என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "கனிமொழி எம்பி"

    • அதிகவிற்கு வேறு வேலை என்பதால் பகுதி நேரமாக ஆருடம் சொல்ல ஆரம்பித்து இருக்கிறார்.
    • நாட்டின் முக்கிய பிரச்சினைகள் குறித்து கேள்வி எழுப்ப வேண்டியது எதிர்க்கட்சிகளின் கடமை.

    வரும் சட்டமன்ற தேர்தலுக்கு பிறகு திமுகவிற்கு வனவாசம் என்று அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கூறியதற்கு திமுக எம்.பி கனிமொழி பதிலடி கொடுத்துள்ளார்.

    இதுகுறித்து செய்தியாளர்கள் கேட்ட கேள்விக்கு அவர் கூறியதாவது:-

    ஜெயக்குமாருக்கு வேறு வேலைக்கு போக முடியவில்லை என்பதாலும், அதிமுகவிற்கு வேறு வேலை என்பதாலும் பகுதி நேரமாக ஆருடம் சொல்ல ஆரம்பித்து இருக்கிறார்.

    அவ்வாறு பார்க்கக்கூடியவர்கள் இப்படி பேசவும் செய்வார்கள். ஒரு பயத்தில் இருந்து வரக்கூடிய கருத்துகள்தான் இது.

    நாடாளுமன்ற கூட்டத் தொடரில், நாட்டின் முக்கிய பிரச்சினைகள் குறித்து கேள்வி எழுப்ப வேண்டியது எதிர்க்கட்சிகளின் கடமை. என்னென்ன பிரச்சினைகள் குறித்து பேசப்படும் என்பது முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவுரையின்படியும், அங்கு இருக்கக்கூடிய மற்ற கட்சிகளிடமும் கலந்து பேசிதான் முடிவு எடுக்க முடியும்.

    இவ்வாறு அவர் குறிப்பிட்டிருந்தார்.

    • பொங்கல் மற்றும் உழவர் திருநாள் அன்று மத்திய அரசின் சிஏ பவுண்டேசன் தேர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ளது.
    • பாராளுமன்ற உறுப்பினர் சு.வெங்கடேசன் மற்றும் அமமுக பொதுச்செயலாளர் டி.டி.வி. தினகரன் ஆகியோர் கண்டனம்.

    ஜனவரி 14-ல் Business laws மற்றும் ஜனவரி 16-ல் Quantitative Apitude தேர்வு நடைபெறுகிறது என்று மத்திய அரசு அறிவித்துள்ளது.

    பொங்கல் மற்றும் உழவர் திருநாள் அன்று மத்திய அரசின் சிஏ பவுண்டேசன் தேர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ளது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

    இதற்கு பாராளுமன்ற உறுப்பினர் சு.வெங்கடேசன் மற்றும் அமமுக பொதுச்செயலாளர் டி.டி.வி. தினகரன் ஆகியோர் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

    தொடர்ந்து திமுக எம்.பி. கனிமொழி கண்டனம் தெரிவித்துள்ளார்.

    இதுகுறித்து, கனிமொழி 'எக்ஸ்' தளத்தில் அவர் வெளியிட்டுள்ள பதிவில் கூறப்பட்டுள்ளதாவது;-

    தமிழ்நாட்டின் கலாசார திருவிழாவான பொங்கல் அன்று சி.ஏ. முதல்நிலை தேர்வுகளை நடத்தும் ஐ.சி.ஏ.ஐ.ன் (ICIA) முடிவு, நமது அடையாளம் மற்றும் பாரம்பரியத்தின் மீதான திட்டமிட்ட தாக்குதலாகும். தமிழ் மரபுகள் மற்றும் பிராந்திய சுயாட்சி மீதான அவர்களின் அலட்சியத்தை இந்த உணர்வில்லாத செயல் பிரதிபலிக்கிறது. தேர்வு தேதியை உடனடியாக ஒத்திவைக்க வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்.

    மத்திய அரசு தமிழர் உணர்வுகளை உண்மையாக மதிக்கும் பட்சத்தில், தேர்வு தேதியை மாற்றியமைக்க ஐ.சி.ஐ.ஏ.வை கட்டுப்படுத்தும் கார்ப்பரேட் விவகார அமைச்சகத்திற்கு உத்தரவிட வேண்டும். நமது கலாசார பன்முகத்தன்மையை குலைக்கும் செயல்களை நிறுத்திவிட்டு, பெரும்பான்மையான தமிழர் உணர்வுகளை மத்திய அரசு மதிக்க வேண்டிய நேரம் இது.

    இவ்வாறு கனிமொழி எம்.பி. தெரிவித்துள்ளார்.

    • லட்சத்தீவு கடற்படையால் கைதான தூத்துக்குடி தருவைக்குளம் மீனவர்கள் 10 பேரை மீட்க கோரிக்கை.
    • குஜராத் அருகே காணாமல் போன மீனவர் அண்ணாதுரையையும் மீட்க நடவடிக்கை.

    திமுக எம்.பி கனிமொழி இன்று மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங்கை நேரில் சந்தித்து பேசினார்.

    அப்போது, லட்சத்தீவு கடற்படையால் கைதான தூத்துக்குடி தருவைக்குளம் மீனவர்கள் 10 பேரையும், குஜராத் அருகே காணாமல் போன மீனவர் அண்ணாதுரையையும் மீட்க நடவடிக்கை எடுக்க கோரி வலியுறுத்தினார்.

    இதுதொடர்பாக மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங்கிடம் கனிமொழி கடிதம் ஒன்றை வழங்கிானர்.

    இதுகுறித்து, கனிமொழி எம்.பி தனது எக்ஸ் தள பக்கத்தில் பதிவு வெளியிட்டுள்ளார்.

    அந்த பதிவில் அவர் கூறியிருப்பதாவது:-

    தூத்துக்குடி மாவட்டம் தருவைக்குளம் பகுதியைச் சேர்ந்த 10 மீனவர்கள் லட்சத்தீவு அருகே கடலோர காவல்படையினரால் கைதுசெய்யப்பட்டுள்ள நிலையில், அவர்களை உடனடியாக விடுவிக்கவும், குஜராத் போர்பந்தர் பகுதியில் மீன்பிடித்துக் கொண்டிருந்த போது காணாமல் போன தூத்துக்குடி அயன்பொம்மையாபுரம் பகுதியைச் சேர்ந்த மீனவர் அண்ணாதுரையை விரைந்து மீட்க நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியும், மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்கை சந்தித்துக் கேட்டுக் கொண்டேன்.

    இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார். 

    • ரெயில்வே சட்டத் திருத்த மசோதா 2024-ன் மீது நடந்த விவாதத்தில் தி.மு.க. எம்.பி. கனிமொழி பேசினார்.
    • அப்போது, சென்னையில் இருந்து தூத்துக்குடிக்கு ரெயில் சேவையை அதிகப்படுத்த வேண்டும் என்றார்.

    சென்னை:

    பாராளுமன்றத்தின் மக்களவையில் நேற்று ரெயில்வே சட்டத் திருத்த மசோதா 2024 மீது விவாதம் நடைபெற்றது. இதில் தி.மு.க. எம்.பி.க்கள் பங்கேற்றனர்.

    அப்போது பேசிய தி.மு.க. எம்.பி. கனிமொழி, சென்னை மற்றும் தூத்துக்குடி இடையே கூடுதல் ரெயில்களை இயக்கவேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளார்.

    இதுதொடர்பாக கனிமொழி வெளியிட்டுள்ள எக்ஸ் வலைதள செய்தியில், பாராளுமன்றத்தில் நேற்று நடைபெற்ற ரெயில்வே சட்டத் திருத்த மசோதா 2024-ன் மீது நடைபெற்ற விவாதத்தில் தெற்கு ரெயில்வே ரெயில்கள் பலவற்றில் அடிப்படை வசதிகள் இல்லாததையும், ரெயில்வே துறையைத் தனியார்மயப்படுத்துவதை எதிர்த்தும் பேசினேன். தமிழ்நாட்டில் சென்னை - தூத்துக்குடி இடையே ரெயில் சேவையை அதிகப்படுத்தவும் மத்திய அரசிடம் வலியுறுத்தினேன் என பதிவிட்டுள்ளார்.

    • டங்ஸ்டன் சுரங்கம் அமைப்பதற்கு எதிராக தனித்தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
    • டங்ஸ்டன் சுரங்கத்திற்கு அனுமதி அளிக்கப்பட்டால் நான் முதலமைச்சர் பதவியில் இருக்க மாட்டேன் என்றார்.

    தமிழக சட்டசபையில் மதுரை அரிட்டாப்பட்டியில் டங்ஸ்டன் சுரங்கம் அமைப்பதற்கு எதிராக தனித்தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

    அப்போது, சட்டசபையில் பேசிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் டங்ஸ்டன் சுரங்கத்திற்கு அனுமதி அளிக்கப்பட்டால் நான் முதலமைச்சர் பதவியில் இருக்க மாட்டேன் என்றார்.

    இந்நிலையில், டங்ஸ்டன் திட்டத்தை அனுமதிக்க மாட்டேன் என முதல்வரின் நிலைப்பாடு மகிழ்ச்சி அளிக்கிறது என கனிமொழி எம்.பி தெரிவித்துள்ளார்.

    இதுகுறித்து கனிமொழி தனது எக்ஸ் தள பதிவில் கூறப்பட்டுள்ளதாவது:-

    மதுரை மாவட்டத்தில் டங்ஸ்டன் சுரங்க அனுமதிக்கு எதிராகத் தமிழ்நாடு சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்றியிருப்பதோடு, தான் முதலமைச்சராக இருக்கும் வரையில் இந்தத் திட்டத்தை அனுமதிக்க மாட்டேன் என தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் திட்டவட்டமாக அறிவித்திருப்பது மகிழ்ச்சியளிக்கிறது.

    இந்த விவகாரத்தில் தற்போது மக்களோடு நிற்பது போல் நாடகமாடும் அதிமுக, நாடாளுமன்றத்தில் "சுரங்கங்கள் மற்றும் கனிமங்கள் திருத்த மசோதா 2023" -க்கு ஆதரவளித்தது ஏன் என்ற கேள்வி எழுகிறது. இதன் மூலம் அதிமுக - வின் இரட்டை வேடம் மக்களிடத்தில் அம்பலமாகியுள்ளது.

    இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.

    • தந்தை பெரியாரின் 51-வது நினைவு தினத்தையொட்டி அவருக்கு அரசியல் தலைவர்கள் மரியாதை செலுத்தி வருகின்றனர்.
    • பெரியாரின் கொள்கைத் தடியை கையிலேந்தி சாதி - மத - ஆதிக்க பிரிவினை சக்திகளை வேரறுப்போம்.

    தந்தை பெரியாரின் 51-வது நினைவு தினத்தையொட்டி அவருக்கு அரசியல் தலைவர்கள் பலர் மரியாதை செலுத்தி வருகின்றனர். அந்த வகையில் திமுக எம்.பி. கனிமொழி எக்ஸ் தளத்தில் பெரியார் குறித்து பதிவிட்டுள்ளார்.

    அதில், திராவிட இனத்தின் எரிதழலாய் - கொள்கைப் பேரொளியாய் - பகுத்தறிவுச் சுடராய் - ஆதிக்க சக்திகளுக்கு சிம்ம சொப்பனமாய் - சமரசமற்ற போர்க்குரலாய், என்றென்றும் தமிழ்நாட்டின் அரணாய் காத்து நிற்கும் தன்னிகரற்ற தலைவர் தந்தை பெரியார் அவர்களின் நினைவு தினம் இன்று.

    அவரது கொள்கைத் தடியை கையிலேந்தி சாதி - மத - ஆதிக்க பிரிவினை சக்திகளை வேரறுப்போம், சமத்துவ சமூகம் படைப்போம்.

    • ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீதான விவாதித்தற்காக பாராளுமன்றம் இன்று கூடியது.
    • மக்களவையில் குடியரசுத் தலைவர் உரை மீது நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீதான விவாதத்தில் எம்.பி.க்கள் பேசினர்.

    பாராளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் கடந்த 31-ந் தேதி தொடங்கியது. நடப்பாண்டின் முதல் கூட்டத்தொடர் என்பதால் ஜனாதிபதி திரவுபதி முர்மு அன்று கூட்டுக் கூட்டத்தில் உரையாற்றினார்.

    அதை தொடர்ந்து ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீதான விவாதித்தற்காக பாராளுமன்றம் இன்று கூடியது.

    மக்களவையில் குடியரசுத் தலைவர் உரை மீது நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீதான விவாதத்தில் எம்.பி.க்கள் பேசினர்.

    அப்போது, கனிமொழி எம்.பி கூறியதாவது:-

    இந்தியாவின் வரலாற்றைப் பற்றி நீங்கள் பேசும்போது 3,000 ஆண்டுகளுக்கு முந்தைய வேத காலத்தைப் பற்றி பேசுகிறீர்கள். ஆனால், இந்தியாவில் இரும்பின் பயன்பாடு 5,300 ஆண்டுகளுக்கு முன்பு தமிழகத்தில் இருந்து தொடங்கியது என்று ஆய்வு முடிவுகள் அறிவியல் பூர்வமாக வெளியாகியுள்ளது.

    தூத்துக்குடி மாவட்டம் சிவகளையில் இது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இந்த பெருமைக்குரிய அறிவிப்பை முதல்வர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டார். ஆனால், இந்த கண்டுபிடிப்பு குறித்து இன்றுவரை ஒன்றிய அரசு வாய்த்திறக்கவில்லை.

    இந்தியாவில் இருக்கும் ஒவ்வொரு இஸ்லாமியரும், நாட்டின் குடிமகன் என சமமாக உணர வேண்டும்.

    சர்தார் வல்லபாய் பட்டேலுக்கு 3,000 கோடியில் சிலை வைப்பது அவருக்கு மரியாதை செலுத்துவதாக அமையாது.

    பட்டேலின் வார்த்தையை புரிந்து கொண்டு அதை நடைமுறைப்படுத்துவது தான் அவருக்கு செலுத்தும் உண்மையான அஞ்சலி.

    சிறுபான்மையினர் எந்த விதத்திலும் சவுகரியமாக உணரக்கூடாது என்பதை ஒவ்வொரு நடவடிக்கையிலும் மத்திய அரசு உறுதி செய்து வருகிறது.

    குடியுரிமை திருத்தச் சட்டம், முத்தலாக் தடை சட்டம், வக்பு சட்டம் போன்றவை இதற்கு உதாரணம்.

    பாஜக ஆட்சியில் இருக்கும் மாநிலங்களில் லவ் ஜிகாத் என்கிற புதிய வார்த்தையை கொண்டு வருகிறீர்கள்.

    பெரும்பாலான பாஜக ஆளும் மாநிலங்களில் சிறுபான்மையினர் மீது தாக்குதல் நடத்தப்படுகிறது.

    சிறுபான்மையினர் மீதான தாக்குதல்களை காவல் தறையினர் வேடிக்கை பார்க்கின்றனர். எந்த ஒரு ஆட்சேப குரல் எழுந்தாலும், தேச விரோதம் என ஒதுக்கப்படுகிறார்.

    உத்தரபிரதேச மாநிலத்தில் நடந்து வரும் கும்பமேளாவில் உயிரிழந்த மக்களுக்கு எனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக்கொள்கிறேன்.

    மத்திய அரசும், மாநில அரசும் தங்களை பாதுகாக்கும் என்ற நம்பிக்கையில் கும்பமேளாவில் மக்கள் பங்கேற்றனர். மதமும் அரசியலும் கலக்கப்படும்போது அப்பாவி மக்கள்தான் துயரத்துக்கு உள்ளாக்கப்படுகின்றனர்.

    கும்பமேளா நெரிசலில் சிக்கி எத்தனை பேர் உயிரிழந்தனர் என்பது கூட தெரியவில்லை. கும்பமேளா நெரிசல் குறித்து விவாதம் நடத்தக் கூட மத்திய அரசு அனுமதிக்கவில்லை என தெரிவித்தார். ஒருவேளை டெல்லி தேர்தல் முடிந்தவுடன் அறிவிப்பார்களோ? இது ஒரு மனிதாபிமானமற்ற செயலல்லவா?

    இவ்வாறு அவர் கூறினார்.

    • மனித உயிரிழப்புகளுக்கு காரணமாக இருந்த பிரேன் சிங் முதலமைச்சர் பதவியிலிருந்து விலகியுள்ளார்.
    • மணிப்பூரில் ஏற்பட்ட இனக்கலவரத்தால் 220க்கும் மேற்பட்ட உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளன.

    மணிப்பூரில் நடந்த இனக்கலவரத்திற்கு பிரதமர் மோடியும், மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவும் பொறுப்பேற்க வேண்டும் என்று திமுக எம்.பி கனிமொழி வலியுறுத்தியுள்ளார்.

    இது தொடர்பாக கனிமொழி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:-

    கடந்த இரண்டு ஆண்டுகாலமாக மணிப்பூரில் கும்பல் வன்முறைகளைத் தூண்டிவிட்டு, ஏராளமான மனித உயிரிழப்புகளுக்கு காரணமாக இருந்த பிரேன் சிங் முதலமைச்சர் பதவியிலிருந்து விலகியுள்ளார்.

    குறிப்பாக மணிப்பூர் கலவரத்தைக் கட்டுப்படுத்த வேண்டிய பொறுப்புள்ள முதலமைச்சர், அதற்கு மாறாக கும்பல் வன்முறையைத் தூண்டிவிட்டு நடத்தினார் என்பதற்கான சாட்சியங்கள் உச்சநீதிமன்ற விசாரணையில் வெளிப்பட்டுள்ளன.

    சிறுபான்மைப் பிரிவினர் மீது வெறுப்புணர்வோடு பேசிய ஒலிப்பதிவு அம்பலப்பட்டு, அதன் உண்மைத்தன்மை வெளிப்பட்டுள்ள நிலையில் பிரேன்சிங் பதவி விலக வேண்டிய நிர்பந்தம் ஏற்பட்டது.

    பிரேன் சிங் முதல்வராக தொடர எதிர்ப்பு தெரிவித்து பாஜக கூட்டணி கட்சியினரும் காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்கட்சிகளும் தந்த அழுத்தமும் இந்த பதவிவிலகலுக்கு காரணமாகியிருக்கின்றன.

    மணிப்பூர் கலவரங்கள் தொடங்கியது முதலே பிரேன் சிங் பதவி விலக வேண்டும், மோடியும் அமித்சாவும் மணிப்பூரில் இயல்புநிலை திரும்ப நடவடிக்கை எடுக்க வேண்டும் என எதிர்க்கட்சிகள் வைத்த கோரிக்கைகள் புறந்தள்ளப்பட்டன. மணிப்பூர் மக்கள் மிகப்பெரிய துயரத்திற்கு ஆளாகி வந்தார்கள். தற்போதும் நிலை மேம்பட்டதாகத் தெரியவில்லை.

    மணிப்பூரில் ஏற்பட்ட இனக்கலவரத்தால் 220க்கும் மேற்பட்ட உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளன, 60,000 க்கு மேற்பட்ட மக்கள் மாநிலத்தை விட்டு புலம்பெயர்ந்த அவலம் ஏற்பட்டது.

    அரசின் நிவராண முகாம்களில் தங்கியிருந்தவர்கள் கடத்தப்பட்டு கொல்லப்பட்டார்கள், பெண்கள் பாலியல் வன்முறைகளுக்கு ஆளானார்கள். அரசின் ஆதரவிலும் பாராமுகத்திலும்தான் இந்த கொடுமைகள் அரங்கேற்றப்பட்டன.

    அப்போதும் ஒன்றிய பாஜக அரசும், மணிப்பூர் பாஜக முதல்வர் பிரேன் சிங்கும் வேடிக்கைத்தான் பார்த்தார்கள். மக்களை பிளவுபடுத்தி அவர்களின் மரணத்தின் மீது ஆட்சிசெய்யும் பாஜகவின் பாசிச அரசியலுக்கு மணிப்பூரே சாட்சி.

    பிரேன் சிங் மட்டுமல்ல அவரை பாதுகாத்து கலவரத்தை கட்டுப்படுத்த தவறிய பிரதமர் மோடியும் உள்துறை அமைச்சர் அமித்சாவும் இதற்கு பொறுப்பேற்க வேண்டும்.

    அடுத்து யார் முதல்வராக பதவி ஏற்றாலும் அவர்கள் அந்த மாநிலத்தில் மீண்டும் அமைதி திரும்புவதை உறுதி செய்ய வேண்டும்.

    இனியாவது பாஜக அரசு திருந்தி மணிப்பூர் மக்களிடம் அமைதியும் நிம்மதியும் ஏற்படுத்த முயற்சி செய்ய வேண்டும். மணிப்பூரில் நிகழ்ந்த, நிகழ்ந்து கொண்டிருக்கும் சம்பவங்களை விசாரிக்க நடுநிலையான ஆன தனி ஆணையத்தை அமைக்க வேண்டும்.

    இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.

    • தொகுதி மறுவரையறை பற்றி மத்திய அரசுதான் தெளிவுபடுத்த முடியும் என அண்ணாமலை கூறியிருந்தார்.
    • தொகுதி மறுவரையரை நடக்கும் என்பதை மத்திய அரசு உறுதிப்படுத்த வேண்டும்.

    தொகுதி மறுவரையறை தொடர்பான அமித்ஷாவின் கருத்தில் தெளிவு தேவை என கனிமொழி எம்.பி தெரிவித்துள்ளார். தொகுதி மறுவரையறை பற்றி மத்திய அரசுதான் தெளிவுபடுத்த முடியும் என அண்ணாமலை கூறியிருந்தார்.

    தமிழ்நாடு பாஜக தலைவரும் மத்திய அரசால் மட்டுமே தெளிவுபடுத்த முடியும் என கனிமொழி எம்.பி. தெரிவித்துள்ளார்.

    இதுகுறித்து கனிமொழி எம்.பி மேலும் கூறியிருப்பதாவது:-

    தொகுதி மறுவரையறையால் தமிழ்நாடு எந்த நாடாளுமன்ற தொகுதிகளையும் இழக்காது என அமித்ஷா கூறுகிறார்.

    Pro rata அடிப்படையில் தொகுதி மறுவரையறை நடக்கும் எனக் கூறுகிறார். தமிழ்நாட்டில் உள்ள பாஜக தலைவர்களுக்கே அதற்கு அர்த்தம் தெரியவில்லை.

    எந்த அடிப்படையில் தொகுதி மறுவரையரை நடக்கும் என்பதை மத்திய அரசு உறுதிப்படுத்த வேண்டும்.

    மக்கள்தொகை அடிப்படையில் இது நடந்தால், இத்தனை ஆண்டுகளாக பல நடவடிக்கைகளை மேற்கொண்டு, மக்கள் தொகையை கட்டுப்படுத்திய மாநிலங்களின் பிரிநிதித்துவம் குறையும்.

    அதேசமயம் மக்கள்தொகையை பொருட்படுத்தாத மாநிலங்களுக்கு அதிக தொகுதிகள் கிடைக்கும். பாஜகவின் சொந்த அரசியலுக்காக, மக்கள் தொகையை கட்டுப்படுத்திய மாநிலங்களை தண்டிக்கக்கூடாது.

    இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.

    ×