search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "யூட்யூப்"

    • பிரணவ் மோகன்லால் இப்போது ஸ்பெயினில் ஒரு விவசாய பண்ணையில் வேலை செய்கிறார்.
    • பிரணவ் மோகன்லால் இப்போது ஸ்பெயினில் ஒரு விவசாய பண்ணையில் வேலை செய்கிறார்.

    மலையாள திரையுலகின் பிரபல நடிகராக இருக்கும் மோகன்லால், திரைப்பட தயாரிப்பாளரான கே.பாலாஜியின் மகளான சுசித்ராவை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.

    இந்த தம்பதிக்கு விஸ்மயா மோகன்லால் என்ற மகளும் பிரணவ் மோகன்லால் என்ற மகனும் உள்ளனர்.

    FTQ வித் ரேகா மேனன் என்ற மலையாள யூடியூப் நிகழ்ச்சிக்கு சுசித்ரா மோகன்லால் பேட்டி கொடுத்துள்ளார்.

    அந்நிகழ்ச்சியில் பேசிய அவர், அப்பு (பிரணவ்) இப்போது ஸ்பெயினில் ஒரு விவசாய பண்ணையில் வேலை செய்கிறார். தங்குமிடம் மற்றும் உணவுக்காக சம்பவம் எதுவும் வாங்காமல் அவர் வேலை செய்து வருகிறார். அவர் அங்கிருந்து வீட்டிற்கு வரும்போதெல்லாம் அந்த அனுபவங்களை எங்களிடம் பகிர்ந்து கொள்வார்.

    எனக்கு சினிமா பட ஸ்கிரிப்ட்களைக் கேட்பது பிடிக்கும், அதனால் நான் உட்கார்ந்து கேட்கிறேன். அவர் இரண்டு வருடங்களுக்கு ஒரு படம் நடிக்கிறார். வருடத்திற்கு குறைந்தது 2 படங்களாவது நடிக்குமாறு நான் அவரிடம் கேட்டுக்கொள்கிறேன். ஆனால் அவர் சினிமா வாழ்க்கை என அனைத்தையும் பேலன்ஸ் செய்ய நினைக்கிறார்.

    அதே சமயம் அவரது அப்பாவுடன் அப்பு சேர்ந்து நடிப்பதை நான் விரும்பவில்லை. இருவரையும் ரசிகர்கள் ஒப்பிட்டு பார்ப்பது தனக்கு பிடிக்காது" என்று தெரிவித்தார்.

    2022 ஆம் ஆண்டு வெளியான ஹிருதயம் திரைப்படத்தின் மூலம் பிரணவ் மலையாள ரசிகர்களிடையே புகழ்பெற்றார். இந்த ஆண்டு ஏப்ரலில் வெளியான வர்ஷங்கல்க்கு ஷேஷம் என்ற மலையாளப் படத்தில் அவர் கடைசியாக நடித்திருந்தார்.

    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

    • யூட்யூப்-ல் உ.பி. அரசுக்கு ஆதரவாக வீடியோ வெளியிட்டால் 4 முதல் 8 லட்சம் வரை வழங்கப்படும்.
    • அரசுக்கு எதிராக சமூக வலைத்தளங்களில் கருத்து தெரிவித்தால் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் உ.பி. அரசு அறிவிப்பு.

    உத்தரபிரதேச பாஜக அரசின் திட்டங்கள், சாதனைகள் குறித்து சமூக வலைத்தளங்களில் பதிவிடுபவர்களுக்கு மாதம் 8 லட்சம் வரை ஊக்கத்தொகை வழங்கப்படும் என்று அம்மாநில அரசு அறிவித்துள்ளது.

    மாநில தகவல் தொலைத்தொடர்பு துறையாழ் தயாரிக்கப்பட்ட உத்தரபிரதேச டிஜிட்டல் மீடியா பாலிசி 2024க்கு உ.பி. மாநில அமைச்சரவை ஒப்புதல் வழங்கியுள்ளது.

    இந்த புதிய கொள்கையின்படி எக்ஸ், பேஸ்புக், இன்ஸ்டாகிராம் ஆகியவற்றில் உ.பி. அரசுக்கு ஆதரவாக வீடியோ, போஸ்ட். ட்வீட், ரீல்ஸ் பதிவிடுபவர்களுக்கு அவர்களின் பாலோயர்கள் அடிப்படையில் 4 வகைகளாகப் பிரிக்கப்பட்டு ரூ.5 லட்சம், 4 லட்சம், 3 லட்சம் மற்றும் 2 லட்சம் வழங்கப்படும்.

    யூட்யூப்-ல் வீடியோ, ஷார்ட்ஸ் பதிவிடுபவர்களுக்கு அவர்களின் சப்ஸ்க்ரைபர்கள் அடிப்படையில் 4 வகைகளாகப் பிரிக்கப்பட்டு ரூ.8 லட்சம், 7 லட்சம், 6 லட்சம் மற்றும் 4 லட்சம் வழங்கப்படும்.

    உத்தர பிரதேசம் மட்டுமல்லாமல் நாட்டின் பல்வேறு பகுதிகளில் வசிப்பவர்கள் மற்றும் வெளிநாடுகளில் வசிப்பவர்களும் இத்திட்டத்தின் மூலம் பயனடைய முடியும்

    மேலும் சமூக வலைத்தளங்களில் அரசுக்கு எதிராக, ஆட்சேபனைக்குரிய செய்திகளை வெளியிடுபவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் உ.பி. அரசு அறிவித்துள்ளது.

    • கால்பந்து வீரர் ரொனால்டோ தற்போது யூட்யூபராக புது அவதாரம் எடுத்துள்ளார்.
    • ரொனால்டோ 'யுஆர் கிறிஸ்டியானோ' என்ற புதிய யூடியூப் சேனலை தொடங்கியுள்ளார்.

    உலகின் முன்னணி கால்பந்து வீரராக போர்ச்சுக்கல் நாட்டின் கிறிஸ்டியானோ ரொனால்டோ திகழ்ந்து வருகிறார். 39 வயதான ரொனால்டோ கால்பந்து வாழ்க்கையில் தனது கடைசி கட்டத்தை எட்டியுள்ளார்.

    கால்பந்து வீரர் ரொனால்டோ தற்போது யூட்யூபராக புது அவதாரம் எடுத்துள்ளார்.

    'யுஆர் கிறிஸ்டியானோ' என்ற புதிய யூடியூப் சேனலை அவர் தொடங்கியுள்ளார். இது தொடர்பான அறிவிப்பு வீடியோவை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அவர் வெளியிட்டுள்ளார்.

    அந்த வீடியோவில், "நான் யுஆர் கிறிஸ்டியானோ என்ற பெயரில் யூட்யூப் சேனல் ஆரம்பித்துள்ளேன். அதை அனைவரும் சப்ஸ்க்ரைப் செய்து கொள்ளுங்கள்" என்று காமெடியாக பேசியுள்ளார்.

    ரொனால்டோவின் யூட்யூப் சேனலை 1 மணிநேரத்திற்குள் 1 மில்லியன் பேர் சப்ஸ்க்ரைப் செய்துள்ளனர். இதுவரை இந்த சேனலில் 18 வீடியோக்கள் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது.

    • தற்போதைய காலகட்டத்தில் சமூக வலைத்தளங்கள் தவிர்க்க முடியாத ஒன்றாக மாறியுள்ளது
    • நாளுக்கு நாள் சமூக வலைத்தளங்களை பயன்படுத்தும் பயனர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது

    கேரளாவில் சுகாதாரத்துறை பணியாளர்கள் சமூக வலைத்தளங்களில் Content Creator-களாக இருக்கக் கூடாது என வழங்கப்பட உத்தரவு திரும்பப் பெறப்பட்டுள்ளது.

    தற்போதைய காலகட்டத்தில் சமூக வலைத்தளங்கள் தவிர்க்க முடியாத ஒன்றாக மாறியுள்ளது. இதில் யூட்யூப், இன்ஸ்டாகிராம் மற்றும் பேஸ்புக் போன்றவை முக்கிய பங்கு வகித்து வருகிறது. நாளுக்கு நாள் சமூக வலைத்தளங்களை பயன்படுத்தும் பயனர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. இதில் ஏராளமானோர் நடனமாடுவது, தங்கள் வியாபாரத்தை மேம்படுத்துவது போன்றவற்றை செய்து வருகிறார்கள். இதில் அரசு ஊழியர்களும் அடங்குவர்.

    கேரளாவில் சுகாதாரத்துறை பணியாளர்கள் பலர் சீருடையில் வேலை பார்க்கும் இடத்தில் இருந்து நடனமாடி வீடியோ பதிவேற்று வந்தனர். இந்நிலையில் சுகாதாரத் துறை பணியாளர்கள் சமூக வலைத்தளங்களில் Content Creator-களாக இருக்க கூடாது என கேரள அரசு மார்ச் 13-ம் தேதி சுற்றறிக்கை வெளியிட்டது.

    இந்த சுற்றறிக்கைக்கு எதிராக இந்திய மருத்துவ சங்கம் மற்றும் கேரள அரசு மருத்துவ அதிகாரிகள் சங்கம் ஆகியவை கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளன. மேலும் இந்த சுற்றறிக்கையை கேரள அரசு திரும்பப் பெற வேண்டும் என்று அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    இந்நிலையில், அந்த சுற்றறிக்கைக்கு கடும் எதிர்ப்பு நிலையில், அந்த உத்தரவை கேரள அரசு திரும்பப் பெறப்பட்டுள்ளது.

    ×