search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "இறால்"

    • விசைப்படகு மீனவர் சங்க அவசர கூட்டம் கடந்த சனிக்கிழமை நடைபெற்றது.
    • சுமார் 50 ஆயிரத்திற்கும் மேற்பட்டோருக்கு வேலையிழப்பு அபாயம்.

    ராமேசுவரம்:

    ராமநாதாபுரம் மாவட்டம், ராமேசுவரம் துறைமுகத்தில் சுமார் 560-க்கும் மேற்பட்ட விசைப்படகுகள் மீன் பிடி தொழிலில் ஈடுபட்டு வருகிறது.

    இதில், பெரும்பாலும் இறால், நண்டு, கணவாய் உள்ளிட்ட வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படும் மீன்கள் மற்றும் கோழி தீவனத்திற்கு பயன்படும் சங்காயம் எனப்படும் சிறிய வகை மீன்கள் ஆகியவற்றை பிடித்து வருகின்றனர்.

    சமீபத்திய மீன்பிடி தடை காலத்திற்கு முன்பு இறால் ரூ.650, கணவாய் ரூ.400, நண்டு ரூ.350, காரல் ரூ.70, சங்காயம் ரூ.25 என்ற அடிப்படையில் விலை இருந்து வந்தது.

    இந்தநிலையில், மீன்பிடி தடைகாலம் நிறைவடைந்து மீன்பிடிக்கச் சென்ற பின்னர் இறால் ரூ.350-400, நன்டு ரூ.250, கணவாய் ரூ.180, காரல் ரூ.15, சங்காயம் ரூ.10 என 50 சதவீதம் வரை கொள்முதல் செய்யும் வியாபாரிகள் ஒன்றிணைந்து சிண்டிகேட் அமைத்துக்கொண்டு விலையை வெகுவாக குறைத்துள்ளனர்.

    இதனால் ரூ.50 ஆயிரம் முதல் ரூ.1 லட்சம் வரை செலவு செய்து கடலுக்கு மீன்பிடிக்க செல்லும் மீனவர்களுக்கு பல ஆயிரம் ரூபாய் வரை இழப்பு ஏற்படுகிறது.

    இந்தநிலையில், ராமேசுவரம் மீன்பிடி துறைமுகத்தில் விசைப்படகு மீனவர் சங்க அவசர கூட்டம் மாவட்டத்தலைவர் வி.பி.ஜேசுராஜா தலைமையில் கடந்த சனிக்கிழமை நடைபெற்றது. இதில், மீனவ சங்கத்தலைவர் சகாயம், எமரிட், எடிசன் மற்றும் நிர்வாகிகள் கலந்துகொண்டனர்.

    இந்த கூட்டத்தில் ராமேசு வரம் மீன்பிடி துறைமுகத்தில் இறால் மீன் கொள்முதல் செய்து வரும் வியாபாரிகள் சிண்டிகேட் அமைத்துக் கொண்டு விலையை 50 சதவீதம் வரை குறைத்து எடுப்பதை கண்டித்தும், மீனவர்கள் பிடித்தும் வரும் இறால் மீனுக்கு உரிய விலை நிர்ணயம் செய்திட மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க கோரி காலவரையற்ற வேலை நிறுத்த போராட்டம் மேற்கொள்ளுவது என தீர்மானம் நிறைவேற்றப்பட் டது.

    அதன்படி மீனவர்கள் இன்று முதல் காலவரையற்ற வேலை நிறுத்த போராட்டத்தை தொடங்கி உள்ளனர். இதனால் ராமேசுவரம் மீன்பிடி துறைமுகத்தில் 560-க்கும் மேற்பட்ட விசைப்படகுகள் கரையில் நங்கூரமிட்டு நிறுத்தப்பட்டுள்ளன. 4 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மீனவர்கள் இந்த போராட்டத்தில் பங்கேற்றுள்ளனர்.

    இந்த போராட்டம் காரணமாக மீன்பிடி மற்றும் அதனை சார்ந்த தொழிலாளர்கள் என சுமார் 50 ஆயிரத்திற்கும் மேற்பட்டோருக்கு வேலையிழப்பு ஏற்பட்டுள்ளது.

    ராமேசுவரம் மீனவர்கள் அடுத்தடுத்த சிறைபிடிப்பை கண்டித்து பல்வேறு கட்ட போராட்டங்களை முன்னெடுத்து வரும் நிலையில் தற்போது மீன்களுக்கு உரிய விலை நிர்யணம் செய்வது தொடர்பாக மீனவர்கள் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ளது அரசுக்கு பெரும் வருவாய் இழப்பையும் ஏற்படுத்தும் என்பது குறிப்பிடத்தக்கது. 

    • ஊற வைத்துள்ள இறால் துண்டுகளை சேர்க்கவும்.
    • இவை அனைத்தையும் நன்கு மிக்ஸ் செய்து கொள்ளவும்.

    தேவையான பொருட்கள்:

    இறால் - 1/2 கிலோ

    தேங்காய் பால் - 50 கிராம்

    மஞ்சள் தூள் - 1/2 ஸ்பூன்

    மிளகுதூள் - நுனுக்கியது 1/2 ஸ்பூன்

    வரமிளகாய் பொடித்தது - 1/2 ஸ்பூன்

    இஞ்சி - பொடியாக நறுக்கியது 1 ஸ்பூன்

    பூண்டு - பொடியாக நறுக்கியது 1 ஸ்பூன்

    உப்பு - தேவையான அளவு

    தேங்காய் எண்ணெய் - தேவையான அளவு

    பச்சை மிளகாய் - 4 கீறியது

    கறிவேப்பிலை - சிறிதளவு

    செய்முறை:

    • இறாலை நன்கு சுத்தம் செய்து வைத்துக் கொள்ளவும்.

    • ஒரு பாத்திரத்தில் இறால், மஞ்சள் தூள், பொடித்த மிளகு, வரமிகாய் பொடித்தது, பூண்டு, தேங்காய் எண்ணெய் இவை அனைத்தையும் நன்கு மிக்ஸ் செய்து கொள்ளவும்.

    • மிக்ஸ் செய்த இறால் கலவையை ஃபிரிட்ஜில் வைத்து 30 முதல் 45 நிமிடம் ஊற வைக்கவும்.

    • ஒரு பௌவுலில் 50 கிராம் தேங்காய் பால், தேங்காய் எண்ணெய், கறிவேப்பிலையை பொடியாக கட் செய்து அதனுடன் சேர்த்து, தயாரித்து எடுத்து வைத்து கொள்ளவும்.

    • பின்னர் ஒரு வாணலியில் சிறிதளவு தேங்காய் எண்ணெய் ஊற்றில், அதில் ஊற வைத்துள்ள இறால் துண்டுகளை சேர்க்கவும்.

    • 3 நிமிடத்திற்கு ஒரு முறை திருப்பிவிடவும். மொத்தம் 5 நிமிடம் சமைக்கலாம். பின்னர் பச்சை மிளாய் சேர்க்கவும்

    • தயாரித்து வைத்துள்ள தேங்காய் பால் கலவையை இறாலுடன் சேர்த்து 3 நிமிடங்கள் கிளறவும்.

    • இதோ சுவையான தேங்காய் பால் ஃபிரான் ரோஸ்ட் ரெடி.

    • சுத்தம் செய்து வைத்துள்ள இறாலை சேர்ந்து நன்கு வதக்கவும்.
    • பிரிஞ்சி இலையுடன் சின்ன வெங்காயம் சேர்த்து வதக்கவும்.

    தேவையான பொருட்கள்:

    இறால்கள் - 1/4 கிலோ

    சின்ன வெங்காயம் - 5 முதல் 6 எண்

    வேர்க் கடலை - 50 கிராம்

    முந்திரி - 7

    பிரிஞ்சி இலைகள் - 2

    கிராம்பு - 2

    இலவங்கப்பட்டை குச்சி - 1 அங்குலம்

    பச்சை ஏலக்காய் - 2

    எண்ணெய் - தேவையான அளவு

    கொத்தமல்லி - தேவையான அளவு

    உப்பு - 2 பின்ச்

    செய்முறை:

    வேர்க்கடலையை சிறிது நேரம் (20 நிமிடம்) ஊறவைத்து பின்னர் அதை ஒரு மிக்ஸர் சாரில் சிறிது தண்ணீர் சேர்த்து நன்கு விழுதாக அறைத்து எடுத்தக் கொள்ளவும்.

    ஒரு வாணலியில் சிறிது எண்ணெயை ஊற்றி சூடானதும், இலவங்கப்ட்டை, ஏலக்காய், கிராம்பு, பிரிஞ்சி இலையுடன் சின்ன வெங்காயம் சேர்த்து வதக்கவும்.

    பின்னர் முந்திரியை சேர்க்கவும், பின்னர் சுத்தம் செய்து வைத்துள்ள இறாலை சேர்ந்து நன்கு வதக்கவும்.

    இறால் நன்றாக வெந்தவுடன் அறைத்து வைத்துள்ள வேர்க்கடலை விழுதை அதனுடன் சேர்ந்து 5 நிமிடம் கிளறவும்.

    இறுதியாக கொத்தமல்லி சேர்ந்து பரிமாறவும்.

    • இறாலை காரம் இல்லாமல் சுவையாக கொடுத்தால் சொல்லவா வேண்டும்.
    • குழந்தைகள் கேட்டு கேட்டு வாங்கி சாப்பிடுவார்கள்.

    அசைவ உணவில் குழந்தைகளுக்கு மிகவும் பிடித்தது இறால். அந்த இறாலை காரம் இல்லாமல் சுவையாக கொடுத்தால் சொல்லவா வேண்டும். வாங்க எப்படி செய்யலாம்னு பார்ப்போம்...

    தேவையான பொருட்கள்:

    இறால் - 1/2 கிலோ

    பிரியாணி அரிசி - 1/2 கிலோ

    வெங்காயம் - 2

    தக்காளி - 4

    பச்சை மிளகாய் - 3

    இஞ்சி பூண்டு விழுது - 50 கிராம்

    கொத்தமல்லி - 1கை

    புதினா - 1 கை

    தேங்காய் பால் - 1 கப்

    மஞ்சள்தூள் - 1/4 டீஸ்பூன்

    மிளகாய் தூள் - 1 டீஸ்பூன்

    கரம் மசாலா - 1 டீஸ்பூன்

    பட்டை, கிராம்பு, ஏலக்காய் - தேவையான அளவு

    எண்ணெய் - 100 மில்லி

    நெய் - 2 டீஸ்பூன்

    செய்முறை:

    முதலில் இறாலையும், அரிசியும் கழுவி சுத்தம் செய்து வைக்கவும். பிறகு குக்கரில் எண்ணெய்,நெய் ஊற்றி காய்ந்ததும் அதில் இஞ்சி பூண்டு விழுது சேர்த்து நன்றாக வதக்கவும்.பின்பு அதில் பட்டை கிராம்பு ஏலக்காய் சேர்க்கவும்.

    பின்பு அதில் வெங்காயம் சேர்த்து வதக்கவும் அதில் பின்பு மசாலா பொருட்கள் அனைத்தும் சேர்த்து வதக்கவும்.

    பிறகு தக்காளியும் சேர்த்து வதக்கி அதில் இறால் சேர்த்து நன்றாக கிளறவும்.

    பின்பு இறால் தண்ணீர் விட ஆரம்பித்ததும் அதில் பச்சை மிளகாய் கொத்தமல்லி புதினா தூவி கிளறி அதில் ஒரு கப் திக்கான தேங்காய் பால், 2 கப் தண்ணீர் ஊற்றவும். பின்னர் இவை அனைத்து நன்கு கொதித்தவுடன் தண்ணீர் ஊற்றி ஊற வைத்த அரிசியை போட்டு 2 விசில் விட்டு இறக்கவும்.

    சுவையான இறால் தேங்காய் பால் புலாவ் ரெடி. குழந்தைகள் கேட்டு கேட்டு வாங்கி சாப்பிடுவார்கள்.

    • ஒரு ஆண்டுக்கு 6 மாதங்கள் மட்டுமே இறால் பண்ணைகளுக்கு மின்சார பயன்பாடு உள்ளது.
    • இறாலுக்கு குறைந்தபட்ச ஆதார விலையை உறுதி செய்ய வேண்டும்.

    திருத்துறைப்பூண்டி:

    திருவாரூர் மாவட்டம், தம்பிக்கோட்டை கீழக்காட்டிற்கு மத்திய மந்திரி பர்ஷோத்தம் ரூபாலா, இணை மந்திரி எல். முருகன் ஆகியோர் வருகை தந்தனர்.

    அவர்களுக்கு திருவாரூர் மாவட்ட பா.ஜனதா சார்பில் சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது.

    பின்னர், அங்கிருந்த கொடிகம்பத்தில் கட்சி கொடியை மத்திய மந்திரி பர்ஷோத்தம் ரூபாலா ஏற்றினார்.

    அதனை தொடர்ந்து, தம்பிக்கோட்டை கீழக்காடு இறால் பண்ணை உரிமையா ளர்கள் சங்கம் சார்பில் அவர்களிடம் கோரி க்கை மனு அளிக்கப்பட்டது.

    அந்த மனுவில் கூறியி ருப்பதாவது:-

    ஒரு ஆண்டுக்கு 6 மாதங்கள் மட்டுமே இறால் பண்ணைகளுக்கு மின்சார பயன்பாடு உள்ளது.

    மீதமுள்ள 6 மாதங்கள் பயன்பாடு இல்லாத போது கே.வி.ஏ. ரூ.40-ல் இருந்து ரூ.150-ஆக மின்கட்டணத்தை குறைக்க வேண்டும்.

    இறாலுக்கு குறைந்தபட்ச ஆதார விலையை உறுதி செய்ய வேண்டும்.

    இறால் பண்ணைக ளுக்கான புதிய லைசென்சு காலதாமதமின்றி வழங்கவும், ரினிவல் விரைந்து வழங்க வேண்டும். பேரிடர் காலங்களில் இறால் பண்ணைகளுக்கு ஏற்படும் பொருளாதார இழப்புகளுக்கு நிவாரணம் வழங்க வேண்டும்.

    தம்பிக்கோட்டை கீழக்காடு பகுதிகளில் சுமார் 4 ஆயிரம் ஏக்கரில் இறால் பண்ணை தொழில் நடைபெற்று வருகிறது.

    எனவே, இப்பகுதியில் இறால்களை பதப்படுத்த குளிர்சாதன கிடங்கு அமைத்துத்தர வேண்டும்.

    இவ்வாறு மனுவில் கூறப்பட்டுள்ளது.

    • வெளியூர் வியாபாரிகள் மட்டுமின்றி பொதுமக்களும் போட்டி போட்டு வாங்கி சென்று வருகின்றனர்.
    • வஞ்சிரம் மீன் ரூ. 800 முதல் ரூ. 900 வரை விற்பனை செய்யப்பட்டது.

    கடலூர்:

    கடலூர் துறைமுகத்தில் இருந்து ஏராளமான மீனவர்கள் தினந்தோறும் தங்கள் விசை மற்றும் பைபர் படகுகளில் மீன் பிடிக்க சென்று வருகின்றனர். இதனை தொடர்ந்து கடலூர் துறைமுகத்தில் அதிகாலை முதல் மீன் விற்பனை தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதனை உள்ளூர் மற்றும் வெளியூர் வியாபாரிகள் மட்டுமின்றி பொதுமக்களும் போட்டி போட்டு வாங்கி சென்று வருகின்றனர். இந்த நிலையில் கடந்த சில வாரங்களாக மீன் வறுத்து குறைவாக இருந்து வந்ததால் மீன்களின் விலை அதிகரித்து காணப்பட்டன. இன்று ஞாயிற்றுக்கிழமை கடலூர் துறைமுகத்தில் அதிகாலை முதல் ஏராளமான மீன்களை போட்டி போட்டு வாங்கி சென்றதை காண முடிந்தது. இதில் இன்று மீன்கள் விலை அதிகரித்து காணப்பட்டது.

    வழக்கமாக கிலோ ரூ.500 முதல் ரூ. 600 வரை விற்பனை செய்யப்படும் வஞ்சிரம் மீன் ரூ. 800 முதல் ரூ. 900 வரை விற்பனை செய்யப்பட்டது. இதே போல சங்கரா மீன் ரூ. 350 முதல் ரூ. 400 வரையும், சீலா மீன் ரூ.400-க்கு , நெத்திலி மீன் ரூ.20-க்கும், நண்டு கிலோ ரூ. 300-க்கும், சிறிய வகை இறால் ரூ. 300-க்கும், பெரிய வகை இறால் ரூ. 600-க்கு விற்பனை செய்யப்பட்டது. பன்னி சாத்தான் மீன் ரூ. 500-க்கும், பாறை ரூ. 350-க்கும் விற்பனை செய்யப்பட்டது. இந்த விலை ஏற்றத்தினால் கடலூர் துறைமுகத்தில் இன்று காலை பொதுமக்கள் கூட்டம் குறைவாக காணப்பட்டது. மேலும் மீன் வாங்க வந்தவர்களும் குறைந்த அளவிலேயே மீன்களை வாங்கி சென்றதையும் காணமுடிந்தது.

    ×