search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "மத்தியபிரதேசம்"

    • பாஜக பெண் கவுன்சிலரின் கணவருக்கும் சப் இன்ஸ்பெக்டருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.
    • சப் இன்ஸ்பெக்டரின் யூனிபார்மை கழட்டி விடுவேன் என்று கவுன்சிலரின் கணவர் மிரட்டல் விடுத்துள்ளார்.

    மத்தியப் பிரதேச மாநிலம் சிங்ராலியில் உள்ள காவல்நிலையத்தில் கால்வாய் கட்டுவது தொடர்பான பிரச்னை தொடர்பாக பாஜக பெண் கவுன்சிலரின் கணவர் அர்ஜுன் குப்தா விசாரணைக்கு வந்துள்ளார்.

    அப்போது பாஜக பெண் கவுன்சிலரின் கணவருக்கும் சப் இன்ஸ்பெக்டர் வினோத் மிஸ்ராவுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.

    சப் இன்ஸ்பெக்டரின் யூனிபார்மை கழட்டி விடுவேன் என்று கவுன்சிலரின் கணவர் மிரட்ட, யூனிபார்மை கழற்றி எறிந்து எஸ்.ஐ, வாக்குவாதம் செய்துள்ளார்.

    இந்தநாடு பிப்ரவரி மாதம் நடந்த இந்த சம்பவம் தொடர்பான வீடியோ தற்போது இணையத்தில் வெளியாகி சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

    இந்த வீடியோவை பகிர்ந்து மத்தியப் பிரதேச பாஜக அரசை காங்கிரஸ் கடுமையாக விமர்சித்துள்ளது.

    இந்த சம்பவத்திற்கு அடுத்து, சப் இன்ஸ்பெக்டர் வினோத் மிஸ்ரா மீது துறை ரீதியிலான நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் காவல்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

    • சேறு நிறைந்த சாலைகளில் அப்பெண் சேற்றில் படுத்து கும்பிட்டு சென்றுள்ளார்.
    • இந்த சம்பவத்தால் அவ்வழியாக சென்றவர்கள் அதிர்ச்சியும், குழப்பமும் அடைந்தனர்.

    மத்தியபிரதேச மாநிலம் ஷியோபூர் மாவட்டத்தில் ஒரு பழங்குயின பெண் சேறு நிறைந்த சாலையில் படுத்து கும்பிட்டு செல்லும் வீடியோ இணையத்தில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது.

    மழைக்காலத்தில் கிராமத்தில் உள்ள சாலைகள் முழுவதும் சேறு நிறைந்து காணப்படுவதால் ஏற்படும் சிரமங்களை உணர்த்தும் வகையில் இந்த போராட்ட வடிவத்தை அப்பெண் முன்னெடுத்துள்ளார்.

    பன்வாடா மாதா கோவிலுக்கு செல்லும் சேறு நிறைந்த சாலைகளில் அப்பெண் சேற்றில் படுத்து கும்பிட்டு சென்றுள்ளார். இந்த சம்பவத்தால் அவ்வழியாக சென்றவர்கள் அதிர்ச்சியும், குழப்பமும் அடைந்தனர்.

    "சாலைகளை சீரமைக்க கோரி பலமுறை புகார் அளித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்காததால் இவ்வாறு செய்வதாகவும் கிராமத்தில் அடிப்படை வசதிகள் கூட இல்லாததை மக்களுக்கு உணர்த்துவதற்கான தனது கடைசி முயற்சி இதுவாகும்" என்று அப்பெண் தெரிவித்தார்.

    • கனமழையால் 400 ஆண்டுகள் பழமையான கோட்டை சுவர் இடிந்து அருகில் இருந்த வீட்டின் மீது விழுந்தது.
    • அதிகாலை 4 மணி அளவில் இந்த விபத்து நடந்துள்ளது.

    மத்தியபிரதேச மாநிலம் டாடியா நகரில் பெய்து வரும் கனமழையால் 400 ஆண்டுகள் பழமையான ராஜ்கர் கோட்டை சுவர் இடிந்து அருகில் இருந்த வீட்டின் மீது விழுந்தது.

    இந்த விபத்தில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 7 பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். இடிபாடுகளில் சிக்கியிருந்த 2 பேர் காயங்களுடன் உயிருடன் மீட்கப்பட்டுள்ளனர். அதிகாலை 4 மணி அளவில் இந்த விபத்து நடந்துள்ளது.

    உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு 4 லட்சம் நிவாரண நிதி வழங்குவதாக அம்மாநில முதல்வர் மோகன் யாதவ் அறிவித்துள்ளார்.

    • ஏமாற்றி காரியம் சாதிக்க வேண்டியிருக்கிறது என்கிறார்கள் பல தாய்மார்கள்.
    • மத்திய பிரதேசத்தில்தான் அந்த சம்பவம் அரங்கேறியிருக்கிறது.

    இந்த காலத்துல குழந்தைகளை கண்டிக்கவும் முடியல.. தண்டிக்கவும் முடியல... அந்த அளவுக்கு படு சுட்டித்தனமாக இருக்கிறாங்க..

    இது பல பெற்றோர்களின் புலம்பல்களாக இருக்கிறது. இதை பரிணாம வளர்ச்சி என்பதா அல்லது நவநாகரிக மாற்றத்தின் விளைவுகள் என்பதா என்றே தெரியவில்லை.

    முன்பெல்லாம் நிலவைக்காட்டியும், பாட்டிகதை, ராஜா கதைகளையும் சொல்லியும் சோறூட்டினார்கள். இப்போது வீடியோ கேம்களை காண்பித்தும், செல்போன்களை கையில் கொடுத்தும் ஏமாற்றி காரியம் சாதிக்க வேண்டியிருக்கிறது என்கிறார்கள் பல தாய்மார்கள்.

    அதேபோல் குழந்தைகள் தவறு செய்தால் தைரியமாக தண்டித்த காலமும் இருந்தது. ஆனால் இப்போது தண்டிக்க முடியவில்லை. தவறை சுட்டிக்காட்டினாலே பல குழந்தைகள் பெற்றோருடன் சண்டையிட்டுக்கொண்டு பேசாமல் இருந்துவிடுகிறார்கள்.

    அல்லது தாய்-தந்தையை பற்றி தாத்தா, பாட்டிகளிடம் போட்டுக்கொடுக்கும் சேட்டைகளை செய்துவிடுகின்றனர் என்பது இன்னும் சிலரது ஆதங்கங்கள்.

    இது என்ன பிரமாதம்..? ஒரு சிறுவன் தன்னை திட்டிய தந்தை மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று போலீஸ் நிலையத்துக்கே சென்றுவிட்டான் என்றால் நம்ப முடிகிறதா... நம்பித்தான் ஆகவேண்டும்.

    மத்திய பிரதேசத்தில்தான் அந்த சம்பவம் அரங்கேறியிருக்கிறது. அந்த மாநிலத்தின் தார் மாவட்டத்தை சேர்ந்த பாக்னெர் போலீஸ் நிலையத்துக்கு அதே பகுதியை சேர்ந்த 5 வயது சிறுவன் சென்றான்.

    தன்னந்தனியாக வந்த சிறுவனை பார்த்து அங்கிருந்த போலீஸ் அதிகாரி ஏதோ வழிதவறி வந்துவிட்டானோ என்று முதலில் நினைத்தார். பின்னர் அவனை நாற்காலியில் அமரவைத்து பேச்சுக்கொடுத்தபிறகே அவன் வந்த நோக்கம் அவருக்கு தெரிந்தது.

    சிறுவனது கொஞ்சும் மழலைப்பேச்சு ரசிக்க வைத்தாலும், அவன் சொன்ன விஷயங்கள் அவரை அதிர்ச்சியடையவைத்தது. ``சார், என் பேரு ஹசானைன். எங்க அப்பா இக்பால். அவர் என்னை அடிக்கடி திட்டுறாரு, ரோடு பக்கம் போகக்கூடாது, ஆற்றங்கரைக்கு போகக்கூடாதுன்னு கண்டிஷன் போடுறாரு.

    எனக்கு தொந்தரவு கொடுக்கிறாரு, என்னை அடிக்கவும் செய்யறாரு. அவர் மேலே நடவடிக்கை எடுக்கணும். அவரை கைது செய்து சிறையில் தள்ளுங்க..'' என்று தனது புகாரை அடுக்கிக்கொண்டே போனான் அந்த சிறுவன்.

    கோபத்தில், கொதிக்கும் பால் போல் பொங்கிய அவனை போலீசார் சிரித்துப்பேசி சமாதானப்படுத்தினார்கள். அதன்பிறகு அவனை வீட்டுக்கு அழைத்துச்சென்று அவனது தாயாரிடம் ஒப்படைத்தனர்.

    அந்த நேரத்தில் அவனது தந்தை இக்பால் வீட்டில் இல்லை. வியாபாரத்துக்காக வெளியூருக்கு சென்றிருந்தார். அவரிடம் போலீசார் செல்போனில் பேசி நடந்ததை கூறி, மகனிடம் கண்டிப்போடு நடக்காதீர்கள். அன்பாக அறிவுரை சொல்லுங்கள், என்று அறிவுரை கூறினர்.

    சிறுவனிடமும், தினமும் பள்ளிக்கு ஒழுங்காக செல், குறும்பு செய்யக்கூடாது, தாய்-தந்தை சொல்வதை கேட்டு நடக்க வேண்டும் என்று கனிவோடு கூறிவிட்டு சென்றனர், போலீசார்.

    இதற்கிடையே சிறுவனின் வேடிக்கையான புகாரை ரசித்த போலீஸ் நிலையத்தில் இருந்த சிலர் அதை செல்போனில் பதிவு செய்து வலைத்தளத்தில் பரவவிட்டனர். அது தற்போது படுவேகமாக உலா வருகிறது.

    இதை பலரும் திரும்ப திரும்ப பார்ப்பதால் அதிக லைக்குகளை குவிக்கும் வீடியோவாக அது மாறிவிட்டது.

    இதுதொடர்பாக சிறுவனின் தந்தைக்கும் சிலர் செல்போனில் பேசி அவனுக்கு ஆதரவாக வரிந்துகட்டிக் கொண்டு வசைபாடவும் செய்கிறார்களாம். அவர்களுக்கு பதிலளித்து முடியவில்லை என்று அங்கலாய்த்துக் கொள்கிறாராம் அவனது தந்தை.

    • ஆக்கிரமிப்பாளர்கள் தனது நிலத்தை கையகப்படுத்தி விட்டனர் என்று 2 ஆண்டுகளாக விவசாயி போராடி வருகிறார்
    • புகார் தொடர்பாக உரிய நடவடிக்கை எடுப்பதாக ஆட்சியர் அனுப்குமார் சிங் உறுதியளித்துள்ளார்.

    மத்தியபிரதேச மாநிலத்தில் நில ஆக்கிரமிப்பு தொடர்பாக பலமுறை புகார் அளித்தும் தீர்வு காணப்படாததால் ஏமாற்றமடைந்த விவசாயி ஒருவர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை நோக்கி உருண்டு சென்றதால் பரபரப்பு ஏற்பட்டது.

    ஆக்கிரமிப்பாளர்கள் தனது நிலத்தை கையகப்படுத்தி விட்டனர் என்று 2 ஆண்டுகளாக விவசாயி ஷியாம்லால், போராடி வருகிறார். 2 ஆண்டுகளாக தனது புகார்கள் புறக்கணிக்கப்பட்டதால் மனமுடைந்த அவர், பொது விசாரணைக்காக ஆட்சியர் அலுவலகத்திற்கு செல்லும் வழியில் உருண்டு சென்றார்.

    விவசாயி உருண்டு செல்வதை பார்த்து அதிர்ச்சியான மக்களை அதனை வீடியோ எடுத்து சமூக வலைத்தளங்களில் வெளியிட்டனர்.

    விவசாயியின் விண்ணப்பத்தைப் பெற்று உரிய நடவடிக்கை எடுப்பதாக ஆட்சியர் அனுப்குமார் சிங் உறுதியளித்துள்ளார்.

    • ஏற்கனவே திருமணமான சப்னா அவரின் காதலை ஏற்கவில்லை.
    • தன் மீதும் பெட்ரோலை ஊற்றி அவர் தீ வைத்துள்ளார்.

    மத்தியப் பிரதேசத்தின் ஜபல்பூரில் தன்னை திருமணம் செய்து கொள்ள மறுத்த பெண்ணை 42 வயது நபர் ஒருவர் பெட்ரோல் ஊற்றி தீ வைத்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

    இது தொடர்பான வீடியோ சமூக வலைத்தளங்களில் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    42 வயதான சப்னா யாதவ் என்ற பெண்ணை நரேந்திர பஞ்சாபி என்பவர் காதலித்து வந்துள்ளார்.

    ஏற்கனவே திருமணமான சப்னா அவரின் காதலை ஏற்கவில்லை. ஆனாலும் தொடர்ந்து நரேந்திர பஞ்சாபி அவரை தொந்தரவு செய்ததால் அவர் போலீசில் புகார் அளித்துள்ளார். ஆனால் போலீஸ் நடவடிக்கை ஏதும் எடுக்கவில்லை என்று சொல்லப்படுகிறது.

    இதனையடுத்து கோபமடைந்த நரேந்திர பஞ்சாபி, பூக்கடையில் வேலை செய்து வந்த அப்பெண்ணின் மீது பெட்ரோல் ஊற்றி தீ வைத்ததோடு தன் மீதும் பெட்ரோலை ஊற்றி அவர் தீ வைத்துள்ளார்.

    இதனை பார்த்த அக்கம் பக்கத்தினர் தீயை அணைத்து இருவரையும் மருத்துவமனையில் சேர்த்தனர். தற்போது இருவரும் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

    நரேந்திர பஞ்சாபி மீது போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர். மருத்துவ சிகிச்சைக்குப் பிறகு அவர் கைது செய்யப்படுவார் என்று போலீசார் தெரிவித்தனர்.

    • இந்த சம்பவம் தொடர்பாக ரோகித் வால்மீகி புகார் அளித்துள்ளளார்.
    • இந்த புகார் தொடர்பாக விசாரணை நடந்து வருகிறது.

    மத்தியபிரதேச மாநிலத்தில் காவலர்களின் வாகனங்களை முந்தி சென்றதற்காக தலித் தூய்மை பணியாளர் தாக்கப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

    இந்த சம்பவம் தொடர்பாக ரோகித் வால்மீகி புகார் அளித்துள்ளளார். அந்த புகாரில், "வேலை முடிந்து பைக்கில் வீட்டிற்கு செல்லும்போது போலீஸ் மற்றும் பணியாளர்களின் வாகனங்களை முந்தி சென்றேன். இதனையடுத்து, கவனக்குறைவாக வாகனம் ஓட்டியதாக என்னை மிரட்டி காவல்நிலையத்திற்கு அழைத்து சென்று தாக்கினார்கள்" என்று தெரிவித்துள்ளார்.

    இந்த புகார் தொடர்பாக விசாரணை நடந்து வருவதாக காவல் கண்காணிப்பாளர் தெரிவித்துள்ளார்.

    • வயிற்றில் நீண்ட பொருள் ஒன்று இருப்பதை கண்டுபிடித்தனர்.
    • வாலிபரின் பெருங்குடல் கிழிந்து இருந்தது.

    மத்திய பிரதேச மாநிலம் சத்தர்பூர் மாவட்டத்தில் வாலிபர் ஒருவருக்கு கடுமையான வயிற்று வலி ஏற்பட்டது. வீட்டில் அவர் மயக்க நிலைக்கு சென்றார்.

    உடனடியாக அவரை அங்குள்ள ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். டாக்டர்கள் வாலிபரின் வயிற்றில் எக்ஸ்ரே செய்தனர். அப்போது வயிற்றில் நீண்ட பொருள் ஒன்று இருப்பதை கண்டுபிடித்தனர்.

    அவருக்கு ஆபரேஷன் செய்தனர். அப்போது அவருடைய வயிற்றில் ஒரு அடி நீளத்திற்கு சுரைக்காய் இருந்தது தெரிய வந்தது. அதனை டாக்டர்கள் வெளியே எடுத்தனர். மேலும் சுரைக்காய் வயிற்றில் இருந்ததால் வாலிபரின் பெருங்குடல் கிழிந்து இருந்தது. அதற்கும் சிகிச்சை அளிக்கப்பட்டது.

    வாலிபரின் ஆசனவாய் வழியாக அவருடைய உடலுக்குள் சுரைக்காய் செலுத்தப்பட்டுள்ளது. வாலிபர் சுயநினைவு இல்லாமல் தற்போது உள்ளார்.

    அவருடைய வயிற்றில் யாராவது வலுக்கட்டாயமாக சுரைக்காய் செருகினார்களா?. அல்லது அவரே வைத்தாரா என்பது தெரியவில்லை.

    வாலிபருக்கு சுயநினைவு வந்தால் மட்டுமே இது குறித்து தகவல் தெரியவரும் என டாக்டர்கள் தெரிவித்தனர்.

    • இதற்கு முன்பு ஒரே நாளில் 9,26,000 மரக்கன்றுகளை நட்டு அசாம் மாநிலம் கின்னஸ் சாதனை புடைத்திருந்தது.
    • மத்தியப் பிரதேச முதல்வர் மோகன் யாதவ் கின்னஸ் புத்தகத்தில் இருந்து அதிகாரப்பூர்வ சான்றிதழை பெற்றுக்கொண்டார்.

    மத்திய பிரதேச மாநிலம் இந்தூரில் 24 மணி நேரத்தில் 11 லட்சத்துக்கும் அதிகமான மரக்கன்றுகளை நட்டு புதிய உலக சாதனை படைக்கப்பட்டுள்ளது.

    மத்தியப் பிரதேச முதல்வர் மோகன் யாதவ் கின்னஸ் புத்தகத்தில் இருந்து அதிகாரப்பூர்வ சான்றிதழை பெற்றுக்கொண்டார்.

    இந்த சாதனை குறித்து மோகன் யாதவ் தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அதில், தூய்மையான நகரம் என்ற சாதனையை தொடர்ந்து ஒரே நாளில் அதிக மரக்கன்றுகள் நடப்பட்ட நகரம் என்ற சாதனையையும் படைத்த இந்தூரின் சகோதர சகோதரிகளுக்கு மனமார்ந்த வாழ்த்துகள். இந்தூர் நகரம் ஒரே நாளில் 11 லட்சத்துக்கும் அதிகமான மரக்கன்றுகளை நட்டு உலக சாதனை படைத்துள்ளது" என்று பதிவிட்டுள்ளார்.

    இதற்கு முன்பு ஒரே நாளில் 9,26,000 மரக்கன்றுகளை நட்டு அசாம் மாநிலம் கின்னஸ் சாதனை புடைத்திருந்தது. அச்சாதனையை தற்போது இந்தூர் முறியடித்து புதிய சாதனையை படைத்துள்ளது.

    • கல்கத்தா உயர்நீதிமன்ற நீதிபதி பதவியிலிருந்து விலகிய பின்னர் அபிஜித் கங்கோபாத்யாய் பாஜகவில் இணைந்தார்.
    • பாஜகவில் சேர்ந்த அபிஜித் தம்லுக் தொகுதியில் வேட்பாளராக நிறுத்தப்பட்டு வெற்றி பெற்றார்.

    கடந்த ஏப்ரல் மாதம் 27 ஆம் தேதி ஓய்வு பெற்ற மத்திய பிரதேச உயர்நீதிமன்ற நீதிபதி ரோகித் ஆர்யா இன்று அம்மாநில பாஜகவில் இணைந்துள்ளார்.

    கொல்கத்தா உயர்நீதிமன்ற நீதிபதி அபிஜித் கங்கோ பாஜகவின் இணைந்த இரண்டு மாதத்தில் மேலும் ஒரு உயர்நீதிமன்ற நீதிபதி பாஜகவில் இணைந்துள்ளார்.

    2018 முதல் கொல்கத்தா உயர்நீதிமன்ற நீதிபதியாக பணியாற்றிய அபிஜித் ஓய்வு பெறுவதற்கு 3 மாதங்கள் முன் ராஜினாமா செய்தார்.

    கல்கத்தா உயர்நீதிமன்ற நீதிபதி பதவியிலிருந்து விலகிய பின்னர் அபிஜித் கங்கோபாத்யாய் பாஜகவில் இணைந்தார். பாஜகவில் சேர்ந்த அபிஜித் தம்லுக் தொகுதியில் வேட்பாளராக நிறுத்தப்பட்டு வெற்றி பெற்றார்.

    • கணவர்களை வீட்டில் உங்கள் கண்முன்னே மது அருந்த சொல்லுங்கள்.
    • என்னுடைய இந்த யோசனை நடைமுறை சாத்தியமானது

    மத்தியபிரதேச சமூகநீதி அமைச்சர் நாராயண் சிங் குஷ்வா போபாலில் நடந்த போதை ஒழிப்பு நிகழ்ச்சியில் கலந்து கொண்டார்.

    அப்போது பேசிய அவர், உங்கள் கணவர்களும் மகன்களும் மது குடிப்பதை நிறுத்த வேண்டும் என்று நீங்கள் ஆசைப்பட்டால், அவர்களை வெளியே மது அருந்தவிடாமல் வீட்டில் உங்கள் கண்முன்னே மது அருந்த சொல்லுங்கள். அம்மா, மனைவி, பிள்ளைகள் முன்பு அவர்கள் மது அருந்தினால் அவர்களாகவே வெட்கப்பட்டு மது குடிப்பதை படிப்படியாக குறைத்து விடுவார்கள்.

    மேலும், உங்களை பார்த்து நமது பிள்ளைகளும் எதிர்காலத்தில் மது அருந்த ஆரம்பிப்பார்கள் என்று உங்கள் கணவர்களிடம் சொல்லுங்கள். பின்னர் அவர்கள் தானாகவே மது அருந்துவதை நிறுத்தி விடுவார்கள். என்னுடைய இந்த யோசனை நடைமுறை சாத்தியமானது" என்று அவர் தெரிவித்தார்.

    • முக்கிய குற்றவாளியான நிர்சிங் என்பவரை காவல்துறையினர் கைது செய்தனர்.
    • பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டுத் துறை இணை அமைச்சர் தொகுதியில் இந்த கொடூர சம்பவம் நடந்துள்ளது.

    மத்தியபிரதேச மாநிலம் தார் மாவட்டத்தில் ஒரு பெண்ணை பல ஆண்கள் சேர்ந்து மரக்கட்டையால் அடிக்கும் வீடியோ சமூக வலைத்தளங்களில் வெளியாகி பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

    அந்த வீடியோவில் தாக்கப்படும் பெண்ணை காப்பாற்ற முயற்சிக்காமல் பலரும் வீடியோ எடுப்பது பதிவாகியுள்ளது.

    வீடியோ வைரலானத்தை அடுத்து, முக்கிய குற்றவாளியான நிர்சிங் என்பவரை காவல்துறையினர் கைது செய்தனர். மற்றவர்களை காவல்துறை தேடி வருகின்றனர்.

    பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டுத் துறை இணை அமைச்சர் சாவித்ரி தாக்கூரின் சொந்த தொகுதியில் இந்த சம்பவம் நடந்துள்ளதால் இது அதிக கவனம் பெற்றுள்ளது. 

    ×