search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "பாராளுமன்ற தேர்தல"

    • 2021-ல் பிரதமராக பொறுப்பேற்ற புமியோ கிஷிடா 3 ஆண்டுகளே பதவியில் இருந்தார்.
    • ஜப்பானின் புதிய பிரதமராக ஷிகெரு இஷிபா வெற்றி பெற்று பதவியேற்றார்.

    டோக்கியோ:

    ஜப்பான் பிரதமராக பதவி வகித்து வந்த புமியோ கிஷிடா மீது ஊழல் குற்றச்சாட்டு சுமத்தப்பட்டது. இதனால் அவர் சமீபத்தில் ராஜினாமா செய்தார். புமியோ கிஷிடா 2021-ல் பிரதமராக பொறுப்பேற்று, 3 ஆண்டுகளே பதவியில் இருந்தார்.

    இதையடுத்து, புதிய பிரதமரை தேர்ந்தெடுக்க வேண்டிய கட்டாயம் ஆளுங்கட்சிக்கு ஏற்பட்டது. பிரதமர் பதவிக்கு, அதாவது கட்சி தலைவர் பதவிக்கு 9 பேர் போட்டியிட்டனர். இதற்கான வாக்கெடுப்பு கடந்த 1-ம் தேதி நடந்தது. இதில் ஷிகெரு இஷிபா (67) வெற்றி பெற்று பிரதமராக பதவியேற்றார்.

    அப்போது, விரைவில் பாராளுமன்றத்தை கலைத்துவிட்டு முன்கூட்டியே தேர்தலை நடத்த முடிவுசெய்தார். வரும் 27-ம் தேதி தேர்தலை நடத்த உள்ளதாக கூறியிருந்தார்.

    இந்நிலையில், ஜப்பான் பாராளுமன்றத்தை (கீழ்சபை) கலைத்து பிரதமர் ஷிகெரு இஷிபா உத்தரவிட்டார். திட்டமிட்டபடி வரும் 27-ம் தேதி தேர்தலை நடத்த தயாராகி வருகிறார்.

    தற்போதைய ஆட்சிக்கு மக்களின் ஆதரவு மற்றும் அங்கீகாரத்தை பெற நாங்கள் நேர்மையாக செயல்படுவோம் என இஷிபா, தெரிவித்தார்.

    பாராளுமன்றம் கலைக்கப்பட்டாலும் தேர்தல் முடிந்து புதிய அரசு அமையும் வரை பதவியில் இஷிபாவும், அவரது அமைச்சரவையும் பதவியில் நீடிப்பார்கள்.

    அதேசமயம், அவசர அவசரமாக தேர்தலை நடத்தும் பிரதமரின் முடிவை எதிர்க்கட்சித் தலைவர்கள் விமர்சித்து வருகின்றனர்.

    • ஒடிசாவின் பூரி நகரில் நடந்த தேர்தல் பிரசார பொதுக்கூட்டத்தில் உள்துறை மந்திரி பங்கேற்றார்.
    • தமிழகத்தைச் சேர்ந்த ஒருவர் ஒடிசாவை ஆட்சி செய்வதா என கேள்வி எழுப்பினார்.

    புவனேஷ்வர்:

    ஒடிசா மாநிலத்தின் பூரி நகரில் நடைபெற்ற தேர்தல் பிரசார பொதுக்கூட்டத்தில் உள்துறை மந்திரி அமித் ஷா கலந்துகொண்டார். அப்போது அவர் பேசியதாவது:

    இந்தத் தேர்தல் மோடியை மூன்றாவது முறையாக பிரதமர் ஆக்குவதற்கான தேர்தல். இந்தத் தேர்தல் ஜெகந்நாதரின் பெருமையையும் சுயமரியாதையையும் மீண்டும் நிலைநாட்டுவதற்கான தேர்தல்.

    நாட்டிலேயே மிகவும் வளமான, கனிம வளம் நிறைந்த மாநிலமாக ஒடிசா இருப்பினும் மக்கள் ஏழைகளாக இருக்கிறார்கள். மக்களின் ஏழ்மையைப் போக்க வேண்டுமானால் பிரதமர் மோடிக்கு வாக்களித்து அவரை மீண்டும் பிரதமராக்க வேண்டும்.

    நவீன் பட்நாயக்குக்கு நீங்கள் 25 ஆண்டுகள் கொடுத்தீர்கள். 25 ஆண்டு கால அவரது ஆட்சியில் சுகாதாரம், கல்வி, உள்கட்டமைப்பு என அனைத்தும் தடம் புரண்டுள்ளன. நவீன் பாபுவின் அரசு போலி அரசு.

    பிரதமர் மோடி ஒவ்வொரு மாதமும் ஏழைகளுக்கு 5 கிலோ இலவச உணவு தானியங்களை வழங்குகிறார். நவீன் பாபு, அதன் மீது தனது ஸ்டிக்கரை ஒட்டி ஏழைகளுக்கு வழங்குகிறார்.

    தேர்தல் அறிக்கையில் தெரிவித்துள்ளபடி ஒடிசாவில் உள்ள ஒவ்வொரு பெண்ணுக்கும் 2 ஆண்டுகளில் ரூ.50,000 வழங்கப்படும். முதியவர்கள், மாற்றுத்திறனாளிகள் மற்றும் விதவைகளுக்கு மாதம் ரூ.3,000 வழங்கப்படும். மீனவர்களுக்கு ஆண்டுக்கு ரூ.10,000 வழங்கப்படும். 1.5 லட்சம் இளைஞர்களுக்கு அரசு வேலை வழங்கப்படும்.

    ஒடிசா சட்டசபை தேர்தலில் வெற்றி பெற்று ஆட்சி அமைக்க 75 இடங்களில் பா.ஜ.க.வை வெற்றிபெறச் செய்ய வேண்டும். ஒடிசாவில் தமிழகத்தைச் சேர்ந்த ஒருவர் ஆட்சி அமைக்க முடியுமா? ஒடிசாவின் முதல் மந்திரியாக வரக்கூடியவர், ஒடியா மண்ணைச் சேர்ந்தவராகவும், ஒடியா மொழி பேசக் கூடியவராகவும் இருக்கவேண்டும் என தெரிவித்தார்.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • கிருஷ்ணா நகரில் பா.ஜ.க. சார்பில் ஏற்பாடு செய்யப்பட்ட பொதுக்கூட்டத்தில் பிரதமர் மோடி பங்கேற்றார்.
    • வங்காளத்தின் வளர்ச்சிக்கு திரிணாமுல் காங்கிரஸ் முன்னுரிமை அளிப்பதில்லை என்றார்.

    கொல்கத்தா:

    பிரதமர் மோடி மேற்கு வங்காளத்தில் சுற்றுப்பயணம் செய்து தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வருகிறார்.

    இந்நிலையில், நாடியா மாவட்டத்தில் உள்ள கிருஷ்ணா நகரில் பா.ஜ.க. சார்பில் ஏற்பாடு செய்யப்பட்ட பொதுக்கூட்டத்தில் பிரதமர்

    மோடி பங்கேற்றார். அப்போது அவர் பேசியதாவது:

    இங்கு திரிணாமுல் காங்கிரஸ் கட்சியினர் செயல்படும் விதம் மேற்கு வங்காள மக்களுக்கு ஏமாற்றத்தை அளித்துள்ளது.

    மக்கள் தொடர்ந்து திரிணாமுல் காங்கிரசுக்கு வாக்களித்துள்ளனர். ஆனால் இந்தக் கட்சி அட்டூழியங்களுக்கும் துரோகங்களுக்கும் மற்றொரு பெயராகிவிட்டது.

    திரிணாமுல் காங்கிரசைப் பொறுத்தவரை வங்காளத்தின் வளர்ச்சிக்கு முன்னுரிமை இல்லை. மாறாக ஊழல், உறவினர் மற்றும் துரோகம், ஊழலுக்கு முன்னுரிமை அளித்து வருகிறது.

    வங்காள மக்களை ஏழைகளாக வைத்திருக்க விரும்புவதாலேயே, அக்கட்சியின் அரசியல் ஆட்டம் தொடர்ந்து நடக்கிறது என குற்றம் சாட்டினார்.

    ×