search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "தவெக"

    • அரசு மருத்துவமனைகளில் உள்ள குறைபாடுகளை அரசு சரி செய்ய வேண்டும்.
    • அதிமுக வலிமையான கட்சி என்பதால் அவதூறு பரப்புகின்றனர்.

    சேலம்:

    சேலம் நரசோதிப்பட்டி கண்ணனூர் மாரியம்மன் கோவிலில் அ.தி.மு.க. பொதுச் செயலாளரும், தமிழக சட்டமன்ற எதிர்கட்சி தலைவருமான எடப்பாடி பழனிசாமி இன்று சாமி தரிசனம் செய்தார். பின்னர் அவர் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

    ஆதிதிராவிடர் மாணவர்கள் விடுதியில் உள்ள குறைபாடுகளை நான் சுட்டிக்காட்டினேன். குறைகளை சுட்டிக்காட்டுவது எதிர்க்கட்சியின் கடமை. இதற்கு அரசாங்கம் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் எந்தெந்த விடுதியில் அடிப்படை வசதிகள் இல்லையோ அதை சரிசெய்தால் பரவாயில்லை. அதை விட்டு விட்டு நான் சொன்ன கருத்துக்கு எதிர்மறை கருத்து என்பது எந்த விதத்தில் நியாயம்.

    கேள்வி: வி.சி.க. தலைவர் தொல் திருமாவளவன் 99 சதவீதம் சாதி பாகுபாடுகள் தமிழகத்தில் அப்படியே தான் இருக்கிறது என சொல்லியுள்ளார்?

    பதில்: ஒவ்வொரு பேருக்கும் ஒவ்வொரு கருத்து இருக்கிறது. அவருடைய கருத்தை அவர் சொல்லி இருக்கிறார்.

    கே: அ.தி.மு.க. அமைப்பு செயலாளர் செஞ்சி ராமச்சந்திரன் தமிழக வெற்றிக் கழகத்தில் இணைய உள்ளதாகவும், பேச்சுவார்த்தை நடப்பதாகவும் தகவல் பரவியுள்ளது குறித்து?

    ப: இதுபற்றி அவர் என்னிடம் எதுவும் சொல்லவில்லை. வேண்டும் என்று இதுமாதிரி புரளியை கிளப்பி விடுறாங்க. அ.தி.மு.க. என்பது ஒரு கடல். இதில் அவரை மாதிரி ஆயிரக்கணக்கான நிர்வாகிகள் கட்சியில் அங்கம் வகிக்கிறாங்க. கட்சிக்காக உழைத்து கொண்டிருக்காங்க. அ.தி.மு.க. ஒரு வலிமையான இயக்கம். 30 ஆண்டு காலம் ஆட்சி செய்த இயக்கம். பொன்விழா கண்ட கட்சி. அதனால் வேண்டும் என்று திட்டமிட்டு சிலர் வதந்தியை கிளப்பிக்கிட்டு இருக்கு. இது கண்டிக்கத்தக்கது.

    கே: பரந்தூர் விமான நிலையம் விரிவாக்கத்தால் விவசாயிகள் பாதிக்கப்படுவது குறித்து?

    ப: அரசாங்கம் அவர்களை அழைத்து முறையாக பேச்சுவார்த்தை நடத்தி அதற்கு தீர்வு காண வேண்டும். அந்த மக்களின் பிரச்சினை என்ன? அவர்கள் என்ன? என்ன? கோரிக்கை வைக்கிறாங்க? என அதற்காக ஒரு குழு அமைத்து அந்த குழுவின் மூலமாக தீர்வு காண வேண்டும். அதுதான் என்னுடைய நிலைபாடு.

    கே: தமிழகத்தில் மருந்து தட்டுபாடு நிலவி இருப்பதாக கூறப்படுவது குறித்து?

    ப: நேற்று கூட ஊடகத்தில் வந்த செய்தி. கோவையில் உள்ள ஒரு ஆஸ்பத்திரி பிணவறையில் உள்ள கழிவுகள் எல்லாம் வெளியேறி துர்நாற்றம் வீசுவதாக ஊடகத்தின் வாயிலாக அறிந்தேன். தமிழகத்தினுடைய பெரும்பான்மையான மருத்துவமனைகளில் இப்படிப்பட்ட நிலை தான் உள்ளது. ஏற்கனவே நான் இந்த மருத்துவமனையில் உள்ள இந்த குறைகளை எல்லாம் சுட்டிக்காட்டினேன். அதற்கு ஆட்சியாளர்கள் எதிர்ப்பு தான் தெரிவிக்கிறார்களே தவிர அதை சரி செய்யாமல் விட்டுவிட்டு வேண்டும் என்றே எடப்பாடி பழனிசாமி தவறான கருத்து சொல்கிறார் என கூறுகிறார்கள்.

    நாங்கள் அங்கு இருக்கிற நிலைபாட்டை எடுத்து சொல்கிறோம். குறைபாடுகளை தீர்ப்பது அரசினுடைய கடமை. மக்கள் எங்களிடம் விண்ணப்பம் மூலம் கோரிக்கை வைக்கிறாங்க. இப்படியெல்லாம் குறைபாடு இருக்கிறது, இதையெல்லாம் நீங்கள் வெளியே தெரிவிக்க வேண்டும். சரி செய்ய வேண்டும் என சொல்றாங்க. அதன் அடிப்படையில் நாங்கள் அறிக்கை வெளியிடுகிறோம். ஊடகத்தின் வாயிலாக பேசுகிறோம். அரசாங்கம் எந்தெந்த மருத்துவமனையில் குறைபாடுகள் இருக்கிறதோ? அதையெல்லாம் சரி செய்ய வேண்டும்.

    இவ்வாறு எடப்பாடி பழனிசாமி கூறினார்.

    • முதல் மாநில மாநாடு தொடர்பான பணிகளில் மும்முரமாக ஈடுபட்டு வருகிறார்.
    • மாநாடு நடைபெறும் தேதியை அக்கட்சி தலைவர் விஜய் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கிறார்.

    தமிழ் திரையுலகின் முன்னணி நடிகர் விஜய் அரசியல் வருகை குறித்து இந்த ஆண்டு துவக்கத்தில் அறிவித்து இருந்தார். இதைத் தொடர்ந்து கட்சியின் பெயர்- தமிழக வெற்றிக் கழகம் என்று அறிவிக்கப்பட்டது. பிறகு, கட்சி கொடி மற்றும் அறிமுக பாடல் உள்ளிட்டவை வெளியிடப்பட்டன.

    இதைத் தொடர்ந்து தமிழக வெற்றிக் கழகம் கட்சியின் முதல் மாநில மாநாடு பற்றிய அறிவிப்பை விரைவில் வெளியிடுவதாக அக்கட்சியின் தலைவர் விஜய் தெரிவித்து இருந்தார். அதன்படி நடிகர் விஜய், தமிக வெற்றிக் கழகம் கட்சியின் முதல் மாநில மாநாடு தொடர்பான பணிகளில் மும்முரமாக ஈடுபட்டு வருகிறார்.

    விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டியை அடுத்த வி சாலையில் மாநாடு நடத்துவதற்காக 85 ஏக்கர் நிலத்தை அக்கட்சியினர் தேர்வு செய்துள்ளனர். இங்கு வருகிற 23 ஆம் தேதி மாநாடு நடைபெற இருப்பதாகவும், அதற்கு பாதுகாப்பு வழங்கக் கோரி விழுப்புரம் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகம், மாவட்ட கலெக்டர் அலுவலகங்களில் அக்கட்சி சார்பில் மனு அளிக்கப்பட்டது.

    இதனிடையே மாநாடு நடத்த அனுமதி அளிப்பது தொடர்பாக 21 கேள்விகளை போலீசார் கேட்டு இருந்தனர். போலீசார் கேட்ட 21 கேள்விகளுக்கும் விஜய் தரப்பு நேற்று பதிலளித்தது. இந்த பதில் மனுவிற்கு ஓரிரு நாட்களில் போலீசார் பதிலளிப்பதாக தவெக பொதுச் செயலாளர் புஸ்சி ஆனந்த் கூறினார்.

    இந்த நிலையில், த.வெ.க. கட்சியின் முதல் மாநில மாநாடு நடைபெறும் தேதியை அக்கட்சி தலைவர் விஜய் நாளை அதிகாரப்பூர்வமாக அறிவிப்பார் என்று தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி, நளை காலை 11.17 மணிக்கு தமிழக வெற்றிக் கழகம் கட்சியின் முதல் மாநாடு நடக்கும் தேதியை விஜய் அறிவிக்க இருப்பதாக கூறப்படுகிறது.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • 45 அடி உயர கொடிக்கம்பத்தில் கட்சிக்கொடியை விஜய் ஏற்றினார்.
    • தவெக கட்சியின் பிரசார பாடல் வெளியிடப்பட்டது.

    சென்னை:

    தமிழக வெற்றிக்கழகத்தின் கட்சிக்கொடியை பனையூரில் உள்ள கட்சி தலைமை அலுவலகத்தில் விஜய் அறிமுகம் செய்தார். பின்னர் 45 அடி உயர கொடிக்கம்பத்தில் கட்சிக்கொடியை விஜய் ஏற்றினார்.

    கட்சி கொடியின் மேலும் கீழும் சிவப்பு நிறமும் நடுவில் மஞ்சம் நிறமும் உள்ளது. கொடியின் நடுவில் வாகை மலர் இருக்க அதன் இருபுறமும் யானை உள்ளது.

    இந்த விழாவில் கட்சியை பிரபலப்படுத்தும் வகையில் பிரசார பாடல் அடங்கிய குறுந்தகடு வெளியிடப்பட்டது. கவிஞர் விவேக் எழுதி தமன் இசையமைத்து இந்த பாடல் வெளியிடப்பட்டுள்ளது.

    பாதுகாப்பு காரணம் கருதி குறைந்த அளவு நிர்வாகிகளே இக்கூட்டத்தில் பங்கேற்றுள்ளனர். விழாவின் துவத்தில் விஜய் உறுதிமொழி வாசிக்க கட்சி நிர்வாகிகள் உறுதிமொழி ஏற்றுக்கொண்டனர்.

    • தமிழக வெற்றிக் கழம் கட்சி கொடி சில நாட்களில் அறிமுகமாகிறது.
    • த.வெ.க. கொடி அறிமுக நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.

    தமிழக வெற்றிக் கழகம் கட்சியின் கொடி இணையத்தில் வெளியாகி இருக்கிறது. வருகிற 22 ஆம் தேதி கட்சி கொடி அறிமுக விழா நடைபெற உள்ள நிலையில், கொடியேற்றி ஒத்திகை செய்யப்பட்ட வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி உள்ளது.

    எனினும், இது தான் தமிழக வெற்றிக் கழகம் கட்சியின் கொடியா என்பது கேள்விக்குறியாகவே இருக்கிறது. வருகிற 22 ஆம் தேதி தமிழக வெற்றிக் கழகம் கட்சியின் கொடியை விஜய் அறிமுகம் செய்ய இருக்கிறார். இதற்காக சென்னை பனையூரில் உள்ள கட்சி அலுவலகத்தில் கொடி அறிமுக நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.

    மேலும், 45 அடி உயர கொடிக்கம்பம் அமைக்கும் பணி நிறைவு பெற்றுள்ளது. கட்சி கொடி அறிமுக விழாவில் பங்கேற்க தொகுதி வாரியாக நிர்வாகிகளுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

    • கடந்த மாதம் படத்தின் முதல் பாடலான விசில் போடு என்ற பாடல் விஜய் பாடி வெளியாகி மிக வைரலாகியது,
    • விஜய் அவர் பெற்றோரான எஸ்.ஏ. சந்திரசேகர் மற்றும் சோபா சந்திரசேகருடன் இணைந்து எடுத்துக் கொண்ட புகைப்படம் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

    நடிகர் விஜய் தற்பொழுது வெங்கட் பிரபு இயக்கத்தில் கோட் திரைப்படத்தில் நடித்து வருகிறார். படத்தின் விஃபெக்ஸ் பணிகளுக்காக தற்பொழுது காலிஃபோர்னியா சென்றுள்ளார் விஜய். , சென்னை, கேரளா, ரசியா என பல இடங்களில் படப்பிடிப்பு நடந்தது.

    கடந்த மாதம் படத்தின் முதல் பாடலான விசில் போடு என்ற பாடல் விஜய் பாடி வெளியாகி மிக வைரலாகியது, படத்தில் அடுத்த பாடல் ஜூன் மாதம் வெளியிடப் போவதாக தகவல் வெளியாகியது.

    இந்நிலையில் விஜய் அவர் பெற்றோரான எஸ்.ஏ. சந்திரசேகர் மற்றும் சோபா சந்திரசேகருடன் இணைந்து எடுத்துக் கொண்ட புகைப்படம் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. நீண்ட நாட்கள் கழித்து விஜய்  தன் பெற்றோருடன் இருக்கும் புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் மிகவும் சந்தோஷத்தில் இருக்கின்றனர்.

    கடந்த 2020 ஆம் ஆண்டு விஜய் -க்கும் அவரது தந்தையான சந்திரசேகர் இருவருக்கும் விஜய் அரசியல் வருவது குறித்தான கருத்து வேறுபாடுகள் நிலவியது. ஆனால் தற்பொழுது விஜய் அரசியலில் களம் இறங்கியுள்ளார். அவருக்கென தமிழக வெற்றி கழகம் என்ற கட்சியை தொடங்கியுள்ளார்.

    இந்நிலையில் விஜய் அவருடைய பெற்றோருடன் எடுத்த புகைப்படம் வைரலாகி வருகிறது.

    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • தமிழக வெற்றிக்கழகம் என்ற பெயரில் நடிகர் விஜய் கடந்த மாதம் தனது அரசியல் பயணத்தை தொடங்கினார்.
    • புதிய உறுப்பினர் சேர்க்கைக்காக புதிய நிர்வாகிகளை கட்சி தலைவர் விஜய் நியமனம் செய்தார்.

    விஜயின் தமிழக வெற்றிக் கழகத்தில் தற்போது வரை 50 லட்சம் பேர் உறுப்பினர்களாக இணைந்துள்ளனர் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

    கடந்த மாதம் தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சி தொடங்கினார் நடிகர் விஜய். இதைத் தொடர்ந்து கட்சியின் சின்னம், கொடி வடிவமைப்பு ஆகிய பணிகளில் ஈடுபட்டு வருகிறார். அடுத்த கட்டமாக கட்சிக்கு 2 கோடி புதிய உறுப்பினர்கள் சேர்க்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டது.

    உறுப்பினர் சேர்க்கைக்காக உருவாக்கப்பட்டுள்ள சிறப்பு செயலி மூலம் புதிய உறுப்பினர்கள் கட்சியில் சேர்க்கப்படுகின்றனர் என அறிவித்த விஜய் முதல் உறுப்பினராக கட்சியில் சேர்ந்தார்.

    இந்நிலையில் புதிய உறுப்பினர் சேர்க்கைக்காக புதிய நிர்வாகிகளை கட்சி தலைவர் விஜய் நியமனம் செய்தார்.

    இந்நிலையில், தமிழக வெற்றிக் கழகத்தில் புதிய உறுப்பினர் சேர்க்கை கடந்த 8-ம் தேதி சிறப்பு செயலி மூலம் தொடங்கியது. தொடங்கிய 3 நாட்களில் 50 லட்சம் பேர் உறுப்பினர்களாக இணைந்துள்ளனர்.

    • முதல் உறுப்பினராக கட்சி தலைவர் விஜய் சேர்ந்தார்.
    • தமிழ்நாட்டு வெற்றிக்கான நமது பயணத்தில் தோழர்களாய் ஒன்றிணைவோம்.

    தமிழக வெற்றிக் கழகத்தின் புதிய உறுப்பினர் சேர்க்கை இன்று மாலை சென்னை பனையூரில் உள்ள கட்சி தலைமை அலுவலகத்தில் தொடங்கியது.

    உறுப்பினர் சேர்க்கைக்காக உருவாக்கப்பட்டுள்ள சிறப்பு செயலி மூலம் புதிய உறுப்பினர்கள் சேர்க்கப்படுகின்றனர்.

    முதல் உறுப்பினராக கட்சி தலைவர் விஜய் சேர்ந்தார். இதன் வீடியோ வெளியிடப்பட்டுள்ளது.

    வாட்ஸ் அப், டெலிகிராம், தொலைபேசி எண் வாயிலாகவும் கட்சியில் உறுப்பினராக இணையலாம் எனவும், தமிழ்நாட்டு வெற்றிக்கான நமது பயணத்தில் தோழர்களாய் ஒன்றிணைவோம் என்று விஜய் தொண்டர்களுக்கு அழைப்பு விடுத்திருந்தார்.

    இந்நிலையில், தமிழக வெற்றிக்கழகத்தின் உறுப்பினர் சேர்க்கை செயலி முடங்கியது.

    ஒரே நேரத்தில் ஏராளமானோர் பதிவு செய்ய முயன்றதால், செயலி முடங்கியுள்ளது.

    வாட்ஸ் அப், டெலிகிராம், செயலி என அனைத்து தளங்களும் முடங்கியுள்ளது.

    • 2 கோடி உறுப்பினர்கள் என்ற இலக்கை நிர்ணயித்துள்ளோம்.
    • சென்னை பனையூரில் உள்ள கட்சி தலைமை அலுவலகத்தில் தொடங்கியது.

    தமிழக வெற்றிக்கழகம் என்ற பெயரில் நடிகர் விஜய் கடந்த மாதம் தனது அரசியல் பயணத்தை தொடங்கினார். இதைத் தொடர்ந்து கட்சியின் சின்னம், கொடி வடிவமைப்பு ஆகிய பணிகளில் ஈடுபட்டு வருகிறார். அடுத்த கட்டமாக கட்சிக்கு 2 கோடி புதிய உறுப்பினர்கள் சேர்க்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டது.

    இதையொட்டி விஜய் ஆலோசனையின் பேரில் பொதுச் செயலாளர் புஸ்சி ஆனந்த், நிர்வாகிகளுடன் நேரடியாகவும், தொலைபேசி மூலமும் ஆலோசனை நடத்தி உறுப்பினர் சேர்க்கைக்கான ஆயத்த பணிகளை மேற்கொண்டு வந்தார்.

    இந்நிலையில் புதிய உறுப்பினர் சேர்க்கைக்காக புதிய நிர்வாகிகளை கட்சி தலைவர் விஜய் நேற்று நியமனம் செய்தார்.

    இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், "தமிழக வெற்றிக் கழகத்தின் அடிப்படைக் கட்டமைப்புகளை வலுப்படுத்தி வருகின்றோம். 2 கோடி உறுப்பினர்கள் என்ற இலக்கை நிர்ணயித்துள்ளோம்.

    இதன் முதற்கட்டமாக உறுப்பினர்கள் சேர்க்கை அணியை உருவாக்கியுள்ளோம். மகளிர் தலைமையில் முதன் முதலாக உருவாக்கப்பட்டுள்ள இந்த அணியினர் கழக தோழர்களோடு இணைந்து மக்களுக்கு உதவி செய்வார்கள்" என குறிப்பிட்டிருந்தார்.

    இந்நிலையில் கட்சிக்கு புதிய உறுப்பினர் சேர்க்கை இன்று மாலை சென்னை பனையூரில் உள்ள கட்சி தலைமை அலுவலகத்தில் தொடங்கியது.

    உறுப்பினர் சேர்க்கைக்காக உருவாக்கப்பட்டுள்ள சிறப்பு செயலி மூலம் புதிய உறுப்பினர்கள் சேர்க்கப்படுகின்றனர்.

    முதல் உறுப்பினராக கட்சி தலைவர் விஜய் சேர்ந்தார். இதன் வீடியோ வெளியிடப்பட்டுள்ளது.

    வீடியோவில், "தமிழக வெற்றிக் கழகத்தின் உறுப்பினராக நான் பதிவு செய்துவிட்டேன், நீங்களும் பதிவு செய்ய வேண்டும்" என தொண்டர்களுக்கு விஜய் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

    மேலும்,"வாட்ஸ் அப், டெலிகிராம், தொலைபேசி எண் வாயிலாகவும் கட்சியில் உறுப்பினராக இணையலாம் எனவும், தமிழ்நாட்டு வெற்றிக்கான நமது பயணத்தில் தோழர்களாய் ஒன்றிணைவோம்" எனவும் அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.

    ×