search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "துரை தயாநிதி"

    • கடந்த மார்ச் மாதம் மேல் சிகிச்சைக்காக துரை தயாநிதியை வேலூரில் உள்ள சிஎம்சி ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.
    • துரை தயாநிதி உடல்நிலையில் நல்ல முன்னேற்றம் அடைந்துள்ளது.

    வேலூர்:

    மு.க.அழகிரியின் மகன் துரை தயாநிதி. இவருக்கு திடீரென உடல் நலக்குறைவு ஏற்பட்டு சென்னையில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வந்தார்.

    இந்த நிலையில் கடந்த மார்ச் மாதம் மேல் சிகிச்சைக்காக துரை தயாநிதியை வேலூரில் உள்ள சிஎம்சி ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. முதலமைச்சர் மு. க.ஸ்டாலின், கனிமொழி எம்.பி ஆகியோர் நேரில் வந்து பார்வையிட்டு சிகிச்சை குறித்து கேட்டறிந்து சென்றனர்.

    இந்த நிலையில் துரை தயாநிதி உடல்நிலையில் நல்ல முன்னேற்றம் அடைந்துள்ளது. இதனால் அவர் இன்று ஆஸ்பத்திரியில் இருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார்.

    ஆஸ்பத்திரியில் இருந்து வெளியே வந்த துரை தயாநிதி தனது காரில் ஏறி கிளம்பி சென்றார். அவருடன் மு.க.அழகிரியும் சென்றார்.

    இதனால் சி.எம்.சி வளாகம் பரபரப்பாக காணப்பட்டது.

    • துரை தயாநிதி பிசியோதெரபி சிகிச்சை பெற்று வருகிறார்.
    • குற்றப்பிரிவு போலீசார் விசாரணை.

    வேலூர்:

    வேலூர் சி.எம்.சி. மருத்துவமனை ஏ-பிளாக்கில் முன்னாள் மத்திய அமைச்சர் அழகிரியின் மகன் துரை தயாநிதி பிசியோதெரபி சிகிச்சை பெற்று வருகிறார்.

    அவருடன் அவரது தந்தை அழகிரி மற்றும் குடும்பத்தினர் உடன் இருந்து கவனித்து வருகின்றனர். அவர் சிகிச்சை பெற்றும் வரும் தளம் காவல் துறையினரின் முழு கட்டுப்பாட்டில் உள்ளது.

    இந்த நிலையில், சி.எம்.சி. மருத்துவமனை மருத்துவ கண்காணிப்பாளர் அலுவலகத்துக்கு நேற்று 10-ந் தேதி வந்த ஒரு மின்னஞ்சலில் 'துரை தயாநிதிக்கு கொலை மிரட்டல் குறிப்பு இருந்துள்ளது.

    இதையடுத்து, மருத்துவமனை கண்காணிப்பாளர் அலுவலகம் சார்பில், வேலூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு (பொறுப்பு) கிரண் ஸ்ருதிக்கு மின்னஞ்சல் வழியாகவே புகார் அனுப்பி வைக்கப்பட்டது. மிரட்டல் விடுத்த நபர் தொடர்பாக சைபர் குற்றப்பிரிவு போலீசார் விசாரித்து வருகின்றனர்.

    அதேநேரம், துரை தயாநிதி சிகிச்சை பெற்று வரும் சி.எம்.சி. மருத்துவமனை ஏ-பிளாக்கிற்கு கூடுதலாக ஒரு சப்-இன்ஸ்பெக்டர் தலைமையில் 3 போலீசார் சீருடை அணியாமல் பாதுகாப்பு பணியை மேற்கொண்டுள்ளனர்.

    இன்று காலை வேலூர் துணை போலீஸ் சூப்பிரண்டு திருநாவுக்கரசு மருத்துவமனை மற்றும் பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். முழு நேரமும் கவனத்தோடு செயல்பட போலீசாருக்கு அறிவுறுத்தினார்.

    இதுதொடர்பாக காவல் துறை அதிகாரிகள் தரப்பில் விசாரித்தபோது, அவர்கள் கூறியதாவது:-சி.எம்.சி. நிர்வாகம் அளித்த புகாரின்பேரில் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.போ

    அந்த மிரட்டல் மின்னஞ்சலில் இருந்த விவரம் மருத்துவமனை நிர்வாகம் மற்றும் போலீஸ் சூப்பிரண்டுக்கு மட்டுமே தெரியும். எங்களுக்கு எதுவும் தெரிவிக்கப்படவில்லை.

    அதேநேரம், துரை தயாநிதி சிகிச்சை பெற்று வரும் மருத்துவமனை தளத்துக்கு 3 போலீசார் பாதுகாப்பு அளித்து வரும் நிலையில் அங்கு கூடுதலாக ஒரு சப்-இன்ஸ்பெக்டர் தலைமையில் 4 பேர் அடங்கிய சீருடை அணியாத போலீசார் பாதுகாப்பு மற்றும் கண்காணிப்பு பணியை தீவிரமாக மேற்கொள்ள அறிவுரை வழங்கப்பட்டு அவர்கள் பணியில் நேற்று மாலையில் இருந்து ஈடுபட்டு வருகின்றனர். மிரட்டல் மின்னஞ்சல் தொடர்பாக தொடர்ந்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

    இவ்வாறு அவர்கள் கூறினர். 

    • சி.எம்.சி. மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
    • சிகிச்சைகள் குறித்து மருத்துவர்களிடம் கேட்டறிந்தார்.

    மு.க. அழகிரியின் மகன் துரை தயாநிதி உடல்நலம் பாதிக்கப்பட்டு வேலூரில் உள்ள சி.எம்.சி. மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

    மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் துரை தயாநிதியை முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் 2வது முறையாக நேரில் சென்று சந்தித்து, உடல் நலம் குறித்து விசாரித்தார். மேலும், துரை தயாநிதிக்கு அளிக்கப்படும் சிகிச்சைகள் குறித்து மருத்துவர்களிடம் கேட்டறிந்தார்.

    முதலமைச்சர் வருகையொட்டி வேலூர் சி.எம்.சி. மருத்துவமனையில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.

    • முதலமைச்சர் வருகையொட்டி சி.எம்.சி. ஆஸ்பத்திரியில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.
    • ஆற்காடு ரோட்டில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டிருந்தது.

    வேலூர்:

    வேலூர் கோட்டை மைதானத்தில் இன்று தி.மு.க. பிரமாண்ட பிரசார பொதுக்கூட்டம் நடக்கிறது. இதில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கலந்து கொண்டு பேசுகிறார்.

    இதற்காக மு.க.ஸ்டாலின், அவரது மனைவி துர்கா ஸ்டாலின் ஆகியோர் இன்று கார் மூலம் வேலூர் வந்தனர்.


    வேலூர் சி.எம்.சி ஆஸ்பத்திரியில் மு.க.அழகிரியின் மகன் துரை தயாநிதி உடல்நலம் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். முதல்மைச்சர் மு.க.ஸ்டாலின் மற்றும் துர்கா ஸ்டாலின் ஆகியோர் சி.எம்.சி. ஆஸ்பத்திரிக்கு சென்றனர்.

    அங்கு துரை தயாநிதியை சந்தித்து நலம் விசாரித்தனர். அப்போது அமைச்சர் துரைமுருகன் உடன் இருந்தார்.

    முதலமைச்சர் வருகையொட்டி சி.எம்.சி. ஆஸ்பத்திரியில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது. ஆற்காடு ரோட்டில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டிருந்தது.

    • துரை தயாநிதிக்கு திடீரென உடல் நலக்குறைவு ஏற்பட்டது.
    • மேல் சிகிச்சைக்காக துரை தயாநிதி வேலூரில் உள்ள பிரபல தனியார் ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டுள்ளார்.

    வேலூர்:

    தமிழக முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் மகன் மு.க.அழகிரி. இவர் முன்னாள் மத்திய அமைச்சராக இருந்தார். இவரது மகன் துரை தயாநிதி. இவருக்கு திடீரென உடல் நலக்குறைவு ஏற்பட்டது. இதையடுத்து துரை தயாநிதி சென்னையில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வந்தார்.

    இந்த நிலையில் மேல் சிகிச்சைக்காக துரை தயாநிதியை வேலூரில் உள்ள பிரபல தனியார் ஆஸ்பத்திரியில் இன்று சேர்த்தனர். அவர் அங்கு சிகிச்சை பெற்று வருகிறார்.

    • துரை தயாநிதி உடல்நலக் குறைவு காரணமாக சென்னை ஆயிரம் விளக்கில் உள்ள அப்பல்லோ ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
    • அமைச்சர்கள் துரைமுருகன், கே.என்.நேரு ஆகியோர் உடனிருந்தனர்.

    சென்னை:

    முன்னாள் மத்திய மந்திரி மு.க.அழகிரியின் மகனான துரை தயாநிதி உடல்நலக் குறைவு காரணமாக சென்னை ஆயிரம் விளக்கில் உள்ள அப்பல்லோ ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

    இந்த நிலையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று அப்பல்லோ ஆஸ்பத்திரிக்கு நேரில் சென்று துரை தயாநிதியை பார்த்து உடல் நலம் விசாரித்தார். அவருக்கு அளிக்கப்பட்டு வரும் சிகிச்சை தொடர்பாக டாக்டர்களிடம் கேட்டறிந்தார். அமைச்சர்கள் துரைமுருகன், கே.என்.நேரு ஆகியோர் அப்போது உடனிருந்தனர்.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • துரை தயாநிதிக்கு திடீரென்று உடல்நலக்குறைவு ஏற்பட்டது.
    • மருத்துவமனையில் தொடர்ந்து சிகிச்சை பெற்று வரும் துரை தயாநிதியை, முதலமைச்சர் நேரில் சென்று நலம் விசாரித்தார்.

    சென்னை:

    முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் சகோதரரான முன்னாள் மத்திய மந்திரி மு.க.அழகிரியின் மகன் துரை தயாநிதி. இவர் தொழில் அதிபராகவும், சினிமா திரைப்பட தயாரிப்பாளராகவும் இருந்து வருகிறார். "மங்காத்தா'', "தமிழ்ப் படம்'' உள்ளிட்ட படங்களை தயாரித்துள்ளார்.

    இந்த நிலையில் துரை தயாநிதிக்கு திடீரென்று உடல்நலக்குறைவு ஏற்பட்டது. இதையடுத்து அவர் சென்னை கிரீன்வேஸ் சாலையில் உள்ள அப்பல்லோ மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.

    துரை தயாநிதிக்கு உடலில் மூளை வாத பிரச்சனை இருந்ததாகவும், இதற்காக அவருக்கு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டதாகவும் மருத்துவமனை வட்டாரத்தில் தெரிவிக்கப்பட்டது.

    மருத்துவமனையில் தொடர்ந்து சிகிச்சை பெற்று வரும் துரை தயாநிதியை, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேரில் சென்று நலம் விசாரித்தார். சுமார் 20 நிமிடம் மருத்துவமனையில் இருந்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், துரை தயாநிதிக்கு அளிக்கப்பட்டு வரும் சிகிச்சை முறைகள் குறித்து டாக்டர்களிடம் கேட்டறிந்தார்.

    • குற்றம்சாட்டப்பட்ட துரை தயாநிதி உள்ளிட்ட 15 பேர் மீது காவல்துறையினர் 5191 பக்கங்கள் கொண்ட குற்றப்பத்திரிகையினை தாக்கல் செய்தனர்.
    • விசாரணைக்கு ஆஜரான பின் வெளியே வந்த துரைதயாநிதியிடம் நிருபர்கள், அரசியலுக்கு வருவீர்களா? என கேள்வி எழுப்பினர்

    மதுரை:

    கடந்த 2011-ம் ஆண்டுக்கு முன்பு மதுரை மாவட்டத்தில் கிரானைட் குவாரி உரிமம் பெற்றவர்கள் அரசுக்கு பல ஆயிரம் கோடி ரூபாய் இழப்பை ஏற்படுத்தி , மோசடி செய்ததாக புகார் எழுந்த நிலையில் கிரானைட் குவாரிகள் மூடப்பட்டு உரிமையாளர்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது.

    இதனை தொடர்ந்து ஐ.ஏ.எஸ். அதிகாரி சகாயம் தலைமையில் விசாரணை குழு விசாரணை நடத்திய பின்னர் சுமார் ரூ.1 லட்சம் கோடிக்கு மேல் அரசுக்கு இழப்பு ஏற்பட்டதாக 2013-ம் ஆண்டு அரசிடம் அறிக்கை சமர்ப்பித்தது.

    இதன் காரணமாக மதுரை மாவட்டத்தில் கிரானைட் குவாரிகள் செயல்பட தடை விதிக்கப்பட்டிருக்கிறது. இந்நிலையில் இந்த கிரானைட் குவாரி முறைகேடு சம்பந்தமான வழக்குகள் மேலூர் நீதிமன்றத்தில் நடந்து வந்தது.

    இந்நிலையில் கிரானைட் குவாரிகள் தொடர்பான வழக்குகள் கனிம வளக்குற்றங்களை விசாரிக்கும் மதுரை சிறப்பு நீதிமன்றத்துக்கு மாற்றப்பட்டு விசாரணை நடைபெறுகிறது.

    இதில் முன்னாள் மத்திய அமைச்சர் மு.க.அழகிரி மகன் துரை தயாநிதியின் நிறுவனமான ஒலம்பஸ் கிரானைட் நிறுவனம் மீதும் மதுரை மேலூர் அருகே கீழவளவு பகுதியில் சட்ட விரோதமாக கிரானைட் கற்களை வெட்டி எடுத்து அரசுக்கு ரூ.257 கோடி வருவாய் இழப்பு ஏற்படுத்தியதாக குற்றச்சாட்டு உள்ளது. எனவே 2013-ம் ஆண்டில் ஒலம்பஸ் குவாரி நிறுவனத்தின் பங்குதாரர் துரை தயாநிதி உள்ளிட்ட 15 பேர் மீது கீழவளவு காவல்துறையினர் வழக்கு பதிவு செய்தனர்.

    குற்றம்சாட்டப்பட்ட துரை தயாநிதி உள்ளிட்ட 15 பேர் மீது காவல்துறையினர் 5191 பக்கங்கள் கொண்ட குற்றப்பத்திரிகையினை தாக்கல் செய்தனர்.

    இந்த நிலையில் இந்த வழக்கு தொடர்பாக கடந்த ஜூலை 27-ம் தேதி மேலூர் நீதிமன்றத்தில் துரை தயாநிதி உள்ளிட்டோர் நீதிமன்றத்தில் ஆஜராகினர். அப்போது குற்றப்பத்திரிகைகளின் நகலை பெற்றுக்கொண்ட பின்பு இந்த வழக்கு மதுரை மாவட்ட கனிமவள சிறப்பு நீதிமன்றத்திற்கு மாற்றப்பட்டு செப். 5-ம் தேதிக்கு ஒத்திவைத்தது.

    அதன்படி இன்று மதுரை மாவட்ட நீதிமன்றத்தில் கிரானைட் முறைகேடு வழக்கிற்காக நீதிபதி சிவகடாட்ஷம் முன்பாக துரைதயாநிதி இன்று நேரில் ஆஜரானார். வழக்கை விசாரித்த நீதிபதி வருகிற நவம்பர் 6-ந்தேதி வழக்கை ஒத்திவைத்தார்.

    விசாரணைக்கு ஆஜரான பின் வெளியே வந்த துரைதயாநிதியிடம் நிருபர்கள், அரசியலுக்கு வருவீர்களா? என கேள்வி எழுப்பினர். அதற்கு அவர் கோர்ட்டுக்கு வந்துள்ளேன் என பதில் அளித்தவாறு காரில் ஏறி புறப்பட்டு சென்றார்.

    ×