search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ஹீட் ஸ்ட்ரோக்"

    • வெப்ப அலையால் ஏற்படும் ஹீட் ஸ்ட்ரோக் காரணமாக இந்தியாவில் உயிரிழப்ப்பு எண்ணிக்கை 250 ஐ கடந்துள்ளது.
    • நாடு முழுவதும் உள்ள பெரு நகரங்கள் முதல் டவுன்கள் வரை இந்த டெலிவரி தொழிலாளர்கள் நாள் முழுவதும் சாலைகளின் குறுக்கும் நெடுக்குமாக அழைத்த வண்ணம் உள்ளனர்.

    இந்தியாவில் வழக்கத்தை மீறி இந்த வருடம் அளவுக்கு அதிகமான வெயில் மக்களை வாட்டி வதைத்து வருகிறது. வாடா மாநிலங்களான டெல்லி, ராஜஸ்தான், ஹரியானா உள்ளிட்ட இடங்களில் வரலாறு காணாத வெயில் பதிவாகியுள்ளது.

    வெப்ப அலையால் ஏற்படும் ஹீட் ஸ்ட்ரோக் காரணமாக இந்தியாவில் உயிரிழப்ப்பு எண்ணிக்கை 250 ஐ கடந்துள்ளது. முக்கியமாக மதியம் 12 மணி முதல் 4 மணி வரை நிலவும் அதீத வெப்ப அலையால், குழந்தைகள், பெண்கள், உடல் நலம் குன்றியோரர், இணை நோய்கள் உள்ளோர், நாள் முழுவதும் வெயிலில் வேலை செய்யக்கூடிய கட்டுமானப் பணிகள் உள்ளிட்டவற்றில் ஈடுபடும் தொழிலாளர்கள் ஆவர்.

     

    இந்த வகை தொழிலாளர்களில் கிக் ஒர்க்கர்ஸ் என்று அழைக்கப்படும் உணவு டெலிவரி, பொருட்கள் டெலிவரி செய்யும் தொழிலாளர்களும் அடங்குவர். டிஜிட்டல் மயமான உலகில் மக்கள் கடைகளுக்கு செல்வத்தைத் தவிர்த்து வீட்டிலிருந்தபடியே அனைத்தும் கிடைக்க வேண்டும் என்று விரும்புவதால் நாடு முழுவதும் உள்ள பெரு நகரங்கள் முதல் டவுன்கள் வரை இந்த டெலிவரி தொழிலாளர்கள் நாள் முழுவதும் சாலைகளின் குறுக்கும் நெடுக்குமாக அழைத்த வண்ணம் உள்ளனர்.

     

    இந்த நிலையில் சமாளிக்க முடியாத வகையில் அதிகரித்து வரும் வெயில் காரணமாக இந்தியாவின் முன்னணி உணவு டெலிவரி நிறுவனமான ஸோமாட்டோ வாடியளர்களுக்கு வேண்டுகோள் ஒன்றை விடுத்துள்ளது. ஸோமாட்டோ நிறுவனம் தனது அதிகாரபூர்வ எக்ஸ் பக்கத்தில் கூறியிருப்பதாவது, இந்தியா முழுவதும் உள்ள நகரங்களில் வெப்பம் அதிகரித்து வருவதால், மிகவும் அத்தியாவசியமாக தேவைப்படாத பட்சத்தில் மதிய நேரங்களில் உணவு ஆர்டர் செய்வதை வாடிக்கையாளர்கள் தவிர்த்துக்கொள்ள வேண்டும் என்று வேண்டுகோள் விடுத்துள்ளது

    தொழிலாளர்கள் மீது அக்கறை கொண்டு ஸோமாட்டோ வெளியிட்டுள்ள இந்த பதிவுக்கு நெட்டிசன்கள் தங்களின் ஆதாராவை தெரிவித்து வருகின்றனர். இதற்கிடையில் உண்மையாகவே தொழிலாளர்கள் மீது அக்கறை இருந்தால் மதிய நேரங்களில் உணவு ஆர்டர்களை ஏற்காமாட்டோம் என்று ஸ்வ்மாடோ அறிவித்திருக்க வேண்டும் என்ற விமர்சனங்களும் எழுந்துள்ளன. 

     

    • அதிக வெப்பம் காரணமாக ஹீட் ஸ்ட்ரோக் உயிரிழப்புகள் இந்தியாவில் தலையெடுக்கத் தொடங்கியுள்ளன.
    • வெயில் காலம் தொடங்கியதிலிருந்து ஒடிசாவில் மட்டும் இதுவரை 141 ஹீட் ஸ்ட்ரோக் மரணங்கள் நிகழ்ந்துள்ளதாக அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது

    காலநிலை நிலை மாற்றத்தால் மக்கள் மறைமுகமாக பாதிக்கப்பட்ட காலம் மாறி துரதிஷ்டவசமாக நேரடியாகவே பாதிக்கட்டும் காலம் வந்துவிட்டது. உலகம் முழுவதும் மனிதர்களால் ஏற்படுத்தப்பட்ட பஞ்சம், பசி , பட்டினி, போர் ஆகியவற்றால் கொத்துக்கொத்தாக மக்கள் செத்துக்கொண்டிருக்கும் வேலையில் இயற்கையால் ஏற்படுத்தத்ப்பட்ட புயல், வெள்ளம் உள்ளிட்ட பேரிடர்களாலும் சமீப காலங்களில் அதிக உயிரிழப்பு ஏற்பட்டு வருகிறது. இதனோடு அதிக வெப்பம் காரணமாக ஹீட் ஸ்ட்ரோக் உயிரிழப்புகள் இந்தியாவில் தலையெடுக்கத் தொடங்கியுள்ளன.

    முக்கியமாக வட மாநிலங்களில் நிலவிவரும் வரலாறு காணாத வெளியில் காரணமாக மக்கள் கடும் அவதிக்கு உள்ளாகி வருகின்றனர். வடகிழக்கு மாநிலமான ஒடிசாவில் கடந்த மே 30ஆம் தேதி ஒரே நாளில் ஹீட் காரணமாக 42 பேர் உயிரிழந்ததாகத் தகவல் வெளியானது. இந்நிலையில் கடந்த 72 மணி நேரத்தில் மற்றும் 99 பேர்ஹீட் ஸ்டார்க் காரணமாக உயிரிழந்துள்ளனர் என்று ஒடிசா அரசு தெரிவித்துள்ளது.

    வெயில் காலம் தொடங்கியதிலிருந்து ஒடிசாவில் மட்டும் இதுவரை 141 ஹீட் ஸ்ட்ரோக் மரணங்கள் நிகழ்ந்துள்ளதாக அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. இந்த வருடம் இந்தியாவில் ஹீட் ஸ்ட்ரோக்கால் ஏற்பட்ட உயிரிழப்பு எண்ணிக்கை 250 ஐ கடந்துள்ளது குறிப்பிடத்தக்கது.  

    • டெல்லியின் முன்கேஸ்பூர் பகுதியில் இன்று சுமார் 52.3 டிகிரி செல்ஸியஸ் வெப்பம் பதிவாகியுள்ளதாக இந்திய வானிலை மையம் தெரிவித்துள்ளது.
    • கடைசியாக கடந்த 2002 ஆம் ஆண்டு பதிவான 49.2 டிகிரி செல்ஸியஸ் என்பதே அதிகபட்சமாக வெப்பநிலையாக இருந்தது.

    காலநிலை மாற்றத்தால் உலகம் முழுவதும் ஏற்படத் தொடங்கியிருக்கும் அசாதாரணமான பருவநிலை இந்தியாவிலும் கடும் தாக்கத்தை ஏற்படுத்திவருகிறது. இயல்பாகவே அதீத காலநிலை நிலவும் இந்தியாவின் தலைநகரமான டெல்லியில் கடுமையான வெயில் வாட்டி வதைக்கத் தொடங்கியுள்ளது. இதனால் நகரம் முழுவதும் ஏற்பட்டுள்ள தண்ணீர் பஞ்சத்தால் மக்கள் கடும் அவதிக்கு உள்ளாகி வருகின்றனர்.

     

    இந்நிலையில் வரலாறு காணாத வகையில் இந்தியாவில் இதுவரை பதிவான அதிகபட்ச வெப்பநிலை டெல்லியில் இன்று (மே 29) பதிவாகியுள்ளது. அதன்படி டெல்லியின் முன்கேஸ்பூர் பகுதியில் இன்று சுமார் 52.3 டிகிரி செல்ஸியஸ் வெப்பம் பதிவாகியுள்ளதாக இந்திய வானிலை மையம் தெரிவித்துள்ளது.

     

    இது குறித்து விளக்கம் அளித்துள்ள இந்திய வானிலை மைய வட்டார இயக்குனர் குல்தீப் ஸ்ரீவத்சவா, ராஜஸ்தானில் இருந்துவீசும் வெப்பக் காற்றானது டெல்லியின் புறநகர் பகுதிகளை முதலில் தாக்குவதால் ஏற்கனவே நகரத்தில் நிலவில் அதீத வெப்பநிலையுடன் வெளியில் இருந்து வரும் இந்த வெப்பக்க காற்றானது இணைந்ததில் வரலாறு காணாத வெப்பநிலை பதிவாகியுள்ளதாக தெரிவித்தார்.

     

    52.3 டிகிரி செல்ஸியஸ் என்பது டெல்லியில் இன்று சராசரியாக கணிக்கப்பட்ட வெப்பநிலையை விட 9 டிகிரி அதிகமாக பதிவாகியுள்ளது. கடைசியாக கடந்த 2002 ஆம் ஆண்டு பதிவான 49.2 டிகிரி செல்ஸியஸ் என்பதே அதிகபட்சமாக வெப்பநிலையாக இருந்தது.

    சுமார் 30 மில்லியன் மக்கள் வாழும் டெல்லியில் தற்போது ஏற்பட்டுள்ள இந்த கால நிலை மாற்றத்தின் தாக்கம் விபரீத விளைவுகளை ஏற்படுத்தும் என்று அஞ்சப்படுகிறது. ஹீட் ஸ்டார்க் உள்ளிட்ட வெப்ப பாதிப்புளில் இருந்து மக்கள் தங்களை பாதுகாத்துக்கொள்ள வேண்டும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

     

    டெல்லி தவிர்த்து இன்று ராஜஸ்தானில் 51 டிகிரி செல்சியஸும், அரியானாவில் 50.3 டிகிரி செல்சியஸும் அதிகபட்ச வெப்பநிலையாக பதிவாகியுள்ளது. இதற்கிடையில் கடும் வெப்பத்துக்கு மத்தியிலும் இன்று மாலை வேலையில் டெல்லியின் ஓரிரு பகுதிகளில் லேசான மழை பெய்துள்ளதால் மக்கள் சற்று ஆசுவாசம் அடைந்துள்ளனர். 

    • சென்னையில் மாநகராட்சி கட்டுப்பாட்டில் உள்ள 140 நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலையங்கள் மற்றும் நலவாழ்வு மையங்கள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன
    • ஹீட் ஸ்ட்ரோக்' ஏற்பட்டால் உடனடியாக சிகிச்சை அளிக்கப்படும். இதற்காக நகர் முழுவதும் தேவையான வழிகாட்டி பலகைகள் வைக்கப்பட்டுள்ளன

    சென்னை மீஞ்சூரில் கடும் வெயிலில் கட்டட வேலையில் ஈடுபட்டிருந்த உத்தரப் பிரதேசத்தைச் சேர்ந்த தொழிலாளி சச்சின் (25), 'ஹீட் ஸ்ட்ரோக்' ஏற்பட்டு ராஜிவ் காந்தி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார்.

    இந்நிலையில், இன்று அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.

    சென்னையில் கடுமையான வெப்பம் தாக்குவதால் வெப்பத்தால் ஏற்படும் ஹீட் ஸ்ட்ரோக் பாதிப்புகளுக்கு அவசர சிகிச்சை அளிப்பதற்காக நகரில் உள்ள 140 நகர்ப்புற சுகாதார நிலையங்களும் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன. 

    • கடும் வெயிலின் காரணமாக காமேசுக்கு ஹீட் ஸ்ட்ரோக் ஏற்பட்டு திடீரென மயக்கம் போட்டு விழுந்துள்ளார்.
    • மும்பையில் இருந்து காமேசை ஆம்புலன்சில் கொண்டு வர ரூ.82 ஆயிரம் செலவானதாக கூறப்படுகிறது.

    திருக்கனூர்:

    புதுச்சேரியில் எந்த ஆண்டும் இல்லாத அளவுக்கு கடும் வெயில் சுட்டெரித்து வருகிறது. நேற்று 100 டிகிரியை தாண்டி வெயில் அடித்ததால் பொதுமக்கள் பெரிதும் அவதிப்பட்டு வருகிறார்கள். பலரும் வீட்டை விட்டு வெளியே வர முடியாத அளவிற்கு வெப்பம் அதிகரித்துள்ளது.

    புதுச்சேரி திருக்கனூர் புதுநகரை சேர்ந்தவர் முருகன் ராமசாமி. தனியார் நிறுவனத்தில் காவலாளியாக பணிபுரிந்து வருகிறார். இவரது இளைய மகன் காமேஷ் (வயது 23) மரைன் என்ஜினீயரிங் படித்துள்ளார். வேலை தேடி காமேஷ் கடந்த மாதம் மும்பைக்கு சென்றார்.

    அங்கு ஒரு அறையில் வாடகைக்கு தங்கி பல நிறுவனங்களுக்கு வெயிலில் சென்று அலைந்து திரிந்து வேலை தேடியுள்ளார். ஆனால் அவருக்கு சரியான வேலை கிடைக்கவில்லை.

    இந்த நிலையில் கடும் வெயிலின் காரணமாக காமேசுக்கு ஹீட் ஸ்ட்ரோக் ஏற்பட்டு திடீரென மயக்கம் போட்டு விழுந்துள்ளார். அங்கிருந்தவர்கள் அவரை மீட்டு மும்பை அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு கொண்டு சென்றனர்.

    அங்கு அவருக்கு போதுமான சிகிச்சை அளிக்கப்படாததால் முருகன் ராமசாமி காமேசை மும்பையில் இருந்து தனியார் ஆம்புலன்ஸ் மூலமாக சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு கொண்டு வந்து மேல் சிகிச்சைக்காக அனுமதித்துள்ளார்.

    மும்பையில் இருந்து காமேசை ஆம்புலன்சில் கொண்டு வர ரூ.82 ஆயிரம் செலவானதாக கூறப்படுகிறது.

    அந்த பணத்தையே முருகன் ராமசாமி கடன் வாங்கி செலுத்திய நிலையில் தற்போது தனியார் மருத்துவமனையில் பல லட்சம் செலவாகும் என்பதால் என்ன செய்வது என தெரியாமல் தவித்து வருகிறார்.

    வறுமையில் வாடும் முருகன் ராமசாமி தனது மகனின் உயிர் காக்க தன்னார்வலர்களும் புதுச்சேரி அரசும் உதவிட வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளார்.

    திருக்கனூர் இளைஞர் மும்பையில் ஹீட் ஸ்ட்ரோக் ஏற்பட்டு சென்னையில் அனுமதிக்கப்பட்டுள்ள சம்பவம் திருக்கனூர் பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

    • வெப்பம் தணியாமல் தொடர்ந்து அதிகரித்து வருவதால் நோய்வாய்ப்பட்டவர்கள் மருத்துவ உதவி பெற வேண்டும்.
    • கருப்பு நிற ஆடை அணிந்து வெளியே செல்ல வேண்டாம்.

    சென்னை:

    சென்னையில் கடுமையான வெப்பம் தாக்குவதால் வெப்பத்தால் ஏற்படும் பாதிப்புகளுக்கு அவசர சிகிச்சை அளிப்பதற்காக நகரில் உள்ள 140 நகர்ப்புற சுகாதார நிலையங்களும் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன.

    இந்த ஆஸ்பத்திரிகளை மாநகராட்சி கமிஷனர் டாக்டர் ராதாகிருஷ்ணன் நேரில் பார்வையிட்டார். பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

    வெப்பம் தணியாமல் தொடர்ந்து அதிகரித்து வருவதால் நோய்வாய்ப்பட்டவர்கள் மருத்துவ உதவி பெற வேண்டும். சென்னையில் மாநகராட்சி கட்டுப்பாட்டில் உள்ள 140 நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலையங்கள் மற்றும் நலவாழ்வு மையங்கள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன. 'ஹீட் ஸ்ட்ரோக்' ஏற்பட்டால் உடனடியாக சிகிச்சை அளிக்கப்படும். இதற்காக நகர் முழுவதும் தேவையான வழிகாட்டி பலகைகள் வைக்கப்பட்டுள்ளன.

     

    நகரில் 188 இடங்களில் கவுண்டர் அமைத்து வாய் வழி ரீ-ஹைட்ரஜன் (ஓ.ஆர்.எஸ்.) கரைசல் வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இணைநோய் உள்ளவர்கள் மிக கவனமாக இருக்க வேண்டும். நண்பகல் 11 மணி முதல் மாலை 3 மணி வரை வெயிலில் நடமாடுவதை தவிர்க்க வேண்டும்.

    கருப்பு நிற ஆடை அணிந்து வெளியே செல்ல வேண்டாம். தலையில் தொப்பி அல்லது தலைப்பாகை அணிந்து வெளியில் செல்ல வேண்டும்.

    வெயிலில் குழந்தைகளை விளையாட அனுமதிக்கக்கூடாது. நிறைய தண்ணீர் அருந்த வேண்டும். காரமான உணவு வகைகளை தவிர்க்க வேண்டும். தர்பூசணி, இளநீர், பழச்சாறுகள் அருந்த வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • வெப்ப தாக்குதல் மிகவும் அதிகமானால் ஹீட் ஸ்ட்ரோக் வரலாம்.
    • வெயில் நேரத்தில் தீவிர உடற்பயிற்சிகள் செய்யக்கூடாது.

    வெயில் பாதிப்பினால் உடலில் வெப்பம் அதிகரித்து நீர்ச்சத்து குறைந்து வறட்சி ஏற்பட்டு சோர்வு, களைப்பு, மயக்கம் உண்டாகிறது.

    வெப்ப தாக்குதல் மிகவும் அதிகமானால் 'ஹீட் ஸ்ட்ரோக்' எனப்படும் 'வெப்ப பக்கவாதம் வரலாம். இந்த பாதிப்புக்கு ஆளானவர்களுக்கு உடனடியாக சிகிச்சை அளிக்க வேண்டும். இல்லை என்றால், மூளை, இதயம், சிறுநீரகம் மற்றும் உடல் தசைகளை விரைவாக இது சேதப்படுத்தும். சில சூழ்நிலைகளில் உயிருக்கும் ஆபத்து ஏற்படுத்தும்.

    வெப்ப பக்கவாதத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு அவசர சிகிச்சை கிடைக்கும் வரை கீழ்க்கண்ட முதல் உதவி அளிக்க வேண்டும்.

    1) பாதிக்கப்பட்டவரை நிழ லான அல்லது குளிரூட்டப்பட்ட இடத்திற்கு அழைத்துச் செல்ல வேண்டும்.

    2) ஈரமான துணி மூலம் உடலை துடைக்கலாம். குளிர்ந்த நீரை உடலில் தெளிப்பதன் மூலம் வெப்பத்தை தணிக்க வேண்டும்.

    3) வியர்வை மூலம் உடலில் உப்பு சத்து குறைவதால், குளிர்பானங்கள் மற்றும் இழந்த உப்பை ஈடுசெய்யும் பானங்களை குடிக்க கொடுக்க வேண்டும்.

    பொதுவாக வெயில் பாதிப்பில் இருந்து உடம்பை பாதுகாப்பதற்கான வழிமுறைகள்:

    1) வெயில் நேரத்தில் தீவிர உடற்பயிற்சிகள் செய்யக்கூடாது, அடிக்கடி முகம், கை.கால்கள் கழுவிக் கொள்ள வேண்டும்.

    2) நைலான். பாலிஸ்டர் போன்ற துணிகளால் செய்த உடைகளை தவிர்த்து பருத்தி உடைகளை அணிய வேண்டும்.

    3) மண் பானையில் வெட்டிவேர் போட்டு மறுநாள் அந்த தண்ணீரை குடிக்கும் பொழுது உடலுக்கு குளிர்ச்சி கிடைக்கும். நா வறட்சி நீங்கும்.

    4) அவ்வப்போது மோர், இளநீர், நுங்கு, பதநீர், நீராகாரம் அல்லது தண்ணீர் குடிக்க வேண்டும். வெயில் காலத்தில் காரமான உணவுகள், அத்துடன் கோழி, நண்டு, இறால் போன்ற உஷ்ணத்தை அதிகப்படுத்தும் அசைவ உணவுகளை தவிர்ப்பது நல்லது.

    5) எலுமிச்சை பழச்சாற்றில் உப்பு, சர்க்கரை சேர்த்து ஜூஸ் போட்டு குடிக்க வேண்டும். நன்னாரி சர்பத், வில்வ பழ சர்பத், பதநீர், இளநீர், கரும்புச் சாறு, தர்ப்பூசணி ஜூஸ், முலாம் பழ ஜூஸ், வெண்பூசணி ஜூஸ், சோற்றுக்கற்றாழை ஜூஸ் இவை கோடை வெயிலுக்கு ஏற்ற பானங்கள்.

    6) வாரம் ஒருமுறை நல்லெண்ணெய் தேய்த்து எண்ணெய் குளியல் எடுப்பது நல்லது.

    சித்த மருத்துவம்:

    1) உடல் வெப்பத்தை தணிப்பதற்கு தண்ணீர் விட்டான் கிழங்கு நெய் - காலை, இரவு 5 மி.லி. வீதம் சாப்பிடலாம்.

    2) உடல் வெப்பம் நீங்க தலையில் தேய்த்து குளிப்பதற்கு பொன்னாங்கண்ணி தைலம், சந்தனாதி தைலம், கரிசாலை தைலம் இவைகளில் ஒன்றை பயன்படுத்தலாம்.

    ×