என் மலர்
நீங்கள் தேடியது "ஆஸ்திரியா"
- போலீசார் நடத்திய விசாரணையில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகின.
- கும்பலைச் சேர்ந்த பெண்கள் உள்பட 15 பேரை போலீசார் கைது செய்தனர்.
வியன்னா:
ஆஸ்திரியாவின் ஸ்டைரியா மாகாணத்தைச் சேர்ந்த ஒரு வாலிபருக்கு சமூகவலைதளம் மூலம் ஒருவர் அறிமுகமானார். நட்பாக பழகிய அந்த நபரை சந்திக்க வாலிபர் சென்றிருந்தார். அப்போது அங்கு மறைந்திருந்த கும்பல் அவரை தாக்கி பணத்தைப் பறித்துச் சென்றனர். இதுகுறித்து அவர் போலீசில் புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார் நடத்திய விசாரணையில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகின.
இதில் அந்த கும்பல் சமூகவலைதளம் மூலம் ஓரினச்சேர்க்கையாளர்களை குறிவைத்து பழகியதும், பின்னர் அவர்களை நேரில் வரவழைத்து பணமோசடியில் ஈடுபட்டதும் தெரிய வந்தது. இதனையடுத்து அந்த கும்பலைச் சேர்ந்த பெண்கள் உள்பட 15 பேரை போலீசார் கைது செய்தனர்.
இந்த சம்பவத்தில் மேலும் பலருக்கு தொடர்பு இருப்பதாக சந்தேகிக்கப்படுகிறது. எனவே இந்த மோசடி கும்பலுடன் தொடர்புடையவர்களை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.
- அமெலியா 1945ல் ஆஸ்திரியா நாட்டில் பிறந்து ஸ்லோவேனியாவில் வளர்ந்தவர்
- தனது தாயாரை ஒரு இரும்பு பெண்மணி என குறிப்பிட்டுள்ளார், மெலனியா
முன்னாள் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்பின் மனைவி மெலனியா டிரம்ப் (Melania Trump).
மெலனியா டிரம்பின் தாயார் 78 வயதான அமெலியா நாவ்ஸ் (Amalija Knavs). ஸ்லோவேனியா நாட்டில் தொழிற்சாலை ஊழியராக பணி புரிந்து வந்த நாவ்ஸ், தனது மகள் மெலனியா, டிரம்பை திருமணம் செய்து கொண்டதால், அவர் கணவர் விக்டருடன் இணைந்து இருவரும் 2018ல் அமெரிக்க குடியுரிமை பெற்றனர்.
1945, ஜூலை மாதம் 9 அன்று ஆஸ்திரியா நாட்டில் பிறந்த அமேலியா ஸ்லோவேனியாவில் வளர்ந்தார். அவரது தந்தை காலணி தொழிலாளியாக இருந்து பிறகு வெங்காய விற்பனையாளராக மாறியவர்.
2024 ஜனவரி 1, புத்தாண்டு நிகழ்ச்சியின் போது, புளோரிடா (Florida) மாநில பாம் பீச் (Palm Beach) பகுதியில் உள்ள தனது மார்-அ-லாகோ (Mar-a-Lago) இல்லத்தில் டிரம்ப் கொண்டாட்ட நிகழ்ச்சிகளில் ஈடுபட்டார்.
அப்போது டிரம்பிடம் அவர் மனைவி இல்லாதது குறித்து கேட்கப்பட்ட போது, தனது மாமியார் உடல் நிலை சரியில்லாததால் மியாமி (Miami) மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாகவும், மெலனியா அங்கு சென்றிருப்பதாகவும் தெரிவித்தார்.
இந்நிலையில், சிகிச்சை பலனின்றி நாவ்ஸ் உயிரிழந்தார்.
இத்துயர செய்தியை மெலனியா தனது அதிகாரபூர்வ எக்ஸ் கணக்கில் பதிவிட்டுள்ளார்.
அதில் மெலனியா, "அமெலியா ஒரு இரும்பு பெண்மணி. கணவர், குழந்தைகள், மருமகன் ஆகியோரிடம் மிகுந்த பாசம் உடையவர். அவரை நாங்கள் இழந்து விட்டோம். அவர் நினைவை நாங்கள் என்றென்றும் போற்றுவோம்" என தெரிவித்துள்ளார்.
- குரூப் D பிரிவில் ஆஸ்திரியா, போலந்து அணிகள் இன்று மோதின.
- 1-3 என்ற கோல் கணக்கில், ஆஸ்திரியாவிடம் போலந்து தோல்வியடைந்தது.
ஐரோப்பிய நாடுகளுக்கு இடையிலான யூரோ கோப்பை கால்பந்து போட்டி ஜெர்மனியில் தொடங்கி நடைபெற்று வருகிறது. சுமார் 3 ஆயிரம் கோடி ரூபாய் பரிசுத்தொகை கொண்ட இந்தப் போட்டியில் ஜெர்மனி, இத்தாலி, பிரான்ஸ் உள்ளிட்ட 24 அணிகள் பங்கேற்றுள்ளன.
ஒவ்வொரு பிரிவிலும் 4 அணிகள் என 6 பிரிவுகளாக பிரித்து லீக் போட்டி நடைபெறுகிறது. இதில் குரூப் D பிரிவில் ஆஸ்திரியா, போலந்து அணிகள் இன்று மோதின.
இப்போட்டியில், 1-3 என்ற கோல் கணக்கில், ஆஸ்திரியாவிடம் போலந்து தோல்வியடைந்தது. இதன்மூலம் யூரோ கோப்பை கால்பந்து தொடரில் இருந்து முதல் அணியாக போலந்து பரிதாபமாக வெளியேறியது.
முந்தைய ஆட்டத்தில் நெதர்லாந்திடம் போலந்து தோல்வியடைந்தது. மீதமுள்ள ஒரு ஆட்டத்தில் போலந்து வெற்றி பெற்றாலும் புள்ளிப்பட்டியலில் எந்த மாற்றத்தையும் ஏற்படுத்தாது.
- குரூப் டி-ல் ஆஸ்திரியா அணி முதலிடத்தை பிடித்து அசத்தியுள்ளது.
- குரூப் டி-ல் பிரான்ஸ் அணி 2-வது இடத்தையும், போலந்து அணி 4-வது இடத்தையும் பிடித்தன.
24 அணிகள் இடையிலான 17-வது ஐரோப்பிய கால்பந்து சாம்பியன்ஷிப் (யூரோ) போட்டி ஜெர்மனியில் நடந்து வருகிறது. இந்த தொடரில் நேற்று இரவு நடைபெற்ற கடைசி லீக் ஆட்டத்தில் பிரான்ஸ் - போலந்து அணிகள் மோதின. பரபரப்பான இந்த ஆட்டம் 1-1 என்ற கோல் கணக்கில் சமனில் முடிந்தது.
இதன் மூலம் குரூப் டி-ல் பிரான்ஸ் அணி 2-வது இடத்தையும், போலந்து அணி 4-வது இடத்தையும் பிடித்தன.
மற்றொரு ஆட்டத்தில் நெதர்லாந்து - ஆஸ்திரியா அணிகள் மோதியது. 6-வது நிமிடத்தில் ஆஸ்திரியா தனது முதல் கோலை அடித்தது. அதனை தொடர்ந்து நெதர்லாந்து 47-வது நிமிடத்தில் தனது முதல் கோலை அடித்து அசத்தியது. அதனை தொடர்ந்து 59-வது நிமிடத்தில் ஆஸ்திரியாவும் 75-வது நிமிடத்தில் நெதர்லாந்து அணியிம் கோல் அடித்தனர். இதனால் ஆட்டம் பரபரப்பானது.
அடுத்த சிறிது நேரத்தில் (80-வது நிமிடம்) ஆஸ்திரியா ஒரு கோல் போட்டு அசத்தியது. இறுதி வரை நெதர்லாந்து அணியால் அடுத்த கோலை அடிக்க முடியவில்லை. இதனால் 2-3 என்ற கோல் கணக்கில் ஆஸ்திரியா வெற்றி பெற்றது. மேலும் குரூப் டி-ல் முதலிடத்தை பிடித்து அசத்தியுள்ளது.
- வெற்றி பெறும் அணிகள் காலிறுதி சுற்றுக்கு முன்னேற முடியும்.
- அந்த அணி 0-1 என்ற வகையில் முன்னணி பெற்றது.
யூரோ கோப்பை 2024 கால்பந்து தொடர் ஜெர்மனியில் நடைபெற்று வருகிறது. இந்த தொடரின் துவக்க சுற்று போட்டிகள் நிறைவுபெற்று த்போது காலிறுதிக்கு முந்தைய ரவுண்ட் ஆஃப் 16 சுற்று போட்டிகள் நடைபெற்று வருகின்றன. இதில் வெற்றி பெறும் அணிகள் காலிறுதி சுற்றுக்கு முன்னேற முடியும்.
அந்த வகையில், நேற்று நள்ளிரவு நடைபெற்ற போட்டிகளில் ரோமானியா - நெதர்லாந்து அணிகளும், அதன் பிறகு நடைபெற்ற மற்றொரு போட்டியில் ஆஸ்திரியா மற்றும் துருக்கி அணிகளும் மோதின. இதில் முதலில் நடைபெற்ற ரோமானியா - நெதர்லாந்து அணிகள் இடையிலான போட்டி அமைதியாகவே துவங்கியது.
பிறகு, நீண்ட நேரம் பந்தை வைத்திருந்து நெதர்லாந்து அணியின் கோடி கேக்போ பெனால்டி பகுதி அருகே இருந்து அடித்த ஷாட் கோலாக மாறியது. இதன் மூலம் அந்த அணி 1-0 என்ற வகையில் முன்னணி பெற்றது. இந்த கோல் மூலம் நடப்பு யூரோ கோப்பையில், கோடி கேக்போ தனது மூன்றாவது கோலை நிறைவு செய்தார்.
இதைத் தொடர்ந்து இரு அணிகளும் மற்றொரு கோல் அடிப்பதில் முனைப்பு காட்டின. எனினும், போட்டியின் முதல் பாதி வரை மற்றொரு கோல் அடிக்கப்படவில்லை. இதன் காரணமாக முதல் பாதியில் நெதர்லாந்து 1-0 என்ற வகையில் முன்னணியில் இருந்தது. போட்டியின் இரண்டாவது பாதியில் நெதர்லாந்து வீரர் மலென் கோல் அடிக்க அந்த அணி 2-0 என முன்னணி பெற்றது.
மறுபுறம் பதில் கோல் அடிக்க ரோமானியா அணி வீரர்கள் தீவிரம் காட்டினர். எனினும், அந்த அணி வீரர்கள் கோல் அடிக்க முடியாமல் திணறினர். பிறகு சில நிமிடங்களில் மீண்டும் மலென் கோல் அடிக்க நெதர்லாந்து அணி 3-0 என்று தொடர்ச்சியாக முன்னணியில் இருந்தது. போட்டி முடியும் வரை ரோமானியா அணி கோல் அடிக்கவில்லை. இதன் காரணமாக நெதர்லாந்து அணி 3-0 என்ற வகையில் போட்டியில் வெற்றி பெற்றது.

இதைத் தொடர்ந்து நடைபெற்ற மற்றொரு போட்டியில் ஆஸ்திரியா மற்றும் துருக்கி அணிகள் மோதின. இந்த போட்டியில் துவக்கம் முதலே விறுவிறுப்பு பற்றிக் கொண்டது. இந்த போட்டி துவங்கிய 58 நொடியில் துருக்கி வீரர் மெரி டெமிரல் கோல் அடிக்க, அந்த அணி துவக்கத்திலேயே முன்னணி வகித்தது. இதைத் தொடர்ந்து ஆஸ்திரியா அணி கோல் அடிக்க முனைப்பு காட்டியது.
எனினும், அந்த அணி வீரர்களின் முயற்சிக்கு பலன் கிடைக்கவில்லை. போட்டியின் 59-வது நிமிடத்தில் துருக்கி அணி மற்றொரு கோல் அடித்தது. இதைத் தொடர்ந்து போட்டியின் 66-வது நிமிடத்தில் ஆஸ்திரியா கோல் அடித்தது. இதன் காரணமாக ஆஸ்திரியா போட்டியில் தனது முதல் கோலை பதிவு செய்தது.
துருக்கி 2-1 என்ற நிலையில், போட்டி தொடர்ந்த நிலையில், ஆஸ்திரியா வீரர்கள் மற்றொரு கோல் அடிக்க அதிக தீவிரமாக முயற்சித்தனர். இதன் தொடர்ச்சியாக அந்த அணி ஒரு கோல் அடிக்கவும் செய்தது, எனினும், துருக்கி அணியின் கோல் கீப்பர் மெர்ட் குனோக் சாமர்த்தியமாக கோலை தடுத்ததால், ஆஸ்திரியாவின் முயற்சிக்கு பலன் கிடைக்கவில்லை.
போட்டி முடிவில் துருக்கி 2-1 அடிப்படையில் வெற்றி பெற்றது. இதன் மூலம் அந்த அணி காலிறுதி சுற்றுக்கு முன்னேறி அத்தியது. அந்த வகையில், நேற்றிரவு நடைபெற்ற இரு போட்டிகளில் விளையாடிய நான்கு அணிகளில் நெதர்லாந்து மற்றும் துருக்கி அணிகள் காலிறுதி சுற்றுக்கு முன்னேறி அசத்தின.
- ஆஸ்திரியாவில் உள்ள இந்தியர்களை பிரதமர் மோடி சந்தித்து உரையாற்றினார்.
- இந்தியா எப்போது அமைதி மற்றும் வளர்ச்சியை கொடுக்கிறது.
பிரதமர் மோடி ரஷிய பயணத்தை முடித்துக்கொண்டு 2 நாள் பயணமாக ஆஸ்திரியா சென்றார். அங்கு அந்நாட்டு அதிபர் அலெக்சாண்டர் வான்டர் பெல்லன் மற்றும் பிரதமர் கார்ல் நெகம்மரை இந்திய பிரதமர் மோடி சந்தித்து பேசினார்.
இதனை தொடர்ந்து ஆஸ்திரியாவில் உள்ள இந்தியர்களை பிரதமர் மோடி சந்தித்து உரையாற்றினார்.
அப்போது, "பல ஆயிரம் ஆண்டுகளாக நாம் நமது திறமை, அறிவை பகிர்ந்து வருகிறோம். நாம் உலகிற்கு புத்தரை கொடுத்துள்ளோம், யுத்தத்தை கொடுக்கவில்லை. இந்தியா எப்போது அமைதி மற்றும் வளர்ச்சியை கொடுக்கிறது. இதனால் 21ம் நூற்றாண்டில் இந்தியா வலிமைபெற்று வருகிறது" என்று மோடி பேசியுள்ளார்.
ரஷியா, ஆஸ்திரியா பயணத்தை முடித்த பிரதமர் மோடி தனி விமானம் மூலம் இன்று காலை இந்தியா வந்தடைந்தார்.
- ரஷியா, ஆஸ்திரியா பயணத்தை முடித்துக் கொண்டு பிரதமர் மோடி இன்று டெல்லி திரும்பினார்.
- 40 ஆண்டுக்குப் பிறகு இந்திய பிரதமர் ஒருவர் ஆஸ்திரியா சென்றது இது முதல் முறை என்பது குறிப்பிடத்தக்கது.
புதுடெல்லி:
பிரதமர் நரேந்திர மோடி ரஷியா மற்றும் ஆஸ்திரியா பயணத்தை முடித்துக் கொண்டு இன்று காலை டெல்லி திரும்பினார்.
ஆஸ்திரிய பயணம் தொடர்பாக பிரதமர் மோடி வெளியிட்ட எக்ஸ் வலைதள செய்தியில், இந்தப் பயணம் வரலாற்றுச் சிறப்புமிக்கது. நமது தேசங்களுக்கு இடையிலான நட்புறவு தழைத்துள்ளது. வியன்னாவில் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்துகொண்டது மகிழ்ச்சி. சிறப்பாக உபசரித்த ஆஸ்திரிய அரசு, அதிபர் கார்ல் நஹமர் மற்றும் மக்களுக்கு நன்றி என பதிவிட்டிருந்தார்.
சுமார் 40 ஆண்டுக்குப் பிறகு இந்திய பிரதமர் ஒருவர் ஆஸ்திரியா சென்றது இது முதல் முறை என்பது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில், ஆஸ்திரியாவில் இந்திய சமூகத்தினர் இடையே பிரதமர் மோடி உரையாற்றினார். அப்போது ஆஸ்திரியா என்பதை தவறுதலாக ஆஸ்திரேலியா என உச்சரித்தார். இதைக்கேட்ட அங்கிருந்த கூட்டத்தினர், ஆஸ்திரியா என திருத்திக் கூச்சலிட்டனர்.
இதுதொடர்பான வீடியோவை இணைய தளங்களில் வைரலாக்கி வரும் இணையதள வாசிகள், அமெரிக்க அதிபர் ஜோ பைடனுக்கு சரியான கம்பெனி கிடைத்து விட்டது என டிரோல் செய்து வருகின்றனர்.
??Modi pronounced #Austria as Australia The Entire Crowd corrected him by shouting "Austria" together. #Biden has got a company. pic.twitter.com/8PiK4wcJmo
— Rejimon Kuttappan (@rejitweets) July 11, 2024
- இருவர் பலத்த காயங்களுக்கு உள்ளாகி தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
- கடந்த பிப்ரவரி 13 ஆம் தேதி ஆப்கனிஸ்தானை சேர்ந்த 24 வயது வாலிபர் ஜெர்மனியில் கூட்டத்தில் காரை மோதினார்.
ஆஸ்திரியாவில் நடந்த கத்திக்குத்து தாக்குதலில் 14 வயது சிறுவன் உயிரிழந்தான். மேலும் ஐந்து பேர் காயமடைந்தனர்.
இத்தாலி மற்றும் ஸ்லோவேனியாவின் எல்லைக்கு அருகிலுள்ள வில்லாச் நகரில் நேற்று [சனிக்கிழமை] சாலையில் சென்றுகொண்டிருத்தவர்களை இளைஞன் ஒருவர் சரமாரியாக கத்தியால் குத்தியுள்ளான்.
ஆஸ்திரியாவுக்கு புலம்பெயர்ந்த 23 வயது சிரியா நாட்டு வாலிபர் இந்த தாக்குதலில் ஈடுபட்டதாக போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளார். தாக்குதலுக்குப் பின்னால் உள்ள நோக்கத்தை போலீசார் இன்னும் கண்டறியவில்லை. மேலும் அந்த நபரின் பின்னணி குறித்த தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது.
பலியானவர்களில் நான்கு பேர் 14 முதல் 32 வயதுக்குட்பட்ட ஆண்கள், அதில் ஒருவர் துருக்கையை சேர்ந்தவர் என்று காவல்துறை தெரிவித்துள்ளது. இருவர் பலத்த காயங்களுக்கு உள்ளாகி தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். மற்ற இருவருக்கு லேசான காயங்கள் ஏற்பட்டுள்ளன.
தாக்குதல் நடத்தியவருக்கும் பாதிக்கப்பட்டவர்களுக்கும் இடையே ஏதேனும் தொடர்பு இருந்ததா அல்லது பயங்கரவாத செயலா என்ற கோணத்தில் விசாரணை நடந்து வருகிறது.
புலம்பெயர்ந்தவரால் இந்த தாக்குதல் நடத்தப்பட்டதால் அந்நாட்டுக்கு படையெடுக்கும் அகதிகள் குறித்த விமர்சனத்தை எதிர்க்கட்சிகள் முன்வைக்கின்றன.

ஆஸ்திரியாவின் உள்துறை அமைச்சக அறிக்கைப்படி, 2024 ஆம் ஆண்டில் 24,941 வெளிநாட்டினர் அந்நாட்டில் புகலிடம் கோரி விண்ணப்பித்துள்ளனர். விண்ணப்பித்தவர்களில் சிரியாவிலிருந்தும், ஆப்கானிஸ்தானிலிருந்தும் வந்தவர்களே அதிகம்.
முன்னதாக கடந்த பிப்ரவரி 13 ஆம் தேதி ஆப்கனிஸ்தானை சேர்ந்த 24 வயது வாலிபர் ஆஸ்திரியாவுக்கு அருகில் உள்ள ஜெர்மனி நாட்டின் முனீச்சில் நடந்த கூட்டத்திற்குள் காருடன் புகுந்ததில் 28 பேர் படுகாயம் அடைந்தது குறிப்பிடத்தக்கது.