என் மலர்
நீங்கள் தேடியது "ஹேமமாலினி"
- மதுராவில் பிருந்தாவன் பகுதியில் சொந்த வீடு கட்டி வசித்து வருகிறேன்.
- நடிகை, பரத நாட்டிய கலைஞர், அரசியல்வாதி என எனக்கு 3 முகங்கள் இருக்கின்றன.
மதுரா:
பாலிவுட்டில் 'கனவுக்கன்னி' என்று அழைக்கப்பட்ட நடிகை ஹேமமாலினி, கடந்த 2014-ம் ஆண்டு பாராளுமன்ற தேர்தலில் உத்தரபிரதேச மாநிலம் மதுரா தொகுதியில் பா.ஜனதா வேட்பாளராக களம் இறங்கினார். அந்த தேர்தலில் வெற்றி பெற்று எம்.பி. ஆனார்.
மீண்டும் 2019-ம் ஆண்டு தேர்தலிலும் அதே தொகுதியில் வெற்றி பெற்றார். தற்போது, தொடர்ந்து 3-வது முறையாக மதுரா தொகுதியில் பா.ஜனதா வேட்பாளராக களம் காண்கிறார்.
75 வயது ஆனவர்களுக்கு தேர்தலில் போட்டியிட வாய்ப்பு அளிப்பது இல்லை என்ற எழுதப்படாத விதியை தளர்த்தி, 75 வயதான ஹேமமாலினிக்கு பா.ஜனதா மீண்டும் வாய்ப்பு அளித்துள்ளது.
இந்நிலையில், நடிகை ஹேமமாலினி, ஒரு செய்தி நிறுவனத்துக்கு பேட்டி அளித்தார். அவர் கூறியதாவது:-
நான் முதன்முதலில் மதுரா தொகுதியில் எம்.பி. ஆனபோது, சினிமா நடிகை என்ற முறையில் என் மீது மக்களுக்கு ஈர்ப்பு இருந்தது. முதலில், வெளியூர்காரர் என்ற பிரச்சனை காணப்பட்டது. தொகுதிக்கு அடிக்கடி வரமாட்டார் என்று பேசினார்கள்.
அதை பொய்யாக்கும் வகையில், மதுராவில் பிருந்தாவன் பகுதியில் சொந்த வீடு கட்டி வசித்து வருகிறேன். இப்போது வெளியூர்காரர் என்ற பிரச்சனை இல்லை.
எனது முதல் பதவிக்காலத்தில் எனக்கு என்ன வேலை என்றே தெரியவில்லை. பிறகுதான் படிப்படியாக தெரிந்து கொண்டேன்.
நான் அனுபவம் வாய்ந்த அரசியல்வாதி அல்ல. ஆனால், எம்.பி.யாக இருந்தால், நான் விரும்பிய பணிகளை செய்ய முடியும்.
நான் அரசியலில் குதிக்க விரும்பியது இல்லை. தெய்வ அனுக்கிரகத்தால் அது நடந்தது. நான் கிருஷ்ணர் பக்தை. நான் சில சேவைகள் செய்ய வேண்டும் என்று கிருஷ்ணர் விரும்புவதால் இங்கு நிற்கிறேன். மதுரா இல்லாவிட்டால், நான் நின்றிருக்க மாட்டேன்.
மதுரா தொகுதிக்கான எனது கனவு இன்னும் பாக்கி இருக்கிறது. அந்த முடிவடையாத பணிகளை முடிக்க மீண்டும் போட்டியிட விரும்பினேன். கட்சி வாய்ப்பு கொடுத்துள்ளது. அதற்காக பா.ஜனதாவுக்கு நன்றி.
பிரதமர் மோடி-ஹேமமாலினி கூட்டணிக்கு மக்கள் ஓட்டு போடுவார்கள். பிரதமர் மோடி நாடு முழுவதும் செய்த பணிகள் ஓட்டு பெற்றுத்தரும். நான் செய்த பணிகள் தெரிய வேண்டுமானால், தொகுதியை சுற்றி பாருங்கள்.
நான் பிராமண பெண். ஜாட் இன மருமகள். அதனால், ஜாட் சமூகத்தினர் நிறைந்த இத்தொகுதியில் ஆதரவு இருக்கிறது.
நடிகை, பரத நாட்டிய கலைஞர், அரசியல்வாதி என எனக்கு 3 முகங்கள் இருக்கின்றன. இப்போதும், பரத நாட்டிய நிகழ்ச்சிகள் நடத்தி வருகிறேன். மக்களுக்கும் பிடித்து இருக்கிறது. சினிமாவில் நல்ல வேடங்கள் வரும்போது நடிப்பேன். 3 முகங்களும் எனது மனதுக்கு நெருக்கமானவை.
இத்தேர்தலில் ராமர் கோவில், மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும் என்று நம்புகிறேன். கிருஷ்ண ஜென்மபூமி பிரச்சனை, கோர்ட்டில் இருப்பதால் அதுபற்றி பேச விரும்பவில்லை.
இவ்வாறு அவர் கூறினார்.
- உத்தர பிரதேசத்தின் மதுரா தொகுதியில் பா.ஜ.க. சார்பில் ஹேமமாலினி போட்டியிடுகிறார்.
- நடத்தை விதிமுறைகளை மீறியதாக தேர்தல் ஆணையம் சுர்ஜிவாலாவுக்கு நோட்டீஸ் அனுப்பியது.
புதுடெல்லி:
பாராளுமன்ற தேர்தலில் உ.பி.யின் மதுரா தொகுதியில் பா.ஜ.க. சார்பில் ஹேமமாலினி போட்டியிடுகிறார்.
இதற்கிடையே, பா.ஜ.க. எம்.பி.யும், மதுரா தொகுதி வேட்பாளருமான ஹேமமாலினி குறித்து காங்கிரஸ் கட்சியின் பொதுச் செயலாளரும், கட்சியின் மூத்த தலைவருமான ரந்தீப் சுர்ஜிவாலா பேசிய கருத்துகள் சர்ச்சையைக் கிளப்பியுள்ளது.
பாஜக எம்பி ஹேமமாலினியைப் பற்றி அவர் கூறிய கருத்துகள் கண்ணியமற்றது, கொச்சையானது மற்றும் நாகரீகமற்றது என்ற தேர்தல் ஆணையம் முதன்மையான நடத்தை விதிகளை மீறியது என அவருக்கு நோட்டீஸ் அனுப்பியது.
இந்நிலையில், காங்கிரஸ் தலைவர் ரந்தீப் சுர்ஜிவாலா இன்று மாலை 6 மணி முதல் அடுத்த 48 மணி நேரத்துக்கு தேர்தல் தொடர்பாக பேரணி, பேட்டி அளிக்கக் கூடாது என இந்திய தேர்தல் ஆணையம் தடை விதித்துள்ளது.
- கடந்த 14-ம் தேதி தொடங்கிய கும்பமேளா பிப்ரவரி 26-ம் தேதி வரை 45 நாள் நடக்கிறது.
- கும்பமேளா நிகழ்ச்சியில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 30 பேர் பலியாகினர்.
புதுடெல்லி:
உலகின் மிகப்பெரிய ஆன்மிக சங்கமமான மகா கும்பமேளா உத்தர பிரதேச மாநிலம் பிரயாக்ராஜில் நடந்து வருகிறது. கடந்த 14-ம் தேதி தொடங்கிய கும்பமேளா அடுத்த மாதம் 26-ம் தேதி வரை 45 நாட்கள் நடைபெற உள்ளது.
கும்பமேளா நிகழ்ச்சியில் உலகம் முழுவதும் இருந்து கோடிக்கணக்கான மக்கள் கலந்துகொண்டு திரிவேணி சங்கமத்தில் புனித நீராடி வருகின்றனர்.
இதற்கிடையே, கும்பமேளா நிகழ்ச்சியில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 30 பேர் பலியாகினர். மாநில அரசின் நிர்வாகம் சரியில்லை என எதிர்க்கட்சிகள் கண்டனம் தெரிவித்து வருகின்றன.
இந்நிலையில், நடிகையும், பா.ஜ.க. எம்பியும் ஆன ஹேமமாலினி இன்று செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:
நாங்கள் கும்பமேளா போயிருந்தோம். நன்றாகக் குளித்தோம். எல்லாம் நன்றாக நிர்வகிக்கப்பட்டது. கூட்ட நெரிசல்) நடந்தது சரிதான்.
இது ஒரு பெரிய சம்பவம் இல்லை. அது எவ்வளவு பெரியது என எனக்குத் தெரியவில்லை. இது மிகைப்படுத்தப்படுகிறது.
கும்பமேளா நிகழ்ச்சி மிகவும் சிறப்பாக நிர்வகிக்கப்பட்டது, மேலும் அனைத்தும் மிகச் சிறப்பாக செய்யப்பட்டது.
நிறைய பேர் வருகிறார்கள், அதை நிர்வகிப்பது மிகவும் கடினம். ஆனால் நாங்கள் எங்களால் முடிந்ததைச் செய்கிறோம் என தெரிவித்தார்.
- கடந்த 14-ம் தேதி தொடங்கிய கும்பமேளா பிப்ரவரி 26-ம் தேதி வரை 45 நாள் நடக்கிறது.
- கும்பமேளா நிகழ்ச்சியில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 30 பேர் பலியாகினர்.
புதுடெல்லி:
உலகின் மிகப்பெரிய ஆன்மிக சங்கமமான மகா கும்பமேளா உத்தர பிரதேச மாநிலம் பிரயாக்ராஜில் நடந்து வருகிறது. கடந்த 14-ம் தேதி தொடங்கிய கும்பமேளா அடுத்த மாதம் 26-ம் தேதி வரை 45 நாட்கள் நடைபெற உள்ளது.
கும்பமேளா நிகழ்ச்சியில் உலகம் முழுவதும் இருந்து கோடிக்கணக்கான மக்கள் கலந்துகொண்டு திரிவேணி சங்கமத்தில் புனித நீராடி வருகின்றனர்.
கும்பமேளாவில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 30 பேர் பலியாகினர். மாநில அரசின் நிர்வாகம் சரியில்லை என எதிர்க்கட்சிகள் கண்டனம் தெரிவித்தன.
இதற்கிடையே, நடிகையும், பா.ஜ.க. எம்பியும் ஆன ஹேமமாலினி இன்று செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறுகையில், கும்பமேளா கூட்ட நெரிசல் ஒரு பெரிய சம்பவம் இல்லை. அது மிகைப்படுத்தப்படுகிறது என தெரிவித்தார்.
இந்நிலையில், சமூக வலைதளங்களில் சுறுசுறுப்பாக இருப்பவர்கள், மக்களின் வலியையும், விரக்தியையும் பார்த்து புரிந்து கொண்டு பேச வேண்டும் என காட்டமாகத் தெரிவித்தார்.
- சிவராத்திரி விழாவை முன்னிட்டு 26-ம் தேதி புனித நீராடலுடன் மகா கும்பமேளா நிறைவடைகிறது.
- திரிவேணி சங்கமமான பிரயாக்ராஜில் கோடிக்கணக்கான பக்தர்கள் புனித நீராடி வருகிறார்கள்.
லக்னோ:
உத்தர பிரதேச மாநிலத்தின் பிரயாக்ராஜ் நகரில் மகா கும்பமேளா கடந்த மாதம் 13-ம் தேதி தொடங்கியது. வரும் 26-ம் தேதி வரை நடைபெற இருக்கிறது.
மகா சிவராத்திரி விழாவை முன்னிட்டு 26-ம் தேதி புனித நீராடலுடன் மகா கும்பமேளா விழா நிறைவடைகிறது. திரிவேணி சங்கமமான பிரயாக்ராஜில் கோடிக்கணக்கான பக்தர்கள் புனித நீராடி வருகிறார்கள்.
கும்பமேளா முடிவடைய இன்னும் 15 நாள் இருக்கும் நிலையில், இதுவரை 45 கோடி பக்தர்களுக்கு மேல் புனித நீராடியுள்ளனர் என உத்தர பிரதேச அரசு தெரிவித்துள்ளது.
இதற்கிடையே, சமாஜ்வாடியின் மாநிலங்களவை எம்பியான ராம் கோபால் யாதவ் கூறியதாவது:
மோசமான ஏற்பாடுகளால் மக்கள் அவதிப்படுகின்றனர். உணவு மற்றும் எரிபொருளுக்கு தட்டுப்பாடு இருக்கிறது.
அங்கு மக்கள் இறந்து கொண்டிருக்கிறார்கள். நெரிசலில் சிக்கி சிலர் இறந்தனர். இப்போது மக்கள் பசியால் இறக்கின்றனர்.
பெட்ரோல், கார்களுக்கு டீசல் இல்லை. மக்களுக்கு உணவு இல்லை. தண்ணீர் கூட கிடைக்கவில்லை. உத்தர பிரதேச அரசு அலகாபாத்தை வாகனம் இல்லாத பகுதி ஆக்கியது. மக்கள் வீட்டை விட்டு வெளியே வரமுடியாது. இப்படி எப்போதாவது பார்த்திருக்கிறீர்களா என காட்டமாக விமர்சித்தார்.
இந்நிலையில், சமாஜ்வாடி எம்.பி.யின் குற்றச்சாட்டுக்கு பா.ஜ.க. எம்.பி.யான ஹேமமாலினி பதில் அளித்துள்ளார். அப்போது அவர் கூறியதாவது:
மகா கும்பமேளா ஒரு வெற்றி. சில இடங்களில் பிரச்சனைகள் உள்ளன. ஆனால் எல்லா இடங்களிலும் இல்லை. அனைவரும் நீராட விரும்புவதால் ஏராளமானோர் அங்கு செல்கின்றனர்.
இது மிகவும் சிறப்பாக ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. எல்லோரும் அதைப் பாராட்டுகிறார்கள். அங்கு சென்ற எனக்கு தெரிந்தவர்கள், மிக நன்றாக நிர்வகிக்கிறார்கள் என்கிறார்கள். விபத்து நடந்தது, ஆனால் கும்பமேளா தோல்வி அடைந்தது என அர்த்தமல்ல என தெரிவித்தார்.