என் மலர்
நீங்கள் தேடியது "சிங்கப்பூர் அதிபர்"
- சிங்கப்பூரின் ஒன்பதாவது அதிபராகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள தர்மன் சண்முகரத்னத்துக்கு வாழ்த்துகள்.
- தங்களது பதவிக்காலம் மிக வெற்றிகரமானதாக அமைந்திட விழைகிறேன்.
சென்னை:
சிங்கப்பூர் அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள தர்மன் சண்முகரத்னத்துக்கு வாழ்த்து தெரிவித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சமூக வலைதளங்களில் வெளியிட்டுள்ள பதிவில் கூறி இருப்பதாவது:-
சிங்கப்பூரின் ஒன்பதாவது அதிபராகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள தர்மன் சண்முகரத்னத்துக்கு வாழ்த்துகள். உங்களது தமிழ் மரபும், அசர வைக்கும் தகுதிகளும் எங்களைப் பெருமை கொள்ளச்செய்வதோடு, சிங்கப்பூரின் பன்முகத்தன்மையையும் வெளிக்காட்டுகிறது. தங்களது பதவிக்காலம் மிக வெற்றிகரமானதாக அமைந்திட விழைகிறேன்.
இவ்வாறு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அதில் பதிவிட்டுள்ளார்.
- இந்திய வம்சாவளியைச் சேர்ந்த தமிழரான தர்மன் சண்முகரத்னம் 70 சதவீதத்திற்கும் அதிகமான வாக்குகள் பெற்று வெற்றி.
- சிங்கப்பூரின் புதிய அதிபருக்கு பிரதமர் மோடி டுவிட்டரில் வாழ்த்து.
சிங்கப்பூர் அதிபராக இந்திய வம்சாவளியைச் சேர்ந்த தமிழரான தர்மன் சண்முகரத்னம் 70 சதவீதத்திற்கும் அதிகமான வாக்குகள் பெற்று வெற்றி பெற்றுள்ளார்.
இதையடுத்து, சிங்கப்பூரின் புதிய அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள தர்மன் சண்முகரத்னத்திற்கு பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து பிரதமர் மோடி தனது டுவிட்டர் பக்கத்தில் கூறியிருப்பதாவது:-
சிங்கப்பூர் அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்ட தர்மன் சண்முகரத்னத்திற்கு மனமார்ந்த வாழ்த்துக்கள். இந்தியா-சிங்கப்பூர் வியூகக் கூட்டாண்மையை மேலும் வலுப்படுத்த உங்களுடன் நெருக்கமாகப் பணியாற்ற எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறேன்.
இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.
- சிங்கப்பூரில் கடந்த 1-ந் தேதி அதிபர் தேர்தல் நடந்தது.
- பதவியேற்பு விழாவுக்கான ஏற்பாடுகள் மும்முரமாக நடந்து வருகின்றன.
சிங்கப்பூர்:
சிங்கப்பூரில் கடந்த 1-ந் தேதி அதிபர் தேர்தல் நடந்தது. இந்த தேர்தலில் இந்திய வம்சாவளியை சேர்ந்தவரும், தமிழருமான தர்மன் சண்முகரத்னம் 70.4 சதவீத வாக்குகளை பெற்று வெற்றி பெற்றார்.
இதை தொடர்ந்து, சிங்கப்பூரின் 9-வது அதிபராக அவர் நாளை (வியாழக்கிமை) பதவியேற்கிறார். பதவியேற்பு விழாவுக்கான ஏற்பாடுகள் மும்முரமாக நடந்து வருகின்றன.
தர்மன் சண்முகரத்னம் இதற்கு முன், சிங்கப்பூர் நாணய வாரியத்தின் தலைவர், பிரதமரின் ஆலோசகர், நிதிமந்திரி, கல்வி மந்திரி, துணை பிரதமர் என பல்வேறு பதவிகளை வகித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
- இந்தியாவின் அந்நிய நேரடி முதலீட்டின் மிகப்பெரிய ஆதாரங்களில் சிங்கப்பூரும் ஒன்று.
- இந்தியா-சிங்கப்பூர் இடையே நீண்ட காலமாக நட்புறவு உள்ளது.
புவனேஸ்வர்:
சிங்கப்பூர் அதிபர் தர்மன் சண்முகரத்தினம், அடுத்த மாதம் (ஜனவரி) ஒடிசாவுக்கு வருகை தர உள்ளார். இந்தியாவுக்கான சிங்கப்பூர் தூதர் சைமன் வாங், ஒடிசா தலைமைச் செயலகத்தில் முதல்-மந்திரி மோகன் சரண் மாஜியை சந்தித்தபோது இந்த தகவலை உறுதி செய்தார்.
ஒடிசாவில் நடைபெறும் மாநில முதலீட்டாளர் உச்சிமாநாட்டின் (மேக் இன் ஒடிசா கான்க்ளேவ் 2025) முதல் வெளிநாட்டு பங்குதாரராக சிங்கப்பூர் இணைந்துள்ளது.
இந்தியாவின் அந்நிய நேரடி முதலீட்டின் மிகப்பெரிய ஆதாரங்களில் சிங்கப்பூரும் ஒன்று. இந்தியாவும் சிங்கப்பூரில் ஐ.டி., வங்கி மற்றும் உற்பத்தி நிறுவனங்களின் மூலம் வலுவான முதலீட்டை கொண்டுள்ளது.
இந்தியா-சிங்கப்பூர் இடையே நீண்ட காலமாக நட்புறவு உள்ளது. பரஸ்பர வளர்ச்சி மற்றும் பிராந்திய ஸ்திரத்தன்மைக்கான உறவுகளை வலுப்படுத்த இரு நாடுகளும் ஆர்வமாக உள்ளன.
சிங்கப்பூரும் இந்தியாவும் 60 ஆண்டுகால ராஜதந்திர உறவைக் கொண்டாடுகின்றன. இரு நாடுகளும் ஆழமான வரலாற்று, கலாசார மற்றும் பொருளாதார உறவுகளை கொண்டுள்ளன. இந்த நட்புறவு இப்போது வர்த்தகம், பாதுகாப்பு, தொழில்நுட்பம் மற்றும் கலாசார பரிமாற்றம் போன்ற துறைகளை உள்ளடக்கிய ஒரு மூலோபாய கூட்டாண்மையாக உருவாகியுள்ளது. இந்த இருதரப்பு உறவை நினைவுகூரும் வகையில், சிங்கப்பூர் அதிபர் அடுத்த மாதம் இந்தியா வருகிறார்.
ஒடிசா முதல்-மந்திரி மாஜி கடந்த மாதம் சிங்கப்பூர் சென்றபோது, சிங்கப்பூர் அதிபர் ஒடிசாவிற்கு வருகை தர ஏற்பாடு செய்யுமாறு அந்நாட்டு அரசாங்கத்திடம் கோரிக்கை விடுத்திருந்தார். அவரது அழைப்பை ஏற்று, சிங்கப்பூர் அதிபர் தனது இந்திய பயணத்தின் போது ஒடிசாவுக்கு வர முடிவு செய்துள்ளார்.
- சிங்கப்பூர் அதிபர் தர்மன் சண்முகரத்னம் இந்தியா வந்துள்ளார்.
- அவர் பிரதமர் மோடியைச் சந்தித்து இரு தரப்பு உறவுகள் குறித்து விவாதித்தார்.
புதுடெல்லி:
சிங்கப்பூர் அதிபர் தர்மன் சண்முகரத்னம் அரசுமுறைப் பயணமாக இந்தியா வந்துள்ளார். தலைநகர் டெல்லியில் ஜனாதிபதி மாளிகையில் அவருக்கு சிவப்பு கம்பள வரவேற்பு அளிக்கப்பட்டது. ஜனாதிபதி திரவுபதி முர்மு, பிரதமர் மோடி, வெளியுறவு மந்திரி ஜெய்சங்கர் உள்ளிட்டோர் வரவேற்றனர்.
இந்நிலையில், சிங்கப்பூர் அதிபர் சண்முகரத்னத்தை பிரதமர் மோடி இன்று இரவு சந்தித்துப் பேசினார். இருதரப்பு உறவுகள் குறித்து விவாதிக்கப்பட்டது. இந்தச் சந்திப்பின்போது தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல் உள்ளிட்ட அதிகாரிகள் உடனிருந்தனர்.
இதுதொடர்பாக பிரதமர் மோடி எக்ஸ் வலைதளத்தில் வெளியிட்டுள்ள செய்தியில், இன்று மாலை சிங்கப்பூர் அதிபர் தர்மன் சண்முகரத்தினத்தை சந்தித்தேன். இந்தியா-சிங்கப்பூர் விரிவான மூலோபாய கூட்டுறவின் முழு வீச்சு குறித்து விவாதித்தோம். டிஜிட்டல் மயமாக்கல், திறன், இணைப்பு மற்றும் பல எதிர்காலத் துறைகளைப் பற்றி பேசினோம். தொழில்துறை, உள்கட்டமைப்பு மற்றும் கலாசாரத்தில் ஒத்துழைப்பை மேம்படுத்துவதற்கான வழிகள் குறித்தும் பேசினோம் என பதிவிட்டுள்ளார்.