என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "சதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோவில்"

    • மாலை சனி பிரதோஷத்தை ஒட்டி சுந்தர மகாலிங்கம் சுவாமிக்கு பால், பழம், பன்னீர், இளநீர் உள்ளிட்ட 18 வகையான அபிஷேகங்கள் நடைபெறும்.
    • இரவில் பக்தர்களுக்கு தங்குவதற்கு அனுமதி இல்லாததால் இன்று செல்பவர்கள் சாமி தரிசனம் முடிந்ததும் கீழே இறங்கி வந்து விடுவார்கள்.

    வத்திராயிருப்பு:

    விருதுநகர் மாவட்டம் வத்திராயிருப்பு அருகே மேற்குத்தொடர்ச்சி மலையில் சதுரகிரி சுந்தர மகாலிங்கம் கோவில் உள்ளது. அமாவாசை, பவுர்ணமிக்கு தலா 3 நாட்களும், பிரதோஷத்திற்கு 2 நாட்கள் என மாதம் 8 நாட்கள் பக்தர்கள் மலையேறி சாமி தரிசனம் செய்ய அனுமதிக்கப்படுகிறார்கள்.

    இன்று முதல் வருகிற 9-ந்தேதி வரை நான்கு நாட்களுக்கு பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய அனுமதிக்கப்படுகிறார்கள். இதில் 8-ந்தேதி வரை காலை 6 மணி முதல் 12 மணி வரையிலும், 9-ந்தேதி காலை 6 மணி முதல் 10 மணி வரை மட்டுமே பக்தர்களுக்கு அனுமதி வழங்கப்படுகிறது. சென்னை, கோவை, மதுரை, சிவகங்கை, விருதுநகர், திருச்சி உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இருந்தும், பிற மாநிலங்களில் இருந்தும் ஏராளமான பக்தர்கள் நள்ளிரவு முதல் பல்வேறு வாகனங்கள் மூலம் தாணிப்பாறைக்கு வந்தனர்.

    அங்கு வனத்துறை கேட் பகுதியில் காத்திருந்தனர். இன்று பங்குனி மாத சனிப்பிரதோஷம் என்பதால் திரளான பக்தர்கள் குவிந்தனர். காலை 6.30 மணிக்கு வனத்துறை கேட் திறந்து விடப்பட்டு பக்தர்கள் உடைமைகளை வனத்துறையினர் தீவிர சோதனை செய்தனர். அப்போது பாலித்தீன் கேரி பேக் போன்றவற்றை பறிமுதல் செய்ததோடு போதை வஸ்து பொருட்கள், மது, எளிதில் தீப்பற்ற கூடிய பொருட்கள் கொண்டு செல்கிறார்களா என தீவிர சோதனை செய்து அனுப்பினர்.

    வெயிலையும் பொருட்படுத்தாமல் பக்தர்கள் மலையேறி சென்றனர். மாலை சனி பிரதோஷத்தை ஒட்டி சுந்தர மகாலிங்கம் சுவாமிக்கு பால், பழம், பன்னீர், இளநீர் உள்ளிட்ட 18 வகையான அபிஷேகங்கள் நடைபெறும். இரவில் பக்தர்களுக்கு தங்குவதற்கு அனுமதி இல்லாததால் இன்று செல்பவர்கள் சாமி தரிசனம் முடிந்ததும் கீழே இறங்கி வந்து விடுவார்கள்.

    மொட்டை உள்ளிட்ட நேர்த்திக்கடன்களை பக்தர்கள் செலுத்தி வழிபட்டனர். நாளை மறுநாள் பங்குனி மாத அமாவாசையை முன்னிட்டு பக்தர்கள் கூட்டம் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை சுந்தர மகாலிங்கம் சாமி பரம்பரை அறங்காவலர் ராஜா என்ற பெரியசாமி, செயல் அலுவலர் ராமகிருஷ்ணன் ஆகியோர் செய்து இருந்தனர். சனிப்பிரதோஷத்தை முன்னிட்டு ஸ்ரீவில்லிபுத்தூர், வத்திராயிருப்பு உள்ளிட்ட ஊர்களில் இருந்து தாணிப்பாறைக்கு சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட்டன.

    சதுரகிரி கோவிலுக்கு வரும் பக்தர்களின் வசதிக்காக மருத்துவக் குழுவினர் இல்லாத நிலை இருந்து வருகிறது. ஏற்கனவே கடந்த அமாவாசையின்போது சதுரகிரியிலும், வெள்ளிங்கிரி மலையிலும் பக்தர்கள் உயிரிழந்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. எனவே மருத்துவக்குழுவை நியமிக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது பக்தர்களின் கோரிக்கையாக உள்ளது.

    • பக்தர்கள் வெயிலையும் பொருட்படுத்தாமல் சாமி தரிசனம் செய்ய வேண்டும் என்ற நோக்கத்தில் விரைந்து சென்றனர்.
    • இன்று சித்ரா பவுர்ணமி சுந்தர மகாலிங்கம் சாமிக்கு பால், பழம், பன்னீர், இளநீர் உள்ளிட்ட 21 வகையான அபிஷேகங்கள் நடைபெறுகிறது.

    வத்திராயிருப்பு:

    வத்திராயிருப்பு அருகே மேற்கு தொடர்ச்சி மலையில் சதுரகிரி சுந்தர மகாலிங்கம் கோவில் உள்ளது. அமாவாசை, பவுர்ணமிக்கு தலா 3 நாட்கள், பிரதோஷத்திற்கு 2 நாட்கள் என மாதத்திற்கு 8 நாட்கள் பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய அனுமதிக்கப்படுகிறார்கள்.

    கடந்த 21-ந்தேதி முதல் நாளை வரை 4 நாட்களுக்கு பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய அனுமதிக்கப்படுகிறார்கள். இன்று சித்ரா பவுர்ணமியையொட்டி நள்ளிரவு முதல் சென்னை, கோவை, மதுரை, திருச்சி, விருதுநகர், தூத்துக்குடி, நெல்லை உள்ளிட்ட தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் பிற மாநிலங்களில் இருந்தும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் ஏராளமான வாகனங்களில் வருகை தந்து தானிப்பாறை வனத்துறை கேட் முன்பு குவிந்தனர்.

    பக்தர்கள் கூட்டம் அதிகரித்ததை அடுத்து இன்று காலை 6 மணிக்கு வனத்துறை கேட் திறந்து விடப்பட்டு பக்தர்களின் உடமைகளை வனத்துறையினர் தீவிர சோதனை செய்து பாலித்தீன் கேரிப்பை போன்றவற்றை பறிமுதல் செய்தனர். மேலும் எளிதில் தீப்பற்றக் கூடிய பொருட்கள் கொண்டு செல்கிறார்களா? மது மற்றும் போதை பொருட்கள் கொண்டு செல்லப்படுகிறதா? என்பதையும் சோதனை செய்தனர்.

    பக்தர்கள் வெயிலையும் பொருட்படுத்தாமல் சாமி தரிசனம் செய்ய வேண்டும் என்ற நோக்கத்தில் விரைந்து சென்றனர். இன்று சித்ரா பவுர்ணமி சுந்தர மகாலிங்கம் சாமிக்கு பால், பழம், பன்னீர், இளநீர் உள்ளிட்ட 21 வகையான அபிஷேகங்கள் நடைபெறுகிறது. அபிஷேகம் முடிந்ததும் சாமி அலங்கரிக்கப்பட்டு சிறப்பு பூஜை நடைபெற உள்ளது. பக்தர்கள் பக்தியுடன் சாமி தரிசனம் செய்தனர். மொட்டை உள்ளிட்ட நேர்த்திக் கடன்களை செலுத்தினர். இரவில் பக்தர்கள் தங்குவதற்கு அனுமதி இல்லை.

    நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை சுந்தர மகாலிங்கம் சாமி பரம்பரை அறங்காவலர் ராஜா என்ற பெரியசாமி, செயல் அலுவலர் ராமகிருஷ்ணன் ஆகியோர் செய்திருந்தனர். சித்ரா பவுர்ணமியையொட்டி வத்திராயிருப்பு, ஸ்ரீவில்லிபுத்தூர், விருதுநகர் உள்ளிட்ட இடங்களில் இருந்து தானிப்பாறைக்கு அரசு சிறப்பு பஸ்கள் இயக்கப்பட்டன.

    • இன்று மாலை 4.30 மணியிலிருந்து 6 மணிக்குள் சுந்தரமகாலிங்கம் சாமிக்கு பால், பழம், பன்னீர் உள்ளிட்ட 18 வகையான அபிஷேகம் நடைபெறுகிறது.
    • அபிஷேகம் முடிந்ததும் சாமி அலங்கரிக்கப்பட்டு சிறப்பு பூஜை நடைபெற உள்ளது.

    வத்திராயிருப்பு:

    வத்திராயிருப்பு அருகே மேற்கு தொடர்ச்சி மலையில் சதுரகிரி சுந்தர மகாலிங்கம் கோவில் அமைந்துள்ளது. இங்கு அமாவாசை, பவுர்ணமி தினங்களையொட்டி தலா மூன்று நாட்கள், பிரதோஷத்திற்கு இரண்டு நாட்கள் என மாதத்திற்கு எட்டு நாட்கள் பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய அனுமதிக்கப்படுகிறார்கள்.

    இன்று முதல் வருகிற 8-ந்தேதி வரை நான்கு நாட்கள் பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. இன்று சித்திரை மாத பிரதோஷத்தை முன்னிட்டு சென்னை, கோவை, மதுரை, விருதுநகர், திருச்சி உள்ளிட்ட பல்வேறு ஊர்களில் இருந்து வாகனங்களில் வருகை தந்து தாணிப்பாறை வனத்துறை கேட் முன்பு பக்தர்கள் குவிந்தனர்.

    அவர்கள் தங்களை விரைவாக கோவிலுக்கு செல்ல அனுமதிக்க வேண்டும் என கூறியதையடுத்து காலை 6 மணிக்கு வனத்துறை கேட் திறந்து விடப்பட்டு பக்தர்கள் உடைமைகளை சோதனை செய்யப்பட்டது. அப்போது பாலித்தீன் கேரிபை, பீடி, சிகரெட், மது மற்றும் போதை வஸ்து பொருட்கள் கொண்டு செல்கிறார்களா என வனத்துறையினர் சோதனை செய்த பின்பு பக்தர்கள் அனுமதித்தனர்.

    இன்று மாலை 4.30 மணியிலிருந்து 6 மணிக்குள் சுந்தரமகாலிங்கம் சாமிக்கு பால், பழம், பன்னீர் உள்ளிட்ட 18 வகையான அபிஷேகம் நடைபெறுகிறது. அபிஷேகம் முடிந்ததும் சாமி அலங்கரிக்கப்பட்டு சிறப்பு பூஜை நடைபெற உள்ளது. இன்று காலை வெயில் இல்லாத நிலையில் பக்தர்கள் வேகமாக மலையேறிச் சென்றனர். வெயில் தாக்கம் காரணமாக விடுமுறை நாட்களிலும் பக்தர்கள் வருகை மிகவும் குறைந்த நிலையிலே காணப்பட்டது.

    வத்திராயிருப்பு, ஸ்ரீவில்லிபுத்தூர் உள்ளிட்ட இடங்களில் இருந்து அரசு சிறப்பு பஸ்கள் இயக்கப்பட்டன. நாளை மறுநாள் சித்திரை மாத அமாவாசை தினத்தன்றும் பக்தர்கள் அதிகம் வர வாய்ப்பில்லை என்று வனத்துறையினர் கூறினர். கோவிலுக்கு செல்கின்ற வழியில் உள்ள ஓடைகளில் தண்ணீர் இல்லாமல் வறண்டு காணப்படுகிறது.

    நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை சுந்தர மகாலிங்க சுவாமி பரம்பரை அறங்காவலர் ராஜா என்ற பெரியசாமி, செயல் அலுவலர் ராமகிருஷ்ணன் ஆகியோர் செய்துள்ளனர்.

    • வனத்துறையினர் தீவிர சோதனை நடத்தி பக்தர்களை மலையேற அனுமதித்தனர்.
    • மலை பாதைகளில் ஆங்காங்கே வனத்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.

    வத்திராயிருப்பு:

    விருதுநகர் மாவட்டம் வத்திராயிருப்பு அருகே உள்ள மேற்கு தொடர்ச்சி மலையில் பிரசித்தி பெற்ற சதுரகிரி சுந்தர-சந்தன மகாலிங்கம் கோவில் உள்ளது. இங்கு மாதந்தோறும் பவுர்ணமி, அமாவா சையை முன்னிட்டு பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய அனுமதி வழங்கப்பட்டு வருகிறது.

    மார்கழி மாத பிரதோஷம் (இன்று) மற்றும் அமாவாசையை (30-ந்தேதி) முன்னிட்டு இன்று முதல் வருகிற 31-ந்தேதி பக்தர்கள் தரிசனம் செய்ய அனுமதி வழங்கப்பட்டிருந்தது. பிரதோஷங்களில் சனிக்கிழமைகளில் வரும் பிரதோஷம் சிறப்பானதாக கருதப்படுகிறது.

    அதன்படி இந்த வருடத்தில் இறுதியில் அமைந்துள்ள சனி பிரதோஷமான இன்று சதுரகிரிக்கு செல்ல நூற்றுக்கணக்கான பக்தர்கள் அதிகாலையிலேயே மலையடிவாரமான தாணிப்பாறையில் திரண்டனர். காலை 6.30 மணிக்கு நுழைவு வாயில் திறக்கப்பட்டது.

    வனத்துறையினர் தீவிர சோதனை நடத்தி பக்தர்களை மலையேற அனுமதித்தனர். சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை ஆர்வத்துடன் சுமார் 3 முதல் 4 மணி நேரம் வரை மலையேறி சென்று சுந்தர மகாலிங்கத்தை தரிசனம் செய்தனர்.

    மலை பாதைகளில் ஆங்காங்கே வனத்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர். குடிநீர் உள்ளிட்ட வசதிகள் கோவில் பகுதியில் செய்யப்பட்டிருந்தது. காலை 10 மணி வரை திரளான பக்தர்கள் மலையேறி சென்று சாமி தரிசனம் செய்தனர். சனி பிரதோஷத்தை முன்னிட்டு சுந்தர-சந்தன மகாலிங்கத்திற்கு 18 வகையான அபிஷேகங்கள் மற்றும் சிறப்பு பூஜைகள் நடைபெற உள்ளன. இதற்கான ஏற்பாடுகளை கோவில் அறங்காவலர் ராஜா என்ற பெரியசாமி, செயல் அலுவலர் ராம கிருஷ்ணன் செய்துள்ளனர்.

    நாளை விடுமுறை தினம் என்பதால் வழக்கத்தை விட பக்தர்கள் கூட்டம் அதிகமாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    • பக்தர்கள் காலை 6 மணி முதல் மதியம் 12 மணி வரை மட்டுமே மலையேறி செல்ல அனுமதி உண்டு.
    • மலைப்பாதையில் உள்ள நீரோடை பகுதிகளில் பக்தர்கள் குளிப்பதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

    வத்திராயிருப்பு:

    மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் சதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலுக்கு பிரதோஷம் மற்றும் பவுர்ணமியை முன்னிட்டு வருகிற 11-ந் தேதி முதல் 14-ந் தேதி வரை பக்தர்கள் மலையேறி சென்று சாமி தரிசனம் செய்ய கோவில் நிர்வாகம் மற்றும் வனத்துறையினர் அனுமதி வழங்கி உள்ளனர்.

    பக்தர்கள் காலை 6 மணி முதல் மதியம் 12 மணி வரை மட்டுமே மலையேறி செல்ல அனுமதி உண்டு. இரவு நேரத்தில் பக்தர்கள் கோவில் வளாகப்பகுதியில் தங்குவதற்கு அனுமதி கிடையாது.

    மலைப்பாதையில் உள்ள நீரோடை பகுதிகளில் பக்தர்கள் குளிப்பதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. அனுமதிக்கப்பட்ட நாட்களில் எதிர்பாராதவிதமாக மழை பெய்தால் அனுமதி ரத்து செய்யப்படும். பக்தர்களுக்கு தேவையான அடிப்படை வசதிகளை கோவில் நிர்வாகத்தினர் செய்து வருகின்றனர்.

    • செவ்வாய் பிரதோஷமான இன்று காலை 6.40 மணிக்கு மலையடிவாரத்தில் உள்ள நுழைவு வாயில் திறக்கப்பட்டது.
    • பிரதோஷத்தை முன்னிட்டு மலைமேல் உள்ள சுந்தர-சந்தன மகாலிங்கத்திற்கு 18 வகையான அபிஷேகம், சிறப்பு பூஜைகள் நடைபெற்றன.

    வத்திராயிருப்பு:

    விருதுநகர் மாவட்டம் வத்திராயிருப்பு அருகே மேற்கு தொடர்ச்சி மலையில் பிரசித்தி பெற்ற சதுரகிரி சுந்தர-சந்தன மகாலிங்கம் கோவில் உள்ளது.

    இங்கு மாதந்தோறும் அமாவாசை, பவுர்ணமியை முன்னிட்டு தலா 4 நாட்கள் பக்தர்களுக்கு அனுமதி வழங்கப்பட்டு வருகிறது.

    இன்று மாசி மாத பிரதோஷத்தை முன்னிட்டும், 13-ந் தேதி பவுர்ணமியை முன்னிட்டும் இன்று முதல் 4 நாட்கள் பக்தர்களுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

    அதன்படி செவ்வாய் பிரதோஷமான இன்று காலை 6.40 மணிக்கு மலையடிவாரத்தில் உள்ள நுழைவு வாயில் திறக்கப்பட்டது. காத்திருந்த பக்தர்களின் உடமைகள் சோதனை செய்யப்பட்டு மலையேற அனுமதிக்கப்பட்டனர். வத்திராயிருப்பு மற்றும் மலைப்பகுதிகளில் இன்று காலை முதல் சாரல் மழை பெய்தது.

    மேலும் மதுரை, விருதுநகர் உள்ளிட்ட மாவட்டங்களில் மழை காரணமாக சதுரகிரிக்கு பக்தர்களின் வருகை மிகவும் குறைவாக இருந்தது.

    பிரதோஷத்தை முன்னிட்டு மலைமேல் உள்ள சுந்தர-சந்தன மகாலிங்கத்திற்கு 18 வகையான அபிஷேகம், சிறப்பு பூஜைகள் நடைபெற்றன.

    நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை சுந்தர மகாலிங்கம் சாமி பரம்பரை அறங்காவலர் ராஜா என்ற பெரியசாமி, செயல் அலுவலர் ராமகிருஷ்ணன் ஆகியோர் செய்திருந்தனர். 

    ×