என் மலர்
நீங்கள் தேடியது "உடல் எடை அதிகரிப்பு"
- உடலை கட்டுக்கோப்பாக வைத்திருக்க மிகவும் முக்கியமான வழி 'உணவுக்கட்டுப்பாடு' ஆகும்.
- கொழுப்புச்சத்து அதிகம் உள்ள உணவுகளை தவிர்ப்பது நல்லது.
தற்போது பெரும்பாலான பெண்களின் கவலையை அதிகரிப்பது அதிக உடல் எடை மற்றும் உடல் பருமன் பிரச்சினைதான். இதனால் சர்க்கரை நோய், உயர் ரத்த அழுத்தம், மாரடைப்பு, புற்றுநோய், பித்தப்பை நோய்கள், பெருங்குடல் மற்றும் கருப்பை புற்றுநோய், கீல்வாதம், பக்கவாதம், மனி அழுத்தம் போன்ற பல்வேறு பாதிப்புகளுக்கு உள்ளாக நேரிடும்.
உடலை கட்டுக்கோப்பாக வைத்திருக்க மிகவும் முக்கியமான வழி 'உணவுக்கட்டுப்பாடு' ஆகும். இதை தவறாக புரிந்துகொண்டு சாப்பிடாமல் இருப்பது, காலை உணவை தவிர்ப்பது போன்ற விஷயங்களை பலரும் செய்து வருகின்றனர்.
காலை உணவை தவிர்த்தால் ரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவு குறையும். இதனால் வளர்சிதை மாற்றத்தில் முரண்பாடு ஏற்படும். இது உடல் பருமன் பிரச்சினை மேலும் அதிகரிப்பதற்கு வழிவகுக்கும், காலை உணவை தவிர்ப்பதால் பசியைக் கட்டுப்படுத்த முடியாமல் நொறுக்குத்தீனிகள் மீது கவனம் செல்லும், மதிய உணவை அளவுக்கு அதிகமாக சாப்பிட நேரிடும்.
முதலில் எந்தெந்த உணவுகள் உடல் பருமனை ஏற்படுத்தும் என்று தெரிந்துகொண்டு அவற்றை தவிர்க்க வேண்டும். பதப்படுத்தப்பட்ட உணவுகள், குளிர்பானங்கள். துரித உணவுகள், சர்க்கரை மற்றும் கொழுப்புச்சத்து அதிகம் உள்ள உணவுகளை தவிர்ப்பது நல்லது.
நமது உடலுக்கு தேவையான கார்போஹைட்ரேட், புரதச்சத்து. வைட்டமின்கள் மற்றும் தாது உப்புக்கள் ஆகியவை சரிவிகிதத்தில் கலந்திருக்கும் உணவுமுறையை பின்பற்ற வேண்டும். பெண்களின் ஆரோக்கியத்திற்கு கால்சியம், இரும்புச்சத்து, வைட்டமின் 'டி' மற்றும் பி காம்ப்ளக்ஸ் போன்ற சத்துக்கள் அவசியமானதாகும் இவை நிறைந்த உணவுகளை தினசரி உணவுப் பட்டியவில் சேர்த்துக்கொள்ள வேண்டும்.
காலை உணவாக முழு தானியங்கள் பழங்கள், புரதம் மற்றும் ஆரோக்கியமான கொழுப்பு நிறைந்த உணவுகளை சாப்பிடலாம். மதிய மற்றும் இரவு உணவாக கோழி இறைச்சி அல்லது மீன், வேகவைத்த காய்கதிகள் போன்றவற்றை சாப்பிடுவது நல்லது. நொறுக்குத் தீனிகளுக்கு பதிலாக பழங்களை சாப்பிடலாம். தினமும் போதுமான அளவு தண்ணிர் குடிக்க வேண்டும். உணவுக் கட்டுப்பாட்டை பின்பற்றுவதோடு சீரான தூக்கமும் முக்கியமானது. இவற்றோடு நடைப்பயிற்சி போன்ற மிதமான உடற்பயிற்சிகளையும் செய்துவந்தால் உடல் எடை எளிதாக குறையும்.
- ஆண்களுக்கு புரோஸ்டெட் புற்றுநோய் அபாயத்தை ஏற்படுத்தும்.
- இதய பிரச்சினை மற்றும் ரத்த அழுத்தம் போன்ற பிரச்சினைகள் ஏற்படும்.
பிராய்லர் கோழி அதிகமாக சாப்பிடுவதால் ஆண்களுக்கு புரோஸ்டெட் புற்றுநோய் அபாயத்தை ஏற்படுத்தும். வறுத்த கோழிகளை சாப்பிடும் போது உடலுக்கும் கெடுதல்களை ஏற்படுத்தும். இதனால் உடல் எடை அதிகரிக்கும்.
பிராய்லர் கோழிகள் விரைவில் வளர்ச்சி அடைய அதற்கு தீவனமாக ஹார்மோன்கள் கொடுக்கப்படுகிறது. இந்த ஹார்மோன்கள் நிறைந்த பிராய்லர் கோழி இறைச்சியை சாப்பிடும் போது உடல் எடை அதிகரித்து உடல்நல பிரச்சினைகளை உண்டுபண்ணுகிறது.
பிராய்லர் கோழியில் அதிகப்படியான கொழுப்புச்சத்துக்கள் உள்ளன. இதனை அதிகமாக எடுத்துக்கொள்ளும் போது உடலில் கொழுப்புகள் அதிகரித்து இதய பிரச்சினை மற்றும் ரத்த அழுத்தம் போன்ற பிரச்சினைகள் ஏற்படும்.
பிராய்லர் கோழியில் உள்ள ரசாயனம் ஆண்களின் விந்தணுவை குறைத்து மலட்டுத்தன்மையை ஏற்படுத்தும். இதனால் பிராய்லர் கோழியை தவிர்ப்பது நல்லது. பெண்களும் பிராய்லர் கோழி சாப்பிடுவதை தவிர்க்க வேண்டும்.
பிராய்லர் கோழி சாப்பிடுவதால் பெண்களுக்கு கருப்பையில் பிரச்சினைகளை ஏற்படுத்தும். இதனால் தான் பெண்குழந்தைகள் சிறுவயதிலேயே பருவம் அடைகின்றனர். பிராய்லர் கோழியை வறுத்து சாப்பிடுவதை தவிர்க்க வேண்டும். வேண்டுமென்றால் அதிக எண்ணெய் இல்லாமல் சமைத்து சாப்பிடலாம்.
குறைந்த பட்சம் 165 வெப்பநிலையில் இறைச்சியை சமைக்க வேண்டும். மேலும் பிராய்லர் கோழியில் சமைத்த உணவை மறுநாள் வைத்து சாப்பிடுவதை முற்றிலும் தவிர்த்துவிட வேண்டும்.
- ஓட்ஸ் என்பது ஆரோக்கியமான உணவு என்பதில் சந்தேகமில்லை.
- குளுட்டன் ஃப்ரீ ஓட்ஸ் வாங்கி பயன்படுத்துங்கள்.
ஓட்ஸ் என்பது ஆரோக்கியமான உணவு என்பதில் சந்தேகமில்லை. ஆனால், அதன் தரத்தையும் அளவையும் பொறுத்துதான் அந்த ஆரோக்கியத்தைக் கணிக்க முடியும். அதாவது இன்ஸ்டன்ட் ஓட்சில் சர்க்கரை சேர்க்கப்பட்டிருக்கும். அதை அடிக்கடி எடுத்துக்கொள்வோருக்கு உடல் எடை அதிகரிக்கலாம்.
நீங்கள் ஓட்ஸ் கஞ்சியில் சேர்த்துக்கொள்வதாகக் குறிப்பிட்டிருக்கும் வேர்க்கடலை. தாமரைவிதை, சோளம் போன்றவற்றின் அளவும் இந்த விஷயத்தில் முக்கியம்.
ஓட்சில் நிறைய வகைகள் உள்ளன. ரோல்டு ஓட்ஸ் அல்லது ஸ்டீல் கட் குளுட்டன் ஃப்ரீ ஓட்ஸ் போன்றவை ஆரோக்கியமானவை. இவற்றில் ஒன்றை 30 கிராம் அளவு எடுத்து முதல் நாள் இரவே தண்ணீரில் ஊறவைத்து, மறுநாள் சாப்பிடலாம். தினமும் வேர்க்கடலை சாப்பிடுவதும் உடல் எடை அதிகரிப்புக்கு ஒரு காரணமாக இருக்கலாம். வேர்க்கடலையில் நல்ல புரதம் அதிகம் உண்டு என்றாலும் அதில் கலோரிகள் மிக அதிகம்.
சோளத்திலும் கார்போஹைட்ரேட் அதிகம் என்பதால் அதையும் தொடர்ந்து சாப்பிடுவதன் மூலம் உடல் எடை அதிகரிக்கும். உங்களுக்கு வயிற்று உப்புசமோ, வாயு பிரிவதோ இருந்தாலும், வயிறு அழுத்தமாக இருப்பது போன்றோ உணர்ந்தாலும் ஓட்ஸ் சாப்பிடுவதை நிறுத்திவிடுங்கள் அல்லது குளுட்டன் ஃப்ரீ ஓட்ஸ் வாங்கி பயன்படுத்துங்கள்.

30 கிராம் ஓட்சை வேகவைத்து, அதில் அரை கப் தயிர் சேர்த்து, வெங்காயம், தக்காளித் துண்டுகள் சேர்த்து, கடுகு தாளித்து அப்படியே காலை உணவுக்குச் சாப்பிடலாம். இப்படி சாப்பிடப் பிடிக்காதவர்கள், 30 கிராம் ஓட்ஸ், ஏதேனும் ஒரு பழம், ஒரு டேபிள்ஸ்பூன் சியா சீட்ஸ், இரண்டு பாதாம், இரண்டு வால்நட்ஸ், ஒரு டீஸ்பூன் பூசணி விதைகள் எல்லாம் சேர்த்து ஸ்மூத்தி போன்று எடுத்துக்கொள்ளலாம். எனவே, நீங்கள் சாப்பிடும் அதே ஓட்சை இப்படி வேறு வேறு வகைகளில் மாற்றி சாப்பிட்டுப் பாருங்கள்... ஆரோக்கியமாகவும் உணர்வீர்கள், எடையும் அதிகரிக்காது.
- ஆரோக்கியம் தொடர்பான விஷயங்களில் கவனமாக இருங்கள்.
- வாழ்க்கைச் சூழல் மாற மாற உடற்பயிற்சி குறைகிறது.
40 வயதை தாண்டிய பெண்கள் தங்கள் உடல் நலத்தில் அதிக அக்கறை எடுத்துக்கொள்ள வேண்டும். நீங்கள் 40 வயதை தாண்டிய பெண் என்றால் பின்வரும் ஆரோக்கியம் தொடர்பான விஷயங்களில் கவனமாகவும், அக்கறையாகவும் இருங்கள்.
சர்க்கரை நோய்:
40 வயதுக்கு மேற்பட்ட பெண்களுக்கு ஏற்படும் ஹார்மோன் மாற்றங்கள், தொப்பையை அதிகரிக்கச் செய்யும். அதிகப்படியான கொழுப்பு, இன்சுலின் செயல்பாட்டை தடுக்கிறது. இது சர்க்கரை நோய்க்கு வழிவகுக்கிறது.
உயர் ரத்தஅழுத்தம்:
நடுத்தர வயதில் பெண்கள் சந்திக்கும் பொதுவான பிரச்சினைகளில் ஒன்று, ரத்த அழுத்தத்தில் ஏற்ற இறக்கம் உயர் ரத்த அழுத்தம், நீரிழிவு போன்ற வாழ்க்கை முறை நோய்கள், பரம்பரை நோய்களாகும். வாழ்க்கைச் சூழல் மாற மாற உடற்பயிற்சி குறைகிறது. உணவுப்பழக்கமும் மாறுகிறது. இது ரத்த அழுத்தத்துக்கும் காரணமாகிறது.
தைராய்டு:
தைராய்டு ஹார்மோன்கள் கழுத்தின் முன்பகுதியில் அமைந்துள்ள தைராய்டு சுரப்பி மூலம் உற்பத்தி செய்யப்படுகின்றன. இந்த ஹார்மோன்கள், நமது உடல் வெப்ப நிலை, இதயத் துடிப்பு மற்றும் பல உடல் செயல்பாடுகளை ஒழுங்குபடுத்துகின்றன. தைராய்டு சமநிலை இல்லாதபோது, வளர்சிதைமாற்றம், உடல் வெப்பநிலை, கருவுறுதல், எடை அதிகரிப்பு, இழப்பு, மாதவிடாய், முடி ஆரோக்கியம், மனநலம், இதயத் துடிப்பு போன்ற நமது உடலின் ஒவ்வொரு செயல்பாடும் பாதிக்கப்படுகின்றன.
மெனோபாஸ்:
பெரும்பாலான பெண்களுக்கு பொதுவாக 45 முதல் 55 வயதுக்குள் மாதவிடாய் நிறுத்தம் தொடங்குகிறது. இது முன்னதாகவோ அல்லது அதற்குப் பின்னரோ இருக்கலாம். இதற்கான அறிகுறிகள் பல. உதாரணமாக, இரவில் அதிகமாக வியர்த்தல், பிறப்புறப்பு வறட்சி, பதற்றம் மற்றும் மனநிலை மாற்றங்கள் போன்றவற்றை கூறலாம்.
மாதவிடாய் நின்ற பிறகு கால்சியம் இழப்பானது, எலும்புச்சிதைவு மற்றும் இதய பிரச்சினைகளுக்கு வழிவகுக்கும். எனவே, இந்த காலகட்டத்தில் நல்ல தூக்கம் பழக்கத்தை பின்பற்றுவதும் போதுமான ஓய்வு எடுப்பதும் அவசியம். வலுவான, ஆரோக்கியமான எலும்புகளுக்கு கால்சியம், வைட்டமின் டி மற்றும் மக்னீசியம் நிறைந்த உணவுகளை பெண்கள் அதிகம் சாப்பிட வேண்டும். மூச்சுப்பயிற்சி, தியானம் போன்றவற்றிலும் கவனம் செலுத்தலாம்.
- சத்துக்களில் முக்கியமானவை வைட்டமின்கள் தான்.
- சூரிய சக்தியில் இருந்துதான் பெரும்பாலும் நமக்கு கிடைக்கிறது.
உடலுக்குத் தேவையான முக்கிய சத்துக்களில் முக்கியமானவை வைட்டமின்கள். நாம் அன்றாடம் உண்ணும் காய்கறி, பழங்களில் இருந்து இந்த வைட்டமின் சத்துக்கள் நமக்கு கிடைக்கின்றன. அப்படி ஒரு நாளைக்கு போதுமான சத்துக்கள் உணவில் இருந்து கிடைக்கவில்லை என்றால் மருத்துவர்கள் வைட்டமின் மாத்திரைகளை பரிந்துரைப்பார்கள் இல்லையா?
இந்த வைட்டமின்களில் பல பிரிவுகள் உள்ளன. அதில் முக்கியமானது வைட்டமின் டி. இது சூரிய சக்தியில் இருந்துதான் பெரும்பாலும் நமக்கு கிடைக்கிறது. அதிகாலை சூரிய ஒளியில் இருந்து ஒரு நாளைக்குத் தேவையான வைட்டமின்கள் நமக்கு கிடைத்துவிடும்.

ஆனால் தற்போது பலரும் வெயில் படாமலேயே இருந்துவிடுகின்றனர். தைராய்டு இருப்பவர்களுக்கு முக்கியமாக இந்த வைட்டமின் உடலில் போதுமான அளவு சென்றடைவதில்லை. இதனால்தான் திடீர் உடல்பருமன் வருவதாக ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர்.
இந்த வைட்டமின் டி குறைபாட்டால் உடல் பருமன் மட்டுமல்லாமல் இதயக் கோளாறுகள், புற்றுநாய் வருவதற்கான வாய்ப்பும் இருக்கிறது என்று அவர்கள் கூறுகிறார்கள்.
மேலும் இந்த வைட்டமின் டி நேரடியாக நன்மை தருவதோடு மறைமுகமாகப் பல வேலைகளை செய்கிறது. வைட்டமின் டி நமது உடலில் கேல்சியம் மற்றும் பாஸ்பரஸ் கிரகிப்பதற்கு முக்கியப் பங்காற்றுகிறது. மேலும் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கவும் உதவுகிறது. இதனால் உடலில் வைட்டமின் டி குறைபாட்டால் கால்சியமும் குறையும். அதனால்தான் எலும்பு வலி இருப்பவர்களுக்கு முதலில் வைட்டமின் டி டெஸ்ட் எடுக்கிறார்கள்.
வைட்டமின் டி குறைபாட்டால் எப்படி உடல் பருமன் ஆகிறது?
உடலில் உள்ள கொழுப்பு செல்களை குறைப்பது வைட்டமின் டியின் வேலை. மேலும் வைட்டமின் டி சீரான அளவு இருந்தால் செரொடின், டெஸ்டொஸ்டெரொன் போன்ற ஹார்மோன்கள் சீராக சுரக்க உதவுகிறது. இதனால் உடல் பருமனாவது தடுக்கப்படுகிறது.
உடலில் உள்ள கொழுப்பின் அளவயும் கட்டுப்படுத்துகிறது. உடல் எடை குறைய டயட் இருப்பவர்கள் கண்டிப்பாக வைட்டமின் டி அளவை பரிசோதித்துக் கொள்ளுங்கள்.
வைட்டமின் டி குறைபாட்டால் எவ்வளவு டயட் இருந்தாலும் உடல் எடை குறையாது. மேலும் கால்சியமும் குறைந்து போய், உடல் மிகுந்த சோர்வுற்றும், எலும்புகளில் வலி ஏற்படவும் வாய்ப்புகள் அதிகம்.
வைட்டமின் டி அதிகம் உடலில் சேர என்ன செய்யவேண்டும்?
முதலில் உங்களுக்கு வைட்டமின் டி குறைவாக இருக்கிறதா என்று மருத்துவரிடம் பரிசோதனை செய்து அவர் கூறும் வழிமுறைகளைப் பின்பற்றுங்கள்.
இந்த வகை வைட்டமின்கள் வெயில் தவிர உணவுகளில் மிகவும் குறைவு என்பதால் உங்களுக்கு வைட்டமின் டி மிகவும் குறைவாக இருந்தால், வைட்டமின் மாத்திரைகளை கொடுப்பார்கள். தயவுசெய்து நீங்களாகவே மாத்திரைகளை எடுத்துக் கொள்ளாதீர்கள். ஏனென்றால் இந்த வகை வைட்டமின் உடலில் அதிகமாக இருந்தால் அது கொழுப்பாக மாறிவிடும். இது மிகவும் கெடுதலான விஷயம்.
பொதுவாகவே தினமும் வைட்டமின் டி கிடைக்கவேண்டும் என்றால், அதிகாலை வெயில் படுமாறு நடைப்பயிற்சி, யோகா ஆகியவற்றை செய்யத் தொடங்குங்கள். முடியாவிட்டாலும் காலையில் செய்தித் தாளையாவது வெயிலில் உக்கார்ந்து படியுங்கள்.
தினமும் 20-30 நிமிடங்கள் காலை வெயில் உடலில் படுமாறு பார்த்துக்கொள்ளுங்கள். வைட்டமின் டி குறைபாட்டால் பாதிப்படைவது வயிறுதான் என்பதால், வைட்டமின் டி குறைந்தால் முதலில் எடை கூடுவது வயிற்றுப்பகுதிதான். அதனால் வயிறு தொப்பைப் போடுகிறது என்றால் உடனே மருத்துவரிடன் சென்று ஆலோசனைக் கேளுங்கள்.
- தலைநகர் இஸ்தான்புல்லில் சுல்தான்பெய்லி மாவட்டத்தில் உள்ள அவரது வீட்டின் 5 வது மாடியில் இருந்து குதித்து அய்குட் தற்கொலை செய்துகொண்டுள்ளார்
- அய்குட் உடலின் அருகே கிடைத்த கடிதத்தை வைத்து போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.
தன்னைத் தானே திருமணம் செய்து கொண்டதாக அறிவித்த துருக்கியை சேர்ந்த இளம் இன்ஸ்டா பிரபலம் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சமீப காலமாக பிரபலமடையத் தொடங்கியுள்ள தன்னைத் தானே திருமணம் செய்து கொள்ளும் சோலோகேமி [SOLOGAMY] திருமண முறைப்படி கடந்த வருடம் [2023] தான் திருமணம் செய்து கொண்டதாக துருக்கியை சேர்ந்த இன்ஸ்ட்டா பிரபலம் குப்ரா அய்குட் (வயது 26) அறிவித்திருந்தார்.

இந்நிலையில் நேற்றய தினம் தலைநகர் இஸ்தான்புல்லில் சுல்தான்பெய்லி [Sultanbeyli] மாவட்டத்தில் உள்ள அவரது வீட்டின் 5 வது மாடியில் இருந்து குதித்து அய்குட் தற்கொலை செய்துகொண்டுள்ளார். அவர் கடைசியாக இன்ஸ்டாவில் வெளியிட்டிருந்த வீடியோவில், உடல் எடையை அதிகரிப்பது சவாலாக உள்ளது.
நான் மிக விரைவில் எடையை அதிகரித்தே ஆகவேண்டும். ஆனால் தினமும் ஒருகிலோ எடை குறைந்துகொண்டே வருகிறேன் என வேதனையுட தெரிவித்திருந்தார். இந்நிலையில் அவரது தற்கொலை அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அய்குட் உடலின் அருகே கிடைத்த கடிதத்தை வைத்து போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.
- அவரது பாடி மாஸ் இண்டக்ஸ் BMI 37.8 வரை அதிகரித்துள்ளது
- இரண்டு மடங்கு உணவை உட்கொள்ள உதவிய அவரது நண்பருக்கு 6 மாதம் சிறை தண்டனை விதிக்கப்பட்டது.
தென் கொரியாவில் 18 வயது முதல் 35 வயதுக்குள் இருக்கும் உடல் தகுதி உள்ள ஆண்கள் குறைந்தது மூன்று ஆண்டுகள் கட்டாயம் ராணுவத்தில் சேவை செய்ய வேண்டும் என்ற சட்டம் உள்ளது. ஆனால் ராணுவ வேலையில் இருந்து தப்பிக்க 26 வயது இளைஞர் ஒருவர் தனது உடல் தகுதியை குறைக்க திட்டமிட்டு அதிகம் சாப்பிட்டு வந்துள்ளார்.
இதன்மூலம் உடல் எடை அதிகரித்து ராணுவ சேவை புரிவதற்காக உடல் தகுதி இல்லாமல் போய்விடும் என்பது அவரது மாஸ்டர் பிளான். இந்த திட்டத்தின்படி மானாவாரியாகச் சாப்பிட்டு 102 கிலோ வரை தனது இயல்பான எடையை மூன்றே மாதங்களில் அவர் அதிகரித்துள்ளார்.

அவரது பாடி மாஸ் இண்டக்ஸ் BMI 37.8 வரை அதிகரித்துள்ளது. இது ஒபிசிட்டி எனப்படும் உடல் எடை அதிகம் என்பதை நிர்ணயிக்கும் அளவாக உள்ளது. ஆனால் இந்த திட்டத்தை கட்னுபிடிக்கப்பட்ட நிலையில் அவர் ராணுவ சேவையை தவிர்க்க முயற்சித்த குற்றத்திற்காக நீதிமன்றத்தில் நிறுத்தப்பட்டார்.

இந்த குற்றத்துக்கு 3 வருடம் தண்டனை வழங்கலாம் என்ற நிலையில் முதல் முறையாக அவர் குற்றம் புரிந்துள்ளதாலும், ராணுவத்திற்கு உண்மையாகச் சேவை செய்வேன் என்று வாக்குறுதி அளித்ததாலும் அவருக்கு 2 வருட சிறை தண்டணை விதிக்கப்பட்டது.
மேலும் அவர் தினமும் இரண்டு மடங்கு உணவை உட்கொள்ள உதவிய அவரது நண்பருக்கு 6 மாதம் சிறை தண்டனை விதிக்கப்பட்டது. அவர் விளையாட்டாக இந்த திட்டத்தை சொன்னார் ஆனால் நிஜமாகவே செய்வார் என்று நினைக்கவில்லை என்று பிற நண்பர்கள் வாக்குமூலம் அளித்துள்ளனர்.
- உயர் ரத்த அழுத்தம் ஒரு அமைதியான கொலையாளி.
- ஆரோக்கியமற்ற உணவுகள் உடலின் உள் உறுப்புகளை பாதிக்கிறது.
உயர் ரத்த அழுத்தம் இன்றைக்கு இளைய தலைமுறை முதல் வயதானவர்கள் வரை பரவலாக காணப்படுகிறது. உயர் ரத்த அழுத்தம் ஒரு அமைதியான கொலையாளி என்கிறது மருத்துவ உலகம். இது உடலில் இருப்பதை அறிந்து அதற்கான சரியான வாழ்க்கை முறை, உணவு முறை மாற்றங்கள், மருத்துவம் எடுத்துக் கொள்ளாத போது மிகப்பெரிய பாதிப்புகளை உண்டாக்கும்.

ரத்த அழுத்தத்தை தவிர்க்க 4 விஷயங்களை கடைப்பிடிக்க வேண்டும் என்கின்றனர் மருத்துவர்கள். முதலாவதாக, தவறான உணவுப்பழக்கங்கள் ரத்த அழுத்தத்தில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்துகிறது.
ஆரோக்கியமற்ற உணவுகள் உடலின் உள் உறுப்புகளை பாதிக்கிறது. தவறான உணவால் உருவாகும் ரத்த அழுத்தத்தை தவிர்க்க அன்றாட உணவில் முழு தானியங்கள் மற்றும் எளிதான புரதங்கள் கொண்ட உணவுகளை சாப்பிட வேண்டும்.
அன்றாடம் சிறிது பழங்கள் மற்றும் தாராளமாக காய்கறிகளை சாப்பிடுதல் அவசியம். பாக்கெட்டுகளில் அடைக்கப்பட்ட பதப்படுத்தப்பட்ட உணவுகள் மற்றும் சோடியம் நிறைந்த உணவுகளை உட்கொள்வதை தவிர்க்க வேண்டும்.

இரண்டாவதாகதினமும் 30 நிமிட வேக நடை ரத்த அழுத்தத்தை தவிர்க்க உதவுகிறது. நடைப்பயிற்சி இதயத்தில் ரத்தத்தை சீராக பம்ப் செய்ய உதவுகிறது. இதய தமனிகளில் அழுத்தத்தை குறைக்கிறது.
மூன்றாவதாக உடல் எடையை சீராக பராமரிப்பது ரத்த அழுத்தத்தை தவிர்க்கும். உடல் எடை அதிகரிப்பை தடுக்க சர்க்கரை கலந்த உணவுகளை தவிர்க்க வேண்டும். இரவு 8 மணிக்குள் உணவு உண்ண வேண்டும்.

நான்காவதாக நாள்பட்ட மன அழுத்தம் ரத்த அழுத்தத்தை அதிகரிக்கிறது மற்றும் காலப்போக்கில், இது நீடித்த உயர் ரத்த அழுத்தத்திற்கு வழிவகுக்கும். தேவையற்ற சிந்தனைகள் மற்றும் அவசியம் இல்லாத வேலைகள் மன அழுத்தத்தை அதிகரிக்கிறது.
எனவே இவை அனைத்தையும் கைவிடும் போது ரத்த அழுத்த பாதிப்பிலிருந்து விடுபடலாம் என்கிறார்கள் மருத்துவர்கள்.
- மருந்து மாத்திரைகள் கூட உடல் பருமனை அதிகமாக்கிவிடும்.
- கல்லீரலில் கொழுப்பு படிய வாய்ப்புண்டு.
சமீப காலங்களில் நிறைய குழந்தைகள் உடல் பருமனாக இருக்கின்றனர் என்பது சரிதான். இதற்கு பல காரணங்கள் இருந்தாலும் உடலிலுள்ள ஹார்மோன்களின் ஏற்ற இறக்கம், ஆரோக்கியமற்ற உணவுத்தேர்வு, குறைவான உடலுழைப்பு, குடும்ப உணவுப் பழக்க வழக்கங்கள் இவைகளெல்லாம் குழந்தைகள் சிறுவயதிலேயே அதிக உடல் எடையுடன் குண்டாக வளர முக்கிய காரணங்கள் ஆகும். இதற்கான காரணங்கள் மற்றும் பாதிப்புகள் வருமாறு:-

ஒரு குழந்தைக்கு வயதுக்கேற்ற, உயரத்துக்கேற்ற உடல் எடை இல்லாமல் இருக்கிறதென்றால் அதிகமாக இருக்கின்ற ஒவ்வொரு கிராம் எடையும் கூட பின்னாளில் அந்த குழந்தையை ஆரோக்கியமற்ற பாதைக்கு கொண்டு செல்லும். அதிக சர்க்கரை, அதிக கொழுப்பு, அதிக ரத்த அழுத்த அளவு முதலியவைகளை உண்டுபண்ணும்.
உங்கள் குழந்தை உடல் பருமன் உள்ள பரம்பரையை சேர்ந்திருந்தால் அந்த குழந்தையும் குண்டாகவும், அதிக எடையுடனும் இருக்க வாய்ப்பு அதிகம்.
தன்னால், பெற்றோர்களால், குடும்பத்தால், சுற்றுப்புறத்தால் அன்றாடம் ஏற்படும் சிறுசிறு பிரச்சனைகள் கூட கொஞ்சம் கொஞ்சமாக மன அழுத்தமாக மாறி, அதுகூட உடல் பருமனை ஏற்படுத்தச் செய்யும். சில மருந்து மாத்திரைகள் கூட உடல் பருமனை அதிகமாக்கிவிடும்.
வாரக்கணக்கில் வீட்டுக்குத் தேவையான அனைத்து உணவுப் பொருட்களையும் வாங்கி வைத்துக்கொண்டு எந்த நேரம் வேண்டுமானாலும் எடுத்து சாப்பிடலாம் என்ற எண்ணத்தை ஏற்படுத்தக் கூடாது. மிக நெரிசலான பகுதிகளில் வாழ்பவர்களுக்கு உடற்பயிற்சி செய்ய போதுமான இடம் கிடைக்காது. மாற்று இடத்தை தேடவும்.
சர்க்கரை நோய், அதிக கொழுப்பு, அதனால் அதிக ரத்த அழுத்தம் பின்னாளில் வரலாம். அதிக எடையினால் மூட்டுவலி, இடுப்புவலி, முதுகு வலி வர வாய்ப்புண்டு. மூச்சுத் திணறல் ஆஸ்துமா, குறட்டை போன்றவை வர வாய்ப்புண்டு. கல்லீரலில் கொழுப்பு படிய வாய்ப்புண்டு.

ஆரோக்கியமான, சத்தான உணவுகளை மட்டுமே சாப்பிடுவது என்று முடிவு பண்ண வேண்டும். கண்ட கண்ட இடத்தில் கண்ட கண்ட நேரத்தில் சாப்பிடக் கூடாது என்று முடிவு எடுக்க வேண்டும். குழந்தைகள் மட்டும் அல்ல அவர்களது குடும்பமும் அதை கடைப்பிடிக்க வேண்டும். நொறுக்குத் தீனிகள் அறவே கூடாது என்று முடிவு செய்ய வேண்டும்.
குழந்தைகள் போதுமான நேரம் நன்றாகத் தூங்குகிறார்களா என்பதைக் கவனிக்க வேண்டும். தூக்கம் சரியாக இல்லை என்றால் ஹார்மோன்கள் தொந்தரவு ஏற்பட்டு உடல் எடை கூட வாய்ப்புண்டு. ஆண்டுக்கு ஒருமுறை உடல் பருமனான குழந்தைகளை உங்கள் குடும்ப டாக்டரிடம் காண்பியுங்கள்.
சிறுவயதில் உடல் பருமனுக்கு சிகிச்சை அளித்து குணமாக்குவதும், வரவிடாமல் முன்னரே தடுப்பதும் குழந்தையின் உடல் ஆரோக்கியம் இப்பொழுதும் எப்பொழுதும் நன்றாக இருக்க உபயோகமாக இருக்கும்.