என் மலர்
நீங்கள் தேடியது "மழை"
- கடலோர மாவட்டங்களில் ஒருசில இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது.
- டெல்டா உள்பட மத்திய மாவட்டங்களின் ஓரிரு இடங்களில் பலத்த மழை பெய்யும்.
சென்னை:
தமிழகத்தில் வருகிற 15-ந்தேதி வரையில் மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
பொங்கல் அன்றும் அதற்கு மறுநாளும் தென் மாவட்டங்களில் சில இடங்களில் கன மழை பெய்ய வாய்ப்பு உள்ளது.
இன்றும் நாளையும் சென்னை, செங்கல்பட்டு, புதுச்சேரி, கடலூர், மயிலாடுதுறை, காரைக்கால், நாகப்பட்டினம், திருவாரூர், தஞ்சாவூர், ராமநாதபுரம், தூத்துக்குடி போன்ற கடலோர மாவட்டங்களில் ஒருசில இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது.
டெல்டா உள்பட மத்திய மாவட்டங்களின் ஓரிரு இடங்களில் பலத்த மழை பெய்யும். வருகிற 13, 14, 15 ஆகிய 3 நாட்களுக்கு அறுவடை பணிகள் பாதிக்கப்படவும் வாய்ப்பு உள்ளது.
- சென்னையை பொறுத்தவரையில் வானம் மேகமூட்டத்துடன் காணப்படும்.
- வங்கக்கடல் பகுதிகளில் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது.
சென்னை:
சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
தென்மேற்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய தென்கிழக்கு வங்கக்கடல் பகுதிகளில் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதனால், கடலோர தமிழகத்தில் அநேக இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் உள் தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
மயிலாடுதுறை, தஞ்சாவூர், நாகப்பட்டினம், திருவாரூர், புதுக்கோட்டை மாவட்டங்களில் ஓரிரு இடங்களிலும், காரைக்கால் பகுதியிலும் இன்று (ஞாயிற்றுக்கிழமை) கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது.
மேலும், வேலூர், ராணிப்பேட்டை மற்றும் திருவண்ணாமலை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் நாளை (திங்கட்கிழமை) கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது.
சென்னையை பொறுத்தவரையில் இன்று வானம் மேகமூட்டத்துடன் காணப்படுவதுடன், நகரின் ஒருசில பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யும் வாய்ப்பு உள்ளது.
மீனவர்களுக்கான எச்சரிக்கையாக தென் தமிழக கடலோரப் பகுதிகள், மன்னார் வளைகுடா மற்றும் அதனை ஒட்டிய குமரிக்கடல் பகுதிகளில் சூறாவளிக் காற்று மணிக்கு 35 முதல் 45 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 55 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும் என்றும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்து உள்ளது.
- இந்திய பெருங்கடல் மற்றும் அதனை ஒட்டிய தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது.
- தமிழகத்தில் இன்று ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
பூமத்திய ரேகையை ஒட்டிய இந்திய பெருங்கடல் மற்றும் அதனை ஒட்டிய தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது.
இதனால் தமிழகத்தில் இன்று ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். அதிகாலை வேளையில் ஓரிரு இடங்களில் லேசான பனிமூட்டம் காணப்படும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இந்நிலையில் 3 மாவட்டங்களில் காலை 10 மணி வரை மழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
அதன்படி நெல்லை, கன்னியாகுமரி, தூத்துக்குடி மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு உள்ளது.
- தென்கிழக்கு அரபிக்கடல் பகுதிகளில் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது.
- புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
சென்னை:
தெற்கு கேரள கடலோரப்பகுதிகள் மற்றும் அதனை ஒட்டிய தென்கிழக்கு அரபிக்கடல் பகுதிகளில் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது.
இதன் காரணமாக தமிழகத்தில் இன்றும் நாளையும் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இந்நிலையில் 5 மாவட்டங்களில் இன்று காலை 10 மணி வரை மழைக்கு வாய்ப்பு உள்ளது.
அதன்படி சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, கடலூர், சேலம் மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரியில் காலை 10 மணி வரை மழைக்கு வாய்ப்பு உள்ளது.
- ஜனவரி 3-ந்தேதி முதல் 10-ந்தேதிக்குள் ஏற்படக்கூடும். எனவே 10-ந்தேதி அல்லது அதன் பிறகு வடகிழக்கு பருவமழை விடை பெற்றதாக அறிவிக்கப்படும்.
- ஜனவரி மற்றும் பிப்ரவரி மாதங்களில் பனிப்பொழிவு, குளிர், வெயில், மழை என வானிலை மாறி மாறி காணப்படும்.
சென்னை:
வட தமிழகத்தின் கரையை ஒட்டி நிலவிய காற்றழுத்த தாழ்வு பகுதி முற்றிலும் வலுவிழந்துவிட்டது. இதன் காரணமாக தமிழகத்தில் இன்று முதல் 6 நாட்களுக்கு ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது.
இந்த நிலையில் வங்கக்கடலில் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி இன்னும் 3 நாளில் உருவாக உள்ளது.
இது தொடர்பாக இந்திய வானிலை ஆய்வு மையம் கூறியிருப்பதாவது:-
தென்மேற்கு மற்றும் அதனை ஒட்டிய மத்திய மேற்கு வங்கக்கடலில் தெற்கு ஆந்திரா மற்றும் வட தமிழகத்தின் கடலோர பகுதிகளில் நிலவிய ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி, நேற்று காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுகுறைந்தது.
பின்னர் சில மணி நேரங்களில் அந்த காற்றழுத்த தாழ்வு பகுதி முற்றிலும் வலுவிழந்தது. இது அரபிக்கடல் பகுதிக்கு சென்று விடும். காற்றழுத்த தாழ்வு பகுதி வலுகுறைந்தாலும் அதன் ஈரப்பதம் ஆங்காங்கே காணப்படும்.
இதன் காரணமாக தமிழகத்தில் 6 நாட்கள் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளது. தமிழகத்தில் இன்று ஒருசில இடங்களிலும், புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளிலும் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
நாளை (28-ந்தேதி) மற்றும் 29, 30 ஆகிய தேதிகளில் தமிழகத்தில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். அதிகாலை வேளையில் ஒருசில இடங்களில் லேசான பனிமூட்டம் காணப்படும். வருகிற 31 மற்றும் ஜனவரி 1-ந்தேதிகளில் தமிழகத்தில் ஒருசில இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். ஒருசில பகுதிகளில், இடி, மின்னலுடன் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
இந்த நிலையில் வங்கக்கடலில் புதிதாக குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக வாய்ப்புள்ளது. தெற்கு வங்கக்கடலின் மத்திய பகுதிகளில் இன்னும் 3 நாட்களில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக உள்ளது. குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவான பிறகு அடுத்த 3 நாட்களில் அது மேற்கு திசையில் தென்மேற்கு வங்கக்கடலில் தெற்கு இலங்கை நோக்கி நகரக்கூடும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
இதுகுறித்து தனியார் வானிலை ஆய்வாளர்கள் கூறியதாவது:-
வங்கக்கடலில் புதிதாக உருவாக உள்ள குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி காரணமாக ஜனவரி 1, 2-ந்தேதிகளில் தமிழகத்தில் கடலோர மாவட்டங்கள், மேற்கு தொடர்ச்சிமலை மாவட்டங்கள், மேற்கு மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு உள்ளது.
அதன் தொடர்ச்சியாக வடக்கில் இருந்து குளிர் காற்று முழுமையாக வீச இருப்பதால், ஜனவரி 3-ந்தேதி முதல் 8-ந்தேதி வரை பனியின் தாக்கத்தால் குளிர் கடுமையாக இருக்கும். கொடைக்கானல், ஊட்டி ஆகிய இடங்களில் உறைபனி இருக்கும்.
வறண்ட வானிலை, வறண்ட வடக்கு காற்று ஊடுருவல் நிகழும்போது, வடகிழக்கு பருவமழை நிறைவு பெற்றதாக அறிவிக்கப்படும். அதன்படி இந்த நிகழ்வு ஜனவரி 3-ந்தேதி முதல் 10-ந்தேதிக்குள் ஏற்படக்கூடும். எனவே 10-ந்தேதி அல்லது அதன் பிறகு வடகிழக்கு பருவமழை விடை பெற்றதாக அறிவிக்கப்படும்.
ஜனவரி மற்றும் பிப்ரவரி மாதங்களில் பனிப்பொழிவு, குளிர், வெயில், மழை என வானிலை மாறி மாறி காணப்படும்.
இவ்வாறு அவர்கள் கூறியுள்ளனர்.
- பாசனத்துக்கு தண்ணீர் திறக்கப்பட்டு வருவதால் அணையின் நீர்மட்டமும் மெதுவாக உயர்ந்து வருகிறது.
- அணையில் 92.88 டி.எம்.சி. தண்ணீர் இருப்பு உள்ளது.
சேலம்:
தமிழக நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்து வரும் மழையின் காரணமாக மேட்டூர் அணைக்கு நீர்வரத்து அதிகரித்து காணப்படுகிறது. அணைக்கு வரும் தண்ணீரை விட குறைந்த அளவிலேயே பாசனத்துக்கு தண்ணீர் திறக்கப்பட்டு வருவதால் அணையின் நீர்மட்டமும் மெதுவாக உயர்ந்து வருகிறது.
இந்த நிலையில் மேட்டூர் அணைக்கு நேற்று வினாடிக்கு 2331 கன அடி தண்ணீர் வந்து கொண்டு இருந்த நிலையில் அது இன்று 2886 கனஅடியாக அதிகரித்து காணப்படுகிறது. இதனால் அணையின் நீர்மட்டம் 119.63 அடியாக உயர்ந்தது. அணையில் இருந்து டெல்டா பாசனத்துக்கு வினாடிக்கு 500 கனஅடியும், கிழக்கு, மேற்கு கால்வாய் பாசனத்துக்கு வினாடிக்கு 300 கனஅடி தண்ணீரும் திறக்கப்பட்டு வருகிறது. தற்போது அணையில் 92.88 டி.எம்.சி. தண்ணீர் இருப்பு உள்ளது.
- தீவிர காற்றழுத்த தாழ்வுப் பகுதி, அதே பகுதியில் காற்றழுத்த தாழ்வுப் பகுதியாக வலு குறைந்து இருக்கிறது.
- மேற்கு மாவட்டங்களில் மழைக்கான வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர்.
தெற்கு ஆந்திரா-வட தமிழக கடலோரப் பகுதிகளில் நிலவி வந்த தீவிர காற்றழுத்த தாழ்வுப் பகுதி, அதே பகுதியில் காற்றழுத்த தாழ்வுப் பகுதியாக வலு குறைந்து இருக்கிறது. இது மேலும் வலு குறைந்து அரபிக்கடல் பகுதிக்கு சென்றுவிடும். வலு குறைந்தாலும், அதன் ஈரப்பதம் ஆங்காங்கே காணப்படும் என்றே சொல்லப்படுகிறது.
இதன் தொடர்ச்சியாக வருகிற 30-ந்தேதி வங்கக்கடலில் புதிய காற்றழுத்த தாழ்வுப்பகுதி உருவாக வாய்ப்பு இருப்பதாகவும், இதன் காரணமாக 31-ந்தேதி மற்றும் அடுத்த மாதம் (ஜனவரி) 1, 2-ந்தேதிகளில் தமிழ்நாட்டில் கடலோர மாவட்டங்கள், மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்கள், மேற்கு மாவட்டங்களில் மழைக்கான வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர்.
இந்நிலையில் 11 மாவட்டங்களில் காலை 10 மணி வரை மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
அதன்படி சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவண்ணாமலை, விழுப்புரம், கடலூர், மயிலாடுதுறை, அரியலூர், வேலூர், ராணிப்பேட்டை மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரியில் காலை 10 மணி வரை மழைக்கு வாய்ப்பு உள்ளது.
- ஜீரண மண்டல பாக்டீரியா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
- முறையாக சுத்தம் செய்யப்படாமல், வேகவைக்காமல் உண்ணும்போது பாதிப்பு ஏற்படுகிறது.
சென்னை:
மழைப் பொழிவு காரணமாக சென்னையில் கடந்த சில நாள்களாக உணவு ஒவ்வாமை, வயிற்றுப்போக்கு போன்ற நோய்களுக்கு பாதிப்புக்குள்ளாகி மருத்துவமனைகளை நாடுவோா் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக மருத்துவா்கள் தெரிவித்துள்ளனா்.
உடல்நலக் குறைவு காரணமாக மருத்துவமனைக்கு வருவோரில் 40 சதவீதம் பேருக்கு அத்தகைய பாதிப்பு இருப்பதாக மருத்துவா்கள் கூறியுள்ளனா். அதில், பெரும்பாலானோருக்கு 'இ-கோலி' எனப்படும் தீங்கு விளைவிக்கும் ஜீரண மண்டல பாக்டீரியா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
இது தொடா்பாக ஜீரண மண்டல சிகிச்சை நிபுணா் எம்.மணிமாறன் கூறியதாவது:-
எஸ்கெரிச்சியா கோலி எனப்படும் 'இ-கோலி' என்பது மனிதா்கள் மற்றும் பாலூட்டி விலங்குகளின் குடலில் வளரும் பாக்டீரியா. இதில் பல வகைகள் உள்ளன.
அவற்றில் பல பாக்டீரியாக்கள் உடலுக்கு தீங்கு விளைவிக்காது என்றாலும், சில வகை பாக்டீரியாக்கள் தீவிர பாதிப்பை ஏற்படுத்தும்.
அசுத்தமான இறைச்சி, காய்கறி, பழங்கள், குடிநீா், பால் உள்ளிட்டவற்றின் மூலமாக மனித உடலுக்குள் அவை செல்கின்றன. முறையாக சுத்தம் செய்யப்படாமலும், வேகவைக்காமலும் அவற்றை உண்ணும்போது பாதிப்பு ஏற்படுகிறது.
வயிற்றுப்போக்கு, வாந்தி, கடுமையான வயிற்று வலி, காய்ச்சல் போன்றவை அதன் முக்கிய அறிகுறிகள். உரிய சிகிச்சை பெறாவிடில் ஒரு கட்டத்தில் அது சிறுநீரக செயலிழப்புக்கு வழி வகுக்கும்.
அண்மைக்காலமாக மருத்துவமனைகளுக்கு வரும் நோயாளிகளில் வயிற்றுப்போக்கு பாதிப்பு 40 சதவீதம் பேருக்கு உள்ளது. அவா்களுக்கு 'இ-கோலி' பாதிப்பு இல்லை என்றாலும், பெரும்பாலா னோருக்கு அதற்கான அறிகுறிகள் காணப்படுகின்றன.
'இ-கோலி' பாதிப்பை பொருத்தவரை மலப் பரிசோதனை, ரத்தப் பரிசோதனை, சிறுநீா் பரிசோதனை மூலமாக உறுதி செய்யலாம். அதன் அடிப்படையில், நீா்ச்சத்தை தக்க வைக்கும் சிகிச்சைகளும், ஆன்ட்டிபயாடிக் சிகிச்சைகளும் வழங்கப்படும். அதனை முறையாக பின்பற்றினால் முழுமையாக குணமடையலாம் என்றாா் அவா்.
இது தொடா்பாக பொதுசுகாதாரத் துறை அதிகாரிகள் கூறியதாவது:-
மழை வெள்ள காலங்களில் காலரா, டைபாய்டு, மஞ்சள் காமாலை, எலிக் காய்ச்சல் போன்ற நோய்கள் பரவ அதிக வாய்ப்புள்ளன. அதை கருத்தில்கொண்டு முன்னெச்சரிக்கை அறிவுறுத்தல்கள் விடுக்கப்பட்டுள்ளன. அதன் தொடா்ச்சியாக மருத்துவக் குழுக்கள் மூலமாக நோய் எதிா்ப்பு மருந்துகள் வழங்கப்பட்டு வருகின்றன.
மாசுபட்ட குடிநீா், உணவுகள் மூலம் பரவும் நோய்களைத் தடுக்க கண்காணிப்பை தீவிரப்படுத்து மாறு உத்தரவிடப்பட்டுள்ளது.
மழை பாதித்த பகுதிகளில் குடிநீரின் தரத்தை உறுதி செய்யுமாறும், குடிநீரில் போதிய அளவு குளோரின் கலந்து விநியோகிக்குமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
காய்ச்சல், வயிற்றுப்போக்கு, மஞ்சள் காமாலை மற்றும் நோய்த்தொற்றுகள் குறித்த விவரங்களை பொது சுகாதாரத் துறைக்கு அனுப்புமாறும் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.
மழைக் காலங்களில் பொதுமக்கள் காய்ச்சிய நீரை மட்டுமே பருக வேண்டும். சுகாதாரமான உணவுகளையே உட்கொள்ள வேண்டும் என்று தெரிவித்தனா்.
- ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி இன்று காலை 5.30 மணியளவில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுவிழந்தது.
- கடலோர ஆந்திர பிரதேசத்தில் இன்று கனமழைக்கு வாய்ப்பு உள்ளது.
தென்மேற்கு மற்றும் அதனை ஒட்டிய மத்திய மேற்கு வங்கக்கடல், தெற்கு ஆந்திர - வடதமிழக கடலோரப்பகுதிகளில் நிலவிய தீவிர காற்றழுத்த தாழ்வு பகுதி காரணமாக கடலோர மாவட்டங்களில் நேற்று பரவலாக லேசான மழை பெய்தது. சென்னையில் நேற்று அதிகாலை முதலே லேசான சாரல் மழை பெய்து வருகிறது.
இந்திய வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:
* தென்மேற்கு, அதை ஒட்டிய மத்திய மேற்கு வங்கக்கடலில் நிலவிய ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி வலுவிழந்தது.
* ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி இன்று காலை 5.30 மணியளவில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுவிழந்தது.
* தமிழ்நாடு, புதுவை, காரைக்கால் பகுதிகளில் இன்று இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளது.
* கடலோர ஆந்திர பிரதேசத்தில் இன்று கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாக தெரிவித்துள்ளது.
- சென்னையில் நேற்று அதிகாலை முதலே லேசான சாரல் மழை பெய்தது.
- புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளிலும் வருகிற 31-ந்தேதி வரை லேசான மழைக்கு வாய்ப்பு இருக்கிறது.
சென்னை:
தென்மேற்கு மற்றும் அதனை ஒட்டிய மத்திய மேற்கு வங்கக்கடல், தெற்கு ஆந்திர - வடதமிழக கடலோரப்பகுதிகளில் நிலவிய தீவிர காற்றழுத்த தாழ்வு பகுதி காரணமாக கடலோர மாவட்டங்களில் நேற்று பரவலாக லேசான மழை பெய்தது. சென்னையில் நேற்று அதிகாலை முதலே லேசான சாரல் மழை பெய்தது.
வங்கக்கடலில் நிலவும் தீவிர காற்றழுத்த தாழ்வு பகுதி, இன்று அதே பகுதியில் காற்றழுத்த தாழ்வு பகுதியாக படிப்படியாக வழுவிழக்க வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதன்காரணமாக, தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளிலும் வருகிற 31-ந்தேதி வரை லேசான மழைக்கு வாய்ப்பு இருக்கிறது.
இந்நிலையில் சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி, விழுப்புரம், கடலூர், ராணிப்பேட்டை, வேலூரில் காலை 10 மணி வரை மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
- ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி வட தமிழகத்தை நெருங்கியது.
- மேலும் நகர்ந்து தற்போது வடதமிழக கடலோர பகுதிகளை நெருங்கியது.
சென்னை:
வங்கக்கடலில் நிலவி வரும் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி வட தமிழகத்தை நெருங்கியது.
இதுகுறித்து சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-
மத்திய மேற்கு வங்கக்கடலில் நிலவிய ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி மேற்கு-தென்மேற்கு திசையில் நகர்ந்து நேற்று அதிகாலை சென்னைக்கு கிழக்கே 500 கி.மீ. தொலைவில் நிலைகொண்டிருந்தது.
இந்த காற்றழுத்த தாழ்வு பகுதி தென்மேற்கு திசையில் நகர்ந்து இன்று காலை வட தமிழகம் மற்றும் தெற்கு ஆந்திரா கடல் பகுதிக்கு இடையே நிலை கொண்டிருந்தது. அது மேலும் நகர்ந்து தற்போது வடதமிழக கடலோர பகுதிகளை நெருங்கியது.
இதன் காரணமாக சென்னை உள்பட தமிழகத்தின் பல்வேறு இடங்களிலும், புதுச்சேரி மற்றும் காரைக்காலில் ஓரிரு இடங்களிலும் இடி, மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது.
சென்னை, திருவள்ளூர், காஞ்சீபுரம், செங்கல்பட்டு, காஞ்சீபுரம் மற்றும் தமிழகத்தின் கடலோர மாவட்டங்களில் இன்று முதல் வருகிற 26-ந்தேதி காலை வரை மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது. மேலும் அதிகாலையில் ஒருசில இடங்களில் லேசான பனிமூட்டம் இருக்கும்.
வங்கக்கடலில் நிலவும் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதிக்கு குளிர் காற்றே அதிக அளவில் வருவதால் தமிழகத்தில் பெரிய அளவில் மழை பெய்யவில்லை. ஆனாலும் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி தமிழகத்தை நோக்கி வேகமாக நகர்ந்து வருவதால் இன்று முதல் சென்னை மற்றும் வட மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளது.
இந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி தெற்கு நோக்கி நகர்ந்து வலுவிழந்து வருகிற 26-ந்தேதி டெல்டா மாவட்டங்களுக்கு அருகே கரையை கடந்து தமிழக நிலப்பரப்பு வழியாக அரபிக்கடலுக்கு செல்லும்.
இதன் காரணமாக வருகிற 26 மற்றும் 27-ந்தேதிகளில் தமிழகம் முழுவதும் மழை பெய்ய வாய்ப்புள்ளது. வருகிற 28-ந்தேதி மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்களில் மழை பெய்யும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
- தென்தமிழகம் மற்றும் வடதமிழகத்தின் உள்மாவட்டங்களில் நேற்று லேசான மழை பொழிவு காணப்பட்டது.
- தமிழகத்தின் வடகடலோர பகுதிகளில் ஒரு சில இடங்களில் மழை பெய்யும்.
சென்னை:
வங்கக்கடலில் நிலவும் காற்றழுத்த தாழ்வு பகுதி காரணமாக, தென்தமிழகம் மற்றும் வடதமிழகத்தின் உள்மாவட்டங்களில் நேற்று லேசான மழை பொழிவு காணப்பட்டது.
மத்திய மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் நிலவிய காற்றழுத்த தாழ்வு பகுதி, மேற்கு - தென்மேற்கு திசையில் நகர்ந்து, தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகள், வடதமிழகம் மற்றும் தெற்கு ஆந்திர கடலோரப்பகுதிகளுக்கு அருகில் இன்று நிலவும்.
இதன்காரணமாக, இன்று தமிழகத்தின் வடகடலோர பகுதிகளில் ஒரு சில இடங்களிலும், மற்ற பகுதிகளில் ஓரிரு இடங்களிலும் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புகள் இருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இந்நிலையில் சென்னை உள்ளிட்ட 4 மாவட்டங்களில் காலை 10 மணி வரை மழைக்கு வாய்ப்பு உள்ளது. சென்னை, செங்கல்பட்டு காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டங்களில் காலை 10 மணி வரை மழைக்கு வாய்ப்பு உள்ளது.