search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "சட்டக் கல்லூரி"

    • 206 உதவிப் பேராசிரியர் பணியிடங்களில் 70 பணியிடங்கள் காலியாக உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
    • தமிழ்நாட்டில் நிலைமை மோசமாக இருக்கிறது.

    சென்னை:

    முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

    தமிழ்நாட்டில் உள்ள சட்டக் கல்லூரிகளில் பேராசிரியர், உதவிப் பேராசிரியர் காலிப் பணியிடங்கள் தொடர்பான வழக்கு சென்னை உயர் நீதிமன்றம் முன்பு விசாரணைக்கு வந்தபோது, சட்டக் கல்வி இயக்குனர் சார்பில் தாக்கல் செய்யப்பட்ட மனுவில், தமிழ்நாட்டில் உள்ள 15 சட்டக் கல்லூரிகளில் அனுமதிக்கப்பட்ட 20 இணைப் பேராசிரியர் பணியிடங்களில் 19 பணியிடங்கள் காலியாக உள்ளதாகவும், 206 உதவிப் பேராசிரியர் பணியிடங்களில் 70 பணியிடங்கள் காலியாக உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த அளவுக்கு அதிகமான காலிப் பணியிடங்களை நிரப்பாதது தி.மு.க. அரசின் அக்கறையின்மையை வெளிச்சம் போட்டு காட்டுகிறது. ஆசிரியர்களை நியமிக்க முடியாவிட்டால் சட்டக் கல்லூரிகளை மூடுவதே நல்லது என்று சென்னை உயர் நீதிமன்றம் குட்டு வைக்கும் அளவுக்கு தமிழ்நாட்டில் நிலைமை மோசமாக இருக்கிறது.

    முதலமைச்சர் இதில் உடனடியாகத் தலையிட்டு, சட்டக் கல்லூரிகள் உட்பட அனைத்துக் கல்லூரிகளிலும் காலியாக உள்ள இணைப் பேராசிரியர், உதவிப் பேராசிரியர் பணியிடங்களை உடனடியாக நிரப்ப போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

    • பாட்னா சட்டக் கல்லூரிக்குள் நுழைந்த கருப்பு முகமூடி அணிந்த மர்ம நபர்கள் ஹர்ஷ் ராஜ் என்ற இளைஞனை கட்டையால் கடுமையாக தாக்கிவிட்டு தப்பிச்சென்றுள்ளனர்.
    • தாண்டியா நடன நிகழ்வில் ஹர்ஷ ராஜ் குழுவுக்கும் சந்தன் யாதவ் குழுவுக்கும் தகராறு ஏற்பட்டுள்ளது.

    பிகார் தலைநகர் பாட்னாவில் சட்டக் கல்லூரி வளாகத்துக்குள் வைத்து மாணவன் கொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. நேற்று (மே 27) பாட்னா சட்டக் கல்லூரிக்குள் நுழைந்த கருப்பு முகமூடி அணிந்த மர்ம நபர்கள், அங்கு படித்து வந்த ஹர்ஷ் ராஜ் (22) என்ற இளைஞனை கட்டையால் கடுமையாக தாக்கிவிட்டு தப்பிச்சென்றுள்ளனர்.

     

    தகவலறிந்து உடனடியாக சம்பவ இடத்துக்கு வந்த போலீஸ் ரத்த வெள்ளத்தில் மிதந்த ஹர்ஸ் ராஜை மருத்துவமனையில் அனுமதித்தனர். ஆனால் சிகிச்சைப் பலனின்றி அவர் உயிரிழந்தார். இந்த சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்து விசாரித்து வந்த போலீசார், கல்லூரியில் உள்ள சிசிடிவி கட்சிகளைக் கைப்பற்றி ஆராய்ந்ததில் குற்றவாளியை கண்டுபிடித்துள்ளனர்.

    இன்று (மே 28) இந்த தாக்குதலுக்கு மூளையாக செயல்பட்ட அதே கல்லூரியில் இறுதியாண்டு படித்து வரும் சந்தன் யாதவ் என்ற மாணவனை கைது செய்த்துள்ளனர். அவரின் நடத்திய விசாரணையில், கடந்த ஆண்டு கல்லூரியில் தாண்டியா நடன நிகழ்வில் ஹர்ஷ ராஜ் குழுவுக்கும் சந்தன் யாதவ் குழுவுக்கும் தகராறு ஏற்பட்டுள்ளது.

    அதிலிருந்து சின்ன சின்ன உரசாலாக இரு குழுக்களுக்கும் இடையே அவ்வப்போது பிரச்சனை ஏற்பட்டுள்ளது. இந்த பிரச்சினையே பூதாகாரமாக மாறி மாணவனின் உயிரைப் பறித்தது தெரியவந்துள்ளது. இதைதொடர்ந்து ஹர்ஷ் ராஜின் மரணத்துக்கு நீதி கேட்டு மாணவர்கள் போரட்டடத்தில் ஈடுபட்டுள்ளனர். மேலும் மாநிலத் தலைநகர் உள்ள சட்டக் கல்லூரி வளாகத்துக்குள் வைத்தே மாணவன் கொல்லப்பட்ட சம்பவத்துக்கு எதிர்க்கட்சிகள் கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றன. 

     

    • 13 சட்டக்கல்வி நிறுவனங்களில் இருந்து 141 மாணவ-மாணவிகள் போட்டியில் கலந்து கொண்டனர்.
    • போட்டியில் மாணவி கிருஷ்ண நிகிதா முதலிடத்தை பிடித்தார்.

    சிவகிரி:

    வாசுதேவநல்லூரில் செயல்பட்டு வரும் எஸ். தங்கப்பழம் சட்டக் கல்லூரி சார்பில் 2-வது தேசிய அளவிலான ஆன்லைன் வினாடி வினா போட்டி நடைபெற்றது. போட்டியில் தமிழகத்தில் 19 சட்டக்கல்லூரிகள் மற்றும் மற்ற மாநிலத்தில் இருந்து தேசிய சட்டப் பல்கலைக்கழகம் மற்றும் நிகர்நிலை பல்கலைக்கழகங்கள் உட்பட 13 சட்டக்கல்வி நிறுவனங்களில் இருந்து 141 மாணவ-மாணவிகள் கலந்து கொண்டனர். தேசிய அளவிலான ஆன்லைன் வினாடி வினா போட்டியில் ஆந்திர மாநில கே.எல். நிகர்நிலைப் பல்கலைக்கழக மாணவி கிருஷ்ண நிகிதா முதலிடத்தையும், தமிழக சாஸ்திரா நிகர்நிலை பல்கலைக்கழக மாணவி அநன்யா ஸ்ரீ 2-ம் இடத்தையும் பிடித்தனர்.

      முதல் பரிசு பெற்ற மாணவி கிருஷ்ண நிகிதாவிற்கு ரொக்க பரிசு 10 ஆயிரத்தையும், 2-ம் பரிசு பெற்ற மாணவி அநன்யா ஸ்ரீக்கு ரொக்க பரிசாக 5 ஆயிரத்தையும் எஸ்.தங்கப்பழம் கல்விக் குழுமங்களின் செயலாளர் எஸ்.டி. முருகேசன் வழங்கினார். ஏற்பாடுகளை உதவி பேராசிரியர்கள் குமார் மற்றும் வெங்கடேஷ் ஆகியோர் செய்திருந்தனர்.

    • பொதுமக்கள் பயன்பெறும் வகையில் சீவநல்லூர் கிராமத்தில் சட்ட விழிப்புணர்வு முகாம் நடைபெற்றது.
    • பெண் கல்வி, குடிமக்களின் அடிப்படை உரிமைகள் குறித்து பொதுமக்களிடம் சட்டக் கல்லூரி மாணவ, மாணவிகள் விளக்கி பேசினர்.

    சிவகிரி:

    வாசுதேவநல்லூரில் உள்ள எஸ். தங்கப்பழம் சட்டக் கல்லூரி சார்பில் சீவநல்லூர் கிராமத்தில் பொதுமக்கள் பயன்பெறும் வகையில் சட்ட விழிப்புணர்வு முகாம் நடைபெற்றது. எஸ். தங்கப்பழம் கல்வி குழுமத் தாளாளர் எஸ்.டி. முருகேசன் ஆலோசனையின்படி, எஸ். தங்கப்பழம் சட்டக்கல்லூரி முதல்வர் காளிச்செல்வி அறிவுறுத்தலின் பேரில் நடந்த நிகழ்ச்சிக்கு உதவி பேராசிரியர் அரிபா தலைமை தாங்கினார்.

    இதில் 10 சட்டக் கல்லூரி மாணவ, மாணவிகள் கலந்து கொண்டு பெண் கல்வி, பெண்கள் வேலைவாய்ப்பு, பெற்றோர் மற்றும் மூத்த குடிமக்கள் பராமரிப்பு நலச்சட்டம், குடிமக்களின் அடிப்படை உரிமைகள் மற்றும் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்புத் திட்டம் ஆகியவை குறித்து அப்பகுதி பொதுமக்களிடம் விளக்கி பேசினர். இதற்கான ஏற்பாடுகளை சீவநல்லூர் ஊராட்சி தலைவர் முத்துமாரி செய்திருந்தார்.

    ×