search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "மருத்துவத்துறை"

    • வயிற்றில் இருக்கும் குழந்தை பாலினத்தை பரிசோதனை மூலம் தெரிவிக்கக் கூடாது என சட்டம் உள்ளது.
    • மன்னிப்பு கோரியதை அடுத்து இர்பான் மீது நடவடிக்கை எடுக்காமலிருக்க சுகாதாரத்துறை முடிவு செய்தது.

    யூடியூபர் இர்பான் தனக்கு பிறக்கப்போகும் குழந்தையின் பாலினம் குறித்து அறிவித்தார். அதோடு துபாயில் பரிசோதனை செய்து, தனக்கு பிறக்கப்போகும் குழந்தையின் பாலினத்தை அறிவித்து யூடியூப்பில் கொண்டாட்ட வீடியோவை வெளியிட்டார். இது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.

    வயிற்றில் இருக்கும் குழந்தை பாலினத்தை பரிசோதனை மூலம் தெரிவிக்கக் கூடாது என சட்டம் உள்ளது. இதனால் அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கைகள் எழுந்தன. இதனால் சுகாதாரத்துறை நடவடிக்கை எடுக்க 3 பேர் கொண்ட குழுவை நியமித்தது. மேலும், காவல்துறையில் புகார் அளிக்கவும் முடிவு செய்தது. அத்துடன் விளக்கம் கேட்டு கடிதம் அனுப்பியது.

     வீடியோ தொடர்பாக கடும் விமர்சனம் எழுந்த நிலையில் வீடியோவை யூடியூப்பில் இருந்து நீக்கினார் இர்பான். ஆனால் இந்த விவகாரம் பூதாகரமாக வெடித்த பின்னர், வீடியோ வெளியிட்டதற்காக அவர் டி.எம்.எஸ். வளாகத்தில் உள்ள மருத்துவம் மற்றும் ஊரக நல பணிகள் இயக்குநரிடம் மன்னிப்பு கடிதம் வழங்கினார். அத்துடன் மன்னிப்பு வீடியோ வெளியிடுவதாகவும் அதிகாரிகளிடம் தெரிவித்தார்.

    மன்னிப்பு கோரியதை அடுத்து இர்பான் மீது நடவடிக்கை எடுக்காமலிருக்க சுகாதாரத்துறை முடிவு செய்தது.

    இந்நிலையில் குழந்தையின் பாலினத்தை முன்கூட்டியே கண்டறிந்து யூடியூபர் இர்பான் வீடியோ வெளியிட்ட விவகாரம் தொடர்பாக, அவர் அளித்த பதில் ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளதாக மருத்துவத்துறையினர் தகவல் தெரிவித்துள்ளனர்.

    குழந்தையின் பாலினத்தை முன்கூட்டியே கண்டறியும் பிரச்சனைகளுக்கு முற்றுப்புள்ளி வைக்க வெளிநாடுகளிடம் பேசி தீர்வு காண நடவடிக்கை எடுக்க தமிழ்நாடு மருத்துவ துறையின் சார்பில் மத்திய சுகாதாரத்துறைக்கு பரிந்துரை செய்யப்படும் என்று தெரிவித்தனர்.

    • 1021 மருத்துவர்கள், 983 மருந்தாளுனர்கள், 1066 சுகாதார ஆய்வாளர்கள் பணியில் அமர்த்தும் பணிகள் நடைபெற்று வருகிறது.
    • பணியிடங்களை பொறுத்தவரை தேர்வு செய்யும் பணி இறுதி கட்டத்தை எட்டியுள்ளது.

    தஞ்சாவூர்:

    தஞ்சை மாவட்டம் ஒரத்தநாடு அருகே உள்ள தொண்டராம்பட்டு ஆரம்ப சுகாதார நிலையத்தில் ரூ.50 லட்சம் மதிப்பில் வட்டார பொது சுகாதார ஆய்வகத்தை இன்று மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா. சுப்ரமணியன் திறந்து வைத்தார்.

    பின்னர் அவர் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியிருப்பதாவது :-

    மக்களை தேடி மருத்துவம் மூலம் தற்போது வரை ஒரு கோடியே 60 ஆயிரம் பேர் பயன் பெற்றிருக்கிறார்கள். தமிழகம் முழுவதும் மருத்துவத் துறையில் காலி பணியிடங்கள் உள்ளது. இதில் எம்.ஆர்.பி மூலம் 1021 மருத்துவர்கள், 983 மருந்தாளுனர்கள், 1066 சுகாதார ஆய்வாளர்கள் பணியில் அமர்த்தும் பணிகள் நடைபெற்று வருகிறது.

    பணியிடங்களை பொறுத்தவரை தேர்வு செய்யும் பணி இறுதி கட்டத்தை எட்டியுள்ளது. கடந்த வாரமே பணியாணை வழங்கியிருக்க வேண்டும். ஆனால் 14 மருத்துவர்கள் உயர்நீதிமன்றம் வழக்கு தொடர்ந்து இருக்கிறார்கள். அந்த மருத்துவர்களின் கோரிக்கையை தமிழக முதலமைச்சர் கவனத்திற்கு கொண்டு சென்று சுமூக முடிவு எடுக்கப்பட்டு விரைந்து மருத்துவ பணியிடங்கள் நிரப்ப நடவடிக்கை எடுக்கப்படும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    ×