என் மலர்
நீங்கள் தேடியது "இந்தியா ஆப்கானிஸ்தான்"
- சர்வதேச கிரிக்கெட்டில் 100-வது வெற்றியை பெற்ற முதல் வீரர்.
- 14 மாதம் கழித்து களம் இறங்கிய ரோகித் சர்மா, டக்அவுட்டில் ஆட்டமிழந்து ஏமாற்றம்.
இந்தியா- ஆப்கானிஸ்தான் அணிகளுக்கு இடையிலான முதல் டி20 போட்டி நேற்று மொகாலியில் நடைபெற்றது. இதில் இந்தியா 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. சுமார் 14 மாதங்கள் கழித்து டி20-யில் களம் இறங்கிய ரோகித் சர்மா, ஆட்டத்தின் 2-வது பந்திலேயே ரன்அவுட் ஆனார்.
இந்த போட்டியில் இந்தியா வெற்றி பெற்றதால், டி20 சர்வதேச போட்டியில் 100 வெற்றிகளை ருசித்த முதல் வீரர் என்ற பெருமையை ரோகித் சர்மா பெற்றுள்ளார். அதேவேளையில் டி20 கிரிக்கெட்டில் டக்அவுட்டில் ரன்அவுட் ஆகிய டெஸ்ட் போட்டிகளில் விளையாடும் அணிகளின் கேப்டன் பட்டியலிலும், முதல் இந்திய அணி கேப்டன் என்ற விரும்பத்தகாத சாதனையையும் படைத்துள்ளார்.
இதற்கு முன் இலங்கையில் ஜெயவர்தனே 2 முறையில், ஆப்கானிஸ்தானின் ஆஸ்கர் ஆப்கன், இங்கிலாந்தின் ஸ்டூவர்ட் பிராட், பால் காலிங்வுட், ஜிம்பாப்வேயின் சிகும்புரா, பாகிஸ்தானின் பாபர் அசாம் மற்றும் அப்ரிடி, நியூசிலாந்தின் வெட்டோரி ஆகியோரும் டக்அவுட் ஆகியுள்ளனர்.
மேலும் டி20-யில் இதுவரை 6 முறை ரன்அவுட் ஆகி விராட் கோலி, தோனியுடன் அதிகமுறை ரன்அவுட்டாகிய இந்திய வீரர்கள் பட்டியலில் இணைந்துள்ளார்.
- ரோகித் சர்மா ரன்ஏதும் எடுக்காமல் ரன்அவுட் ஆனார்.
- ஜிதேஷ் சர்மா 20 பந்தில் 31 ரன்கள் விளாசி ஆட்டமிழந்தார்.
இந்தியா- ஆப்கானிஸ்தான் இடையிலான முதல் டி20 போட்டி மொகாலியில் இன்று நடைபெற்றது. முதலில் பேட்டிங் செய்த ஆப்கானிஸ்தான் 5 விக்கெட் இழப்பிற்கு 158 ரன்கள் சேர்த்தது.
பின்னர் 159 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் ரோகித் சர்மா- சுப்மன் கில் ஜோடி களம் இறங்கியது. ஆட்டத்தின் 2-வது பந்திலேயே ரோகித் சர்மா ரன்அவுட் ஆனார். அவர் ரன்ஏதும் எடுக்காமல் வெளியேற, அடுத்து திலக் வர்மா களம் இறங்கினார்.
சுப்மன் கில் 12 பந்தில் 23 ரன்கள் எடுத்து வெளியேறினார். திலக் வர்மா 22 பந்தில் 26 ரன்கள் சேர்த்தார். ஷிபம் டுபே ஒரு பக்கம் நிலைத்து நின்று விளையாட மறுமுனையில் ஜிதேஷ் சர்மா 20 பந்தில் 31 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார்.
5-வது விக்கெட்டுக்கு டுபே உடன் ரிங்கு சிங் ஜோடி சேர்ந்தார். இந்தியாவுக்கு கடைசி 4 ஓவரில் 19 ரன்கள் தேவைப்பட்டது. ஷிவம் டுபே 38 பந்தில் 4 பவுண்டரி, ஒரு சிக்சருடன் அரைசதம் அடித்தார். 17-வது ஓவரில் இந்தியாவுக்கு 8 ரன்கள் கிடைத்தது.
18-வது ஓவரின் 2-வது பந்தை சிக்சருக்கும், 3-வது பந்தை பவுண்டரிக்கும் ஷிவம் டுவே விரட்ட இந்தயிா 17.3 ஓவரில் இலக்கை எட்டி 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
டுபே 60 ரன்களுடனும், ரிங்கு சிங் 16 ரன்களுடனும் களத்தில் நின்றனர். இந்த வெற்றியின் மூலம் இந்தியா 3 போட்டிகள் கொண்ட தொடரில் 1-0 என முன்னிலைப் பெற்றுள்ளது.
- ஆப்கானிஸ்தான் கடைசி 2 ஓவர்களில் 28 ரன்கள் விளாசியது.
- முகேஷ் குமார், அக்சர் பட்டேல் ஆகியோர் தலா 2 விக்கெட் வீழ்த்தினர்.
இந்தியா- ஆப்கானிஸ்தான் அணிகளுக்கு இடையிலான முதல் டி20 போட்டி மொகாலியில் நடைபெற்று வருகிறது. டாஸ் வென்ற இந்திய அணி பந்து வீச்சை தேர்வு செய்தது. இந்த அணியில் சஞ்சு சாம்சன், ஜெய்ஸ்வால், ஆவேஷ் கான் ஆகியோர் இடம் பெறவில்லை.
தொடக்க வீரர்களாக களம் இறங்கிய குர்பாஸ், இப்ராஹிம் ஜட்ரன் ஆகியோரால் விரைவாக ரன்கள் சேர்க்க முடியவில்லை. ஆனால் விக்கெட் இழக்காமல் பார்த்துக் கொண்டனர். 8-வது ஓவரின் கடைசி பந்தில்தான் ஆப்கானிஸ்தான் முதல் விக்கெட்டை இழந்தது. 50 ரன்கள் எடுத்திருக்கும்போது குர்பாஸ் 28 பந்தில் 23 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார்.
குர்பாஸ் ஆட்டமிழந்த உடனேயே ஜட்ரனும் ஆட்டமிழந்தார். 9-வது ஓவர் 2-வது பந்தில் 25 ரன் எடுத்த நிலையில் வெளியேறினார். அதன்பின் வந்த ரஹ்மத் ஷா 3 ரன்னில் வெளியேறினார். இதனால் ஆப்கானிஸ்தான் விரைவாக 3 விக்கெட்டுகளை இழந்தது.
4-வது விக்கெட்டுக்கு உமர்ஜாய் உடன் முகமது நபி ஜோடி சேர்ந்தார். இருவரும் சிறப்பாக விளையாடினர். இதனால் ஆப்கானிஸ்தான் ஸ்கோர் 150 ரன்னை நோக்கி சென்றது.
உமர்ஜாய் 22 பந்தில் 29 ரன்கள் எடுத்தும், முகமது நபி 27 பந்தில் 42 ரன்களும் எடுத்து ஆட்டமிழந்தனர். 19-வது ஓவரை வாஷிங்டன் சுந்தர் வீசினார். இந்த ஓவரில் ஆப்கானிஸ்தான் 3 பவுண்டரிகளுடன் 13 ரன்கள் சேர்த்தது.
கடைசி ஓவரை அர்ஷ்தீப் சிங் வீசினார். இந்த ஓவரில் 3 பவுண்டரியுடன் 15 ரன்கள் விளாச மொத்தமாக ஆப்கானிஸ்தான் 5 விக்கெட் இழப்பிற்கு 158 ரன்கள் குவித்தது.
நஜிபுல்லா ஜட்ரன் 11 பந்தில் 19 ரன்களும், கரிம் ஜனத் 5 பந்தில் 9 ரன்களும் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தனர். முகேஷ் குமார், அக்சர் பட்டேல் ஆகியோர் தலா 2 விக்கெட் வீழ்த்தினர்.
- டி20 உலகக் கோப்பை தோல்விக்குப் பிறகு ரோகித் சர்மா முதன்முறையாக டி20-யில் களம் இறங்குகிறார்.
- சஞ்சு சாம்சன் உள்ளிட்ட மூன்று வீரர்கள் இன்று களம் இறங்கவில்லை.
ஆப்கானிஸ்தானுக்கு எதிராக இந்தியா மூன்று போட்டிகள் கொண்ட டி20 கிரிக்கெட் தொடரில் விளையாடுகிறது. முதல் போட்டி இன்று மொகாலியில் நடக்கிறது. போட்டி 7 மணிக்கு தொடங்கும் நிலையில் தற்போது டாஸ் சுண்டப்பட்டது.
இந்திய அணி கேப்டன் ரோகித் சர்மா டாஸ் வென்று பந்து வீச்சை தேர்வு செய்துள்ளார்.
ஜிதேஷ் சர்மா விக்கெட் கீப்பராக செயல்படுகிறார். சஞ்சு சாம்சன், ஆவேஷ் கான், ஜெய்ஸ்வால் ஆகியோர் இன்று களம் இறங்கவில்லை.
இந்திய அணி விவரம்:
1. ரோகித் சர்மா (கேப்டன்), 2. சுப்மன் கில், 3. திலக் வர்மா, 4. ஷிவம் டுபே, 5. ஜிதேஷ் சர்மா (வி.கீப்பர்), 6. ரிங்கி சிங், 7. அக்சர் பட்டேல், 8. வாஷிங்டன் சுந்தர், 9. ரவி பிஷ்னோய், 10. அர்ஷ்தீப் சிங், 11. முகேஷ் குமார்.