என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "ஏரிக்கரை"
- கொலை செய்யப்பட்டவர் யார்? எந்த ஊரை சேர்ந்தவர்? எதற்காக கொலை செய்யப்பட்டார்? என்று விசாரணை நடத்தினர்.
- மணிகண்டன் என்ற மாற்று திறனாளி கொலை வழக்கிலும் குண்டர் சட்டத்தில் கைதானது தெரியவந்தது.
சேலம்:
சேலம் மாவட்டம் அயோத்தியாப்பட்டணம் அருகே உள்ள குள்ளம்பட்டி பிரிவு ரோட்டில் விநாயகர் கோவில் உள்ளது.
நேற்றிரவு 8 மணியளவில் இந்த பகுதியில் வாலிபர் ஒருவரின் தலை ஒன்று தனியாக துண்டிக்கப்பட்டு ரத்தம் சொட்ட சொட்ட சாலையில் வீசப்பட்டு கிடந்தது. இருட்டான பகுதி என்பதால் சாலையில் சென்ற இருசக்கர வாகன ஓட்டிகள் முகப்பு விளக்கை ஒளிரவிட்டு சென்றபோது தலை கிடப்பதை பார்த்து அதிர்ச்சி அடைந்தனர். மேலும் இதுபற்றி தெரிய வந்ததும் அந்த பகுதியில் வந்து சென்றவர்கள் அதிர்ச்சி அடைந்து ஓட்டம் பிடித்தனர். இதனால் அந்த பகுதியில் பெரும் பரபரப்பு நிலவியது.
இதுபற்றி அந்த பகுதியை சேர்ந்தவர்கள் காரிப்பட்டி போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்திற்கு போலீஸ் சூப்பிரண்டு அருண்கபிலன், வாழப்பாடி டி.எஸ்.பி. ஹரிசங்கரி மற்றும் போலீசார் விரைந்து சென்று விசாரணை நடத்தினர்.
அப்போது கொலை செய்யப்பட்டு தலை துண்டிக்கப்பட்டு கிடந்த வாலிபருக்கு 35 வயது இருக்கும் என தெரிய வந்தது. மேலும் துண்டிக்கப்பட்டு கிடந்த தலையில் இருந்து ரத்தம் வடிந்ததால் கொலை நடந்து சில மணி நேரமே ஆவது தெரியவந்தது. எனவே உடல் இந்த பகுதியில் தான் எங்காவது வீசி இருக்கலாம் என்று போலீசார் கருதினர். தொடர்ந்து அந்த வாலிபரின் தலையை மீட்டு சேலம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும் போலீசார் குள்ளம்பட்டி, அக்ரஹாரம் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் வாலிபரின் உடலை தேடினர். இன்று அதிகாலை அக்ரஹாரம் ஏரி கரையில் வாலிபரின் உடலை போலீசார் மீட்டனர். பின்னர் பிரேத பரிசோதனைக்காக சேலம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும் கொலை செய்யப்பட்டவர் யார்? எந்த ஊரை சேர்ந்தவர்? எதற்காக கொலை செய்யப்பட்டார்? என்று விசாரணை நடத்தினர். மேலும் கொலை செய்ய ப்பட்ட நபர் குள்ளம்பட்டி, வலசையூர், காட்டூர் பகுதியை சேர்ந்தவராக இருக்கலாம்? என்று போலீசார் விசாரணையை தீவிரப்படுத்தினர்.
இதற்கிடையே இந்த கொலை தொடர்பாக வாழப்பாடி டி.எஸ்.பி. ஹரிசங்கரி தலைமையில் 2 தனிப்படை அமைக்கப்பட்டது. அந்த தனிப்படையினர் கொலையாளியை தேடினர். அப்போது அங்குள்ள வேகத்தடை அருகே போலீசார் சார்பில் வைக்கப்பட்டுள்ள சி.சி.டி.வி. கேமிரா பதிவுகளையும் போலீசார் ஆய்வு செய்தனர்.
அதில் காரிப்பட்டியை அடுத்த கள்ளிக்காடு பகுதியை சேர்ந்த திருமலை (32) என்பவர் ரோட்டில் கிடந்த வாலிபரின் தலையை அங்கு வீசி சென்றது தெரிய வந்தது. இதையடுத்து போலீசார் அவரை பிடித்து விசாரணை நடத்தினர்.
அப்போது அவர் கஞ்சா மற்றும் மது போதையில் இருந்ததால் உளறியபடியே இருந்தார். இதையடுத்து போலீசார் இன்று காலை அவரிடம் விசாரணை நடத்த முடிவு செய்து உள்ளனர். மேலும் சம்பவம் குறித்து அந்த பகுதியில் நேற்றிரவு போலீசார் விசாரணை நடத்திய போது பரபரப்பு தகவல்கள் வெளியானது, அதன் விவரம் வருமாறு-
கொலை செய்யப்பட்ட நபர் அங்குள்ள மதுக்கடையில் மது வாங்கிய போது திருமலைக்கும், கொலை செய்யப்பட்ட வாலிபருக்கும் இடையே தகராறு ஏற்பட்டதும், அப்போது அந்த நபர் திருமலையை தாக்கியதாகவும், இதனால் ஏற்பட்ட ஆத்திரத்தில் திருமலை வீட்டிற்கு சென்று கத்தியை எடுத்து வந்து கழுத்தை அறுத்து அந்த வாலிபரை கொலை செய்து தலையை அங்கு வீசி சென்றதும் தெரியவந்தது.
மேலும் போலீசாரிடம் சிக்கியுள்ள திருமலை வாழப்பாடியை சேர்ந்த ஒருவரை கொலை செய்துள்ளார். மேலும் அந்த பகுதியை சேர்ந்த மணிகண்டன் என்ற மாற்று திறனாளி கொலை வழக்கிலும் குண்டர் சட்டத்தில் கைதானது தெரியவந்தது. தொடர்ந்து அவரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.
- சாராயம் விற்பனை தொடர்ந்து நடைபெறுவதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது.
- தப்பியோடியவர் வடபாதி கிராமத்தைச் சேர்ந்த சரத்குமார் என்பது போலீ சாருக்கு தெரியவந்தது.
கடலூர்:
கடலூர் மாவட்டம் திட்டக்குடி அடுத்த சிறுபாக்கம் போலீஸ் நிலைய எல்லைக்கு உட்பட்ட வடபாதி கிராமத்தில் உள்ள ஏரியில் கள்ளத்தனமாக சாராயம் விற்பனை தொடர்ந்து நடைபெறுவதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதன் பேரில் சப்-இன்ஸ்பெக்டர் ராஜாங்கம் மற்றும் போலீசார் அப்பகு திக்கு இன்று காலை விரைந்து சென்றனர். அப்போது ஏரிக்க ரையின் மீது அமர்ந்து கள்ளச்சாராயம் விற்பனை செய்து கொண்டிருந்த நபர் அங்கிருந்து தப்பி ஓடினார். அவரை மடக்கி பிடிக்க போலீசார் முயன்றனர்.
அருகில் இருந்த மோட்டார் சைக்கிளில் அவர் தப்பிவிட்டார். இதையடுத்து ஏரிக்கரையில் வைக்கப்பட்டிருந்த 500 பாக்கெட் கள்ளச்சாராயம், லாரி டியூபில் இருந்த சுமார் 100 லிட்டர் அளவு கொண்ட சாராயம் ஆகியவற்றை சிறுபாக்கம் போலீசார் கைப்பற்றினார். மேலும், தப்பியோ டியவர் வடபாதி கிராம த்தைச் சேர்ந்த ராயப்பி ள்ளை மகன் சரத்குமார் (வயது 30) என்பது போலீ சாருக்கு தெரியவந்தது. இது குறித்து சிறுபாக்கம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- திறந்தவெளி சுடுகாட்டை அகற்றி மின்மயானம் அமைத்து தர வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கைவிடுத்து உள்ளனர்.
- சுடுகாடு அமைந்துள்ள இடம் நீர் நிலை என்பதால் இங்கு உடனடியாக நவீன மயானம் அமைக்க முடியவில்லை.
தாம்பரம் மாநகராட்சிக்கு உட்பட்டது சிட்லபாக்கம். இப்பகுதியில் குடியிருப்புகளுக்கு மத்தியில் சிட்லபாக்கம் ஏரி உள்ளது. இந்த ஏரியில் பொதுமக்களின் வேண்டு கோளுக்கு இணங்க சுமார் ரூ.23 கோடி செலவில் தூர்வாரப்பட்டு சீரமைப்பு பணிகள் நடந்து வருகின்றன. ஏரிக்கரையில் நடைபயிற்சி செல்பவர்களுக்கு தனிநடை பாதைகள் அமைக்கப்பட்டு உள்ளன.
ஏரியை சுற்றி நடைப்பாதை அமைக்கப்பட்டுள்ளதால் தினமும் காலை மற்றும் மாலை நேரங்களில் ஏராளமான பொதுமக்கள் நடைபயிற்சி சென்று வருகின்றனர். மேலும் சிட்லபாக்கம் ஏரியை முன்மாதிரியான ஏரியாக மாற்ற திட்டமிட்டு பணிகள் நடைபெற்று வருகிறது.
சிட்லபாக்கம் ஏரியின் ஒரு புறத்தில் 44-வது வார்டுக்குட்பட்ட ராமகிருஷ்ணாபுரம் பகுதியில் ஏரிகரையை ஒட்டி பழைய சுடுகாடு உள்ளது. இந்த சுடுகாட்டின் அருகில் ஏராளமான குடியிருப்புகள், தனியார் பள்ளி உள்ளது.
இந்நிலையில் இந்த சுடுகாட்டில் பழைய முறைப்படியே கட்டைகளை வைத்து திறந்தவெளியில் இறந்தவர்களின் உடல்கள் தீவைத்து எரிக்கப்பட்டு வருகின்றன. அங்கிருந்து வெளியேறும் புகை மற்றும் துர்நாற்றத்தால் அருகில் உள்ள குடியிருப்புகளில் வசிப்பவர்கள் கடும் அவதி அடைந்து வருகின்றனர். இந்த திறந்தவெளி சுடுகாட்டை அகற்றி மின்மயானம் அமைத்து தர வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கைவிடுத்து உள்ளனர்.
இது குறித்து அப்பகுதி பொது மக்கள் கூறும்போது, சிட்லபாக்கம் பேரூராட்சியாக இருந்த போதே பாலாஜி அவன்யூ பகுதியில் எரிவாயு தகன மேடை உள்ளது. தற்போது தாம்பரம் மாநகராட்சி உடன் இணைந்த பின்பும் இந்த சுடுகாட்டை நவீனமாக்க இதுவரை மாநகராட்சி நடவடிக்கை எடுக்கவில்லை. முன்பை விட தற்போது சிட்லபாக்கம் பகுதியில் மக்கள்தொகை அதிகரித்து உள்ளது. இதனால் இறப்பு எண்ணிக்கை அதிகரித்து கூடுதலாக உடல்கள் வருவதால் ஏரிக்கரையோரம் உடல்கள் எரிக்கப்படுகின்றன என்றனர்.
இதுகுறித்து அதிகாரிகள் கூறும்போது, இந்த சுடுகாடு அமைந்துள்ள இடம் நீர் நிலை என்பதால் இங்கு உடனடியாக நவீன மயானம் அமைக்க முடியவில்லை. பொதுப்பணி துறையின் அனுமதி கிடைத்த பின்பு இங்கு நவீன மயானம் அமைக்கப்படும் என்றனர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்