினர் ஒற்றுமை பேரணி'யை மைதேயி பிரிவினருக்கு எதிராக மழை மாவட்ட மக்கள் நடத்தினர். அப்போது வன்முறை வெடித்தது. அதில் இருந்து இன்னும் வன்முறை ஓயவில்லை. சுமார் 100-க்கும் மேற்பட்டோர் பலியாகியுள்ளனர்.
மைதேயி இனத்தவர்களில் சிலர் ஆயுதம் ஏந்தி சண்டையிட்டு வருகின்றனர். அவர்கள் கிராம மக்களுடன் கலந்து இருப்பதால் அவர்களை கைது செய்வதில் போலீசார், அதிரடிப்படைக்கு சிரமம் ஏற்பட்டுள்ளது.
இந்த நிலையில் மணிப்பூர் இம்பாலின் கிழக்குப் பகுதியில் உள்ள இதாம் கிராமத்தில் ஆயுதங்களுடன் கிளர்ச்சியாளர்கள் மறைந்து இருந்தனர். அப்போது, ராணுவ வீரர்கள் தேடுதல் வேட்டை நடத்தி கிளர்ச்சியாளர்களிடம் இருந்து ஆயுதங்களை கைப்பற்றியதுடன் அவர்களையும் கைது செய்தனர்.
அந்த நேரத்தில் ராணுவ நடவடிக்கைக்கு எதிராக கிராம மக்கள் திரண்டனர். அவர்கள் ராணுவத்தை சுற்றி வளைத்து போராட்டத்தில் ஈடுபட்டனர். பெண்கள் தலைமையிலான குழுக்களும் ராணுவத்தை எதிர்த்து நின்றன. ராணுவ நடவடிக்கை எடுத்தால் கடும் உயிர்ச்சேதம் நிகழும் என்பதால், ராணுவம் என்ன செய்வது என்று தெரியாமல் நின்றது. பின்னர், மனிதாபிமான அடிப்படையில் கிளர்ச்சியாளர்களை விடுவித்து கைப்பற்றிய ஆயுதங்களுடன் ராணுவம் வெளியேறியது.
2015-ம் ஆண்டு டோக்ரா யுனிட் மீது தாக்குதல் நடத்திய நபர்கள் இந்த குழுவில் இடம்பிடித்திருந்ததாக ராணுவம் தரப்பில் கூறப்படுகிறது.
மக்கள் உயிருக்கு எதிராக கடினமான முடிவு எடுக்க விரும்பவில்லை, முதிர்ச்சியாக முடிவு எடுக்கப்பட்டுள்ளது என ராணுவ அதிகாரிகள் தெரிவித்தனர். நேற்றில் இருந்து தொடர்ந்து மக்கள் முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டு வந்ததால், ராணுவம் இறுதியில் வெளியேறியது.
- மணிப்பூரில் ஏற்பட்ட வன்முறை சம்பவங்களால் இதுவரை நூற்றுக்கணக்கானோர் உயிரிழந்தனர்.
- கலவரம் எதிரொலியால், மணிப்பூரில் இணைய சேவை தடை வரும் 30 ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டது.
மணிப்பூர்:
மணிப்பூரில் கடந்த மாதம் இரு பிரிவுகளைச் சேர்ந்த மக்களிடையே மோதல் ஏற்பட்டதால் மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் வன்முறை வெடித்தது. இந்த வன்முறை சம்பவங்களில் இதுவரை நூற்றுக்கணக்கானோர் உயிரிழந்த நிலையில், கலவரம் ஏற்பட்ட பகுதிகளில் இருந்து ஆயிரக்கணக்கான மக்கள் வெளியேற்றப்பட்டு 349 நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.
கலவரம் தொடர்பான வழக்குகளை சிபிஐ சிறப்பு புலனாய்வு குழு விசாரித்து வருகிறது. கலவரத்தைக் கட்டுப்படுத்த அம்மாநில அரசு இணைய சேவையை முடக்கி வருகிறது. இதனால் மணிப்பூர் மாநிலத்தில் ஒரு மாத காலத்துக்கும் மேலாக இணைய சேவை துண்டிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், பொது ஒழுங்கு சீர்குலைவதைத் தடுக்கும் வகையில் மணிப்பூரில் இணைய சேவை தடை ஜூன் 30-ம் தேதி மாலை 3 மணி வரை நீட்டிக்கப்படுகிறது என அம்மாநில அரசு தெரிவித்துள்ளது.
- வன்முறையை காரணமாக வைத்து அரசு ஊழியர்கள் பணிக்கு வருவது இல்லை என்ற குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
- அரசு அலுவலர்கள் பணிக்கு வராத பட்சத்தில் சம்பளம் வழங்கப்படாது என அரசு அறிவித்துள்ளது.
இம்பால்:
வடகிழக்கு மாநிலமான மணிப்பூரில் இரு சமூகத்தினருக்கு இடையே ஏற்பட்ட மோதல் பெரும் கலவரமாக மாறி கடந்த ஒரு மாதமாக வன்முறை சம்பவங்கள் அரங்கேறி வருகின்றன. இதில் 100-க்கும் மேற்பட்டவர்கள் இறந்துள்ளனர்
வன்முறையை காரணமாக வைத்து பெரும்பாலான அரசு ஊழியர்கள் பணிக்கு வருவது இல்லை என்ற குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இதனால், அரசு அலுவலகங்களில் பணிகள் முடங்கியுள்ளன.
மணிப்பூர் மாநிலத்தில் சுமார் 1 லட்சத்துக்கும் மேற்பட்ட அரசு ஊழியர்கள் பணி செய்து வருகின்றனர்.
இந்நிலையில், முதல் மந்திரி பிரேன் சிங் தலைமையில் நடந்த ஆலோசனைக் கூட்டத்தில் அரசு அலுவலர்கள் பணிக்கு வராத பட்சத்தில் சம்பளம் வழங்கப்படாது என முடிவு எடுக்கப்பட்டுள்ளது. அங்கீகரிக்கப்பட்ட விடுமுறை தவிர்த்து, வேலைக்கு வராதவர்களுக்கு 'நோ ஒர்க் நோ பே' விதி பின்பற்றப்பட்டு சம்பளம் வழங்கப்படாது என கூறப்பட்டுள்ளது.
- மணிப்பூரில் ஏற்பட்ட வன்முறையால் 100க்கும் அதிகமானோர் உயிரிழந்துள்ளனர்.
- இம்பாலில் பா.ஜ.க. அலுவலகம் கூடியிருந்த கூட்டத்தினை கலைக்க போலீசார் கண்ணீர் புகை குண்டுகள் வீசினர்.
இம்பால்:
மணிப்பூரில் மெய்தி சமூகத்தினருக்கும், பழங்குடி பிரிவினருக்கும் ஒரு மாதத்திற்கும் கூடுதலாக கலவரம் நீடித்து வருகிறது. இந்த மோதலில் பொதுமக்களில் 100-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர்.
கலவரம் ஏற்பட்ட பகுதிகளில் இருந்து ஆயிரக்கணக்கான மக்கள் வெளியேற்றப்பட்டு 349 நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். கலவரம் தொடர்பான வழக்குகளை சிபிஐ சிறப்பு புலனாய்வு குழு விசாரித்து வருகிறது.
இதற்கிடையே, காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி இன்று மணிப்பூர் மாநிலம் சென்றார். இம்பால் நகரில் வன்முறையால் பாதிக்கப்பட்டு நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ள மக்களை நேரில் சந்தித்து அவர்களுக்கு ஆறுதல் கூறினார்.
இந்நிலையில், மணிப்பூர் மாநிலம் இம்பாலில் உள்ள பா.ஜ.க.வின் பிராந்திய அலுவலகம் அருகே இன்று மாலை ஏராளமானோர் திரண்டனர். அவர்களை தடுத்து நிறுத்தி கலைக்க போலீசார் பல சுற்று கண்ணீர் புகை குண்டுகளை வீசியதால் அப்பகுதி பரபரப்பாக காணப்பட்டது. கூட்டம் கலைக்கப்பட்டு தற்போது நிலைமை கட்டுக்குள் உள்ளது என போலீசார் தெரிவித்துள்ளனர்.
- தாக்குதலில் ஈடுபட்ட கும்பல் கிராமத்தில் உள்ள 5 பேரை பிணை கைதிகளாக கடத்தி சென்றனர்.
- சுப்ரீம் கோர்ட்டு தலைமை நீதிபதி அமர்வில் இந்த மனுக்கள் இன்று விசாரணைக்கு வந்தது.
புதுடெல்லி:
வடகிழக்கு மாநிலமான மணிப்பூரில் பெரும்பான்மையாக உள்ள மைதேயி சமூகத்தினர், தங்களுக்கு பழங்குடியின அந்தஸ்து வழங்க வேண்டும் என்று கோரி வருகிறார்கள். இதற்கு குகி பழங்குடியினர் எதிர்ப்பு தெரிவிக்கிறார்கள்.
இந்த பிரச்சினையில் இரு சமூகத்தினர் இடையே மோதல் நீடித்து வருகிறது. இரு சமூகங்கள் சார்ந்த தீவிரவாத குழுக்களும் தாக்குதல் நடத்துவதால் உயிரிழப்புகள் ஏற்பட்டு வருகின்றன. 50 நாட்களுக்கு மேலாக மணிப்பூரில் வன்முறை நீடித்து வருகிறது.
20 ஆயிரம் பாதுகாப்பு படை வீரர்கள் குவிக்கப்பட்டு இருந்தும் அங்கு அமைதி திரும்பவில்லை. மணிப்பூர் வன்முறையில் இதுவரை 120-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்து உள்ளனர். 3 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் காயம் அடைந்துள்ளனர். பொது சொத்துக்களுக்கும், தனியார் சொத்துக்களுக்கும் சேதம் விளைவிக்கப்பட்டது.
இந்த நிலையில் மாண்டபி கிராமத்தில் ஒரு கும்பல் நேற்று இரவில் துப்பாக்கி சூடு நடத்தியது. கிராமத்தின் பாதுகாப்பு பணியில் இருந்த தன்னார்வலர்கள் எதிர் தாக்குதல் நடத்தினர்.
பல மணிநேரம் நடந்த இந்த துப்பாக்கி சண்டையில் தன்னார்வலர்கள் 3 பேர் குண்டு பாய்ந்து பலியானார்கள். 5 பேர் காயம் அடைந்தனர். அவர்களில் 2 பேர் நிலைமை கவலைக்கிடமாக உள்ளது. ஒருவரது தலை துண்டிக்கப்பட்டது.
மேலும் தாக்குதலில் ஈடுபட்ட கும்பல் கிராமத்தில் உள்ள 5 பேரை பிணை கைதிகளாக கடத்தி சென்றனர். பல வீடுகளுக்கு தீ வைப்பு சம்பவமும் நிகழ்ந்தது.
இந்நிலையில் மணிப்பூர் வன்முறை தொடர்பாக ஒரு வாரத்துக்குள் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என்று சுப்ரீம் கோர்ட்டு இன்று உத்தரவிட்டது.
மணிப்பூர் வன்முறை தொடர்பாக சுப்ரீம் கோர்ட்டில் ஏராளமான மனுக்கள் செய்யப்பட்டு உள்ளன. ராணுவத்தினரின் எண்ணிக்கையை குறைக்க வேண்டும், பேச்சுவார்த்தை மூலம் தீர்வு காண வேண்டும், ஒரு குறிப்பிட்ட பழங்குடியினருக்கு பாதுகாப்பு வழங்க வேண்டும் என்பது உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டு இருந்தன.
சுப்ரீம் கோர்ட்டு தலைமை நீதிபதி அமர்வில் இந்த மனுக்கள் இன்று விசாரணைக்கு வந்தது.
மணிப்பூர் மாநிலம் நிலைமை கொஞ்சம் கொஞ்சமாக சீரடைந்து வருவதாகவும், ஊரடங்கு நேரம் குறைக்கப்பட்டு வருவதாகவும் மத்திய அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது. 153 நிவாரண முகாம்கள் அமைக்கப்பட்டு பொது மக்கள் பாதுகாக்கப்படுவதாகவும் மத்திய அரசு வக்கீல் தெரிவித்தார்.
இதையடுத்து மணிப்பூர் நிலைமை குறித்த அனைத்து தகவல்களும் அடங்கிய புதிய அறிக்கையை ஒரு வாரத்துக்குள் தாக்கல் செய்ய வேண்டும் என்று சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டது. அறிக்கை அடிப்படையில்தான் வழக்கை விசாரிக்க முடியும் என்று தலைமை நீதிபதி தெரிவித்தார்.
இந்த வழக்கு விசாரணை 10-ந் தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்டது.
- கலவரம் மற்றும் வன்முறையால் மணிப்பூர் பாதிப்பு அடைந்துள்ளது.
- ராகுல் காந்தி ஜூன் 29, 30-ம் தேதிகளில் அங்கு பயணம் மேற்கொண்டார்.
இம்பால்:
மணிப்பூரில் கடந்த மே மாதம் 3-ம் தேதி இரு சமூகத்தினருக்கிடையே கலவரம் மூண்டது. இதில் சுமார் 100 பேர் பலியானார்கள். தொடர்ந்து அடிக்கடி வன்முறை பரவி வரும் சூழலில் மக்கள் அச்சத்துடன் உள்ளனர்.
மோதலைத் தூண்டும் வகையில் சமூக வலைதளங்களில் வதந்தி பரப்பப்படுவதை தடுக்க மே 3-ம் தேதி இணையதள சேவைக்கு தடை விதிக்கப்பட்டது. கலவரம் எதிரொலியாக இணையதள சேவைக்கான தடை தொடர்ந்து நீட்டிக்கப்பட்டது.
இந்நிலையில், மணிப்பூரில் முதலமைச்சர் பிரேன் சிங் தலைமையில் ஆலோசனைக் கூட்டம் இன்று நடைபெற்றது.
இந்தக் கூட்டத்தில், மாநிலத்தின் பிரதான தொழிலாக இருக்கும் விவசாயம் மீண்டும் சீரான முறையில் நடைபெறுவதற்கு முக்கியத்துவம் கொடுக்க வேண்டும். விவசாயிகளுக்கு கூடுதல் பாதுகாப்பு வழங்க வேண்டும் என முடிவெடுக்கப்பட்டுள்ளது.
விரைவில் மாநிலம் முழுவதும் இயல்புநிலை திரும்ப வேண்டும்.
வன்முறை குழுக்கள் உருவாக்கியுள்ள பதுங்கு குழிகள் அழிக்கப்பட வேண்டும். 1 முதல் 8-ம் வகுப்பு வரை பள்ளிகள் வரும் புதன்கிழமை முதல் இயங்கும் என முடிவெடுக்கப்பட்டுள்ளது.