என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "காலிறுதி"
- தகுதி சுற்றுக்குத் தகுதி பெறுவதற்காக இன்று நடந்த ரெபகேஜ் [repechage] சுற்றில் விளையாடினார்.
- இன்று நடந்த போட்டியில் தொடக்கத்தில் பன்வார் பன்வார் முன்னிலையில் இருந்தார்
ஒலிம்பிக் ஜோதி ஏற்றத்துடன் பாரிஸ் ஒலிம்பிக் போட்டிகள் நேற்று தொடங்கியுள்ளது. கொண்டாட்டங்களுக்கு களைகட்டிய நிலையில் தற்போது போட்டிகளில் வீரர்களும் ரசிகர்களும் மும்முரமாகியுள்ளனர்.
மொத்தமாக 32 விளையாட்டுகளைக் கொண்ட இந்த பாரிஸ் 2024 ஒலிம்பிக் தொடரில் 329 போட்டிகள் நடத்தப்படுகிறது. இந்தியா சார்பில் 16 விளையாட்டுகளில் 117 வீரர்கள் கலந்து கொள்கின்றனர்.
இந்த நிலையில் முதலாவது நாளான இன்று நடைபெற்ற துடுப்புப்படகு போட்டியான ரோவிங் போட்டியில் இந்திய வீரர் பல்ராஜ் பன்வார் 7:07:11 நிமிடங்களில் இலக்கை கடந்து 4 ஆவது இடம் பிடித்தார்.
4 வது இடம் பிடித்ததால் தகுதி சுற்றுக்கான வாய்ப்பை இந்திய வீரர் பல்ராஜ் பன்வார் இழந்துள்ள நிலையில் தகுதி சுற்றுக்குத் தகுதி பெறுவதற்காக இன்று நடந்த ரெபகேஜ் [repechage] சுற்றில் விளையாடினார்.
இந்த போட்டியில், 7:12.41 நிமிடங்களில் இலக்கை கடந்து 2 வது இடம் பிடித்து காலிறுதிக்கு முன்னேறினார் பல்ராஜ் பன்வார். ஆட்டத்தின் தொடக்கத்தில் இருந்து பன்வார் முன்னிலையில் இருந்தபோதிலும் இறுதிக்கட்டத்தில் மொனாக்கோ வீரர் குவென்டின் அடோஃனெல்லி [Quentin Antognelli] அவரை முந்தியதால் இரண்டாம் இடத்திற்கு பன்வார் சென்றார். இதனைத்தொடர்ந்தே மொனாக்கோ மற்றும் இந்தியா காலிறுதிக்கு முன்னேறியுள்ளது.
அரியானா மாநிலத்தைச் சேர்ந்த 25 வயதாகும் பல்ராஜ் பன்வார் ஆசிய விளையாட்டு போட்டிகள் உட்பட பல்வேறு போட்டிகளில் பங்கேற்றவர் என்பது குறிப்பிடத்தக்கது.
- ஆடவர் அணிகளுக்கான தகுதி சுற்று போட்டிகள் இன்று நடைபெற்றது.
- இதில் இந்திய அணியில் தீரஜ் , தருந்தீப் ராய், பிரவீன் ஜாதவ் ஆகியோர் இடம் பெற்றனர்.
பாரீஸ்:
33-வது ஒலிம்பிக் போட்டி பிரான்ஸ் தலைநகர் பாரீசில் நாளை கோலாகலமாக தொடங்குகிறது. இதன் தொடக்க விழா சென் நதியில் இந்திய நேரப்படி நாளை இரவு 11 மணிக்கு அரங்கேறுகிறது. ஒலிம்பிக் திருவிழா அதிகாரபூர்வமாக தொடங்கும் முன்பே சில போட்டிகள் நடைபெறுவது வழக்கமாகும்.
அந்த வகையில் வில்வித்தை தகுதி சுற்று போட்டிகள் தற்போது நடைபெற்று வருகிறது. இதில் ஆடவர் அணிகளுக்கான தகுதி சுற்று போட்டிகள் நடைபெற்றது. இதில் இந்திய அணியில் தீரஜ் , தருந்தீப் ராய், பிரவீன் ஜாதவ் ஆகியோர் இடம் பெற்றனர்.
12 அணிகள் கலந்துகொண்ட இந்த போட்டியில் சிறப்பாக விளையாடி இந்திய அணி 2013 புள்ளிகளைப் பெற்றது. இதனால் 3-வது இடத்தை பிடித்த இந்திய அணி காலிறுதி சுற்றுக்கு முன்னேறியது. தென் கொரியா அணி 2049 புள்ளிகளுடன் முதலிடத்தையும் , பிரான்ஸ் 2025 புள்ளிகளுடன் 2-வது இடத்தையும் , சீனா 1998 புள்ளிகளுடன் 4-வது இடத்தையும் பிடித்து காலிறுதிக்கு தகுதி பெற்றன.
மகளிர் அணிகளுக்கான தகுதி சுற்று போட்டிகளில் இந்திய அணியில் அங்கிதா பகத், பஜன் கவுர் தீபிகா குமாரி ஆகியோர் இடம் பெற்றனர். 12 அணிகள் கலந்துகொண்ட இந்த போட்டியில் சிறப்பாக விளையாடி இந்திய அணி 1983 புள்ளிகளைப் பெற்று 4-வது இடத்தை பிடித்த இந்திய அணி காலிறுதி சுற்றுக்கு முன்னேறியது.
- இந்த ஆட்டத்தின் முதல் செட்டை 6-3 என்ற புள்ளிக்கணக்கில் ரைபகினா கைப்பற்றினார்.
- வரும் 10-ம் தேதி நடைபெறும் காலிறுதி ஆட்டத்தில் எலினா ரைபகினா, உக்ரைனின் எலினா ஸ்விடோலினா உடன் மோத உள்ளார்.
லண்டன்:
விம்பிள்டன் டென்னிஸ் போட்டி லண்டனில் நடந்து வருகிறது. இந்த தொடரில் இன்று நடைபெற்ற பெண்கள் ஒற்றையர் பிரிவின் ரவுண்ட் ஆப் 16 சுற்று ஆட்டம் ஒன்றில் முன்னணி வீராங்கனையான கஜகஸ்தானின் எலினா ரைபகினா, ரஷியாவின் அன்னா கலின்ஸ்காயாவை எதிர்கொண்டார்.
இந்த ஆட்டத்தின் முதல் செட்டை 6-3 என்ற புள்ளிக்கணக்கில் ரைபகினா கைப்பற்றினார். தொடர்ந்து நடைபெற்ற 2-வது செட்டில் ரைபகினா 3-0 என முன்னிலையில் இருந்த போது அன்னா கலின்ஸ்காயா காயம் காரணமாக போட்டியில் இருந்து வெளியேறினார்.
இதன் காரணமாக கஜகஸ்தானின் எலினா ரைபகினா காலிறுதிக்கு முன்னேறினார். வரும் 10-ம் தேதி நடைபெறும் காலிறுதி ஆட்டத்தில் எலினா ரைபகினா, உக்ரைனின் எலினா ஸ்விடோலினா உடன் மோத உள்ளார்.
- அணியின் தோல்வியுடன் ரொனால்டோ வெளியேறியுள்ளது அவரது ரசிகர்களுக்கு பெருத்த ஏமாற்றமாக அமைந்தது.
- எங்களுக்காக , நம் ஒவ்வொருவருக்காக, போர்ச்சுகளுக்காக.. நீங்கள் எங்களுக்கு கொடுத்த அனைத்துக்கும் நாங்கள் நன்றியுள்ளவர்களாக உள்ளோம்.
ஜெர்மனியில் 2024 ஆம் ஆண்டுகான யூரோ கால்பந்து கோப்பை தொடர் விறுவிறுப்பாக நடந்து வரும் நிலையில் கால்பந்துலகின் ஜாம்பவானான கிறிஸ்டியானோ ரொனால்டோவின் போர்ச்சுகள் அணி நேற்று முன் தினம் பிரான்ஸுடன் காலிறுதியில் மோதியது. இந்த போட்டியில் 120 நிமிடங்கள் வரை யாரும் கோல் அடிக்காததால் பெனால்டி மூலம் வெற்றியை தீர்மானிக்க முடிவெடுக்கப்பட்டது.
பெனால்டியில் ரொனால்டோவின் 1 கோலையும் சேர்த்து மொத்தம் 3 கோல்களை மட்டுமே போர்ச்சுகல் அடித்த நிலையில் பிரான்ஸ் 5 பெனால்டி கோல்களை விளாசி போர்ச்சுகலை வீழ்த்தி அரையிறுதிக்கு முன்னேறியது. மைதானத்தில் மிகுந்த உணர்ச்சி வசப்பட்டு காணப்பட்ட ரொனால்டோ தோல்வியால் அழுத்த பெபேவை தேற்றினார். முன்னதாக காலிறுதிக்கு முந்தைய ரவுண்ட் ஆஃப் சுற்றில் ஸ்லோவேனியாவுடன் போர்ச்சுகல் மோதும் போட்டியில் கோல் ஒன்றை தவறவிட்டதற்காக ரொனால்டோ கதறி அழுத வீடியோ அனைவரையும் கண்கலங்க செய்தது.
இந்த வருட தொடருடன் யூரோ சாம்பியன்ஷிப் போட்டிகளில் இருந்து விலகுவதாக ரொனால்டோ அறிவித்திருந்த நிலையில் அணியின் தோல்வியுடன் ரொனால்டோ வெளியேறியுள்ளது அவரது ரசிகர்களுக்கு பெருத்த ஏமாற்றமாக அமைந்தது. இந்நிலையில் தோல்வி குறித்து ரொனால்டோ தற்போது மனம் திறந்துளார்.
அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில், 'போர்ச்சுகலின் பெருமையை வருங்காலங்களில் உயர்த்தும் பணி தொடரும். [இந்த தொடரை பொறுத்தவரை] நாங்கள் அதிகமாக எதிர்பார்த்தோம், நாங்கள் இன்னும் அதிகமானவைக்கு தகுதியுடவர்கள்.
எங்களுக்காக , நம் ஒவ்வொருவருக்காக, போர்ச்சுகளுக்காக. நீங்கள் எங்களுக்கு கொடுத்த அனைத்துக்கும் நாங்கள் நன்றியுள்ளவர்களாக உள்ளோம். நாங்கள் இதுவரை செய்த சாதனைகள் அனைத்துக்கும் நீங்கள் அளித்த ஆதரவு தான் காரணம் மைதானத்துக்கும் உள்ளேயும், வெளியேயும் இந்த பெருமை தொடரும். ஒன்றாக இணைந்து தொடர்ந்து அதைக் கட்டி எழுப்புவோம்' என்று தெரிவித்துள்ளார்.
- 120 நிமிடங்கள் நீடித்த ஆட்டத்தில் 2 அணிகளிலும் ஒரு கோல் கூட அடிக்கவில்லை
- கிறிஸ்டியானோ ரொனால்டோவிற்கு இது கடைசி யூரோ சாம்பியன்ஷிப் தொடர் ஆகும்
யூரோ சாம்பியன்ஷிப் கால்பந்து போட்டிகள் ஜெர்மனியின் ஹாம்பெர்க் நகரில் வைத்து அனல் தெறிக்க நடந்து வரும் நிலையில் பிரான்ஸ் மற்றும் போர்ச்சுகல் அணிகள் நேற்று நடந்த காலிறுதியில் பலப் பரீட்ச்சை செய்தன. 120 நிமிடங்கள் நீடித்த ஆட்டத்தில் 2 அணிகளிலும் ஒரு கோல் கூட அடிக்காததால் வெற்றியை பெனால்டி மூலம் தீர்மானிக்க முடிவெடுக்கப்பட்டது.
பெனால்டி ஆட்டத்தில் போர்ச்சுகல் கேப்டன் கிறிஸ்டியானோ ரொனால்டோ, பெர்னார்டோ சிலவா, நினா மெண்டிஸ் ஆகோயோர் தலா ஒரு கோல் அடித்தனர். ஆனால் பிரான்ஸ் 5 பெனால்டி கோல்களை விளாசி 5-3 என்ற பெனால்டி கோல் கணக்கில் போர்ச்சுகலை வீழ்த்தி அரையிறுதிக்கு முன்னேறியுள்ளது. அரையிறுதியில் ஸ்பெயினுடன் பிரான்ஸ் மோத உள்ளது.
நட்சத்திர வீரர் கிறிஸ்டியானோ ரொனால்டோவிற்கு இது கடைசி யூரோ சாம்பியன்ஷிப் தொடர் என்பதால் போர்ச்சுகல் தொடரில் இருந்து தற்போது வெளியேறியுள்ளது மிகவும் வலி மிகுந்ததாக இருந்தது. மைதானத்தில் உணர்ச்சி வயப்பட்டு காணப்பட்டார். தோல்வியால் அழுத்த பெபேவுக்கு ஆறுதல் கூறினார். முன்னதாக இந்த தொடரோடு யூரோ போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக ரொனால்டோ அறிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.
- டேனி ஆல்மோ ஆட்டத்தின் முதல் பாதியில் ஸ்பெயினை முன்னிலைக்கு கொண்டுவந்தார்.
- மிகெல் மெரினோ தலையால் முட்டி அடித்த அதிரடி கோல் அந்த அணியின் வெற்றிக்கு அச்சாரமானது.
யூரோ சாம்பியன்ஷிப் கால்பந்து போட்டிகள் நடந்து வரும் நிலையில் ஸ்பெயின் மற்றும் ஜெர்மன் அணிகளுக்கு இடையிலான நேற்றைய காலிறுதி போட்டியில் 2-1 என்ற கோல் கணக்கில் ஜெர்மனியை வீழ்த்தி ஸ்பெயின் அரையிறுதிக்கு முன்னேறியுள்ளது.
விறுவிறுப்பாக தொடங்கிய போட்டியின் 51 ஆவது நிமிடத்தில் கோல் ஒன்றைஅடித்து ஸ்பெயின் வீரர் டேனி ஆல்மோ ஆட்டத்தின் முதல் பாதியில் ஸ்பெயினை முன்னிலைக்கு கொண்டுவந்தார்.
பின் ஆட்டத்தின் மறு பாதியில் 89 வது நிமிடத்தில் ஜெர்மன் அணி வீரர் ஃபுளோரியன் ரிட்ஸ் அணியின் முதல் கோலை பதிவு செய்தார். 90 நிமிடங்கள் முடிவில் இரண்டு அணிகளும் 1-1 என்ற கோல் கணக்கில் இருந்ததால் ஆட்டம் கூடுதல் நேரம் நீடித்தது.
இறுதியாக ஆட்டம் முடிய 1 நிமிடம் மட்டுமே இருந்த தருவாயில் ஸ்பெயின் வீரர் மிகெல் மெரினோ தலையால் முட்டி அடித்த அதிரடி கோல் அந்த அணியின் வெற்றிக்கு அச்சாரமானது. இதைதொடர்ந்து அரையிறுதியில் பிரான்ஸ் அணியுடன் ஸ்பெயின் அணி பலப்பரீச்சை செய்ய உள்ளது.
- 7 ஆண்டுகளுக்குப் பிறகு காலிறுதி சுற்றுக்குத் தமிழ்நாடு அணி தகுதி பெற்றுள்ளது.
- 7 ஆட்டங்களில் ஒரு தோல்வி, 4 வெற்றிகளுடன் 28 புள்ளிகள் எடுத்து ‘சி’ பிரிவில் முதலிடத்தில் உள்ளது தமிழக அணி
ரஞ்சி கோப்பைப் போட்டியில் பஞ்சாப் அணிக்கு எதிராக நடைபெற்ற போட்டியில் வெற்றி பெற்ற இந்திய அணி காலிறுதிக்கு முன்னேறியது. இந்த வெற்றியின் மூலம், 7 ஆண்டுகளுக்குப் பிறகு காலிறுதி சுற்றுக்குத் தமிழ்நாடு அணி தகுதி பெற்றுள்ளது.
சேலத்தில் நடைபெற்ற தனது கடைசி லீக் ஆட்டத்தில் பஞ்சாப் அணியுடன் தமிழக அணி மோதியது. இந்த ஆட்டத்தில் 9 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் தமிழ்நாடு வெற்றி பெற்றது.
இப்போட்டியில், முதல் இன்னிங்ஸில் தமிழக அணி 435 ரன்கள் குவித்தது. அதிகபட்சமாக இந்திரஜித் 187 ரன்களும், விஜய் சங்கர் 130 ரன்களும் அடித்தனர். இதைத் தொடர்ந்து ஆடிய பஞ்சாப் அணி முதல் இன்னிங்ஸில் 274 ரன்கள் எடுத்தது. அதிகபட்சமாக அன்மோல் மல்ஹோத்ரா 64 ரன்கள் எடுத்தார். தமிழக அணியின் அஜித் ராம் 6 விக்கெட்டுகளை வீழ்த்தினார். இதைத் தொடர்ந்து பஞ்சாப் அணிக்கு ஃபாலோ ஆன் வழங்கப்பட்டது.
2-வது இன்னிங்ஸை தொடங்கிய பஞ்சாப் அணி 231 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. அதிகபட்சமாக நேஹல் வதேரா 109 ரன்களை குவித்தார். தமிழக அணி தரப்பில் அதிகபட்சமாக சாய் கிஷோர் 4 விக்கெட்டுகளை வீழ்த்தினார். இதன் பிறகு தமிழக அணிக்கு 71 ரன்கள் வெற்றி இலக்காக நிர்ணயிக்கப்பட்டது. தொடர்ந்து 2-வது இன்னிங்ஸை தொடங்கிய தமிழக அணி 7 ஓவர்களில் இந்த இலக்கை எட்டி, 9 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
இந்த வெற்றியின் மூலம் 7 ஆட்டங்களில் ஒரு தோல்வி, 4 வெற்றிகளுடன் 28 புள்ளிகள் எடுத்து 'சி' பிரிவில் முதலிடத்தில் உள்ளது தமிழக அணி. இன்னும் ஒரு சில அணிகள் தங்களின் கடைசி லீக் ஆட்டங்களில் விளையாடி வருவதால், அதன் முடிவுகளை பொறுத்தே காலிறுதி போட்டிக்கான அட்டவணை அமையும்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்