search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "துளசி"

    • துளசி செடி மகாலட்சுமியின் அம்சமாக கருதப்படுகிறது.
    • துளசி கல்யாணத்தன்று துளசிக்கு பூஜை செய்து வழிபடுவது மிகவும் சிறப்பானதாகும்.

    புனிதமான செடிகளின் வரிசையில் முதலிடம் பிடிக்கக்கூடிய செடியாக திகழ்வது துளசி செடி. இந்த துளசி செடி மகாலட்சுமியின் அம்சமாக கருதப்படுகிறது. துளசிக்கும் மகாவிஷ்ணுவுக்கும் திருமணம் நடந்த நாளை தான் துளசி கல்யாணம் என்று கூறுகிறார்கள். அந்த நாளில் வீட்டிலேயே துளசி கல்யாணத்தை செய்து பார்த்தால் அனைத்து விதமான மங்களங்களையும் பெற முடியும்.

    ஐப்பசி மாதம் வரும் அமாவாசை நாளிலிருந்து 12-வது நாள் வரக்கூடிய துவாதசி அன்றுதான் துளசி திருமணம் நடைபெற்றது. இந்த திருமணம் இந்த வருடம் நாளை புதன்கிழமை அன்று வருகிறது. இந்த நாளில் நம் வீட்டில் இருக்கக்கூடிய துளசி செடிக்கு நாம் பூஜை செய்வதன் மூலம் நம் வாழ்க்கையில் அனைத்து விதமான நன்மைகளையும் பெற முடியும்.

    இந்த திருமணத்தை விடியற்காலை 3 மணியிலிருந்து ஆறு மணிக்குள் செய்வது மிகவும் சிறப்பு. இயலாதவர்கள் 6 மணியிலிருந்து 7 மணிக்குள்ளாகவும் இந்த வழிபாட்டை மேற்கொள்ளலாம். இந்த வழிபாட்டிற்கு நம் வீட்டில் இருக்கக்கூடிய துளசி செடி போதுமானது தான். துளசி செடி இல்லாதவர்கள் துளசி இலைகளை பறித்து வந்து வீட்டு பூஜை அறையில் வைத்தும் பூஜை செய்யலாம்.

    முதலில் ஒரு வெற்றிலையில் சந்தனத்தில் பிள்ளையாரை பிடித்து வைத்து மலர்கள் மற்றும் அருகம்புல்லால் அர்ச்சனை செய்து விநாயகரை வழிபட வேண்டும். பிறகு துளசி செடி இருக்கும் இடத்தை சுத்தம் செய்து மஞ்சள் கலந்த தண்ணீரை தெளித்து மாக்கோலம் போட வேண்டும். அடுத்ததாக துளசி செடி வைத்திருக்கும் தொட்டிக்கு அல்லது மாடத்திற்கு சந்தனம் குங்குமம் இட வேண்டும். பிறகு ஒரு சுத்தமான செம்பில் சுத்தமான தண்ணீரை பிடித்து அதில் மஞ்சள் மற்றும் குங்குமத்தை சிறுதுளி அளவு கலந்து துளசிக்கு அபிஷேகம் செய்ய வேண்டும்.


    வீட்டில் மகாவிஷ்ணுவின் சிலையோ அல்லது புகைப்படமும் இருந்தால் அதை எடுத்து வந்து துளசி செடிக்கு அருகில் வைத்துவிட்டு அந்த சிலைக்கும் மஞ்சள் குங்குமம் இட வேண்டும். பிறகு மலர்களால் துளசி செடியையும், மகாவிஷ்ணுவின் புகைப்படத்தையும் அலங்காரம் செய்ய வேண்டும். துளசி செடிக்குரிய மந்திரங்களையும் பாடல்களையும் உச்சரித்த வண்ணம் துளசி செடிக்கும் மகாவிஷ்ணுவிற்கும் உதிரி பூக்களால் அர்ச்சனை செய்ய வேண்டும்.

    நெய்வேத்தியமாக கற்கண்டு உலர் திராட்சை பேரிச்சம்பழம் போன்றவற்றை வைத்து, வெற்றிலை பாக்கு வாழைப்பழம் வைத்து, ஊதுபத்தி தூபம் காட்டி ஐந்து பெரிய நெல்லிக்காய்களை எடுத்து அதில் தீபம் ஏற்றி வழிபாடு மேற்கொள்ள வேண்டும். மகாவிஷ்ணுவின் சிலையோ புகைப்படமோ இல்லாதவர்கள் மகாவிஷ்ணுவின் அம்சமான பெரிய நெல்லிக்காய் மரத்திலிருந்து ஒரு சிறிய கிளையை எடுத்து வந்து துளசி செடியுடன் வைத்து இந்த வழிபாட்டை மேற்கொள்ளலாம்.

    வைணவ வழிபாட்டில் மிகவும் முக்கியமான பொருள் துளசியாகும். மலர்கள் அணிவிக்காவிட்டாலும் இரண்டு துளசி இலைகளை மகாவிஷ்ணுவிற்கு படைத்து வழிபட்டாலே அனைத்து விதமான நன்மைகளும் ஏற்படும். துளசி இலைகளை பறிப்பதற்கும் கூட பல கட்டுப்பாடுகள் உள்ளன. மருத்துவ குணமும், தெய்வீக தன்மையும் நிறைந்த துளசியை வருடத்திற்கு ஒரு முறையாவது பூஜை செய்து வழிபட வேண்டும்.

    "ஓம் துளசியை வித்மஹி; விஷ்ணு பரியை தீமஹி; தன்னோ விருந்தா ப்ரசோதயாத்" என்ற துளசி மந்திரத்தை தினமும் உச்சரித்து, தண்ணீர் ஊற்றி வழிபடுவதால் செல்வ வளம் பெருகும். துளசி மாடத்திற்கு பொட்டு வைத்து, விளக்கேற்றி வழிபட்டால் சகல விதமான துன்பங்களும் விலகி, மகிழ்ச்சியான வாழ்க்கை அமையும்.

    செடிகளில் துளசிக்கு மட்டும் ஏன் இத்தனை சிறப்பு? தெய்வங்களுக்கு இணையாக வணங்கப்படுவது ஏன் என பலரும் நினைக்கலாம். இதற்கு இந்து புராணங்களில் ஒரு கதை சொல்லப்படுகிறது.

    அசுர அரசனின் மகளான விருந்தா, தீவிர விஷ்ணு பக்தை. இவள் சிவனின் நெற்றிக்கண்ணில் இருந்து வெளிப்பட்ட தீப்பொறியில் இருந்து தோன்றிய ஜலந்தரை மணந்தாள். பக்தியில் சிறந்தவளும், தீவிர பதிவிரதையுமான விருந்தாவை மணம் முடிந்ததால் ஜலந்தர் மிகவும் பலம் மிகுந்தவனாக மாறினான். இதனால் அவனின் சக்தி பல மடங்காக அதிகரித்து சிவபெருமானால் கூட வெல்ல முடியாதவன் ஆனான். இதன் காரணமாக தெய்வங்களுக்கு எல்லாம் தெய்வமாக விளங்க வேண்டும் என்ற ஆசை ஜலந்தருக்கு ஏற்பட்டது. இதனால் அஞ்சிய தேவர்கள் அனைவரும் காக்கும் கடவுளான மகா விஷ்ணுவிடம் சென்று முறையிட்டனர். ஆனால் விருந்தா தனது பக்தை என்பதால், அவளது கணவரை அழிப்பதா என குழப்பத்தில் ஆழ்ந்தார் மகா விஷ்ணு.

    இதனால் சிவனுக்கும், ஜலந்தருக்கும் போர் நடைபெற்ற சமயத்தில் ஜலந்தரின் உருவத்தில் துளசியை காண சென்றார் மகா விஷ்ணு. வந்திருப்பது தனது கணவன் என நினைத்து அவருடன் அமர்ந்து, பூஜை செய்தாள் விருந்தா. பிறகு தனது கணவர் நீண்ட காலம் வாழ வேண்டும் என்பதற்காக தனது கணவரின் உருவில் வந்த மகாவிஷ்ணுவின் காலை தொட்டு வணங்கினாள். அப்போது வந்திருப்பது தனது கணவன் இல்லை என தெரிந்து கொண்டாள். தனது கடவுளே தன்னை ஏமாற்றி விட்டதால் வேதனையடைந்த விருந்தா, மகா விஷ்ணுவை கல்லாக மாற சாபம் அளித்தாள். இதனால் மகா விஷ்ணு சாளகிராம கல்லாக மாறினார். அதே சமயம், விருந்தாவின் தூய்மை தன்மை குறைந்ததால் ஜலந்தரின் பலம் குறைந்தது. போரில் அவனை வென்றார் சிவபெருமான்.

    தனது தூய்மை தன்மை குறைந்ததால் உயிரை விட துணிந்தாள் விருந்தா, அந்த சமயத்தில் விருந்தா இனி துளசி என அழைக்கப்படுவாள் என வரமளித்தார் மகா விஷ்ணு. துளசி இல்லாமல் மகா விஷ்ணுவிற்கு செய்யும் பூஜைகள் முழுமை பெறாது. துளசி செடிக்கு நீர் ஊற்றினால் கூட அது மிகப் பெரிய புண்ணிய பலனை தரும்.

    துளசி கல்யாணத்தன்று துளசிக்கு பூஜை செய்து வழிபடுவது மிகவும் சிறப்பானதாகும். இவ்வாறு வழிபடும் பக்தர்களுக்கு மகிழ்ச்சியும், செல்வ வளமும் பெருகும்.

    இளம் வயதினர் துளசி பூஜை செய்தால் தங்களின் மனத்திற்கு பிடித்தது போல் விரைவில் திருமண வாழ்க்கை அல்லது வாழ்க்கை துணை அமைவார்கள். திருமண தடை, திருமணம் தாமதமாகிக் கொண்டே செல்பவர்கள் இன்று துளசி மாதாவிடம் வேண்டிக் கொண்டால் விரைவில் திருமணம் நடைபெறும்.

    இந்த வழிபாட்டை செய்வதன் மூலம் வீட்டில் இருக்கக்கூடிய கெட்ட சக்திகளும் துர் தேவதைகளும் வீட்டை விட்டு வெளியேறி விடுவார்கள். மேலும் வீட்டில் சுப நிகழ்ச்சிகள் எந்தவித தங்கு தடைகளும் இன்றி நடைபெறும். செல்வ செழிப்பு மேலோங்கும். எடுத்த காரியங்கள் வெற்றி அடையும். அனைத்து விதமான நன்மைகளும் ஏற்படும்.

    துளசி பூஜை செய்யும் முறை

    திருமணமாகாத ஆண்கள் துளசி செடிக்கு பூஜைகள் செய்து, வஸ்திரம் படைத்து, துளசி செடியை 7 முறை வலம் வந்து வணங்க வேண்டும். திருமணமாகாத பெண்கள், மனத்திற்கு பிடித்த கணவர் அமைய வேண்டும் என விரும்பும் பெண்கள் வீட்டில் துளசி கல்யாணம் நடத்தி, துளசி மாதாவிற்கு பூஜை செய்து வழிபட வேண்டும். துளசி மாதா முன் விழுந்து வணங்கி, பூக்கள் படைத்து, விரைவில் திருமணம் நடைபெற வேண்டிக் கொள்ளலாம்.

    • துளசியின் கணவன் பெயர் சங்க சூடன்.
    • சங்கில் தீர்த்தம் நிரப்பி துளசி மேல் வைத்து சங்காபிஷேகம் செய்வது மிகவும் சிறந்தது.

    மகாவிஷ்ணுவிற்கு உகந்த பொருட்களில் முதலிடத்தில் இருப்பது துளசியாகும். பெருமாள் கோவில்களிலும் துளசியை தனியாக பூஜையும் செய்வார்கள். மேலும் பல்வேறு பிணிகளுக்கு துளசி மிகச்சிறந்த மருந்தாகவும் பயன்படுத்துகின்றனர்.

    பிருந்தா, பிருந்தாவனி, விஸ்வபாவனி, புஷ்பசாரை, நந்தினி, கிருஷ்ணஜீவனி, பிருந்தாவனி, விஸ்வபூஜிதா. என்று பல்வேறு பெயர்களில் அழைப்பார்கள். துளசியின் நதி ரூபப்பெயர் கண்டகி. துளசியின் கணவன் பெயர் சங்க சூடன்.

    சங்கு, துளசி, சாளக்கிராமம் மூன்றையும் ஒன்றாக பூஜிப்பவர்களுக்கு மஹாஞானியாகும் பாக்கியமும், முக்காலமும் உணரும் சக்தியும் கிடைக்கும் என்பது ஐதீகம். சங்கில் தீர்த்தம் நிரப்பி துளசி மேல் வைத்து சங்காபிஷேகம் செய்வது மிகவும் சிறந்தது.

    துளசியின் கதை:

    கிருஷ்ணாவதாரத்தில் மகாவிஷ்ணுவின் அம்சமாக சுதர்மரும், லட்சுமியின் அம்சமாக ராதையும் அவதாரம் செய்கிறார்கள். இவர்களிருவரும் கிருஷ்ணனை அதிகம் நேசிக்கிறார்கள். ஒரு முறை ராதை சுதர்மர் மீது கோபம் கொண்டு சாபமிடுகிறார். இதனால் சுதாமர் சங்கசூடன் என்ற வேறொரு பிறப்பு எடுக்க வேண்டியதாயிற்று. அதேபோல் ராதையும் மாதவி என பிறப்பெடுக்கிறாள். மாதவியின் மகள் தான் துளசி. சங்கசூடனும், துளசியும் திருமணம் செய்து கொள்கிறார்கள். பின் கிருஷ்ணரால் துளசியின் ஆயுள் காலமும், சிவனால் சங்கசூடனின் ஆயுளும் முடிவடைந்தது.

    இதனால் சங்கசூடன் விஷ்ணுவுடனும், துளசி மகாலட்சுமியுடனும் மீண்டும் கலந்துவிட்டார்கள். இதனாலேயே துளசியும் சங்கும் இருக்குமிடத்தில் பெருமாளும், லட்சுமியும் வாசம் செய்வதாக கூறப்படுகிறது.

    சிறப்பு வாய்ந்த மகாலட்மியின் அம்சமான துளசியை உலகில் உள்ள அனைத்து பெருமாள் திருக்கோவில்களிலும் முக்கியத்துவம் வாய்ந்ததாக வழிபடுகின்றனர்.

    • நீல நொச்சி, கரு நொச்சி, வெள்ளை நொச்சி என பல வகை நொச்சிகள் உள்ளது. ஆனால், எல்லவற்றிற்குமான மருத்துவ குணம் ஒன்றுதான்.
    • நிலவேம்பிற்கு சிறியாநங்கை என்ற பெயரும் உண்டு. பார்ப்பதற்கு மிளகாய்ச்செடி போன்று இருக்கும்.

    நமது வீடுகளில் செடி வளர்ப்பது என்பது அனைவருக்கும் பிடித்த ஒரு செயல் ஆகும். அதுவும் பெண்களுக்கு மிகவும் பிடித்த செயலாகும். நம் பாட்டி காலத்தில் வீடுகளில் மூலிகை செடிகளை வளர்ப்பது வழக்கம். ஆனால் நாம் அழகு சார்ந்த செடிகளையே தற்போது வளர்க்கிறோம். முன்பெல்லாம் உடல் நிலை சரியில்லை என்றால் வீட்டிலேயே மூலிகை செடிகளை வைத்து கசாயம் வைத்தோ அல்லது பத்து போட்டோ சரிசெய்து விடுவார்கள்.

    ஆனால் விஞ்ஞானம் வளர வளர அனைவரும் ஆங்கில மருத்துவ முறையை பின்பற்ற தொடங்கிவிட்டோம். இப்போதும் ஒரு சில மூலிகைகளை வைத்து நமது வீடுகளிலேயே சளி, இருமல், காய்ச்சல், அடிப்பட்ட காயங்களுக்கு மருந்து என நாமே சில விஷயங்களை செய்யலாம். அப்படி எந்த மூலிகை செடிகள் நமது வீட்டில் வளர்க்கலாம் என்பதை பார்போம் வாங்க...

    நொச்சி

    நீல நொச்சி, கரு நொச்சி, வெள்ளை நொச்சி என பல வகை நொச்சிகள் உள்ளது. ஆனால், எல்லவற்றிற்குமான மருத்துவ குணம் ஒன்றுதான். நொச்சி இலை, மஞ்சள் சேர்த்து ஆவி பிடிக்க எல்லா தலைவலியும் குறையும்.

    ஆடாதொடை: பேருகால கர்ப்பிணிகள் 8வது மாதம் முதல் இதன் வேரை கஷாயம் செய்து தினமும் குடித்து வந்தால் சுகப்பிரசவமாவது உறுதி. ஆடாதொடை இலையை நிழலில் காயவைத்து, பொடி செய்து காலை, மாலை பாலில் சேர்த்து குடித்து வந்தால் காரணமில்லாமல் வரும் இரத்த அழுத்தம், படபடப்பு குறையும்.

    தூதுவளை

    தூதுவளையுடன் மிளகு சேர்த்து கஷாயம் வைத்து குடித்தால் வறட்டு இருமல் குறையும். தூதுவளை பழத்தை வத்தலாக காயவைத்து, வதக்கி சாப்பிட்டால் கண் குறைபாடுகள் நீங்கும். தூதுவளையில் கால்சியம் சத்துக்கள் அதிகமுள்ளதால் எலும்பையும், பற்களையும் பலப்படுத்தும்.

    கற்பூரவல்லி

    கற்பூரவல்லி என்ற பெயரும் உண்டு. இதன் தண்டு, இலைச்சாறை காலை, மாலை குடித்து வந்தால் தொண்டை சதை வளர்ச்சி குணமாகும். இதன் பருமனான இலைகளை வாழைக்காய் பஜ்ஜி போல பஜ்ஜி மாவில் கலந்து பஜ்ஜியாக சுட்டு குழந்தைகளுக்கு கொடுக்கலாம்.


    அருகம்புல்

    அருகம்புல், வெற்றிலை, மிளகு சேர்த்து காலையில் வெறும் வயிற்றில் குடித்தால் ரத்த அழுத்தம் கட்டுக்குள் வருவதோடு ரத்த ஓட்டமும் சீராகும். தோல் நோய்களும் குணமடையும். இவையெல்லாம் தொட்டிகளில் வைத்து வளர்க்க வேண்டியவை.

    நிலவேம்பு

    நிலவேம்பிற்கு சிறியாநங்கை என்ற பெயரும் உண்டு. பார்ப்பதற்கு மிளகாய்ச்செடி போன்று இருக்கும். நிலவேம்பு இலைகளை ஒரு கைப்பிடி அளவு எடுத்துக் கொண்டு சிறிது மிளகு சேர்த்து சாப்பிட்டால் விஷக்கடிகள் இறங்கும்.

    நிலவேம்பு இலைகளை நிழலில் உலர்த்தி காயவைத்து பொடி செய்து 30 கிராம் பொடியுடன் 1 லிட்டர் தண்ணீர் சேர்த்து அதை கால் லிட்டர் அளவுக்கு வற்ற வைத்து கஷாயமாக குடித்தால் தீராத காய்ச்சலும் தீரும்.


    சோற்றுக் கற்றாழை

    கற்றாழையில் உள்ள நுங்கு போன்ற சதையை எடுத்து சுத்தமான தண்ணீரில் அலசி சமமான அளவில் பனங்கற்கண்டினை சேர்த்து காலை, மாலை இருவேளைகளில் சாப்பிட்டால் அந்த பிரச்னைகள் பறந்துப் போகும். செரிமான சக்தியை அதிகரித்து பசியை தூண்டும். மலச்சிக்கலை போக்கும்.

    மஞ்சள் கரிசாலாங்கண்ணி

    இது தலை முடிக்கு பயன்படுத்தப்படுகிறது. மேலும் இதைக் கீரையாக சாப்பிட்டால் கல்லீரல் வலுப்படும்.

    துளசி

    துளசியுடன் மிளகு, வெற்றிலை மற்றும் வேம்பு பட்டை ஆகியவற்றை சேர்த்து கஷாயம் வைத்து குடித்தால் காய்ச்சல் குணமாகும். துளசி இலையை சாறு எடுத்து தேனுடன் கலந்து குழந்தைகளுக்கு கொடுத்தால் சளி குணமாகும். துளசி இலையை சாதரணமாக மென்றுத் தின்றால் ஜீரண சக்தி அதிகரிப்பதோடு, பசியும் அதிகரிக்கும்.

    • சில நாட்களுக்கு முன்பு அரளி பூக்களை சாப்பிட்ட கால்நடைகள் இறந்தன.
    • அரளிப்பூவின் இதழ்களை சாப்பிட்ட சூர்யா சுரேந்திரன் என்பவர் இறப்பு.

    திருவனந்தபுரம்:

    கேரள மாநிலத்தில் சபரிமலை அய்யப்பன் கோவில், குருவாயூர் கிருஷ்ணன் கோவில், பத்ம நாபபுரம் பத்மநாத சுவாமி கோவில் உள்ளிட்ட ஏராள மான பிரசித்தி பெற்ற கோவில்கள் இருக்கின்றன. இந்த கோவில்களுக்கு பல்வேறு மாநிலங்களில் இருந்தும் பக்தர்கள் ஆண்டு தோறும் வருகின்றனர்.

    கேரளாவில் சபரிமலை அய்யப்பன் கோவில் உள்ளிட்ட 1,200-க்கும் மேற்பட்ட கோவில்களை திருவிதாங்கூர் தேவ சம்போர்டு நிர்வகித்து வரு கிறது. அவற்றின் வழி காட்டுதலின் படியே அந்த கோவில்கள் அனைத்தும் செயல்பட்டு வருகின்றன. இந்நிலையில் திருவிதாங்கூர் தேவசம்போர்டு கட்டுப்பாட்டில் உள்ள கோவில்களில் மல்லி, செம்பருத்தி, துளசி உள்ளிட்ட 5 மலர்களை மட்டுமே பயன்படுத்த அறிவுறுத்தப்பட்டு இருக்கிறது.

    கேரள மாநிலத்தில கடந்த சில நாட்களுக்கு முன்பு அரளி பூக்களை சாப்பிட்ட கால்நடைகள் இறந்தன. மேலும் அரளிப்பூவின் இதழ்களை சாப்பிட்ட சூர்யா சுரேந்திரன் என்பவர் இறந்துவிட்டதாக தகவல் வெளியாகின. இந்த சம்பவங்கள் கேரள மாநிலத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது.

    இதையடுத்தே திரு விதாங்கூர் தேவசம்போர்டு தனது கட்டுப்பாட்டில் உள்ள கோவில்களில் 5 வித மலர்களை மட்டும் பயன்படுத்த அறிவுரை வழங்கி ஆணை பிறப்பித்திருக்கிறது. இறந்த நபரின் உடல் பரிசோதனையில் அவரது மரணத்துக்கு அரளியின் நச்சுத்தன்மை தான் காரணம் என்பது உறுதி செய்யப்ட்டால் இந்த பூக்களின் பயன்பாடு முற்றிலுமாக நீக்கப்படும் என்று திருவிதாங்கூர் தேவசம்போர்டு தலைவர் பிரசாந்த் தெரவித்தார்.

    மேலும் அவர் கூறுகையில், கோவில்களில் பயன்படுத்தப்படும் 5 வகை மலர் செடிகளை நடும் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. அது தவிர தென்னை, பாக்கு மரங்களும் நடவு செய்யப்பட உள்ளது என்றார்.

    • பாற்கடலில் அமிர்தம் கடைந்த காலத்தில் விஷ்ணுவின் அம்சமான ஸ்ரீதன்வந்த்ரி பகவான் அமிர்த கலசத்துடன் வெளிப்பட்டார்.
    • துளசி தெய்வ அம்சம் கொண்டது என்பது எல்லோருக்கும் தெரியும்.

    துளசி தெய்வ அம்சம் கொண்டது என்பது எல்லோருக்கும் தெரியும்.

    துளசியை துளசி, திருத்துழாய் என்றும் சொல்வார்கள்.

    இந்த சொற்களுக்கு தெய்வீக சக்தி என்பதே பொருளாகும்.

    துளசியில் கருந்துளசி எனும் கிருஷ்ண துளசி, வெள்ளை துளசி, காட்டுத் துளசி எனப் பலரகங்கள் உள்ளன.

    பாற்கடலில் அமிர்தம் கடைந்த காலத்தில் விஷ்ணுவின் அம்சமான ஸ்ரீதன்வந்த்ரி பகவான் அமிர்த கலசத்துடன் வெளிப்பட்டார்.

    அப்போது ஏற்பட்ட ஆனந்த மிகுதியால் விஷ்ணுவுக்கு ஆனந்தக் கண்ணீர் வெளிப்பட்டு அதில் சில துளிகள் அமிர்த கலசத்தினுள் விழுந்தது.

    அதுவே மரகதப் பச்சை நிறத்தில் ஸ்ரீதுளசி தேவியாக உருவெடுத்தது என்று சொல்வார்கள்.

    அமிர்தத்தை பங்கிட்டுக் கொள்ள தேவர்களும் அசுரர்களும் சண்டையிட்ட போது அந்த அமிர்த கலசத்திலிருந்து மேலும் சில துளிகள் பூமியில் விழ அவையே பூமியெங்கும் துளசிச் செடிகளாக உற்பத்தியாயின என்று பத்மபுராணத்தில் கூறப்பட்டுள்ளது.

    துளசிதேவி பகவானிடம் பெற்ற வரத்தின்படியே வீட்டில் துளசி மாடம் வைத்து அதற்கு பூஜை செய்பவர்களுக்கும், துளசி பறித்து அதன் திவ்யதளங்களால் விஷ்ணுவை லட்சுமியை அர்ச்சிப்பவர்களுக்கும், இருவரும் சகல சவுபாக் கியங்களையும் தந்து நிறைவில் விஷ்ணு லோகத்திலும் இடம் தந்து அருளுகின்றார்கள்.

    நம்மைப் பெற்றெடுத்து வளர்த்து பேணிக்காத்த நம் தாயாரை மதித்துக் காப்பாற்றி அவள் அருளாசிகளைப் பெறுவதும், தந்தையை பக்தி சிரத்தையுடன் உபசரித்து ஆசி பெறுவதும், துளசிச்செடி வைத்து அதற்கு பூஜித்து சேவைகள் புரிவதும் இம்மூன்றும் மனிதருக்கு உத்தம கதியை தரவல்ல சேவைகள் என மகான்கள் கூறி உள்ளனர். 

    • வடக்குப் பக்கம் தாழ்வாக இருந்து, அங்கே துளசி மாடத்தை வைத்தாலும் நல்ல பலன்களே கிடைக்கும்.
    • ஒவ்வொரு வீட்டிலும் முற்றத்தில் துளசி மாடம் இருந்தால் நல்லது.

    ஒவ்வொரு வீட்டிலும் முற்றத்தில் துளசி மாடம் இருந்தால் நல்லது.

    ஆனால், பெரும்பாலும் புறா கூண்டுகளைப் போல அபார்ட்மெண்ட் வாழ்க்கையாகி விட்ட மாநகரத்தில்

    முற்றங்களை எல்லாம் கனவுகளிலும் யோசித்துக் கொண்டிருக்க முடியாது.

    அப்படிப்பட்டவர்கள் முற்றங்கள் இல்லையென்றாலும், துளசி செடியை கிழக்கு திசையில்,

    தரைமட்டத்தில் வைத்தால் நல்லது.

    இப்படி கிழக்கு திசையில் துளசி செடியை வைத்து வழிபட்டு வணங்கி வருவது

    பெண்களின் ஆரோக்கியத்திற்கு நல்லது.

    வடக்குப் பக்கம் தாழ்வாக இருந்து, அங்கே துளசி மாடத்தை வைத்தாலும் நல்ல பலன்களே கிடைக்கும்.

    அதே சமயம் துளசி மாடம் வீட்டு வாசலுக்குக் குத்தலாக அமையக் கூடாது.

    ஆண்டு முழுவ தும் பசுமையாக இருக்கும் மரங்களை வைத்து, வீட்டினுள் வளர்த்தால் ஆயுள் நீடிக்கும்.

    இலை உதிர்க்கும் மரங்கள் ஓரளவு தான் நற்பலனை கொடுக்கும்.

    சில மாதங்கள் மட்டுமே வாழக்கூடிய மரங்களை வளர்க்காமல் இருப்பது நல்லது.

    பொதுவாக மற்ற அனைத்து செடிகளையும்விட துளசி, அதிகளவில் ஆக்சிஜனை வெளியேற்றும் சக்தி கொண்டது.

    அதிகாலை பிரம்ம முகூர்த்த நேரத்தில் குளித்து முடித்து, துளசியை வழிபட்டு வந்தால்,

    ஆரோக்கியமும் அதிர்ஷ்டமும் தானாய் வந்து சேரும்.

    உங்களால் வலம் வர முடியாவிட்டாலும், அதிகாலை பிரம்ம முகூர்த்த நேரத்தில் துளசி செடியின் அருகே அமருங்கள்.

    • பெருமாள் எப்போதும் பாற்கடலில் பள்ளி கொண்டிருக்கிறார்.
    • எனவே அவர் குளிர்ந்த தன்மையுடைவராகக் கருதப்படுகிறார்.

    பெருமாள் எப்போதும் பாற்கடலில் பள்ளி கொண்டிருக்கிறார்.

    எனவே அவர் குளிர்ந்த தன்மையுடைவராகக் கருதப்படுகிறார்.

    அவரது உடலுக்கு உஷ்ணம் தர வேண்டும் என்ற அக்கறையில், அவரது பக்தர்கள் உடலுக்கு

    வெப்பம் தரும் துளசி மாலை அணிவிக்கிறார்கள்.

    துளசியால் அர்ச்சனை செய்கிறார்கள்.

    குளிர்ச்சியால் மனிதனுக்கு இருமல், சளி ஏற்படுகிறது.

    இதைக் குணமாக்க துளசியை சாப்பிட்டு வெப்பத்தைக் கொடுக்கிறார்கள்.

    • வீட்டில் பூஜிக்கும் சாளக்கிராமம் இருந்தால் அதையும் சேர்த்து பூஜிக்கலாம்.
    • இந்த பூஜையின் போது பால் பாயாச நைவேத்தியம் செய்வது விசேஷமானது.

    வீடுகளில் துளசி மாடம் வைத் துள்ளவர்கள் துளசி பூஜையை தினமும் அல்லது செவ்வாய், வெள்ளிகளில் செய்வதுண்டு.

    ஆனாலும், கார்த்திகை மாதம் சுக்லபட்ச துவாதசியில் விசேஷ பூஜையாக துளசி பூஜையைச் செய்வார்கள்.

    துளசிக்கு அன்று விவாகம் நடந்த நாளாகவும் கூறுவார்கள்.

    துளசியின் விசேஷ பூஜை ஐப்பசி அல்லது கார்த்திகை மாதம் சுக்லபட்ச துவாதசியன்று பிருந்தாவன பூஜையாக விமரிசையாக செய்யப்படுகிறது.

    துளசி மாடத்தில் நெல்லி மரக்குச்சியை நட்டு, மகா விஷ்ணுவை ஆவாகனம் செய்து ஷோட சோபசாரங்கள் செய்ய வேண்டும்.

    வீட்டில் பூஜிக்கும் சாளக்கிராமம் இருந்தால் அதையும் சேர்த்து பூஜிக்கலாம்.

    இந்த பூஜையின் போது பால் பாயாச நைவேத்தியம் செய்வது விசேஷமானது.

    • கோவில்களிலும், நீர் நிலத்தின் கரைகளிலும், பாறை இடுக்குகளிலும் துளசி முளைத்திருக்கும்.
    • துளசியை விஷ்ணுவின் மனைவி என்பார்கள்.

    கோவில்களிலும், நீர் நிலத்தின் கரைகளிலும், பாறை இடுக்குகளிலும் துளசி முளைத்திருக்கும்.

    துளசியை விஷ்ணுவின் மனைவி என்பார்கள்.

    ஏனெனில் அவனது மார்பில் என்றும் நீங்கா இடம் பெற்றிருப்பது துளசி மாலை. துளசியை

    பூமாதேவியின் வேதாரமாகக் கருதி பறிக்க வேண்டும்.

    விஷ்ணு சேவைக் கும், குழந்தைகள், நோயாளிகளுக்கு மருந்தாகவும் மட்டுமே பயன்படுத்த வேண்டும்.

    இதன் ஒரு துளியைக் கூட வீணாக்கக்கூடாது. தேவையான அளவு மட்டுமே பறிக்க வேண்டும்.

    • கருந்துளசி விசேஷ குணமுடையது.
    • நாய்த்துளசி என்ற ரகமும் சளியைக் குணமாக்கும் சக்தி கொண்டது.

    கருந்துளசி விசேஷ குணமுடையது.

    இதன் சாறை இரும்புக் கரண்டியில் சுட வைத்து, தேன் கலந்து குழந்தைகளுக்கு கொடுத்தால் கபக்கட்டு, காய்ச்சல்

    முதலானவை நீங்கும்.

    நாய்த்துளசி என்ற ரகமும் சளியைக் குணமாக்கும் சக்தி கொண்டது.

    தீராத தொண்டைக்கட்டு, வலி நீங்க...

    தினமும் துளசி இலையை காலையில் வெறும் வயிற்றில் பச்சையாக மென்று சாறு இறக்கினால், சளி,

    தொண்டைக்கட்டு நீங்கும்.

    உடலில் உள்ள நச்சுத்தன்மையும் நீங்கும்.

    10 துளசியிலை எடுத்து அதனுடன் 5 மிளகு சேர்த்து நசுக்கி 2 டம்ளர் நீர்விட்டு அரை டம்ளராக சுண்டக்காய்ச்சி

    கஷாயம் செய்து சூடாக அருந்தி, பிறகு சிறிது எலுமிச்சை சாறு அருந்தி விட்டு நல்ல கம்பளி கொண்டு உடல்

    முழுவதும் போர்த்தி விட்டால் மலேரியா காய்ச்சல் படிப்படியாக குறையும்.

    • மேலைநாட்டு வீட்டு மருத்துவர் ஆப்பிள்...
    • தமிழ்நாட்டு வீட்டு மருத்துவர் துளசி...

    மேலைநாட்டு வீட்டு மருத்துவர் ஆப்பிள்...

    தமிழ்நாட்டு வீட்டு மருத்துவர் துளசி...

    ஆங்கிலத்தில் ஒரு பழமொழி உண்டு.

    அது தினம் ஒரு ஆப்பிளை சாப்பிட்டு வந்தால் அவர் மருத்துவரை வாழ்நாள் முழுவதும் பார்க்க வேண்டிய நிலை வராது.

    தமிழர்களின் முதுமொழி மற்றும் தமிழர்களாகிய நாம் மறந்த பழமொழி நான்கு துளசி இலைகளை தினமும் ஒருவர்

    சாப்பிட்டு வந்தால் மருத்துவரை அவர் வாழ்நாள் முழுவதும் பார்க்க வேண்டிய அவசியம் கட்டாயம் இருக்காது.

    துளசி ஒரு சர்வரோக நிவாரணி.

    • நோயற்ற வாழ்க்கைக்கு நோய் எதிர்ப்பு சக்தி தரும் 4 துளசி இலைகளை தினம் தவறாமல் உண்ண வேண்டும்.
    • துளசி இலைகளில் நோயை எதிர்க்கும் குணம் அதிக அளவில் உள்ளது.

    துவர்ப்பு மற்றும் கசப்பு சுவை கொண்ட துளசியை ஒருவர் தினமும் தின்று வந்தால் உடலில் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும்.

    துளசி இலைகளில் நோயை எதிர்க்கும் குணம் அதிக அளவில் உள்ளது.

    நோயற்ற வாழ்க்கைக்கு நோய் எதிர்ப்பு சக்தி தரும் 4 துளசி இலைகளை தினம் தவறாமல் உண்ண வேண்டும்.

    துளசி செடியில் இருந்து 4 துளசி இலைகளை இளம் கொத்தாக பறித்து தினம் நாம் சாப்பிடும்போது நம் ஆரோக்கிய வாழ்க்கைக்கு அது அடித்தளமாக அமையும்.

    ×