என் மலர்
நீங்கள் தேடியது "பாட்டி வைத்தியம்"
- பொன்னாவரை வேர், சுக்கு, மிளகு, சீரகம் கஷாயம் குடித்தால் பித்தபாண்டு தீரும்.
- அகத்திக்கீரை சாப்பிட்டு வந்தால் பித்தக் கோளாறுகள் அகலும்.
விருப்பமான உணவுகள், மசாலா உணவுகள் பேன்றவற்றை பார்த்தால் சாப்பிடலாமா, வேண்டாமா என்ற அச்சம். அதிகம் சாப்பிடலமா சாப்பிட்டால் ஜீரணமாகுமா நெஞ்சு கறிக்குமா...? எதுக்கிக்கெண்டே இருக்குமா? இதுபேன்ற கேள்விகளுக்கெல்லாம் முக்கிய காரணமாக விளங்குவது பித்தம். இந்த பித்தம் தெடர்பான பிரச்சினைகளையும், அதனை பேக்கும் எளிய இயற்கை மருத்துவ முறைகளையும் பார்க்க்கலாம்....

* இஞ்சித் துண்டை தேனில் ஊறவைத்து 48 நாட்கள் சாப்பிட்டு வந்தால் பித்தம் தெளிந்து ஆயுள் பெருகும்.
* இஞ்சிச் சாறு, வெங்காயச் சாறு தேன் கலந்து குடித்தால் பித்த மயக்கம் தீரும்.
* பழுத்த மாம்பழத்தை சாறு பிழிந்து அந்த சாறை அடுப்பில் லேசாக சூடேற்றி பின் ஆறவைத்து சாப்பிட்டு வந்தால் பித்தம் குறையும்.
* எலுமிச்சை சாதம் வாரத்தில் மூன்று நாள் காலையில் சாப்பிட்டால் பித்தத்தை தணிக்கும்.
* ரோஜாப்பூ கஷாயம், பால் சர்க்கரை கூட்டி சாப்பிட்டால் பித்த நீர் மலத்துடன் வெளியேறும்.
* பொன்னாவரை வேர், சுக்கு, மிளகு, சீரகம் கஷாயம் குடித்தால் பித்தபாண்டு தீரும்.
* விளாம்பழம் கிடைக்கும் காலங்களில் தினசரி ஒன்று சாப்பிட்டு வந்தால் பித்தத்தை குறைக்கலாம்.
* அகத்திக்கீரை சாப்பிட்டு வந்தால் பித்தக் கோளாறுகள் அகலும்.
* பனங்கிழங்கு சாப்பிட்டால் பித்தம் நீக்கி உடல் பலம் பெருகும்.
* கமலா பழம் (ஆரஞ்சு) சாப்பிட்டால் உடல் உஷ்ணத்தை தணிக்கும்.
* நத்தைசூரி விதையை வறுத்து பொடித்து காய்ச்சி கற்கண்டு சேர்த்து சாப்பிட்டு வர கல்லடைப்பு தீரும்.
* எலுமிச்சை இலையை மோரில் ஊறவைத்து அந்த மோரை உணவில் பயன்படுத்தி வந்தால் பித்த சூடு தணியும்.
* அரச மரக் குச்சியை சிறு துண்டுகளாக வெட்டி சட்டியில் போட்டு காய்ச்சி ஆறவைத்து, அந்த நீரில் தேன் கலந்து குடித்தால் ரத்தத்தில் உள்ள பித்தம் குறையும்.
- இயற்கை முறையில் மருந்து தயாரித்து குழந்தைகளுக்கு கொடுக்கலாம்.
- இஞ்சியுடன் சுத்தம் செய்த வேப்பிலை சேர்த்து, சிறிதளவு உப்பும் சேர்த்து நன்கு அரைக்கவும்.
குழந்தைகள் பால், சாக்லேட், இனிப்பு வகைகள் சாப்பிடுவதால் வயிற்றில் பூச்சிகள் இருக்கும். குழந்தைகள் முகத்தில் அங்கங்கே தேமல் இருந்தால், சாப்பாடு சரியாக உட்கொள்ளாமல் இருப்பது, அடிக்கடி வயிற்று வலியால் பாதிக்கப்பட்டால் கண்டிப்பாக பூச்சி வயிற்றில் இருக்கும்.
இதற்கு 6 மாதத்திற்கு ஒரு முறை பூச்சி மருந்து டாக்டரிடம் காண்பித்து கொடுப்பது நல்லது. இயற்கை முறையிலும் மருந்து தயாரித்து குழந்தைகளுக்கு கொடுக்கலாம். குழந்தைகள் என்றில்லை பெரியவர்களுக்கும் இந்த மருந்து சிறந்தது.
தேவையான பொருட்கள்:
இஞ்சி - 50 கிராம்
வேப்பிலை - 20 இலைகள்
தேன் - தேவையான அளவு
உப்பு - ஒரு சிட்டிகை
சர்க்கரை - சிறிதளவு
செய்முறை:
இஞ்சியை தோல் நீக்கி பொடியாக நறுக்கிக் கொள்ளவும். இஞ்சியுடன் சுத்தம் செய்த வேப்பிலை சேர்த்து, சிறிதளவு உப்பும் சேர்த்து நன்கு அரைக்கவும். அரைத்த விழுதை வடிகட்டவும்.
வடித்த சாறை அப்படியே 15 நிமிடம் வைக்கவும், அடியில் நஞ்சு தங்கி இருக்கும். மேலோடு தெளிந்த சாறை மட்டும் எடுத்து கசப்பு தெரியாமல் இருக்க தேவைக்கு தேன் கலந்து குடிக்கவும்.
கைக்குழந்தைகள் அதிக இனிப்பு சாப்பிட வாய்ப்பு இருக்காது தேவைபட்டால் அரை சங்கு ஊற்றலாம். 9 முதல் 3 வயது வரை உள்ள குழந்தைகளுக்கு 1 சங்கு முழுவதும் கொடுக்கலாம்.
அதற்கு மேற்பட்ட வயது மற்றும் பெரியவர்கள் கால் டம்ளர் குடிக்கலாம். சிறியவர்களுக்கு தேன் நன்றாக கலந்து கொடுக்கலாம். வயதிற்கு வந்த பெண்களுக்கு வரும் வயிறு உபாதைகளுக்கு இது சிறந்த மருந்து. கர்ப்பிணி பெண்கள் இதை சாப்பிடக்கூடாது. கர்ப்பம் தரிப்பதற்கு முன், குழந்தை பெற்ற பிறகு இதை அடிக்கடி செய்து குடிக்கலாம்.
ஆறு மாதத்திற்கு ஒரு முறை என்றில்லாமல் அடிக்கடி இதை செய்து குடிக்கலாம்.
- நுரையீரலை ஆரோக்கியமாக வைத்திருந்தாலே பல நோய்களில் இருந்து விடுபடலாம்.
- அதிகப்படியான சளியின் காரணமாகவே பல பிரச்சினைகள் நேர்கின்றன.
நுரையீரல் பாதித்தாலே சளி, இருமல், காய்ச்சல் உள்பட பல பிரச்சனைகளுக்கு ஆளாக நேரிடுகிறது. நம் நுரையீரலை ஆரோக்கியமாக வைத்திருந்தாலே பல நோய்களில் இருந்து விடுபடலாம். அதேபோல் நம் உடலுக்கு சளியும் தேவை. ஏனெனில் அது உடலுக்கு பாதுகாப்பு வளையமாக செயல்படுகிறது.
சில பாக்டீரியா அல்லது வைரஸை சுவாசிக்கும்போது, அது நுரையீரலில் உள்ள சளியால் சிக்கிக்கொள்ளும்.இதனால் நம் உடலுக்குள் செல்வதைத் தடுக்கிறது. இந்த சளியானது பின்னர் தும்மல், இருமல் அல்லது மூக்கு ஒழுகுதல் மூலம் வெளியேறுகிறது. அதிகப்படியான சளியின் காரணமாகவே பல பிரச்சனைகள் நேர்கின்றன.
ஒரு ஸ்பூன் வெந்தயத்துடன் ஒரு கிளாஸ் தண்ணீர் ஊற்றி சுமார் 4 முதல் 5 நிமிடங்கள் கொதிக்க விடவும், இதனை தினமும் குடித்து வந்தால் சளி கரைந்து வெளியேறும். நன்கு இழுத்து மூச்சு விடுதல் பயிற்சி அல்லது உடற்பயிற்சி எதுவானாலும் நன்கு மூச்சை இழுத்து விடும்போது நுரையீரல் சளி கரைந்து வெளியேற வாய்ப்பு உள்ளது.

கொதிக்கும் நீரில் அடிக்கடி ஆவி பிடித்தாலும் சளி கரைந்து வெளியேறும். தண்ணீரில் உப்பு கலந்து கொதிக்கவிடுங்கள். வெதுவெதுப்பாக இருக்கும்போது வாயில் ஊற்றி கொப்பளிக்க சளி குறைந்து நுரையீரல் ஆரோக்கியமாக வாய்ப்பு உள்ளது.
- சளி, இருமல், காய்ச்சல் போன்றவற்றிற்கும் இது அருமருந்தாகும்.
- வாரம் ஒருமுறை சாப்பிடுவது அனைவருக்குமே நல்லது.
தீபாவளி விருந்தாலும், பலகாரங்களாலும் ஏற்படும் வயிற்று உப்புசம், அஜீரணக் கோளாறு, திடீர் ஏப்பங்கள், வாந்தி, வயிற்று வலி, அசதி போன்றவற்றுக்கு லேகியம் நிவாரணம் கொடுக்கும். கூடவே பனிக்காலத்தில் வரக்கூடிய சளி, இருமல், காய்ச்சல் போன்றவற்றிற்கும் இது அருமருந்தாகும்.
தீபாவளி தினத்தில் மட்டுமல்லாமல், மற்ற நேரங்களிலும் இந்த லேகியத்தை சாப்பிடலாம். இது செரிமானக் கோளாறுகள் ஏற்படாமல் பாதுகாக்கும். பொதுவாகவே நாம் உண்ணும் உணவுகளில் கொழுப்புச்சத்து நிறைந்திருக்கிறது. இந்த லேகியத்தை வாரம் ஒருமுறை சாப்பிடுவது அனைவருக்குமே நல்லது.
தேவையான பொருள்கள்:
சுக்கு - 50 கிராம்
மிளகு - 50 கிராம்
திப்பிலி - 50 கிராம்
சதகுப்பை - 30கிராம்
சிறுநாகப்பூ - 50 கிராம்
வாய்விடங்கம் - 50 கிராம்
கருஞ்சீரகம் - 50 கிராம்
சீரகம் - 50 கிராம்
லவங்கப்பட்டை - 50 கிராம்
கோரைக் கிழங்கு - 50 கிராம்
கொத்தமல்லி - 30 கிராம்
சித்தரத்தை - 30 கிராம்
ஓமம் - 30 கிராம்
அதிமதுரம் - 20 கிராம்
கிராம்பு - 20 கிராம்
வெல்லம்- 300 கிராம்
தேன் - 100 கிராம்
நெய் - 100 மில்லி

செய்முறை:
* அடுப்பில் பாத்திரம் வைத்து, மேலே குறிப்பிட்டுள்ள ஒவ்வொரு பொருளையும் தனித்தனியாக சிறு தீயில் வைத்து வறுத்து எடுத்துக் கொள்ள வேண்டும்.
* வறுத்து வைத்த ஒவ்வொரு பொருளையும் தனித்தனியாக நன்றாக மிக்சி ஜாரில் போட்டு அரைத்து, சலித்து எடுத்து வைத்துக்கொள்ள வேண்டும்.
* லேகியத்திற்கு வேண்டிய அளவு வெல்லத்தை எடுத்து ஒரு அடி கனமான பாத்திரத்தில் சேர்த்து பாகு காய்ச்ச வேண்ம்.
* பாகு கம்பி பதம் வந்தவுடன் அடுப்பில் இருந்து எடுக்காமல் தீயை கொஞ்சம் குறைத்து வைத்து, அரைத்து வைத்திருக்கும் அனைத்து பொடிகளை ஒன்றன் பின் ஒன்றாக சிறிது சிறிதாக கெட்டி ஆகாமல் சேர்த்து கைவிடாமல் கிளறிக்கொண்டே இருக்க வேண்டும்.
* பின்னர் வாணலியை இறக்கி வைத்து நெய் விட்டு நன்றாகக் கிளறி சிறிது ஆறிய பின் சிறிது சிறிதாக தேன் விட்டுக் கிளறி வேறு பாத்திரத்தில் எடுத்து வைத்துக் கொள்ளவும்.
* ஆறிய பின்னர் வயதுக்கு ஏற்றவாறு 3 - 12 வயது வரை 5 கிராம் காலை மற்றும் இரவு உணவிற்குப் பிறகு எடுத்து சாப்பிடலாம். 13 வயதுக்கு மேற்பட்டோர் 10 கிராம் அளவு எடுத்து காலை மற்றும் இரவு உணவிற்குப் பிறகு சாப்பிடலாம்.
-சித்த மருத்துவர் காமராஜ்..
- சுக்கு செரிமானம் மற்றும் அழற்சி எதிர்ப்பு பண்புகளுக்கு பெயர் பெற்றது.
- மிளகு உடலில் கபத்தை சமநிலைப்படுத்துகிறது.
வாதம், பித்தம், கபம் ஆகிய மூன்றில் எது அதிகமானாலும், குறைந்தாலும் நோய் உண்டாகும். இவை முத்தாதுக்கள் அல்லது திரிதோடங்கள் என்று சித்த மருத்துவத்தில் கூறப்பட்டுள்ளது.

நோய்க்கு தரப்படுகின்ற சித்த மருந்துகள் வாத, பித்த, கப நிலையை சமன் செய்து உடம்பை இயல்பு நிலைக்கு திரும்பக் கொண்டு வருகிறது. முத்தோடங்கள் இயல்பு நிலையை அடைந்ததும், நோய் குணமடைகிறது.
இந்த திரிதோடத்தை சமன் செய்ய ஏலம், மஞ்சள், சீரகம், மிளகு, சுக்கு, பெருங்காயம், பூண்டு, வெந்தயம் போன்றவை உதவுகின்றன. இவை அனைத்தும் நமது சமையலறை அஞ்சறைப் பெட்டியிலும் தவறாமல் இருக்கும். இவற்றை அன்றாடம் முறையாக பயன்படுத்தும் போது முத்தோடங்களும் உடம்பில் சமச்சீராக இருக்கும்.

சுக்கு
இது கார்ப்பு சுவை உடையது. செரிமானம் மற்றும் அழற்சி எதிர்ப்பு பண்புகளுக்கு பெயர் பெற்றது. அஜீரணத்தை நீக்கும். உடலில் 'வாதம்' சமநிலைப்படுத்த உதவுகிறது. கிழங்கு சார்ந்த உணவுகள் சமைக்கும் போது இதை சேர்க்கவும். இஞ்சியாகவும் இதை பயன்படுத்தலாம்.

மஞ்சள்
இது கசப்பு, கார்ப்பு சுவைகளை உடையது. சக்தி வாய்ந்த அழற்சி எதிர்ப்பு மற்றும் சிறந்த ஆக்ஸிஜனேற்ற பண்புகளை கொண்ட இது, உடலில் வாதம், பித்தம், கபம் ஆகிய மூன்றையும் சமநிலைப்படுத்துகிறது. இதை இனிப்பு பண்டங்களைத் தவிர மற்ற எல்லா உணவிலும் சேர்க்கலாம்.

மிளகு
காரத்தன்மை உள்ள இதன் நஞ்சு எதிர்ப்பு ஆற்றல் அலாதியானது. இது செரிமானத்திற்கும் உதவுகிறது, உடலில் கபத்தை சமநிலைப்படுத்துகிறது. மிளகாய்க்கு மாற்றாக இதைப் பயன்படுத்துவது நல்லது.

பூண்டு
வைரஸ் எதிர்ப்பு மற்றும் பாக்டீரியா எதிர்ப்பு பண்புகள் நிறைந்த இது வாதம், பித்தம், கபம் மூன்றையும்சமநிலைப்படுத்த உதவுகிறது. பருப்பு மற்றும் கிழங்கு சார்ந்த உணவுகள் சமைக்கும் போது இதை சேர்க்க வேண்டும்.

சீரகம்
சிறிது கார்ப்பு சுவையுடைய இது, உடலின் உள் உறுப்புகளை சீர்படுத்துகிறது. செரிமானத்திற்கு உதவுகிறது. உடலில் பித்தத்தை சமநிலைப்படுத்துகிறது. வயிற்று உப்புசத்தை குறைக்க சிறந்தது. காரமான உணவு வகைகள் சமைக்கும் போது இதை சேர்க்க வேண்டும்.

ஏலக்காய்
சிறிது கார்ப்பு, இனிப்பு சுவையுடையது. இது செரிமானத்திற்கு உதவும், உடல் வெப்பத்தை தணிக்கும், வாய் துர்நாற்றத்தை தடுக்கிறது. இனிப்புகள் மற்றும் இறைச்சி சமைக்கும் போது இதை சேர்க்க வேண்டும்.

பெருங்காயம்
கார்ப்பு, கசப்பு சுவைகளை உடையது. செரிமானத்திற்கு உதவும் இது, வாயு, வயிற்றுப் பொருமல், வயிறு எரிச்சல் ஆகியவற்றை நீக்கும். கிழங்கு, பருப்பு வகைகள் சமைக்கும் போது இதை பயன்படுத்த வேண்டும்.

வெந்தயம்
இரும்பு போன்று உடலை உறுதியாக்கும் இது, கசப்பு சுவையுடையது. உடலில் பித்தத்தை நீக்கும். வெந்தய விதைகளில் நார்ச்சத்து மற்றும் ஆன்டி-ஆக்ஸிடன்ட்கள் நிறைந்துள்ளன. செரிமானத்தை மேம்படுத்தவும், மலச்சிக்கலை போக்கவும் உதவுகிறது. காரமான உணவுகளை சமைக்கும் போது இதை சேர்க்கவும்.