search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "இயற்கை மருத்துவம்"

    • பொன்னாவரை வேர், சுக்கு, மிளகு, சீரகம் கஷாயம் குடித்தால் பித்தபாண்டு தீரும்.
    • அகத்திக்கீரை சாப்பிட்டு வந்தால் பித்தக் கோளாறுகள் அகலும்.

    விருப்பமான உணவுகள், மசாலா உணவுகள் பேன்றவற்றை பார்த்தால் சாப்பிடலாமா, வேண்டாமா என்ற அச்சம். அதிகம் சாப்பிடலமா சாப்பிட்டால் ஜீரணமாகுமா நெஞ்சு கறிக்குமா...? எதுக்கிக்கெண்டே இருக்குமா? இதுபேன்ற கேள்விகளுக்கெல்லாம் முக்கிய காரணமாக விளங்குவது பித்தம். இந்த பித்தம் தெடர்பான பிரச்சினைகளையும், அதனை பேக்கும் எளிய இயற்கை மருத்துவ முறைகளையும் பார்க்க்கலாம்....

     * இஞ்சித் துண்டை தேனில் ஊறவைத்து 48 நாட்கள் சாப்பிட்டு வந்தால் பித்தம் தெளிந்து ஆயுள் பெருகும்.

    * இஞ்சிச் சாறு, வெங்காயச் சாறு தேன் கலந்து குடித்தால் பித்த மயக்கம் தீரும்.

    * பழுத்த மாம்பழத்தை சாறு பிழிந்து அந்த சாறை அடுப்பில் லேசாக சூடேற்றி பின் ஆறவைத்து சாப்பிட்டு வந்தால் பித்தம் குறையும்.

    * எலுமிச்சை சாதம் வாரத்தில் மூன்று நாள் காலையில் சாப்பிட்டால் பித்தத்தை தணிக்கும்.

    * ரோஜாப்பூ கஷாயம், பால் சர்க்கரை கூட்டி சாப்பிட்டால் பித்த நீர் மலத்துடன் வெளியேறும்.

    * பொன்னாவரை வேர், சுக்கு, மிளகு, சீரகம் கஷாயம் குடித்தால் பித்தபாண்டு தீரும்.

    * விளாம்பழம் கிடைக்கும் காலங்களில் தினசரி ஒன்று சாப்பிட்டு வந்தால் பித்தத்தை குறைக்கலாம்.

    * அகத்திக்கீரை சாப்பிட்டு வந்தால் பித்தக் கோளாறுகள் அகலும்.

    * பனங்கிழங்கு சாப்பிட்டால் பித்தம் நீக்கி உடல் பலம் பெருகும்.

    * கமலா பழம் (ஆரஞ்சு) சாப்பிட்டால் உடல் உஷ்ணத்தை தணிக்கும்.

    * நத்தைசூரி விதையை வறுத்து பொடித்து காய்ச்சி கற்கண்டு சேர்த்து சாப்பிட்டு வர கல்லடைப்பு தீரும்.

    * எலுமிச்சை இலையை மோரில் ஊறவைத்து அந்த மோரை உணவில் பயன்படுத்தி வந்தால் பித்த சூடு தணியும்.

    * அரச மரக் குச்சியை சிறு துண்டுகளாக வெட்டி சட்டியில் போட்டு காய்ச்சி ஆறவைத்து, அந்த நீரில் தேன் கலந்து குடித்தால் ரத்தத்தில் உள்ள பித்தம் குறையும்.

    • சுற்றுச்சூழல் காரணமாக நம் உடலில் பலவிதமான நச்சுக்கள் சேர வாய்ப்புள்ளது.
    • உணவுகள் கழிவுகள் சரியாக வெளியேறாமல் தேங்கினால் மலச்சிக்கல் ஏற்படும்.

    நாம் சாப்பிடும் உணவுகள் மற்றும் நம் சுற்றுச்சூழல் காரணமாக நம் உடலில் பலவிதமான நச்சுக்கள் சேர வாய்ப்புள்ளது. இதனால் நம் உடல் பலவித பிரச்சினைகளை சந்திக்க நேரிடும். அதில் இருந்து நம்மை பாதுகாத்துக் கொள்வது மிகவும் அவசியம். நம் உடலில் தங்கி இருக்கும் நச்சுக்களை இயற்கை மருத்துவம் மூலம் எவ்வாறு வெளியேற்றலாம் என்பதை தெரிந்து கொள்ளலாம்.

    * நாம் உண்ணும் உணவுகள் கழிவான பிறகு, அது சரியாக வெளியேறாமல் உடலில் தேங்கினால் மலச்சிக்கல் முதல் செரிமானக்கோளாறு வரை ஏராளமான நோய்கள் ஏற்பட அதுவே காரணமாகலாம். அந்த கழிவுகள் அல்லது நச்சுக்களை நாம் அன்றாடம் உண்ணும் உணவுகளைக் கொண்டே மிக எளிதாக அகற்றிவிடலாம்.

     * இஞ்சியை மையாக அரைத்துச் சாறு எடுத்து வெறும் வயிற்றில் குடித்தால், குடலில் தேங்கியிருக்கும் கழிவுகள் வெளியேறும். சிலர் காலையில் அருந்தும் டீயில் இஞ்சி சேர்த்து அருந்தி வந்தாலும் அவை உடலைச் சுத்தமாக்கும்.

     * காலையில் கண் விழித்ததும் ஒரு டம்ளர் வெதுவெதுப்பான நீரில் அரை எலுமிச்சை பழத்தின் சாற்றுடன் தேன் கலந்து குடித்தால் கழிவுகள் வெளியேறும். ரத்த நாளங்களில் தங்கியிருக்கும் நச்சுகள் அகலும்.

    * இஞ்சியை நீர் சேர்த்து, காய்ச்சி வடிகட்டி, தேன் கலந்து குடித்தால் கல்லீரலில் கழிவுகள் சேராமல் இருக்கும். முழு நெல்லிக்காயுடன் சிறு துண்டு இஞ்சி, கறிவேப்பிலை சேர்த்து அரைத்து, எலுமிச்சைச் சாறு பிழிந்து, வடிகட்டி, தேன் கலந்து வெறும் வயிற்றில் குடித்தால் மலக்கழிவுகள் வெளியேறும்.

    * வெள்ளைப்பூண்டு நோய் எதிர்ப்பு மண்டலத்தை வலிமையாக்கும். உடலில் தங்கியிருக்கும் நச்சுகளை முற்றிலுமாக வெளியேற்றும். எனவே, நமது அன்றாட உணவில் பூண்டு சேர்த்துக்கொள்வது நல்லது.

    * கேரட்டுடன் சிறு துண்டு இஞ்சி, ஒரு சிட்டிகை மஞ்சள்தூள் சேர்த்து அரைத்து, எலுமிச்சைச் சாறு சேர்த்து, சிறிது நீர் அல்லது தேங்காய்ப் பால் சேர்த்துக்கொள்ளலாம். இதை வாரம் ஒருநாள் குடித்தால், உடலில் தங்கியிருக்கும் நச்சுகள் வெளியேறும்.

    * கடுக்காய் நல்லதொரு கழிவகற்றி மட்டுமல்ல, நச்சகற்றியும் கூட. ஐந்து கிராம் கடுக்காய்த்தூளை வெந்நீரில் கலந்து இரவு தூங்கப்போவதற்கு முன்னர் குடித்தால் செரிமானப் பிரச்சினை சரியாகும். மலம் எளிதாக வெளியேறும். திரிபலா சூரணமும் கழிவுகளை அகற்றும்.

    • சுமார் 300-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் கலந்துகொண்டனர்.
    • இந்திய மருத்துவ மற்றும் ஓமியோபதி துறை மருத்துவர்களின் விழிப்புணர்வு பேரணி

    திருவட்டார் :

    இயற்கை மருத்துவ தினத்தை முன்னிட்டு சிற்றாறு பகுதியில் இந்தியா மருத்துவம் மற்றும் ஓமியோபதி மருத்துவ துறை சார்பில் குமரி மாவட்ட சித்த மருத்துவ அலுவலர் டாக்டர் ராபர்ட்சிங் தலைமையில் இந்திய மருத்துவ மற்றும் ஓமியோபதி துறை மருத்துவர்களின் விழிப்புணர்வு பேரணியும், அதைத்தொடர்ந்து பொது மக்களுக்கு மருத்துவ ஆலோசனைகளும் வழங்கப்பட்டது.

    இதில் உணவு, யோக பயிற்சி, தூக்கம், ஆரோக்கியமான உடல், மனம், ஆன்மா போன்ற சாராம்சங்கள் பொதுமக்களுக்கு எடுத்துரைக்கப்பட்டன. நோய் நிலையில் கடைபிடிக்க வேண்டிய இயற்கை மருத்துவ சிகிச்சை முறைகள் பற்றி பொதுமக்களுக்கு விரிவாக எடுத்துரைக்கப்பட்டன. நிகழ்ச்சியில் சுமார் 300-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் கலந்துகொண்டனர்.

    • தேசிய இயற்கை மருத்துவ தினத்தை முன்னிட்டு ஒன்றிய அலுவலக கூட்ட அரங்கில் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது
    • டாக்டர். சுந்தரவேல், இயற்கை மருத்துவர்கள் தனலட்சுமி, அருள்ஜோதி, அகிலா உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    பல்லடம்:

    பல்லடம் அருகே உள்ள பொங்கலூரில்தேசிய இயற்கை மருத்துவ தினத்தை முன்னிட்டு ஒன்றிய அலுவலக கூட்ட அரங்கில் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து பொங்கலூர் பொ.வெ.க மேல்நிலைப்பள்ளியைச் சேர்ந்த மாணவ மாணவிகள் கலந்து கொண்ட விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது. இந்த பேரணியை பொங்கலூர் ஒன்றிய குழு தலைவர் வக்கீல் எஸ். குமார் தொடங்கி வைத்தார். இந்த விழிப்புணர்வு ஊர்வலத்தில் மாவட்ட சித்த மருத்துவ அலுவலர் தனம், பொங்கலூர் ஊராட்சி மன்ற தலைவர் சத்யா பாலசுப்ரமணியம், பள்ளி தலைமை ஆசிரியர் ஜெயபாலன்,தமிழாசிரியர் சிவக்குமார், பொங்கலூர் ஒன்றிய ஆணையாளர் விஜயகுமார், பொங்கலூர் வட்டார மருத்துவ அலுவலர் டாக்டர். சுந்தரவேல், இயற்கை மருத்துவர்கள் தனலட்சுமி, அருள்ஜோதி, அகிலா உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    • தேசிய இயற்கை மருத்துவ மையம் சார்பில் வாசுதேவநல்லூர் சமுதாய நலக்கூடத்தில் மருத்துவ முகாம் நடந்தது.
    • முகாமில் 200-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

    நெல்லை:

    வாசுதேவநல்லூர் எஸ்.தங்கப்பழம் கல்வி குழுமத்தில் உள்ள இயற்கை மருத்துவம் மற்றும் யோக அறிவியல் ஆராய்ச்சி மையம் மற்றும் தேசிய இயற்கை மருத்துவ மையம் சார்பில் மருத்துவ முகாம், வாசுதேவநல்லூர் சமுதாய நலக்கூடத்தில் நடந்தது. முகாமை எஸ்.தங்கப்பழம் கல்வி குழுமத்தின் நிறுவனர் எஸ்.தங்கப்பழம், தாளாளர் எஸ்.டி.முருகேசன் ஆகியோர் தொடங்கி வைத்தனர். டாக்டர்கள் ரத்தின பிரகாஷ், வேதியப்பன், பிரியங்கா மற்றும் மருத்துவ மாணவ-மாணவிகள் கலந்து கொண்டு இயற்கை மருத்துவம், நோய் வராமல் தடுக்கும் வழிகள், வாழ்வி யல் முறைகள், உணவு பழக்கங்கள் குறித்து உரையாற்றினர்.

    முகாமில் மருத்துவ ஆலோசனைகள் வழங்கப்பட்டது. ரத்த அழுத்தம், உடல் எடை, உயரம், சர்க்கரை பரிசோ தனை நடைபெற்றது. இயற்கை மருத்துவ சிகிச்சை களான அக்குபஞ்சர், அக்குபிரசர், நீர் சிகிச்சை, மசாஜ், யோகா பயிற்சி, பிசியோதெரபி சிகிச்சைகள் வழங்கப்பட்டது. முகாமில் 200-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். அனைவருக்கும் இயக்கை உணவு, ஹெர்பல் டீ வழங்கப்பட்டது. ஏற்பாடு களை இயற்கை மருத்துவம், யோகா மருத்துவ ஆராய்ச்சி மைய ஆசிரியர்கள், எஸ்.தங்கப்பழம் கல்வி குழும அலுவலர்கள் செய்து இருந்தனர்.

    ×