search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "இந்தூர்"

    • இதற்கு முன்பு ஒரே நாளில் 9,26,000 மரக்கன்றுகளை நட்டு அசாம் மாநிலம் கின்னஸ் சாதனை புடைத்திருந்தது.
    • மத்தியப் பிரதேச முதல்வர் மோகன் யாதவ் கின்னஸ் புத்தகத்தில் இருந்து அதிகாரப்பூர்வ சான்றிதழை பெற்றுக்கொண்டார்.

    மத்திய பிரதேச மாநிலம் இந்தூரில் 24 மணி நேரத்தில் 11 லட்சத்துக்கும் அதிகமான மரக்கன்றுகளை நட்டு புதிய உலக சாதனை படைக்கப்பட்டுள்ளது.

    மத்தியப் பிரதேச முதல்வர் மோகன் யாதவ் கின்னஸ் புத்தகத்தில் இருந்து அதிகாரப்பூர்வ சான்றிதழை பெற்றுக்கொண்டார்.

    இந்த சாதனை குறித்து மோகன் யாதவ் தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அதில், தூய்மையான நகரம் என்ற சாதனையை தொடர்ந்து ஒரே நாளில் அதிக மரக்கன்றுகள் நடப்பட்ட நகரம் என்ற சாதனையையும் படைத்த இந்தூரின் சகோதர சகோதரிகளுக்கு மனமார்ந்த வாழ்த்துகள். இந்தூர் நகரம் ஒரே நாளில் 11 லட்சத்துக்கும் அதிகமான மரக்கன்றுகளை நட்டு உலக சாதனை படைத்துள்ளது" என்று பதிவிட்டுள்ளார்.

    இதற்கு முன்பு ஒரே நாளில் 9,26,000 மரக்கன்றுகளை நட்டு அசாம் மாநிலம் கின்னஸ் சாதனை புடைத்திருந்தது. அச்சாதனையை தற்போது இந்தூர் முறியடித்து புதிய சாதனையை படைத்துள்ளது.

    • தற்போதைய நிலவரப்படி பா.ஜ.க. 17 தொகுதிகளில் வெற்றி பெற்றுள்ளது.
    • இந்தூர் தொகுதியில் போட்டியிட்ட பா.ஜ.க.வின் சங்கர் லால்வானி 12,26,751 வாக்குகள் பெற்றார்.

    போபால்:

    பாராளுமன்ற தேர்தலில் பதிவான வாக்குகள் இன்று எண்ணப்பட்டு வருகிறது. தற்போதைய நிலவரப்படி, பா.ஜ.க. தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி 290-க்கும் அதிகமான இடங்களில் முன்னிலை வருகிறது.

    தற்போதைய நிலவரப்படி பா.ஜ.க. 17 தொகுதிகளில் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

    இந்நிலையில், மத்திய பிரதேச மாநிலம் இந்தூர் தொகுதியில் போட்டியிட்ட பா.ஜ.க.வின் சங்கர் லால்வானி அபார வெற்றி பெற்றார்.

    இவர் 12,26,751 வாக்குகள் பெற்றார்.

    இவரை எதிர்த்து போட்டியிட்ட பகுஜன் சமாஜ் வேட்பாளர் 51,659 வாக்குகள் பெற்றுள்ளார். இருவருக்கும் இடையிலான வாக்கு வித்தியாசம் 11,75,092 ஆகும்.

    இந்தத் தொகுதியில் நோட்டா இரண்டாம் இடம் பிடித்துள்ளது. 2,18,674 வாக்குகளை நோட்டா பெற்றுள்ளது.

    பாராளுமன்ற தேர்தலில் 10 லட்சத்துக்கும் அதிகமான வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற தொகுதி இது என்பது குறிப்பிடத்தக்கது.

    • இந்தியாவில் மக்களவைத் தேர்தல் வாக்கு எண்ணிக்கை இன்று (ஜூன் 4) காலை 8 மணி முதல் மும்முரமாக நடந்து வருகிறது.
    • 12 மணி நிலவரப்படி குறைத்து 1 லட்சம் வாக்கு வித்தியாசம் இருந்தால் மட்டுமே தற்போதே வெற்றியை உறுதி செய்ய முடியும்.

    இந்தியாவில் மக்களவைத் தேர்தல் வாக்கு எண்ணிக்கை இன்று (ஜூன் 4) காலை 8 மணி முதல் மும்முரமாக நடந்து வருகிறது. நாடு முழுவதும் உள்ள பல்வேறு தொகுதிகளில் பா.ஜ.க.வின் என்.டி.ஏ. கூட்டணி முன்னிலை வகிக்கிறது. காங்கிரஸ் தலைமையிலான இந்தியா கூட்டணி கடந்த தேர்தலில் பெற்றதை விட கூடுதல் தொகுதிகளில் முன்னிலையில் உள்ளது.

    இந்த நிலை எந்த நேரமும் மாறும் என்ற சூழலில், மதியம் 12 மணி நிலவரப்படி மொத்தம் உள்ள 543 தொகுதிகளுள் 165 தொகுதிகளில் வாக்கு வித்தியாசம் 10,000 என்ற அளவிலேயே உள்ளது. எனவே தற்போதுள்ள நிலவரத்தை வைத்துக்கொண்டு வெற்றியை நிச்சயிக்க முடியாது. 12 மணி நிலவரப்படி குறைத்து 1 லட்சம் வாக்கு வித்தியாசம் இருந்தால் மட்டுமே தற்போதே வெற்றியை உறுதி செய்ய முடியும்.

    இந்நிலையில் இந்தூர் தொகுதியில் வாக்கு எண்ணிக்கை நடந்துக் கொண்டு இருக்கும் நிலையில். 1.35 லட்சத்திற்கு மேற்பட்டோர் நோட்டாவிற்கு வாக்களித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்தூர் தொகுதியில் பா.ஜ.க. வேட்பாளருக்கு 60 சதவீத வாக்குகள் கிடைத்துள்ளன.

    தற்போதைய நிலவரப்படி இந்தூரில் பா.ஜ.க. வேட்பாளர் சுமார் 7 லட்சம் வாக்குகளை பெற்று முன்னணியில் உள்ளார். கடந்த 1989 ஆம் ஆண்டு முதல் பா.ஜ.க. கோட்டையாக கருதப்படும் இந்தூர் தொகுதியில் இந்த முறை சுமார் 1 லட்சத்து 35 ஆயிரம் பேர் நோட்டாவுக்கு வாக்களித்து இருப்பது ஆச்சரியத்தை ஏற்படுத்தி உள்ளது.

    • பா.ஜனதா வேட்பாளர் சங்கர் லால் வாணி அசுர வேகத்தில் முன்னிலை பெற்றார்.
    • மக்களும் நோட்டாவுக்கு வாக்களிக்குமாறு காங்கிரஸ் கோரிக்கை.

    மத்தியப் பிரதேசம் மாநிலம் இந்தூர் தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளர் அக்ஷய் காண்டிபம் தனது வேட்புமனுவை திரும்பப் பெற்று பா.ஜ.க.வில் இணைந்தார்.

    காங்கிரஸ் சார்பில் நிறுத்தப்பட்ட 2 மாற்று வேட்பாளர்களின் மனுக்களும் நிராகரிக்கப்பட்டதால், அத்தொகுதியில் காங்கிரஸ் போட்டியிட முடியாத நிலை ஏற்பட்டது.

    இதனால், வாக்குப்பதிவின் போது காங்கிரஸ் தொண்டர்களும், மக்களும் நோட்டாவுக்கு வாக்களிக்குமாறு காங்கிரஸ் கோரிக்கை வைத்துள்ளது. இதுதொடர்பாக அக்கட்சி பிரசாரம் செய்தது.

    இந்தூர் தொகுதியில் வாக்குப்பதிவு தொடக்கம் முதலே பா.ஜனதா வேட்பாளர் சங்கர் லால் வாணி அசுர வேகத்தில் முன்னிலை பெற்றார். அவர் ஒரு மணி நேரத்தில் ஒரு லட்சம் வாக்குகளை கடந்தார். 9.30 மணி நிலவரப்படி சங்கர் லால் வாணி 1 லட்சத்து 9 ஆயிரத்து 56 வாக்குகள் பெற்றார்.

    அப்போது அவர் 93 ஆயிரம் வாக்குகள் முன்னிலை பெற்றார். நோட்டா 16 ஆயிரத்து 480 ஓட்டுகளுடன் 2-வது இடத்தில் இருந்தது. பகுஜன் சமாஜ் கட்சி வேட்பாளர் 3 ஆயிரம் வாக்குகள் மட்டுமே பெற்று இருந்தார்.

    இந்தூர் தொகுதியில் பா.ஜனதா வேட்பாளரை தவிர மற்ற அனைவரும் டெபாசிட் இழக்கிறார்கள்.

    • 53 வயது நபர் ஒருவர் 57 வயது பெண்ணுடன் லிவ் இன் டுகதர் ரிலேஷன்ஷிப்பில் கடந்த 10 ஆண்டுகளாக வாழ்ந்து வந்துள்ளார்.
    • பெண் உடல்நலக்குறைவால் உயிரிழந்த நிலையில் அவரது உடலை 3 நாட்களாக வீட்டிலேயே அந்த நபர் வைத்துள்ளார்.

    மத்தியப் பிரதேச மாநிலம் இந்தூரில், இறந்த தனது லிவ் இன் டுகதர் பாட்னர் உடலை புதைக்க இடம் கிடைக்காததால் சாலையில் விட்டுச்சென்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்தூரில் 53 வயது நபர் ஒருவர் 57 வயது பெண்ணுடன் லிவ் இன் டுகதர் ரிலேஷன்ஷிப்பில் (திருமணம் சசெய்துகொள்ளாமல் சேர்நது வாழும் முறை) கடந்த 10 ஆண்டுகளாக வாழ்ந்து வந்துள்ளார்.

     

     

    இதற்கிடையில் பெண் உடல்நலக்குறைவால் உயிரிழந்த நிலையில் அவரது உடலை 3 நாட்களாக வீட்டிலேயே அந்த நபர் வைத்துள்ளார். அக்கம்பக்கத்தினர் வீட்டில் ஏதோ மோசமான வாடை வருவதாக அவரிடம் தெரிவித்துள்ளனர். இதனைத் தொடர்ந்து பெண்ணின் உடலை சாக்கில் கட்டி சாந்தன் நகரில் உள்ள சாலையில் விட்டுச்சென்றுள்ளார்.

     

    தகவலறிந்து வந்து உடலைக் கைப்பற்றிய போலீஸார் அந்த நபரைத் தேடி வந்தனர். ராஜ்மோஹல்லா பகுதியில் உள்ள பூங்கா ஒன்றில் அலைந்துகொண்டிருந்த அவரிடம் விசாரித்ததில் இறுதிச் சடங்கு இல்லாததால் உடலை சாலையில் வீட்டுச் சென்றதாக போலீசிடம் தெரிவித்துள்ளார்.

    அவர் புத்தி சுவாதீனம் இல்லாதவறாக பூங்காவாக அலைந்து கொண்டிருந்ததாக போலீஸார் தெறிவித்தனர். உயிரிழந்த பெண்ணின் உடலை உடற்கூறாய்வு செய்து பார்த்தபோது அவர் கல்லீரல் தொடர்பான நோயினால் உயிரிழந்ததாக கண்டறியப்பட்டுள்ளது. இதனையடுத்து பெண்ணின் உடலுக்கு உரிய முறையில் இறுதிச்சடங்கு செய்யப்பட்டு புதைக்கப்பட்டுள்ளது. 

    • சிறார்களை காப்பக ஊழியர்கள் மற்றும் நிர்வாகிகள் அடித்து கொடுமை படுத்துவதாக புகார்கள் எழுந்தன.
    • 4 வயது குழந்தையை 2 நாள் உணவு கொடுக்காமல் குளியலறையில் வைத்து சித்திரவதை செய்துள்ளனர்.

    மத்தியப்பிரதேசம் மாநிலம் இந்தூரில் தனியார் அறக்கட்டளை நடத்தும் குழந்தைகள் காப்பகம் செயல்பட்டு வந்தது. இந்த குழந்தைகள் காப்பகத்தை வாத்ஸல்யபுரம் ஜெயின் டிரஸ்ட் அமைப்பினர் நடத்தி வந்தனர். அங்கு தங்கி இருக்கும் சிறார்களை காப்பக ஊழியர்கள் மற்றும் நிர்வாகிகள் அடித்து கொடுமை படுத்துவதாக புகார்கள் எழுந்தது. அதனை தொடர்ந்து குழந்தைகள் நலக்குழுவினர் மற்றும் காவல் துறையினர் அங்கு ஆய்வு மேற்கொண்டனர்.

    அதன் பிறகு செய்தியாளர்களை சந்தித்த விசாரணை அதிகாரி, "இங்கு தங்கியுள்ள சிறுவர்களை நிர்வாகிகள் அடித்து துன்புறுத்தி இருக்கிறார்கள். சிறிய தவறு செய்தாலும் தலைகீழாக தொங்கவிடுதல், இரும்பு கம்பியால் சூடு போடுதல், கட்டி வைத்து அடித்தல், அடுப்பில் காய்ந்த மிளகாயை போட்டு நுகர்ந்து பார்க்க வைத்தல், உள்ளிட்ட பல கொடுமைகளை இங்குள்ள சிறுவர்கள் அனுபவித்து வந்துள்ளனர். 4 வயது குழந்தையை 2 நாள் உணவு கொடுக்காமல் குளியலறையில் வைத்து சித்திரவதை செய்துள்ளனர். இந்த சம்பவத்தில் ஈடுபட்ட காப்பக ஊழியர்கள் 5 பேர் மீது எஃப் ஐ ஆர் பதிவு செய்துள்ளோம்" எனக் கூறினார்.

    இதுகுறித்து இந்தூர் கூடுதல்போலீஸ் கமிஷனர் அமரேந்திரசிங் கூறும்போது, "தற்போதுகாப்பகத்தை மூடி சீல் வைத்துள்ளோம். அங்கிருந்த குழந்தைகள் அரசு மருத்துவமனைகள் மற்றும் பாதுகாப்பான குழந்தைகள் காப்பகத்திற்கு மாற்றப்பட்டுள்ளனர். குழந்தைகள் நலக்குழுவினர் கொடுத்த புகாரின் பேரில் வழக்குப் பதிவு செய்யப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது என்றார்.

    • நவி மும்பை மூன்றாவது இடத்தைத் தக்க வைத்துக் கொண்டது.
    • 'சிறந்த செயல்திறன் கொண்ட மாநிலங்கள்' பிரிவில், மகாராஷ்டிரா முதலிடம்.

    மத்திய அரசு சார்பில் ஆண்டுதோறும் தூய்மைக் கணக்கெடுப்பு மேற்கொள்ளப்படுகிறது. இந்நிலையில், கடந்த ஆண்டுக்கான முடிவுகள் இன்று அறிவிக்கப்பட்டது.

    இதில், இந்தூர் மற்றும் சூரத் நாட்டின் தூய்மையான நகரங்களாகத் தேர்வு செய்யப்பட்டன. தொடர்ந்து, நவி மும்பை மூன்றாவது இடத்தைத் தக்க வைத்துக் கொண்டது. 

    'ஸ்வச் சர்வேக்ஷன் விருதுகள் 2023' இல் 'சிறந்த செயல்திறன் கொண்ட மாநிலங்கள்' பிரிவில், மகாராஷ்டிரா முதலிடத்தைப் பிடித்தது. அதைத் தொடர்ந்து மத்தியப் பிரதேசம் மற்றும் சத்தீஸ்கர் ஆகிய மாநிலங்கள் பிடித்துள்ளது.

    இதுதொடர்பாக நடைபெற்ற நிகழ்ச்சியில் வெற்றி பெற்றவர்களுக்கு ஜனாதிபதி திரவுபதி முர்மு விருதுகளை வழங்கினார். மத்திய வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற விவகாரங்கள் துறை அமைச்சர் ஹர்தீப் சிங் பூரி உள்ளிட்டோர் நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.

    இந்தூர் தொடர்ந்து ஏழாவது முறையாக தூய்மையான நகர பட்டத்தை வென்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

    ×