search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "சிறந்த பள்ளி"

    • மத்திய பிரதேச மாநிலத்தின் இரண்டு பள்ளிகள் தேர்வு பட்டியலில் இடம் பிடித்துள்ளது.
    • மும்பை, டெல்லி மற்றும் தமிழ்நாட்டி தலா ஒரு பள்ளி இடம் பிடித்துள்ளது.

    இங்கிலாந்தை சேர்ந்த அமைப்பு ஒன்று உலகளவில் சமுதாய வளர்ச்சிக்கு மிகச்சிறந்த வகையில் கல்வி கற்றுக்கொடுக்கும் பள்ளிகளை தேர்வு செய்து பரிசளித்து வருகிறது.

    சமூக ஒத்துழைப்பு, சுற்றுச்சூழல் நடவடிக்கை, புதுமை, துன்பங்களை சமாளித்தல் மற்றும் ஆரோக்கியமான வாழ்க்கைக்கு ஆதரவு ஆகிய ஐந்து பிரிவுகளில் ஒரு பிரிவிற்கு 10 பள்ளிகளை தேர்வு செய்து அதில் சிறந்த பள்ளிக்கு முதல் பரிசு வழங்கும். முதல் பரிசு 50 ஆயிரம் அமெரிக்கா டாலர் பகிர்ந்து அளிக்கப்படும்.

    ஒவ்வொரு பிரிவிலும் உலகளவில் இருந்து தலா 10 பள்ளிகளை தேர்வு செய்துள்ளது. இதில் ஐந்து பள்ளிகள் சிறந்த பள்ளிகளாக தேர்வு செய்யப்படும்.

    இதில் இந்தியாவை சேர்ந்த ஐந்து பள்ளிகள் தேர்வு செய்யப்பட்டுள்ளன. மத்திய பிரதேச மாநிலத்தைச் சேர்ந்த இரண்டு பள்ளிகள் டெல்லி, மகாராஷ்டிரா, தமிழ்நாடு ஆகிய மாநிலங்களில் இருந்து தலா ஒரு பள்ளிகள் தேர்வாகியுள்ளன.

    தமிழ்நாடு

    கல்வி இன்டர்நேசனல் பப்ளிக் ஸ்கூல் (Kalvi International Public School (Madurai). சமூக ஒத்துழைப்பு பிரிவில் 10 பள்ளிகளில் ஒரு பள்ளியாக தேர்வு செய்யப்பட்டுள்ளது. இதில் இருந்து சிறந்த பள்ளி தேர்வு செய்யப்படும். இது ஒரு தனியார் பள்ளிக்கூடம் ஆகும். கல்வி மற்றும் விளையாட்டு மூலம் பள்ளி மாணவர்களின் வாழ்க்கையை மாற்றுதல். பின்தங்கிய நிலையில் மாணவர்களை சிறந்த விளங்க உதவுதல் காரணத்திற்கான இந்த பள்ளி தேர்வு செய்யப்பட்டுள்ளது.

    மத்திய பிரதேசம்

    அரசு சிஎம் ரைஸ் மாடல் உயர்நிலைப் பள்ளி (Government CM RISE Model HSS, Jhabua), ஜி.ஹெச்.எஸ்.எஸ். வினோபா (அம்பேத்கர் நகர் (G H S S Vinoba Ambedakar Nagar, Ratlam)

    டெல்லி

    ரியான் இன்டர்நேசனல் ஸ்கூல் (Ryan International School, Vasant Kunj)

    மும்பை

    மும்பை பப்ளிக் ஸ்கூல் எல்.கே. வாக்ஜி இன்டர்நேஷனல் (Mumbai Public School L K Waghji International (IGCSE)

    • மாவட்ட அளவிலான சிறந்த பள்ளிகள் தேர்வு குழு அலுவலர்களால் தேர்ந்தெடுக்கப்பட்டது.
    • சிறந்த பள்ளிகளுக்கான பரிசு, கேடயம் வழங்கப்பட்டது.

    சீர்காழி:

    தமிழக அரசு பள்ளிக் கல்வித் துறை சார்பில் தொடக்கக் கல்வி இயக்கத்தின் கீழ் இயங்கும் அரசு, ஊராட்சி, நகராட்சி, மாநகராட்சி மற்றும் அரசு உதவி பெறும் தொடக்கப்பள்ளிகளில் இருந்து மாவட்டம் தோறும் மூன்று பள்ளிகள் தேர்ந்தெடுக்கப்பட்டு சிறந்த பள்ளிகளுக்கான பரிசு, கேடயம் ஆண்டுதோறும் வழங்கப்பட்டு வருகிறது.

    அதன்படி 2022-23 கல்வி ஆண்டுக்கான மாவட்ட அளவிலான சிறந்த பள்ளிகள் தேர்வு குழு அலுவலர்களால் தேர்ந்தெடுக்கப்பட்டு அறிவிக்கப்பட்டுள்ளது.

    அதன்படி மயிலாடுதுறை மாவட்டத்தில் சிறந்த மூன்று பள்ளிகளில் ஒன்றாக சீர்காழி சபாநாயகர் முதலியார் இந்து நடுநிலை பள்ளி தேர்வு செய்யப்பட்டு அறிவிக்கப்பட்டது.

    இந்த பள்ளிக்கான பரிசு மற்றும் கேடயம் சென்னையில் நடைபெற்ற விழாவில் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் முன்னிலையில் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி, பள்ளி தலைமை ஆசிரியர் பாலமுருகனிடம் வழங்கினார்.

    அப்போது அப்பள்ளியை சேர்ந்த சக ஆசிரியர்களுடன் தலைமை ஆசிரியர் பாலமுருகன் பரிசை பெற்றுக்கொண்டார்.

    இந்த விழாவில் இந்து சமய அறநிலைத்துறை அமைச்சர் சேகர்பாபு மற்றும் அரசு உயர் அதிகாரிகள் பங்கேற்றனர் பரிசு பெற்ற பள்ளி தலைமை ஆசிரியரை, பள்ளி செயலர் சொக்கலிங்கம் மற்றும் பிற பள்ளி ஆசிரியர்கள் பெற்றோர்கள் பாராட்டினர்.

    • திருவாரூரில் 3 அரசு பள்ளிகள் சிறந்த பள்ளியாக தேர்வு செய்யப்பட்டது.
    • தில்லைவிளாகம் அரசு பள்ளிக்கு கேடயம் வழங்கப்பட்டது.

    திருவாரூர்:-

    திருவாரூர் மாவட்டத்தில் 3 அரசு பள்ளிகள் சிறந்த பள்ளியாக தேர்வு செய்யப்பட்டு பள்ளிக்கல்வித்துறை சார்பில் கேடயம் வழங்கப்பட்டது.

    இதில் தில்லை விளாகம் கிழக்கு ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளிக்கு கேடயம் வழங்கப்பட்டுள்ளது.

    கேடயத்தை பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி வழங்கினார்.

    இந்த பள்ளியில் ஸ்மார்ட் வகுப்பறைகள், காற்றோட்டமான வகுப்பறைகள் அமைக்கப்பட்டுள்ளன.

    பெண் குழந்தைகளுக்கு கராத்தே பயிற்சி வழங்கப்படுகிறது.

    இந்த நிலையில் இந்த பள்ளி சிறந்த பள்ளியாக தேர்வு செய்யப்பட்டுள்ளதற்கு ஊராட்சி மன்ற தலைவர் காசிநாதன் மற்றும் கிராம மக்கள் பாராட்டு தெரிவித்துள்ளனர்.

    ×